அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Saturday, December 3, 2011

பேரூராட்சியின் துரித நடவடிக்கை தேவை!


ஊரார் சார்பில் வேண்டுகோள் வைக்க சங்கம் அமைத்து தலைவர் புடைசூழ மனு கொடுத்தால்தான் கோரிக்கையாகுமா ? அதிரை மண்ணின் மைந்தர்கள் யார் வேண்டுமானாலும் வாழும் சூழ்நிலையினை அசல் நிலைமையை அப்படியே சொல்லவும் அதன் நன்மை தீமைகளை சுட்டிடவும் உரிமையுண்டு.

அதிகாலை நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போது அதிரையின் பெரிய ஜும்ஆ பள்ளியின் அருகிலும் மற்றும் முன்னாள் பேருராட்சித் தலைவர் அவர்களின் தேங்காய் மண்டியின் பின்புறமும் குப்பைகள் குவிந்திருக்கும் காட்சி கண்களை உறுத்துகிறது. இது வேண்டுமென்று செய்தவைகளாக இருக்காது என்று நம்புவோமாக, இருந்தாலும் வேண்டாத குப்பைகளை வேண்டியவர்கள் எடுத்திடுவார்கள் என்ற அலட்சியப் போக்கினால் நேர்ந்த அவலம்.

இதனை பேரூராட்சியின் கவனத்திற்கு கொண்டுசெல்வது நம் கடமை அவர்களும் நிச்சயம் துரித நடவடிக்கைகள் எடுப்பதில் சலைத்தவர்கள் அல்ல என்று நிருபிக்கவும் தயாராக இருப்பவர்களே.

பொதுமக்களாகிய நமக்கு என்னதான் பங்கு ? குப்பைகள் கொட்டிட கொட்டமும், வலைக் கூண்டும் தெருவோரங்களில் இருந்தும் அங்கே கொட்டிட மனம் வரவில்லையே ஏன் ? அது அரசாங்கத்தின் உடமை என்பதாலா ? அப்படி என்றால் அதிரை தெருவோரங்கள் யாருக்குச் சொந்தமானவை ?

சிந்தியுங்கள் !, தயை கூர்ந்து குப்பைகளை கொட்டிவிட்டு அள்ள ஆள் இல்லையே என்று புலம்பாமல், சுத்தம் செய்பவர்களும் சுகாதாரத்தை விரும்புபவர்களே ஆகவே உரிய இடத்தில் சேமித்து உரியவர்கள் வரும்போது ஒப்படையுங்கள்.

சுகாதாரமே சுகமான சுவாசமாகும் !

பெரிய ஜூம்மா பள்ளி மற்றும் MMS-வாடி பின்புறம் குப்பைகள்







படங்கள் : ஆசிக்
தகவல் : முஸ்லிம் மலர் ஹசன்

6 பின்னூட்டங்கள்:

adirai said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நீங்கள் குறிபிடுவது போல் வேண்டுமென்றோ அல்லாமல் இல்லை அப்படத்தில் அதிகமாக காண கிடைப்பது பழைய கீற்று இந்த குப்பையை கொட்டியவர்கள் தங்கள் வீட்டுக்கு புதிய கீற்று மாற்றுவதற்கு செலவுசெய்த தொகையில் 100 ரூபாய் அதிகமாக செலவு செய்து பேரூராட்சி சொந்தமான குப்பை சேகரிக்கும் இடத்தில கொட்டினால் இப்படி கட்சி தருமா ?
சிந்திப்பீர்!
செயல்படுவீர்!
நமது நகரம் !
நமது பெருமை!

muslimmalar said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

anthackuppaikal pala natkalaka kitakinrana
peruraatchiyin kuppai sekarikkum vandikal yethum varuvathillai thalaivar aslam kandu kolvaara

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

என்றைக்கு திருந்துவார்களோ.... ஊரெல்லாம் வைரஸ் காய்ச்சல் பரவி வரும் இவ்வேளையில்.... துரித நடவடிக்கை தேவை....

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நமக்கு இட ஒதிக்கீடு கிடைக்குதோ இல்லையோ நம்மூர் கொசுக்களுக்கு செய்யப்பட 21 % இட ஒதிக்கீடு குப்பைதொட்டிகளை வைத்து நாம சந்தோசப்படனும். ( 21 வார்டு )

அதனால்தான் என்னவோ குப்பை கூலங்களுக்கு மத்தியில்கொசுக்களைத் தவிர வேற யாரும் நெருங்கக் கூடாது என்பதற்காக ஒரு "காவலர் பெட்டி" ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதனுள்ளே குப்பையோ கூலத்தையோ போட்டால் அந்த பெட்டிக்கு கொஞ்சம் கூட இஷ்ட்டம் இருக்காது, உடனே வெளியே தள்ளிவிடும்.

பேசாம அதுல கோழி குஞ்சி வழக்கலாம். இரைக்கு பஞ்சமே இருக்காது.
ஆஹா....எங்களின் (கொசுக்களின்) இட ஓதிக்கீட்டிலும் நீங்கள் இரை எடுக்கலாம்.

விஷயத்திற்கு வருவோம்......

தொட்டதுக்கெல்லாம் சேர்மன் சேர்மன் என்கிறீர்களே, அவர் ஆவணம் செய்யாத விஷியத்தை ஓட்டுப் போட்ட நீங்களே குப்பை கூல பிரச்சனையை போக்க ஒரு நல்ல யோசனை சொல்லலாமா....

"நீங்கள் கவனமாக இரவோடு இரவாக ஒவ்வொரு குப்பத்தொட்டியையும் அந்தந்த மெம்பெர் வீட்டு வாசலில் வைத்து விடுங்கள்."

"வார்டு பெரிதாக இருந்தால் மெம்பருக்கு நெருங்கியவர் வீட்டு வாசலிலும் வைத்து அழகுப் பாருங்கள்"

"எண்களின் கண்ணுக்கு கண்ணான மெம்பர்களே..... நீங்கள் உங்கள் வீட்டு வாசலை சுத்தம் செய்வீர்களா.....கோழி வளர்க்க ஆசையா...."

(குறிப்பு : குப்பைக் கூலங்களுக்கு பஞ்சாயத் தலைவர் மற்றும் துணைத் தலைவரை கொஞ்சம் நாளைக்கு தொந்தரவு பண்ணாமல் இருப்போம்)

****துக்ளக் நியூஸ் குழும*****

அபூபக்கர்-அமேஜான் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கொசுக்களுக்கு 21 % இட ஓதிக்கீடு என்று யார் சொன்னது அதை நீங்களே முடிவு செய்தால் அந்த (பெர்சன்டேஜ்) கொசுக்களுக்கு போதுமா? கொசுக்கள் 21 % காணாது என்று போராட்டம் செய்தால் மறுபடியும் நீங்கள் எத்தனை ((பெர்சன்டேஜ்) கொடுப்பீர்கள். இதற்கு நல்லா கால்குலேட் பண்ணி சொல்லுங்க.முதலில் குப்பைகளை ரோட்டில் போடாமல் பார்த்துக் கொள்ளவும் குப்பைகளை கூண்டில் போடாமல் நடைபாதையில் தூக்கி போடுகிறார்கள். இப்படி இருந்தால் எப்படி நம்ம ஊர் சுத்தமாகும் நன்றாக சிந்திக்க வேண்டும் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகிறார்கள். அவரவர் அவர்களுடைய வீட்டை சுத்தமாக வைத்தால் போதுமானது கொசுவும் வராது குப்பையையும் அகற்ற வேண்டும்.

அதிரை குரல் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

முஸ்லிம் மலர் வளைத்தளம் என்ன ஆச்சு.....

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.