சென்னை, டிச.12: 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு மாதந்தோறும் கல்வி உதவித் தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சமூகநீதியை நிலைநாட்டுவதில் முன்னோடியாக திகழும் முதல்வர் ஜெயலலிதா பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக ஏராளமான திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள்.
இதன் அடிப்படையில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியருக்கு பள்ளிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ், விடுதியில் தங்காமல் 1 ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மாதம் ரூ.25 வீதம் 10 மாதங்களுக்கும், 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மாதம் ரூ.40 வீதம் 10 மாதங்களுக்கும், 9 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவியர்களுக்கு மாதம் ரூ.50 வீதம் 10 மாதங்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
இதே போன்று விடுதியில் தங்கி 3ம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மாதம் ரூ.200 வீதம் 10 மாதங்களுக்கும், 9ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு மாதம் ரூ.250,- வீதம் 10 மாதங்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இது தவிர, தனி மானியமாக ஆண்டொன்றுக்கு ரூ.500 வழங்கப்படும்.
ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த மாணவ,மாணவியர் இதனால் பயனடைவார்கள். இதற்கென, 11 கோடியே 32 லட்சம் ரூபாய் ஒப்பளிப்பு வழங்கி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
http://www.tn.gov.in/seithi_veliyeedu/pr12Dec11/pr121211_743.pdf
![]() | மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!? 4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி... More Link |
![]() | இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல் 0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2... More Link |
3 பின்னூட்டங்கள்:
இது கல்விக்காக கொடுக்கும் தொகையா?
அல்லது கையில் சில்லறை வைத்துக் கொள்வதற்காகவா ! ! !
காரணம், அம்மா ஏத்துன விலைவாசியைப் பார்த்தால் இனிமே யார் கையிலேயும் சில்லறை இருக்காது. காந்திய மதிக்காத அம்மா இப்போ காந்தி தாத்தா நோட்ட புழங்க வச்சிட்டாங்க.
இரண்டு லிட்டர் பால் வாங்கிய வீடுகள், இப்பொழுது ஒரு லிட்டர் பால் வாங்க வேண்டிய நிலமையாகிவிட்டது. தண்ணீர் தட்டுப்பாடு வந்துவிட்டால் பாலின் விலை அம்மாவை கேட்காமலே விலை ஏறிவிடும்.
அரிசி கிடைத்து விட்டது, அதை சமைக்க காஸ் ( GAS ) இல்லை.
பாலில் ஏற்றிய விலையில் இருபதில் ( 20 ) ஒன்று கூட மக்களுக்கு மானியமாய் போய் சேரவில்லை. அது மாயமாய் மறைந்து விடும்.
"நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலை கெட்ட ஆட்சியாளர்களை நினைத்துவிட்டால்" என்று பாலகர்கள் கூட பாட ஆரம்பித்துவிடுவார்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்
அரசாங்கத்தில் உதவித்தொகை அறிவிப்பு செய்தி ஒருபுறம் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் , அதனை அவர்கள் அடைவற்கு படும்பாடு கவலை அளிக்கக்கூடியது. ஏனெனில் அதிகாரிகள் மக்களை இழுத்தடித்து கொடுப்பதால் மக்கள் சலிப்படைந்து விடுகின்றனர்.
ஊக்காத்தொகை மூலம்..... பெற்றோர்களின் குறிப்பாக அப்பாக்களின் பைகள் தான் நிறையுமே ஒழிய கல்வியில் தன்னிறைவு பெற இயலாது என்பது வரலாறு.... மாத்தி யோசிங்கோ....
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment