Friday, December 9, 2011
Subscribe to:
Post Comments (Atom)
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.
Copyright © 2011 AdiraiBBC - Brave | Bold | Challenge.
Republication or redissemination of the contents, images, video, audio of this blog that are created by AdiraiBBC are expressly prohibited without the consent of AdiraiBBC.Powered by Blogger
4 பின்னூட்டங்கள்:
அஸ்ஸலாமு அலைக்கும்
சிறப்பான பயான் - தினமும் குரான் தமிழாக்கத்தை அனைவரும் படிப்பதன் மூலம் அல்லாஹ் அருளால் நேர்வழி அடையலாம் - பயான் கேட்டதன் படி அமல் செய்ய அல்லாஹ் உதவி புரிவானாக - இன்ஷா அல்லாஹ் .. ஆமின் .....
அல்ஹம்துலில்லாஹ் இது போன்ற நல்ல சிந்தனையுள்ள பேச்சாளர்களை அதிகம் அதிகம் வரவழைத்து நமதூரின் சிந்தனை தடுமாற்றத்திற்கு..... தீர்வு எட்டப்பட வழிவகுக்க வேண்டும். இவர் நல்ல சிந்தனையாளர் தற்போதைய தங்களுடைய பதிப்பு சிறப்பாக இருக்கிறது இப்படியே பேச்சாளர்களின் தகவலோடு பதிந்தால் கேட்பவர்களுக்கு நன்மை பயக்கும்.
புனைப் பெயர்களில் ஒழிந்து கொண்டு எழுதுவது மார்கத்தில் அனுமதிக்கப்பட்டதல்ல. நம் சம காலத்தில் வாழ்ந்த மார்க்க மாமேதை ஷேய்ஹ் நாசிருத்தீன் அல்பானி அவர்கள் இதை “கோழைதனமான ஏமாற்று வேலை” எனச் சொல்கிறார்கள்.
(பார்க்க: http://salafimeet.dailyforum.net/viewtopic.php?f=1&t=3)
நம்முடைய மார்கத்தில் எந்த செய்தியும் அறிவிப்பாளர் தொடருடன் தான் அங்கீகரிக்கப்படும்.அறிவிப்பாளர் தொடரில் ஒரு சின்ன அடையாளச் சிக்கல் ஏற்பட்டாலும் ஒட்டுமொத்த அறிவிப்பும் பலகீனமானது என்றே தீர்மானிக்கப்படும், கருத்து எவ்வளவு சரியாய் இருந்தபோதினும் சரியே.
மேலும் இது போன்ற புனைப் பெயர்களில் ஒழிந்து கொண்டுதான் அடுத்தவர் மீது அவதூறுகளும் வசைமாறிகளும் அள்ளி வீசப்படுகிறது.
அதேசமயம், உண்மையான பெயர்களில் எழுதும்போது Psychologically உங்களுக்கு பொறுப்புணர்வு அதிகம் உண்டாகும். எதைப் பற்றி யாரைப் பற்றி எழுதினாலும் வரம்புக்குட்பட்டு எழுதுவீர்கள்.
எனினும் நன்கு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் புனைப் பெயர்களில் எழுதுவது தவறில்லை என்றே நினைக்கிறேன். உதாரணமாக, என்னுடைய பெயர் ஃபிர்தௌஸ். என்னைப் பற்றி நான் இன்னாருடைய மகன் இன்னார் இந்த தெரு,இந்த ஊர் என்று தெளிவான சுய அறிமுகத்திற்குப் பின்னர் இப்னு அஷ்ரஃப் என்றோ அல்லது வேறு ஏதெனும் எனக்குப் பிடித்த நல்ல புனைப் பெயர்களிலோ எழுதுவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் துரதிருஷ்டவசமாக நம் ஊர் வலைப்பூக்களில் எழுதுவோர் வெள்ளைரோஜா, துக்ளக், மதியழகன் என்று தங்களுடைய அடையாளத்தை மறைக்கும் ஒரு உத்தியாகவே புனைப் பெயர்களைப் பயன்படுத்துகின்றனர். இவர்களைக் குறித்து என்னிடம் கேட்டால் “கோழைகள்” என்பதே என்னுடைய ஒற்றை வரி பதிலாய் இருக்கும்.
அனாமத்தான சுய அறிமுகமற்ற போலி புனைப் பெயர் வாதிகளான் கோழைகளிடமிருந்து வரும் பின்னூட்டங்கள்/கட்டுரைகளை நமதூர் வலைபூக்கள் பிரசுரிக்க கூடாது என்று நமதூர் வலைப்பூ நிர்வாகிகளுக்கு இதன் மூலம் நான் கோரிக்கை வைக்கிறேன். குறிப்பாக நமதூரின் மூன்று முன்னோடி வலைப்பூக்களான எக்ஸ்பிரஸ், நிருபர்,பிபிஸி நிர்வாகிகள் இதில் கவனம் செலுத்த வேண்டுகிறேன்.
இந்த பெயரில்லா கோழைகள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டால் எதிர்காலத்தில் மிகப்பெரிய Identity Crisis ஏற்படும் என்பது என்னுடைய எண்ணம். மேலும் இவர்கள் ஒழிந்து கொண்டு எழுதுவதால் யார் மீது வேண்டுமானலும் எளிதில் அவதூறு பரப்ப முடியும்.
சுருக்கமாகச் சொல்வதானால் இவர்கள் நவீன மொட்டை கடுதாசிக்காரர்கள். மொட்டைக் கடுதாசிகளால் சமூகத்திற்கு நிச்சயமாக நன்மை இல்லை.( இந்த கோழைகள் எவ்வளவு தான் சமூகத்திற்கு நன்மை செய்வதாக பிதற்றினாலும் சரியே). மாறாக மொட்டை கடுதாசிகளால் அறுந்த உறவுகளும் முறிந்த குடும்பங்களும் தான் அதிகம்.
இந்த தீயப்பழக்கத்தை இந்நிலையிலேயே அறுத்து எறிய வேண்டும். அல்லது நாம் நம்முடைய எதிர்காலச் சந்ததிகளை மொட்டைக் கடுதாசி காரர்கள் மிகைத்த்து வாழும் சமுதாயமாக விட்டுச் சென்ற பழிச்சொல்லுக்கு ஆளாவோம். முன்வருவார்களா வலைப்பூ நிர்வாகிகள்?
அஸ்ஸலாமு அழைக்கும்... அதிரை BBCஇல் பயான்கள் வாரம் ஒருமுறை மாத்திரம் தான் பதியபடுகிறதோ/ ஆரம்ப காலத்தில் பயான்களின் மொத்த திரட்டு காணப் பட்டதே! தற்போது தங்களின் வலைப் பூவில் அவை காணக் கிடைக்கவில்லை மீண்டும் நிறைய பயான்களைப் பேச்சாளர்களின் பெயருடன் பதிந்து பதிவிறக்கம் செய்ய வழிவகுத்தால் பயன்பெறுவோம்.... இன்ஷா அல்லாஹ்....
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment