அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!?
4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி...

More Link
இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Thursday, December 8, 2011

முஸ்லிம்களுக்கு எதிரான போக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு தடை : அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகம் அதிரடி.

வாஷிங்டன்: இந்தியாவில் இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற தலைப்பில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி எழுதிய கட்டுரையைக் கடுமையாக கண்டித்துள்ள அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகம், அங்கு சாமி நடத்தி வந்த பாடங்களையும் ரத்து செய்துவிட்டது. அதாவது, அவரை நீ்க்கிவிட்டது. இதனால், இனிமேல் 'ஹாவர்ட் விசிட்டிங் புரோபசர்' என்று சாமி கூறிக் கொண்டு திரிய முடியாது.

கடந்த ஜூலை மாதம் சாமி எழுதிய ஒரு கட்டுரையில், இந்தியாவில் உள்ள மசூதிகளை இடிக்க வேண்டும், தங்களது மூதாதையர்கள் இந்துக்கள் என்பதை ஏற்கும் முஸ்லீம்களுக்கு மட்டுமே இந்தியாவில் ஓட்டு போட உரிமை தர வேண்டும் என்று கூறியிருந்தார். இவரது கருத்துக்கு நாடு முழுவதுமே கடும் எதிர்ப்பு எழுந்தது.

சாமியை நீக்க வேண்டும் என்று கோரி ஹாவர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 400 மாணவர்கள் கையெழுத்திட்டு கோரிக்கையும் வைத்தனர்.

இந் நிலையில், பிற மதங்களை புண்படுத்தும் வகையில் எழுதியதற்காக, ஹாவர்ட் பல்கலைக்கழகம், சாமி நடத்தி வரும் பாடங்களை அதிரடியாக நீக்கியுள்ளது.

இந்தப் பல்கலைக்கழகத்தின் கோடை விடுமுறை கால பள்ளியில், சம்மர் ஸ்கூலில் ‘Quantitative Methods in Economics and Business’ மற்றும் ‘Economic Development in India and East Asia’ ஆகிய தலைப்புகளில் பாடம் எடுப்பார் சாமி.

இந் நிலையில் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்விப் பிரிவுக்கான (இதன் கீழ் தான் பொருளாதாரத்துறையும் வருகிறது) 2012ம் ஆண்டுக்கான பாடத் திட்டத்தை முடிவு செய்ய இந்த ஆசியர்களின் கூட்டம் நேற்று நடந்தது.

அப்போது, இந்தப் பிரிவில் பணியாற்றும் பல்வேறு மதங்கள், இனங்களைச் சேர்ந்த ஆசிரியர்களும் சாமியின் இஸ்லாம் பற்றிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் சாமி பாடம் நடத்தவும் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

மதங்கள் ஒப்பீட்டுத் துறையின் பேராசிரியரான டயானா எக் பேசுகையில், சாமி இங்கு பாடம் நடத்த அனுமதிக்கக் கூடாது என்ற தனது எதிர்ப்பை முதலில் கிளப்பினார். அவர் கூறுகையில், மதங்களுக்குள் சண்டையை மூட்டிவிட்டு சுயலாபம் தேட முயல்கிறார் சாமி. மதக்கலரங்களை தூண்டிவிடும் ஒருவருடன், சிறுபான்மை மக்களுக்கு எதிரான மத துவேஷத்தை பரப்பித் திரியும் ஒருவருடன் ஹாவர்ட் போன்ற ஒரு சர்வதேச கல்வி மையம் எந்தத் தொடர்பையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றார்.

அதே போல தத்துவவியல் துறை பேராசியர் சீன் கெல்லி கூறுகையில், நான் கூட முதலில் சாமியை ஆதரித்தேன். ஆனால், அவர் என்ன எழுதினார் என்பதை முழுமையாக பார்த்த பிறகு அதை ஏற்க முடியவில்லை. கருத்து சுதந்திரம் என்று கூறிக் கொண்டு இரு மதத்தினர் இடையே வன்முறையை தூண்டிவிடுவது எந்த வகையிலும் ஏற்கத்தக்கத்தல்ல. இது கருத்து சுதந்திரமல்ல, மதக் கலவரத்தை தூண்டிவிட தரப்படும் சுதந்திரம் என்றார்.

வரலாற்றுத்துறை பேராசிரியர் சுகதா போஸ் கூறுகையில், ஐரோப்பிய நாடுகளை வம்சாவளியாகக் கொண்ட அமெரிக்கர்கள் தான் உயர்ந்தவர்கள் என்பதை ஒப்புக் கொள்ளாத யூத இனத்தைச் சேர்ந்த அமெரிக்கர்களுக்கும், ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் ஓட்டுரிமை வழங்கக் கூடாது என்பது மாதிரி இருக்கிறது சுப்பிரமணிய சாமியின் கருத்து என்றார்.

இவ்வாறு நடந்த காரசார விவாதத்துக்குப் பின் சாமிக்கு 'குட்பை' சொல்ல ஹாவர்ட் பல்கலைக்கழகம் முடிவு செய்தது.

இதே பல்கலைக்கழகத்தில் தான் 1965ம் ஆண்டு பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றார் சாமி என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி : தட்ஸ்தமிழ்

6 பின்னூட்டங்கள்:

Adirai pasanga😎 said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

அஸ்ஸலாமு அலைக்கும்
சு சாமிக்கு கண்டனம் வரவேற்க வேண்டிய ஒன்று. இவர்கள் எல்லாம் இஸ்லாம்- , இஸ்லாமியர் பற்றிய உண்மைகள் தெரிந்து இருந்தும் இஸ்லாமியர்கள் இநாட்டின் பூர்விக குடிகள் என்று தெரிந்து இருந்தும் - காழ்புணர்வால் அப்படிதான் பேசுவார் - அவாள்கள் எல்லாம் அப்படித்தானே -

வெள்ளை ரோஜா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

அட்ரா சக்கே அட்ரா ...சாமிக்கு ஓ போட்டதா ஹாவர்ட் பல்கலைக்கழகம் .சாமி கோயிலுக்கு போய் பூசாரி வேலை பார்க்கலாம்.அவருக்கு எற்ற தொழில்

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 3

ஹாவர்ட் பல்கலைக்கழகம் பாசிஸ்ட்டு கொள்கையுடயவனை வெளியேற்றியது அது சுப்பு சாமிக்கு கொடுத்த தண்டனை மட்டுமல்ல. நம் நாட்டின் உள்ள எல்லா பாசிஸ்ட்டு கொள்கைவாதிகளான வாத்திகளுக்கும் இது ஒரு எச்சரிக்கை.

ஒரு சில குள்ள நரி கூட்டம் சுப்புவுக்கு போஸ்ட் ஓட்டுவார்கள்.
ஆனால் பெரும்பான்மையான மக்கள் அதே போஸ்ட்டுக்கு சாணி அடித்துவிடுவார்கள்..... என்பதன் பொருள்தான் ஹாவர்ட் பல்கலைக்கழகம் பாசிஸ்டு துப்பில்லாத சுப்புவை நீ்க்கிவிட்டது.

நேர்வழியில் இருக்கும் சாமியின் மகளை மீட்க அவர் படும் அவமானம் தொடர்ந்து கொண்டுதான் போகும். அதாவது அவருக்கு நேர்வழி கிடைக்கும் வரை.

பாசிஸ்ட்டு சிந்தனையாளர்களின் அங்கங்களின் ஒன்றுதான் "ஈகோ".
அதை வைத்துதான் நம் சமுதாயத்தை பிளவு படுத்திக்கொண்டிரிக்கிரார்கள்.

அந்த "ஈகோ"விலிருந்து நம்மவர்களை காப்பாற்ற நினைக்கும் "துக்ளக் நியூஸ் குழுமம்"

அதிரைக்காரன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 4

சுப்பிரசனியன் ஸ்வாமியின் வாய்துடுக்கு குறித்து முன்பு எழுதியது.

majfausa said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 5

saamiyai kaibar kanavaai vazhiyaaga thiruppi anuppinaalthaan avaalukkellaam engirundhu vandhom enkindra ninaippu irukkum.vandherigalukku vaaippoottu podaavittaal ellaa idangalilum sendraeri viduvaargal.

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 6

அரசியல் (அநாகரீக) ப்ரோகர் சுப்பு சாமி ஒரு அயோக்கியன் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது..... அதே நேரத்தில் இந்த வர்ணாசிரம அயோக்கியனை பாதிக்கப்பட்ட இந்திய முஸ்லிம்கள் எழுத்துரையில் எதிர்த்தார்களே தவிர..... இவனை இனங்காட்டும் வகையில் களமிறங்கவில்லை என்பது வேதனை தரும் உண்மை... ஹலால் பாம்பிங் என்ற பெயரில் இவன் கக்கிய பாசிச கருத்துக்களை கண்டு ஹார்வர்ட் பல்கலை. இவனை நீக்கியது வரவேற்க மற்றும் பாராட்ட பட வேண்டிய ஒன்று.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.