வரண்டு போயிருந்த நிலங்களை வான் மழை வந்திறங்கி முத்தமிட்டு குதூகலத்தில் பசும்புல்களும் குதித்தெழுந்து தலைக்காட்டும் மழைக்காலமே நம் மனதிற்குள் உயிர்த்தெழும் உற்சாகம். கரைபுரண்டு ஓடும் ஓடைகளும்,கரை ஏற மறுக்கும் நம் ஆசைகளும் இறைவனுக்கு நன்றி சொல்ல இவ்வுலகையே உருட்டிக்கொண்டு வந்து காலடியில் நிறுத்தினாலும் தூய இறையச்சத்திற்கு முன் இறைவன் எதைக்கொண்டும்சந்தோசமடையப்போவதில்லை.
விடுமுறையில் வீட்டு வேலைப்பழுவுக்கிடையே அடிக்கடி கண்சிமிட்டிய என் கைபேசி உட்கொண்ட நம்மூரின் புகைப்படங்கள் உங்களுக்காக இதோ சில:
நமதூர் ஆலடிக்குளத்தில் தேங்கியிருக்கும் மழை நீரும் அதில் முகம் பார்க்கும் அக்கம்பக்கத்துமரங்களும்..
அதிரை, பட்டுக்கோட்டைக்கிடையே அமைதியாய் படுத்துறங்கும் செல்லிக்குச்சி ஏரியும்அதன் சொந்தபந்தங்களான பசும்புல்லும், பனைமரமும்.
இவ்வாண்டு மழை நீர் வரவை இன்முகத்துடன் ஏற்றுக்கொள்ளும் செக்கடிப்பள்ளியும் அதன்சுற்று வட்டாரமும்
கருமேகம் கண்டு தாமரை இலைகளும், புல்பூண்டுகளும் தப்படித்து மகிழும் நமதூர் ஏரி.
"காக்கைக்கு சாக்காலம் கிடையாது" என்ற பழமொழி இருப்பது போல் பல ஆண்டுகாலம்நமதூரின் அனைத்து நடப்புகளையும் நோட்டமிட்டு சிலவற்றில் சந்தோசமும், பலவற்றில்சங்கடமும் அடைந்து கொள்ளும் ஒரு கிராமத்து காக்கை.
எல்லைப்பிரச்சினையும், தண்ணீர்ப்பிரச்சினையும் தலைவிரித்தாடும் இவ்வேளையில்எவ்வித தடையுமின்றி செக்கடிக்குளத்திற்காக இறைவன் ஒதுக்கிய ஒதுக்கீடு சந்தோச சிறுசலசலப்புடன் சங்கமமாகிக்கொண்டிருக்கிறது.
செக்கடிக்குளக்கரையில் ஒரு வேப்பமரம் இருக்கும். அதன் பக்கம் சென்று வருவோருக்கு தூயகாற்றை கலப்படமின்றி தந்துதவு
விளையாட்டரங்கு போல் வட்டமாய் இருந்து உற்சாகமூட்டும் மரங்களே அரங்கின் நடுவேநடப்பது என்ன விளையாட்டு? என்று உங்களுக்கும், உலகைப்படைத்த இறைவனுக்குமேநன்கு விளங்கும். அதை கேப் போட்டு வேடிக்கை பார்க்கும் செக்கடிக்குளக்கரை.
கருமேகமும், இருண்ட அதிரையும் உள்ளத்திற்குள் வெளிச்சம் தரும் உற்சாகமும்,மழைத்துளியில் தலைதுவட்ட காத்திருக்கும் தென்னைகளும் நம்மை திண்ணையிலிட்டு பாடநடத்த காத்திருக்கும்.
பெருமழையில் வீடிழந்த காக்கைக்கு உதவித்தொகை வழங்கிட முன் வருவர் யாரோ?
உலக அலுவல்களில் என்ன தான் உருண்டு திரிந்தாலும் நேரம் வரும் சமயம் படைத்தஇறைவனுக்கு தலைவணங்கவில்லை எனில் நம்மை அவன் படைத்ததன் நோக்கம் தான்என்ன? தியாகத்திருநாள் தொழுகை செக்கடிப்பள்ளியில் இனிதேநிறைவேறிக்கொண்டிருக்கும் வேளை.
இன்றைய சூழலில் நாம் எந்த நிலையில் இருக்கிறோமோ? உலகில் இல்லையோ? நாம்பயின்ற நடுத்தெரு (வாய்க்கால் தெரு) பள்ளி மட்டும் நடுநிலையுடன் அன்று முதல் இன்றுவரை அமைதியாய் நின்று வருவது கண்டு நமக்கெல்லாம் சந்தோசமேயன்றி சங்கடமேதும்இல்லை.
மார்க்கம் கூறுவது போல் எளிமையாய் நமதூர் மரைக்காப்பள்ளியில் நடநதேறிய ஒருசகோதரரின் திருமணம். ஹவுதில் ஒழு செய்பவர்களால் தண்ணீரில் ஏற்படும் சலசலப்புஎங்கோ இருக்கும் உங்களுக்கும் கேட்காமல் இருக்கப்போவதில்லை.
இருபக்க இயற்கையை மேற்பார்வை (சூப்பர்வைசர்) செய்து நடுவில் நின்று அதை கடந்துசெல்வோருக்கெல்லாம் இன்பமூட்டும் ராஜாமட பாலம்.
தலைமுடி போல் வளர்ந்திருக்கும் பெரும்புல்கள் தண்ணீரில் முகம் பார்த்து சீராக சீவிக்கொள்ள சீப்புகளை தேடும் நேரம்.
நீல வானமும், பசுந்தோல் போர்த்திய பூமியும் ஒன்றுக்கொன்று அமைதியாய் பேசிக்கொள்ளும் ஒரு அந்திமாலைப்பொழுது(ராஜாமட பாலம்).
எல்லோரும் சிமெண்ட் கட்டிடம் கட்டிவருவதால் வேலிக்கு தடுப்பாய் இருக்க இன்னும் வெட்டாமல் விடப்பட்ட மூங்கில்மரங்கள். அதைப்பார்த்து சிரித்து விடைபெறும் மாலைச்சூரியன்.
சிறு சலசலப்புடன் வானிலிருந்து வந்திறங்கிய மழை நீர் எவ்வித எமிக்ரேசன் நடைமுறையும் இன்றி கடலில் கலக்க ராஜாமடபாலத்தை கடந்து செல்கிறது. பனைமரங்களெல்லாம் அதற்கு சாட்சியாய் நிற்கிறது.
இறைவன் இலவசமாக வழங்கும் தண்ணீருக்கு ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொள்ளும் மனிதர்களே! மாறாக இறைவன்வானிலிருந்து மழையிறக்க ஒவ்வொரு தடவையும் ஒரு தொகை உங்களிடமிருந்து வசூல் செய்திருதால் என்ன தான்செய்வீர்களோ? என்று மவுனமாய் கேட்கும் ராஜாமட நீர்த்தேக்கம். கடலில் கலந்து உப்பாகிப்போகுமுன் எங்களை நீங்கள் நல்லமுறையில் தேக்கி பயன்படுத்தமாட்டீர்களா? என்றும் கேட்கு
மழைநீர் வருவதால் எங்களுக்கு நல்ல ஊட்டம், இல்லையேல் ஆடு,மாடுகளுக்கு நாங்கள் நல்ல ஊட்டம் என்று மனதிற்குள்சொல்லிக்கொள்ளும் புல்.
சலசல சப்தத்துடன் ஓடும் நீரும், அதில் துள்ளிக்குதித்து விளையாடும் மீன்களும் விழாக்கோலம் அடையும் மழைக்காலம் வந்துவிட்டால்..
வாகனங்களில்லா பாலத்தின் சாலையும், அதை ஆச்சரியமாய் வேடிக்கை பார்க்கும் மரங்களும் நமக்கு சொல்ல நினைப்பதுஎன்னவோ? அதை விளங்குவது படைத்த இறைவனல்லவோ? பெரும் விருந்து வைக்க நினைப்பவர்கள் இவ்விடத்தைதேர்ந்தெடுக்க நினைத்தாலும் நினைக்கலாம் யார் அறிவர்?)
ஐங்கால பாங்கின் ஒலியை அணுதினமும் தவறாது கேட்டுவரும் தென்னை மரம். பாங்கின் ஒலி கேட்டும் பள்ளி சென்றுஇறைவனைத்தொழ அசட்டை செய்யும் மனிதர்களை பார்த்து ஏளனச்சிர்ப்பு சிரிக்காமல் வேறென்ன செய்யும்?
உலகிற்கு வான் மழையை இறக்க சிமெண்ட் போல் உருவாகும் மேகக்கூட்டத்தை இடைவெளியின்றி பூச கரணையின்றிகருணையுடன் கச்சிதமாக செய்து முடித்து நம்மையெல்லாம் குளிரூட்டி காத்தருளும் வல்லோனைப்புகழ்ந்திடவார்த்தைகளில்லை.
பாலத்தின் கீழே ஓடும் சிறு மீன்களை பிடித்து பெரும் இன்பம் காணும் நமதூர் சகோதரர்களும், சிறுவர்களும்.
கப்பலோட்டிய தமிழனுக்கு கப்பல் கொடுத்துதவியது மட்டுமல்ல, மாதிரி போர்க்கப்பலே செய்து அதை நம் நாட்டிற்கேஅற்பணிக்கவும் தயாராக உள்ளோம் எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் என்று கூறி கம்பீரமாக மக்களின்பார்வைக்காக தான் உருவாக்கிய அந்த மாதிரி போர்க்கப்பலை காட்சிப்பொருளாக தன் வியாபாரதலத்தில் வைத்துமகிழ்கிறார் நண்பர் பிரைட் மீரா.
"சீன தேசம் சென்றேனும் சீர் கல்வியைத்தேடிக்கொள்" என்கிறது நம் சத்திய மார்க்கம் இஸ்லாம். மேலே பாலம் கடந்தேனும்பள்ளிக்கூடம் சென்று வருவோம் என்று சொல்லிச்சென்று வரும் பள்ளி மாணவிகள்.
இந்த மழை காலத்திலேயே பாலத்தின் நீர் வரத்து இப்படி தரையோடு தரையாக ஓடிக்கொண்டிருந்தால் வரும் கோடைகாலத்தில் தண்ணீர்த்தேவை என்ன ஆகுமோ? என்று தொலைநோக்கு சிந்தனையுடன் கவலையுற்றிருக்கும் நமதூர்சிறுவர்கள்.
பசுந்தரையில் குடிகொண்ட குடில், குளிர்க்காற்றுடன் கதகதப்பளிக்கும் வெயில், மரங்களில் ஒளிந்து கார்காலத்தைவரவேற்கும் குயில். மையம் கொண்டிருக்கும் கண்கொள்ளாக்காட்சிகளின் புயல். (இடம் மளவேனிர்க்காடு சாலை)
சுற்றி, சுற்றி வந்தாலும் கண்களுக்கு அசதியில்லை, கால்களுக்கு வலிகளில்லை. கண்கொள்ளாக்காட்சிகள் இலவசம்.காண்பதற்கு நாதியில்லை.
மழை நீரில் குதித்து கும்மாளமிட மனிதர்கள் மட்டுமல்ல? நாங்களும் சளைத்தவர்களல்ல என்று மண் அடிக்கும் டிராக்டர்களும்பாலத்தின் கீழ் இறங்கி பரவசக்குளியல் இடு
பார்வைக்கு புளிய மர வேலியமைத்து பவ்வியமாய் தூரத்தில் காட்சி தரும் செல்லிக்குச்சி ஏரி
வான் மழை நல்ல விருந்து படைத்து தரைப்புல்லை நன்கு வளர்த்தெடுக்கும் மழைக்காலம் அதைக்காணும் நமக்கெல்லாம்உற்சாகம் பொங்கும்.
இன்ஷா அல்லாஹ் இன்னும் சில காட்சிகள் தொடரும்....
