
என்ன கமாலாக்கா......... ஊரில் ஒரே பனியா இருக்கே ! வேற இருக்காத ஜமாலு பணிகாலம்’ல.......வா சூட “ டீ” சாப்பிடலாம்... சரி சொல்லுங்க இஞ்சி “ டீ ” யா....
ஊரிலே என்ன விஷேசம் கமாலாக்கா.... ஒன்னுல்ல ஜமாலு ‘ கடற்கரைதெருவிலே ‘கந்துரி’ யாம்பா...........நான் கந்திரி பாத்து ரொம்ப நாளாச்சு கமாலாக்கா........இந்த தடவை ரொம்ப “தாட் பூட்” ன்னு நடத்துறான்ங்கலாம்...........
அப்புறம் கடைத்தெருவிலே ‘ த.மு.மு.க ‘ புது ஆபீஸ் தொறந்துருக்குதாம்ல...ஆமா...ஆமா நானும் பார்த்தேன்.......ஊரில் ஒரே கேஸ் தட்டுப்பாடருக்கே எந்த அமைப்பாவது ‘கையிலே’ எடுத்து போராடலாம்ல
அந்தா ‘குமாரு’ வாரான்...........வாடா குமாரு பஞ்சாயத்து போர்டு செய்தி ஏதும் இருக்காடா........... பஞ்சாயத்து போர்டு ‘அடக்கமா ‘ செயல்படுதாக்கா.... இன்னிக்கு கண்டன பேரணி தெரியுமாக்கா ? எங்கடா குமாரு........... பஞ்சாயத்து போர்டுகிட்னே......எதுக்கு ? அகல ரயில் பாதை பணியை சீக்கிரம் ஆரம்பிக்க, முல்லை பெரியாறு அணை பிரச்சனை, மின் பற்றாக்குறை.........
ஏன் ஜமாலு AAMF பத்தி செய்தி ருக்கா ? AAMF ‘ ன்னா என்ன கமாலாக்கா ........அதாம்பா ‘ அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ‘ அப்புடியா ! அதான் ‘ ரெண்டு ’ கூட்டம்போட்டு முடிசிட்டாங்கலே அடுத்த கூட்டம் தரகர் தெருவில
கமாலாக்கா, வேற ஒன்னும் செய்தில்ல ?............நாளைக்கு சீக்கிரம் வந்துரு நெறைய சேதி தர்றேன் ஜமாலு
தகவல் சேகரிப்பு : புல் புல் பறவை
தகவல் சேகரிப்பு : புல் புல் பறவை
3 பின்னூட்டங்கள்:
அல்லாஹ் அந்த தவறான வழிகேட்டிலிருந்து காப்பானாக...
இணைவைப்பிற்கு அடித்தளமாக இருக்கும் தர்கா வழிபாடு ஒழிய இறைவனிடம் பிரார்த்திப்போம்..
நேத்து ரயில்வே விசயமாக திர்வாரூர் மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் செய்து எதிர்ப்பை பதிவு செய்தார்கள்....
கமாலக்க ஏன் சோ மாதுரி காட்சியளிக்கிறார்.
கந்தூரி ஊர்வலம் சூப்பரா இருக்கும், இந்து மத சகோதரர் இறந்தால் ஒருதடவைதான் இறந்த நபருக்கு பூ சோடிச்சி ஊர்வலம் நடக்கும், ஆனா நம்ம தர்கா வாசிக அப்படியல்ல, ஒரு தடவை இறந்தால் ஆயிரம் தடவை இறந்த்ததுக்கு சமம்னு நிரூபிப்பாங்க. அதுசரி.... "புலி வேஷம் இருக்கா".
கேஸ் தட்டுப்படப் பத்தி இனிமேல் கவலை இல்ல. முல்லை பெரியாறு ஏற்கனவே சொல்லிட்டாரே... தமழர்கள் எத்தன நாளைக்கித்தான் காய்கறியை விளைச்சி மத்த மாநிலத்துக்கு அனுப்பி புத்தி இல்லாம போறது. இனிமேல் காய்கறிய மட்டும் திம்போம் அதுவும் பச்சையா திம்போம், பகுத்தறிவ உருவாக்கி, அடிமைத்தனத்தை போக்கி இனிமேலாவது உருப்படுவோம்னு நம்ம தந்தை போரியாறு மட்டுமல்ல முல்லைப் பெரியாறு (பெரிய அறிவு ஆறு) சொல்லிக் கொடுத்துட்டார்.
//பஞ்சாயத்து போர்டுகிட்னே......எதுக்கு ? அகல ரயில் பாதை பணியை சீக்கிரம் ஆரம்பிக்க, முல்லை பெரியாறு அணை பிரச்சனை, மின் பற்றாக்குறை.........///
அண்ணே நம்ம தஞ்சை மாவட்ட கலெக்டர் அங்கு வரப்போறாங்களா........ கமலாக்கா ஒரு 100 டீ காரமா போடுங்க..... கொஞ்சம் வெள்ளக்கட்டியையும் கூடுதலா சேர்த்துக்குங்க,,,,, ஏன்னா போராட்டத்துக்கு வர்ரவங்கேல்லாம் வெளுத்ததெல்லாம் பாலுன்னு நெனைக்கிறவங்க...
"வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைப்பது அந்தக்காலம்"
"வெளுத்ததெல்லாம் கல்லுன்னு நினைப்பது இந்தக்காலம்"
"பனை மரத்துல நின்னு பாலு குடிச்சா கல்லுன்னு நினைப்பது அந்தக்காலம்"
"பனை மரத்துல நின்னு (டீ)பாலு குடிச்சா மல்லுக்கட்டி நிலமா போட்டு
விக்கிவது இந்தக்காலம்"
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment