அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Thursday, December 15, 2011

பேரூராட்சி மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்ன ?



பேரூராட்சிகளின் செயல்பாடுகள் !
தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகள் நான்கு நிலைகளாக ( நிலை-2, நிலை-1 , தேர்வு நிலை, சிறப்பு நிலை ) பிரிக்கப்பட்டு அதில் அதிராம்பட்டினம் தேர்வு நிலை பேருராட்சியாக உள்ளது.


பேரூராட்சி மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்ன ?


1. பொது சுகாதாரம் – துப்புரவு, கழிவு நீர் அகற்றுதல், கழிப்பறை வசதி, திடக்கழிவு மேலாண்மை.
2. மக்கள் உடல் நலம் மற்றும் நோய் தடுப்பு ( மருத்துவ வசதி உட்பட )
3. குடி நீர் வழங்கல்
4. விளக்கு வசதி
5. சாலை வசதி
6. தெருக்கள் அமைத்தல், பராமரித்தல்
7. பொதுசொத்துக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு
8. கட்டிடங்கள் கட்டுவதை ஒழுங்கு செய்தல்,
9. தொழிற்ச்சாலைகள் மற்றும் தொழில்கள் ஏற்படுவதை உரிமம் வழங்கி முறைபடுத்துதல்
10. பிறப்பு, இறப்பு பதிவு
11. மையானங்கள் ( கஃப்ர்ஸ்தான் ) ஏற்படுத்தி பராமரிப்பு

பொது சுகாதாரம் பராமரிப்பு :-

1. குப்பைகள் உருவாகும் இடத்திலேயே பிரிப்பது, அவற்றை குப்பைகிடங்குகளுக்கு கொண்டுசெல்வது, பிறகு பாதுகாப்பான முறையில் குப்பைகளை அழிப்பது மற்றும் குப்பைகளிலிருந்து திரும்ப பயன்படுத்தக்கூடிய பொருள்களை தயாரிக்ககூடிய பொருள்களை தனியாக பிரிப்பது ( Waste Recycling ) போன்ற அம்சங்கள் உண்டு.


2. வீடுகளிலேயே திடக்கழிவுகளைப் பிரித்து சேகரம் செய்யப்படுகின்றன.


3. குப்பை அகற்றுதல் பற்றியும், சுற்றுப்புற சுகாதாரம் குறித்தும் தெருக்களில் அசுத்தம் செய்வதை தடுக்கவும், பயன்படுத்திய பிளாஸ்டிக் கழிவுப் பொருள்களை தெருக்களில் வீசி எறிவதை தடுக்கவும் மக்களிடயே விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் பயன்தரதக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


4. அனுமதித்த அளவை வீட குறைவான துப்புரவு பணியாளர்கள் இருக்கும் பட்சத்தில், மிகை செலவீனம் ஏற்படாத வகையில் சுய உதவிக் குழுவினரை பயன் படுத்திக் கொள்ளலாம்.


5. கழிவு நீர் தேங்காமல் கண்காணித்தல் வேண்டும்.


6. கொசுத்தொல்லையை ஒழித்திட, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் / மாவட்ட மலேரியா ஒழிப்பு அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

7. மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனரால் அரசு மூலம் வழங்கும் லார்விசைடு ( Larvicide ) வாங்கி பயன்படுத்த வேண்டும்.


8. பொதுக்கழிப்பிடங்கள் சுத்தமாக பராமரிக்க வேண்டும்.


9. பிளிச்சிங் பவுடர், பினாயில் ஆகியவை அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில்தான் வாங்கப்படவேண்டும்.


10. மக்கள் நல்ல உடல் நலத்துடன் வாழ கழிவு மேலாண்மைப் பணிகள் அவசியம். அதிலும் நன்கு திட்டமிட்டு மேலாண்மை செய்தல் மிகவும் அவசியம்.


11. திடக்கழிவுகளை அவை உற்பத்தியாகும் இடங்களிலேயே மக்கும் கழிவு, மக்காத தன்மையுள்ள கழிவு என தரம்பிரித்து, தனித்தனியாக சேகரம் செய்யப்படவேண்டும்.

12. தரம்பிரித்து கழிவுகளைக் கையாளலாம் மற்றும் சேகரம் செய்யும் முறைக் குறித்து பொதுமக்கள் நன்கு அறிந்து விரைந்து செயல்பட விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

13. பொதுஇடங்களில் ஏற்படும் கலவை குப்பைகளை குறிப்பிட்ட இடைவெளிகளில் அகற்றுதல் வேண்டும்.


14. மக்கும் தன்மையுள்ள குப்பைகளை உரமாக்குதல் மற்றும் மக்காத தன்மையுள்ள குப்பைகளை மறுசுழற்சி செய்தல் வேண்டும்.

15. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை நேரடியாக பெறத்தக்க ஏற்பாடுகள் செய்தல் வேண்டும்.


16. கழிவு மேலாண்மைப் பணிகளில் சுய உதவிக் குழுக்கள், தொண்டுநிறுவனங்கள் ஆகியவற்றின் சேவைகளைப் பெறுதல் வேண்டும்.


17. தள்ளு வண்டி / மிதி வண்டி மூலம் ஒவ்வொரு வீட்டிலும் பெறப்படும் தரம் பிரித்த குப்பைகளை, லாரி / டிராக்டர் மூலம் பெற்று செல்ல இரண்டாம் சேகரிப்பு மையங்கள் ( Secondary Collection Point ) ஏற்படுத்தி தள்ளு வண்டி / மிதி வண்டிகள் மற்றும் அவற்றின் பராமரிப்பாளர், நீண்ட தூரம் தேவையின்றி பயணிப்பதை தவிர்த்தல் வேண்டும்.


18. கழிவுகளை தரம் பிரிக்கும் கூடம், உரத்தயாரிப்பு கூடம், மக்காத் கழிவுகளை தரம்பிரித்து மறு சுழற்சிக்கு அனுப்ப வேண்டிய ஏற்பாடுகளை மேற்கொள்ளும் கூடம், இருப்பு வைப்பு கூடம் ஆகிய வசதிகளுடன் உரத்தயாரிப்பு கூடம் அமைத்தல் மற்றும் தர வளாகத்தை அழகுற பராமரித்தல் வேண்டும்.


19. உரிய வழிமுறைகளை கையாண்டு தரமான உரம் தயாரித்தல் வேண்டும்.


20. மண் புழு உரம் தயாரித்தல் வேண்டும்.


21. கழிவு நீர்க் கால்வாய்களை குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தம் செய்தல் மற்றும் கிருமி நாசினி தெளித்தல் வேண்டும்.


22. அபாயகரமான கழிவுகளை அவற்றிக்குரிய நடைமுறைகளை பின்பற்றி கவனமாக கையாளுதல் மற்றும் அழித்தல் வேண்டும்.


23. மருத்துவக்கழிவுகளை அந்தந்த மூவு செய்து கொள்தல், கண்காணித்தல் மற்றும் தவறு செய்யும் மருத்துவமனைகள் மற்றும் தனி நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.


24. திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு பயன்படுத்தும் வாகனங்களுக்கு உரிய பணி அட்டவணை தயாரித்தல் மற்றும் அதனை பின்பற்றுதல், வாகனங்களுக்கு எண்கள் இட்டு பராமரித்தல் வேண்டும்.

இறைவன் நாடினால் ! தொடரும்......
Source : Website of the Tamil Nadu Government

6 பின்னூட்டங்கள்:

அபூ இஸ்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அதிரையில் பொதுக்கழிப்பறைகள் குறைவாகவே உள்ளது. அதிக கழிப்பறைகள் உருவாக்கி அதை மக்களுக்கு இலவசமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும், மேலும் கொசுதொல்லைகள் அதிகமாக உள்ளது இதை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிரை நியூஸ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அதிரையில் உள்ள 21 கவுன்சிலர்களும் இப்பதிவை நன்கு படித்து பொதுசுகாதாரதுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

Adirai Community said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அதிரையின் எல்லா வலைதளங்களிலும் ஒரே கட்டுரை/பதிவுகளை முகப்பில் வெளியிடுவதால் படிக்கும் ஆர்வம் குறைகிறது. அப்படி பதிவதற்கு பதிலாக எல்லா அதிரை இணையதளங்களும் இணைந்து ஒரு தளமாக இணையலாமே!! ஏன் பிடிவாதம்?

சேக்கனா M. நிஜாம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அதிரையில் நமது சகோதரர்கள் ஏற்படுத்தி உள்ள அனைத்து வலைத்தளங்களும் வெவ்வேறு வாசகர்களை கொண்டுள்ளது. எனது பதிவுகள் அனைத்தும் அதிரை மக்களின் விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைத்து சகோதரர்களையும் சென்றடைய வேண்டும் என்பதே எனது நோக்கமே தவிர வேற எதுவும் இல்லை. ஆதலால் வெவ்வேறு நமது சகோதர வலைதளங்களில் பதிவு செய்யப்படுகிறது. இறைவன் நாடினால்........! எனது ஒரே பதிவுகளை வெவ்வேறு நமது சகோதர வலைதளங்களில் பதிவு செய்வதை தவிர்க்கிறேன்.
சகோ. ‘ Adirai Community ‘ சொல்வதுபோல் எல்லா அதிரை இணையதளங்களும் இணைந்து ஒரே தளமாக இணைய ஏன் நீங்களே முயற்சி செய்யக்கூடாது ? கருத்து சொல்வது அளவில் இல்லாமல் தாங்களே செயல்முறைக்கு கொண்டு வர சம்பந்தப்பட்டவர்களை அணுகி முயற்சி செய்யலாமே !

Adirai pasanga😎 said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும்

//சகோ. ‘ Adirai Community ‘ சொல்வதுபோல் எல்லா அதிரை இணையதளங்களும் இணைந்து ஒரே தளமாக இணைய ஏன் நீங்களே முயற்சி செய்யக்கூடாது ? கருத்து சொல்வது அளவில் இல்லாமல் தாங்களே செயல்முறைக்கு கொண்டு வர சம்பந்தப்பட்டவர்களை அணுகி முயற்சி செய்யலாமே !//

தனது பதிவுகளை வெளியிடுவது குறித்து சகோதரர் நிஜாம் அவர்களின் adirai community க்கு அளித்த பதில் எனக்கு ஒன்றை நினைவுபடுத்துகிறது. என்னவெனில் ஒருபக்கம் ஊர் ஒற்றுமைக்கு புதிய அமைப்பு தொடங்கி முயற்சி மேற்கொண்டாலும் இன்னொரு பக்கம் இஸ்லாமிய அமைப்புகள் பலவாக பிரிந்து போனது போல் அதிரை வலைதளங்களும் பிரிந்து கிடப்பது போலல்லவோ தோன்றுகிறது..

பூனைக்கு யார்தான் மணி கட்டுவது?

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

போதுக்களிவரையை மூத்த அதிகாரிகள் அடிக்கடி சென்று பயன்படுத்தினால் தான் அதன் தற்காலிக சூழலை அனுபவ ரீதியாக உணர முடியும்.... செய்வார்களா அதிகாரிகள்...?

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.