அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!?
4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி...

More Link
இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Monday, December 5, 2011

AAMF உள்ளூர் விவகாரங்களில் தலையிடுவது அவசியமா?

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் துபை வாழ் அதிரை பெருமக்களின் மாபெரும் முயற்சியால் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு(AAMF) உருவாக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்! வரவேற்போம்!

துபையில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு(AAMF) ஆரம்பிக்கப்பட்டவுடன் முதலில் நான் மகிழ்ச்சியடைந்தேன். துபை வாழ் அதிரை சகோதரர்களுக்கென்று ஒரு அமைப்பு இல்லாமல் இருந்தது அல்ஹம்துலில்லாஹ். மேலும் இது விரிவடைந்து அதிரைவாசிகள் உள்ள அனைத்து நாடுகளிலும் தோன்ற யாவரும் துஆ செய்வோம்.

முதலில் நான் இந்த கூட்டமைப்பு வெளிநாடு வாழ் அதிரை சகோதரர்களின் மேன்மைக்காக ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டேன் ஆனால் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் சட்டத்திட்டங்கள் உள்ளூர் விவகாரங்களில் தலையிடுவதாக தெரிகிறது. ஆதலால்தான் இந்த ஆக்கத்தை எழுத எனது மனம் உந்தப்பட்டது.

நீங்கள்(AAMF) அதிகம் கவனம் செலுத்த வேண்டியவைகள்....

1. சொந்த பந்தங்களை பிரிந்து தனது குடும்ப பொருளாதார தேவைக்காக அயல்நாட்டில் பணிபுரிந்து வரும் அனைத்து முஹல்லா சகோதரர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குள் ஓர் ஒற்றுமையையும், பாசத்தையையும் ஏற்படுத்திய அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பிற்கு(AAMF) முதற்கன் என் நன்றியையும் வாழ்த்துககளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கு சாட்சியாக உங்களின் பெருநாள் சந்திப்பு காணொளிகளை கண்டு மனம் மகிழ்ந்தேன். இந்த முயற்சியை இடைவிடாது தொடருங்கள்.

2. எத்தைனையோ நம் சகோதரர்கள் வேலை பழு காரணமாக மன அழுத்தம், தூக்கமின்மை, இன்னும் பல சிரமங்களுக்கும், பிரச்சனைகளுக்கும் மத்தியில் தனது குடும்ப சூழ்நிலையை நினைத்து சம்பாதித்து வருகிறார்கள். இது போன்ற சகோதரர்களுக்கு ஊர் சகோதரர்களை ஒரே இடத்தில் பார்க்கும்போது ஒரு வித மன நிம்மதியை தரும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை.

3. வேலை தேடி விசிட் விசாவில் வரும் சகோதரர்களை அரவனையுங்கள், அவர்களுக்கு வேலை கிடைப்பதற்கு தகுந்த வழிவகைகளை செய்யுங்கள், உதாரணமாக உங்களுக்கு முடிந்தால் நீங்கள் பணிபுரியும் கம்பெனிகளில் வேலை கிடைப்பதற்கு அதற்குறிய தகுதி அவர்கள் பெற்றிருப்பின் அவர்களுக்கு வேலை கிடைக்க சிபாரிசு செய்யங்கள்.

4. எத்தனையோ சகோதரர்கள் பல சிரமங்களுக்குக்கிடையில் பட்டப்படிப்பை முடித்துவிடுகிறார்கள் அல்ஹம்துலில்லாஹ், ஆனால் அவர்களுக்கு படிப்பிற்குரிய வேலை கிடைப்பதில்லை. தனது குடும்ப (வறுமையை) சூழ்நிலையை நினைத்து ஆபிஸ் பாய்களாகவும், தூதுவர்களாகவும் (Messenger) பணியாற்றி வருகிறார்கள், இவர்களுக்கு அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப வேலை கிடைக்க உதவி செய்ய வேண்டும். உயர் பதிவிகளிலும், அதிகாரி மட்டதிலும் வேலையில் இருக்கும் நம் சகோதரர்கள் இதில் முழு கவனம் எடுத்து அவர்களுக்கு உதவ முன்வாருங்கள்.

5. குறைந்தபட்சம் சக நண்பர்களிடமிருந்து வேலைவாய்ப்பிற்கான தகவல்களை திரட்டி அவர்களிடம் தெரிவியுங்கள்.

6. தனது சொந்த சகோதரியின் திருமணத்தை நடத்த முடியாமல் எத்தனையோ சகோதரர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறார்கள், இது போன்ற சகோதரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

7. அல்லாஹ்வின் நாட்டபடி யாரேனும் வபாத்தாகினால் அவர்களின் உறவினர்களுக்கு துரிதமாக தகவல் கொடுப்பது, மையத்தை ஊருக்கு அனுப்ப நேரிடும் போது அதற்கு உறுதுனையாக இருந்து உதவிகள் செய்வது.

8. வெளிநாடுவாழ் அதிரை சகோதரர்களின் மேம்பாட்டிற்காக மட்டும் இந்த கூட்டமைப்பபு(AAMF) செயல்பட்டால் நன்றாக இருக்கும். 18 ஆண்டுகளுக்கு மேலாக அதிரையில் மக்கள் சேவையாற்றி வரும் அதிரை பைத்துல்மால் போன்ற நிறுவனம் மூலம் உங்களுடைய உள்ளூர் உதவிகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்

9. அனைத்து முஹல்லா சார்பாக 18 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றிவிக்கப்ட்ட அதிரை பைத்துல்மால் என்ற பொதுநல மக்கள் நிறுவனம் கீழே கூறப்படடுள்ள பணிக்கு முன்னுரிமை கொடுத்து மிக சிறப்பாக தனது பணியை செய்து வருகிறது.

1. வட்டியில்லாக் கடன்
2. ஜக்காத் வசூல்
3. ஃபித்ரா வசூல்
4. கல்வி உதவி
5. மாதாந்திர பென்சன்(முதியோர் உதவித்தொகை)
6. இலவச திருமணம்
7. அவசர ஆம்புலன்ஸ் சேவை
8. கல்வி மற்றும் சீருடை உதவித்திட்டம்.
9. மாணவர்களுக்கு வழிகாட்டுதல்
10. இன்னும் பல சமூக நலத்திட்டங்கள்.

மாதாந்திர வரவு - செலவு கணக்குகளையும் அவ்வமயம் அதிரை தளங்களின் மூலமாக மக்களுக்கு தெரிவித்து வருகிறது அதிரை பைத்துல்மால்.

இதை நான் இங்கே அழுத்தமாக சொல்வதற்கு காரணம் நாம் யாவரும் ஒரே நோக்கத்திற்காக ஒருங்கினைந்து செயல்பட ஆசை படுகிறோம், ஏற்கனவே தோற்றிவிக்கப்பட்ட அமைப்பை அதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லவா? அப்படி இல்லையென்றால தமிழக அளவில் முஸ்லிம் அமைப்புகள் சிதறி சின்னாபின்னமாக கிடப்பது போன்று நம் ஊரிலும் பொது நல அமைப்புகள் வந்துவிடுமோ என்ற அச்ச உணர்வுதான், அல்லாஹ் பாதுக்காக்கனும்.
வெளிநாடு வாழ் அதிரை சகோதரர்கள் அதிரை பைத்துல்மாலுக்கு உதவி செய்து மேற்சொன்ன பணிகள் தங்கு தடையின்றி நடக்க ஒத்துழைக்கலாம்.

10. அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு(AAMF) தயவு செய்து உள்ளூர் விவகாரங்களில் தலையிடாமல் வெளிநாட்டில் பணிபுரியும் நம் சகோதரர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது. வெளிநாடுவாழ் அதிரை வாசிகளின் மேம்பாட்டிற்காக மட்டும் முழு கவனம் செலுத்தி பல திட்டங்களை தீட்டி அதை நடைமுறைப்படுத்துங்கள். உள்ளூர் விவகாரங்களில் தலையிட்டால் பல பிரச்சனைகளும் குழப்பங்களும் வரும், ஏற்கனவே அதிரை பைத்துல்மால் முஹல்லா வாரியாக பொருப்புதாரிகளை நியமித்து அவர்கள் மூலம் ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்து வருகிறது. நீங்கள் ஊரில் இருக்கும் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய எண்ணினால் அதிரை பைத்துல்மால் மூலம் உங்களது உதவிகளை செய்யலாம்.

அமீரக அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு(AAMF) போன்று அதிரை வாசிகள் கணிசமாக உள்ள அனைத்து நாடுகளிலும் இக்கூட்டமைப்பு(AAMF) தோற்றிவிக்கப்பட்டு அந்தந்த நாடுகளில் பணிபுரியும் நம் அதிரை சகோதரர்களின் மேம்பாட்டிற்காக உதவ வேண்டும்.

உதவிகள் புரிபவர்களுக்கு நற்கூலி நிச்சயம் உண்டு, அதற்குரிய பலன்களை நிச்சயமாக அவர்கள் மறுமையில் காண்பார்கள்.

எனவே நம் சமுதாய ஒற்றுமை கருதி
ஒரே குடையின் கீழ் யாவரும் வருவோம்!
உதவிகள் பல புரிவோம்!!
நற்கூலி பெறுவோம்!!! இன்ஷா அல்லாஹ்.

நமது ஊரின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு எழுத்தப்பட்ட ஆக்கம், தயவுசெய்து ஆரோக்கியமான கருத்துக்களையும் உங்களது யோசனைகளையும் இங்கே பகிர்ந்து கொண்டால் நன்மையாக இருக்கும்.

அன்புடன்.
வளர்பிறை...

17 பின்னூட்டங்கள்:

அப்துல் ஹமீது BIN சுல்தான் இப்ராஹிம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

தகவல் தெரிவிப்பவர்கள் மற்றும் பின்னோட்டம்மிடுபவர்கள் தங்களுடைய உன்மையான பெயர்களில் தெரிவிக்கவும்..

Abu Waseem said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

எனது உள்ளத்தில் தோன்றிய அனைத்து வினாக்களையும் அருமையாக கேட்டிருக்கிறார் இந்த பதிவின் ஆசிரியர். இவர் நல்ல யோசனைகளையும் தெரிவித்து இருக்கிறார். வாழ்த்துக்கள் சகோதரர் வளர்பிறைக்கு.

Ameen Bin Jamal said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 3

அன்புடன் வளர்பிறை என்ற பெயரில் இங்கு கட்டுரை எழுதப்பட்டு உள்ளது,அப்துல் ஹமீது என்பவர் பின்னூட்டமிடுபவர்கள் புனை பெயரிட வேண்டாம் என்று கூறியுள்ளார்.கட்டுரையாளரை அப்துல் ஹமீது கவனிக்கவில்லையோ ?. எ.எ.எம்.எப். அதிரையில் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தை வளர்பிறை அறியவில்லை என்று நினைக்கிறன்.
1 . ஊரில் ஐக்கியம் வேண்டி, ஒரே தலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது
2 . சட்ட ஒழுங்கு பிரச்சினைகளில் இந்த அமைப்பு தலையிடும்
3 .பல்வேறு பொது சேவைகள் முன் நிறுத்தப்பட்டு இருக்கின்றன.அவை அதிரை பைதுல்மாலையோ ,இதர அமைப்புகளையோ பாதிக்காது என்று அமீரக நிர்வாகிகள் இன்று 05 /12 /11 .உறுதி அளித்துள்ளனர்.

அதிரைக்காரன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 4

அதிரை பைத்துல்மாலின் நோக்கம் நமதூர் மக்களின் பொருளியல் சார்ந்த விடயங்களில் உதவுதல். இதற்கான மூலதனம் ஜகாத்,ஸதகா மற்றும் ஃபித்ரா போன்ற தர்மங்களே. இதை வசூலித்து முறையாக கணக்குகளைப் பராமரித்து கடந்த 18 ஆண்டுகளாக சிறப்பாகச் செயல்பட்டு வருவதை சகோ.வளர்பிறை விளக்கமாகச் சொல்லியுள்ளார். ஜஷாகல்லாஹ்.

அதேபோல், அ.அ.மு.கூ வெளிநாட்டில் தோற்றுவிக்கப்பட்டாலும் அதன் செயல்பாடுகள் அதிரை சார்ந்தது என்பதால் அதன் கரங்களை வலுப்படுத்த வேண்டியதும் அவசியம். எனினும், பைத்துல்மாலின் செயல்பாடுகளை ஒத்த திட்டங்களைத் தீட்டாது,சட்டம்-ஒழுங்கு,ஊர் ஒற்றுமை,ஷரீஅத் பஞ்சாயத்து மற்றும் அரசு,அரசியல்சார்ந்த ஊர் நிகழ்வுகளுக்கு தலைமையேற்கலாம்.

அ.அ.மு.கூ & பைத்துல்மால் இரண்டும் அதனதன் தனித்தனியான திட்டங்களுடன் செயல்படுவதற்கான பொதுகருத்துருவாக்கமே தற்போதைய அவசியம்.

Adirai pasanga😎 said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 5

அஸ்ஸலாமு அலைக்கும்
aamf - குறித்து aamf நிர்வாகிகளும் மற்றவர்களும் பல்வேறு கருத்துகளும் விமர்சனங்களும் கூறி வருவதை நாம் அனைவரும் அறிவோம். நாம் aamf க்கு பல்வேறு நாடுகளிலும் நமது ஊரைதலைமையாக கொண்டு கிளைகளை ஆரம்பித்து நம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்ற கருத்து பரவலாக அனைவரிடமும் ஆர்வமாக பேசப்படுகிறது. நல்லது வரவேற்போம் - ஆதரவளிக்க வேண்டியதுதான். எப்படி தலைமை அமைய வேண்டும்? எப்படி அதனை மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்பதனை நாம் முடிவு செய்து செயல் பட்டால் - நாம் எதிர்பார்க்கும் நல்ல தலைமையும் பின்பற்றுதலும் அமையும். . அதாவது உண்மையான இஸ்லாமிய அடிப்படையுடன் கூடிய தலைமைததுவம் ஏற்பட்டால்தான் சாத்தியம் .

majfausa said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 6

VALARPIRAIYAE VAAZHGA.THANGALUDAIYA ABM PATRIYA AAKKAM MIHAVUM ARUMAI.ABM AAMF IRUVARUKKUM IDAIYIL ENDHAVIDHA MANAKKASAPPUGALUM VARAAMAL IRUKKA UNGALUDAIYA INDHA AAKKAM ORU ANTI-HISTAMINE WITH ANTIBIOTIC ENDRAE SOLLAVAENDUM.

அப்துல் ஹமீது BIN சுல்தான் இப்ராஹிம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 7

பின்னோட்டம். தகவல் தருபவர்கள் தங்களுடைய பெயா் வெளியில் தெரிந்தால் அவமானமாக பொய்விடும் என்று பயத்தின் காரணமாக தான் புனைப்பெயருடன் வளம் வருகின்றிரார்கள்..

Abdul Wahab said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 8

புனைப் பெயர்களில் கருத்து, கட்டுரைகள் எழுதுபவர்களை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். ஏன் என்றால் அல்லாஹ் குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்:

பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்). அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். (இத்தகையோர்) ஜின்களிலும் & மனிதர்களிலும் இருக்கின்றனர். அந்நாஸ் 114:4,5,6

Regard's
Abdul Wahab

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 9

வளர்பிறை அவர்களின் ஆக்கங்கள் சிறந்த சிந்தனையுடன் வெளிவந்துள்ளது...... இந்த கட்டுரையில் கூறுவது போன்று அனைத்து விசயங்களையும் AAMF செய்தால் சந்தோசமே.... ஆனால் இதில் நிறைய சாத்தியம் இல்லாத விசயங்களும் இருக்கின்றன.... காரணம் AAMF இன் நிர்வாகிகள் அனைவரும் எதாவது ஒரு அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் தான்... உதாரணத்திற்கு திடீர் என்று மவுத்து நிகழ்ந்து விட்டது அதனை உரிய முறையில் ஏற்பாடு செய்து ஊருக்கு அனுப்ப பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கும்..... நிர்வாகிகள் அனைவரும் தமது பனி சுமையில் இருக்கும் போது இந்த நிகழ்விற்கு உடனடியாக்ஸ் செல்வது என்பது சிரமமான விஷயம் ..... என்னுடைய ஆலோசனை என்னவென்றால் AAMF இன் நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து அவர்களால் முடிந்த அளவிற்கு மாதாந்திர சந்தாக்களை உருவாக்கி அதன் மூலம் ஒரு நபரை முழுநேர பணியாளராக நியமித்து செம்மையாக இயக்கம் நடத்தலாம்.... தேர்வு செய்யும் நபர் சிறந்த ஆளுகை திறன் கொண்டவராக இருத்தல் அவசியம்.

வளர்பிறை said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 10

உண்மை கசப்பினும் உண்மையே பேசுங்கள்.

அதிரை பைத்துல்மால் மற்றும் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ஆகிய இரண்டு பொது நல அமைப்புகளையும் விட்டுக்கொடுக்காமல் நடுநிலையுடன் எனது கருத்துக்களை இங்கே நான் முன் வைத்தேன்.

பல சகோதரர்கள் இங்கே தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஊரின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு நன்கு சிந்தித்து இந்த ஆக்கத்தை எழுதினேன், என்னுடைய ஆ(தங்)க்கத்தின் நோக்கம் நமது சமுதாயம் ஒன்றுபட வேண்டும், ஒரு அணியில் திரள வேண்டும், பொது விசயங்களில் ஒன்றுப்பட்டு செயல்பட வேண்டும் என்பது தான்.(உள்ளத்தை நன்கறிந்தவன் அல்லாஹ்!)

அனைத்து முஹல்லாஹ் சார்பாக 18 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டு சிறப்பாக மக்கள் சேவை செய்துவரும் அதிரை பைத்துல்மால் என்ற பொதுநல நிறுவனத்தை பொது விசயங்களுக்கு பயன் படுத்திக்கொள்ளலாம் என்பது எனது அழுத்தமான வாதம், இதை புறந்தள்ளிவிட்டு நாங்கள் என்றுமே ஒற்றுமை என்னும் வட்டத்துக்குள் வரமாட்டோம் தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் மற்றும் இயங்கங்கள் போன்று பிரிந்துதான் இருப்போம் என்றால் அதை நான் என்ன வென்று சொல்லவது.

இதற்கு எல்லாம் மிக முக்கிய காரணம்....
எல்லாருக்கும் தலமைத்துவம் (Leadership) தேவைப்படுகிறது அதற்கு ஆசை வந்துவிட்டது.
நான் தான் செய்யனும், என்னுடைய தலைமையின்கீழ் தான் செயல்பட வேண்டும் என்று எல்லாரும் நினைத்தால் ஒன்று இரண்டு அல்ல நூற்றுக்கும் மேற்பட்ட பொதுநல அமைப்புகள் உருவாகி கொண்டேடேடேடேடேடேடேடே இருக்கும். இதன் விளைவு ஊரின்(சமுதாய) ஒற்றுமைக்கு வேட்டு வைத்துவிடும். அல்லாஹ் பாதுக்காக்கனும்.

யா அல்லாஹ்! யாராரெல்லாம் சமுதாயத்தின் மேன்மைக்காகவும், ஊரின் முன்னேற்றத்திற்காகவும் நல்ல திட்டங்களை செய்ய நாடியிருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் ஒரு அணியில் திரண்டு ஒற்றுமையுடன் நிறைவேற்ற தவ்பீக் செய்வாயாக அவர்களுடைய சேவைகளை அங்கீகரிப்பாயாக!

Ameen Bin Jamal said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 11

பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்). அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். (இத்தகையோர்) ஜின்களிலும் & மனிதர்களிலும் இருக்கின்றனர். அந்நாஸ் 114:4,5,6

இந்த வசனத்தின் அர்த்தத்திற்கும் பின்னோட்டம் இடுதலில் புனைபெயர் வைப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை ,மேற்கூறிய வசனம் உள்ளங்களில் ஊடுருவும் ஷைத்தானை பற்றி சொல்லப்பட்டுள்ளது என்பதை அப்துல் ஹமீது புரிந்து கொள்ள வேண்டும்.

Ameen Bin Jamal said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 12

பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்). அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். (இத்தகையோர்) ஜின்களிலும் & மனிதர்களிலும் இருக்கின்றனர். அந்நாஸ் 114:4,5,6

இந்த வசனத்தின் அர்த்தத்திற்கும் பின்னோட்டம் இடுதலில் புனைபெயர் வைப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை ,மேற்கூறிய வசனம் உள்ளங்களில் ஊடுருவும் ஷைத்தானை பற்றி சொல்லப்பட்டுள்ளது என்பதை அப்துல் ஹமீது புரிந்து கொள்ள வேண்டும்.

அப்துல் ஹமீது BIN சுல்தான் இப்ராஹிம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 13

பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்). அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். (இத்தகையோர்) ஜின்களிலும் & மனிதர்களிலும் இருக்கின்றனர். அந்நாஸ் 114:4,5,6

முதலில் புனைப்பெயர்களுடன் இருப்பவர்கள் இந்த வசனத்தை புரிந்து அதன்படி சிந்தித்து செயல்படுமாறு கேட்டுக்கெள்கின்றேன்.

அப்துல் ஹமீது BIN சுல்தான் இப்ராஹிம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 14

தங்களுக்கு தாங்களே புனைபெயர்கள் வைத்து தங்களை தாங்களே ஏமாற்றிக் கெள்கிறார்கள்

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 15

இதற்க்கு முன்பு வாழ்ந்த மன்னர்கள் தனக்கு ஓய்வு கிடைக்கும் நேரத்தில் மாறு வேஷத்தில் வந்து நாட்டின் நடப்புகளை நேரிடையாக தெரிந்து கொள்வார்கள்.... அது உமர் (ரலி) அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டது..

அதே போல் நாங்களும் நேரம் கிடைக்கும்போது இந்த வலைப்பூக்களில் மாறுவேடமிட்டு புனைப்பெயரில் உங்களைப் போன்ற மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அதை ஓரளவு சரி செய்ய அப்பப்ப...யப்பா...முயற்சிக்கிறோம்......

நன்னரிதல் புரிய..
புனைப்பெயரில்
வளம் வரும்....
புனித மன்னர்கள்...

துக்ளக், மதியழகன், திப்பு சுல்தான் எல்லாம் மன்னர்கள்தானே......

*****துக்ளக் நியூஸ் குழுமம்*****

அதிரை இளைஞன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 16

கருத்து சொல்பவர்கள் அல்லது தவறை சுட்டிக்காட்டுபவர்கள் நல்ல விசயங்களை சொன்னால் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே புனைப்பெயரில் வந்தால் என்ன? நிஜப்பெயரில் வந்தால் என்ன?

Adirai pasanga😎 said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 17

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பான சகோதரர்களே
எல்லா சகோதரர்களின் எண்ணங்களும் ஒற்றுமையின் பக்கம் தான் உள்ளது. நாம் அனைவரும் குரான் ஹதீஸ் வழியில் நல்ல ஒரு தலைமையின் கீழ் இணைந்தால் தான் இது சாத்தியம். இதற்கு என்ன வழி அனைவரும் கூடி கலந்து ஆலோசித்து ஒரு முடிவை எட்ட வேண்டும

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.