புகைப்படங்களுடன் உள்ளக்கிடங்கின் வெளிப்பாட்டையும் உங்களுக்காக வழங்கி மகிழும்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
சவுதியிலிருந்து
10 பின்னூட்டங்கள்:
மழைப்பொழுவிற்கு அப்புறம் ஊருக்கு போகலாம் என எண்ணியிருந்தேன், அது இப்பொழுது தேவை படாது போலிருக்கு.
இயற்கை காட்சிகள் அனைத்தும் கண்கொள்ளா காட்சி!
காட்சிகளை விவரித்த விதமும் அருமை! அருமை!!
ஊரின் காட்சிகளை அழகுற சுட்டு வந்தமைக்கும் நெய்னா காக்காவிற்கு நன்றி.
தூரத்தில் இருக்கும் நம்மை ஊருக்கு கொண்டு சென்றது போல் இருக்கிறது இந்த காட்சிகள்
மாஷா அல்லாஹ் நம்ம ஊர் எப்போதுமே பார்பதற்கு மிக அழகுதான் இந்த காட்சிகளை தந்தமைக்கு மிக்க நன்றி.
புஹாரி தமாம்
அழகான படங்கள் அதற்கு உயிறுட்டமான வரிகள்.
கருந்து திரண்ட மழைமேகம்
சலசலத்து ஓடும் வாய்க்கால் தண்ணீர்,
துள்ளி விளையாடும் மீன் குஞ்சுகள்,
பச்சை பசேல் புள் வெளிகள்,
பார்க்க பார்க்க சலிக்காத இயற்கை இது இறைவனின் அருட்கொடை.
நம்ம ஊரை சுற்றி நிறைய இடங்கள் இருக்கின்றன நாம் தான் போட்டோவில் உள்ள இடங்களை சுற்றி பார்த்திருப்போமா?
இந்த இடங்களை எல்லாம் சுற்றலா மாதிரி பார்க்காமல் எங்கே எங்கேயோ காரிலும், பஸ்சிலும்,ரயிலிலும்,விமானத்திலும் சென்றுக் கொண்டு இருக்கிறோம்.இந்த போட்டோவில் உள்ள இடங்களுக்கு எல்லாம் சென்றால் இயற்கையான காற்றுகள் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் மன நிம்மதியும்,சந்தோசமும்,உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும் இந்த காற்றின் மூலமாக. செலவுகளும் கொஞ்சம் தான் ஆயிரக்கணக்கில் பணம் தேவை இல்லை மற்ற இடங்களுக்கு போனால் தான் ஆயிரக்கணக்கிலும்,லட்ச்சக்கணக்கிலும் பணம் செலவுகள் ஆகும். நீங்களும் இப்போவே தயாராகுங்கள் போட்டோவில் உள்ள இடங்களுக்கு ஒரு நாள் கூட ஆகாது சுற்றி பார்ப்பதற்கு. வெளிநாட்டில் உள்ள அதிரை மக்களுக்கு உடனை இந்த இடைத்தை பார்க்கணும் போல இருக்குமே? இதை பார்ப்பதற்கு உடனை புறப்படுங்கள்.
மாஷா அல்லாஹ
GREEN GREEN !! KEEP OUR CITY CLEAN !!!!!!!!!!!!!
மாஷா அல்லாஹ்
அருமையான தோற்றம் எத்தனை குளம் இருந்து என்ன..... குளிப்பதற்கு ஆளில்லையே...? எழில் மிகு தோற்றத்தை பார்க்கும் போது ஊர் நியாபகம் கண்ணை சுற்றுகிறது.... நேரில் இல்லாவிட்டாலும் புகைப்படம் எங்களை மெய்மறக்க செய்கிறது... அல்ஹம்துலில்லாஹ்
சூப்பர்..நேரில் 'கடத்தியேவிட்டீர்கள்' எங்களையெல்லாம்..அருமை..
நிழற் படங்களும் உங்கள் வரிகளும் அழகு ஒன்றே ஒன்றை தவிர
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment