விடிந்தது இரயில் பொழுது !
திருவாரூர் காரைக்குடி மார்க்கமாக செல்லும் இரயில் பாதையை அகல இரயில் பாதையாக மாற்றும் பணிக்கான ஆயத்தம் துவங்கிவிட்டது, இன்று அதற்கான டெண்டர்களுக்கு முறையாக அனுமதி வழங்கப்படுள்ளது.
வெகு விரைவில் அந்தப் பணிகள் தொடங்க இருக்கிறது, அதிரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையும் கனவும் நனவாகும் சூழல் கை கூடி வந்திருக்கிறது.
இன்று முதல் அதிரையில் கணினி வழி முன்பதிவு சேவை தொடங்கப்பட்டிருக்கிறது, இன்று முதலாவதாக லோக்கல் ரிசர்வேஷனும் இனிவரும் காலங்களில் மற்ற இடங்களுக்கான ரிசர்வேஷன் சீக்கிரமே துவங்கப்படும் என்றும் இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
12 பின்னூட்டங்கள்:
ரொம்ப மகிழ்ச்சியான செய்தி.
அல்ஹம்துலில்லாஹ்!
கணினி முன்பதிவு செய்யும் வசதி பற்றிய முழு விபரங்களை(கூடுதல் தகவல்களை) தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அல்ஹம்துலில்லாஹ் மிக்க மகிழ்ச்சி.. இருபினும் இன்னும் எத்துனை காலம் தான் காத்திருக்க போகின்றோமோ..?
அல்ஹம்துலில்லாஹ்,
மிக செம்மையாக முயற்சி செய்து பணிகளை தொடங்க வைத்த நம் அதிரை நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்
திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதைக்கு டெண்டர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டது என்ற செய்தி மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. அதே சமயம் அதற்கான பேப்பர் செய்தியையும் இணைத்து வெளியிட்டு இருந்தால் நன்றாக இருக்கும். ரிசர்வேசன் துவங்கிய செய்தியும் மிக்க மகிழ்ச்சியான விஷயம். எப்போது ரயில் போக்குவரத்துக்கு துவங்குமோ அப்போதுதான் இரட்டிப்பு மகிழ்ச்சி. - இன்ஷா அல்லாஹ்
இந்த செய்தியை படித்தவுடன் நமதூர் இரயில் நிலையத்துக்கு தொடர்புகொண்டு முன்பதிவு பற்றி கேட்டால் அப்படி ஒன்றும் இங்கு ஏற்பாடு
இல்லை விரைவில் வரக்கூடும் என்றார். மேலும் டெண்டர் கோரப்பட்டால் எப்படியும் 3 வருடங்கள் ஆகலாம் என்றார்.
அல்ஹம்துலில்லாஹ்,
முயற்சி செய்து பணிகளை தொடங்க வைத்த நம் அதிரை நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்...
அஸ்ஸலாமு அழைக்கும்,
திருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதைக்கான டெண்டேறுக்கான செய்தி
http://www.sr.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0,4,362
எங்கே, அந்த இணைப்பை எடுத்துப் போடுங்கள், பார்ப்போம்....! என் பார்வைக்குப் பிடிபடவில்லை, நீங்கள் கொடுத்த இணைப்பில்!
அஸ்ஸலாமு அழைக்கும்
அல்ஹம்துலில்லாஹ்.......
அதிரை பிபிசி மிக அருமையான செய்திகளை நமதூர் மக்களுக்கு தந்து இருக்கிறது.ரயில் நிலையத்தில் கணினி மையம் ஆரம்பித்து விட்டதாக தகவல் தந்தீர்கள் மிக சந்தோசமான செய்தி. இனி அதிரை மக்களுக்கு மகிழ்ச்சி தான் நீண்டால் முயற்ச்சிக்கும்,பொறுமைக்கும் அல்லாஹ் நற்கூலியை தந்தருல்வானாக ஆமீன். இதைப்போல் எல்லா விசயத்திற்கும் அதிரை மக்கள் ஒன்று கூடி முயற்சி செய்தால் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் நிறைவேரும். அதிரை மக்களின் நீண்ட நாள் கனவு நினைவாகிறது எல்லாம் வல்ல இறைவனுக்கு நாம் அதிகமாக நன்றி செலுத்தவேண்டும். அகல ரயில் பாதை பணிகள் விரைவில் தொடுங்கினால் தான் அதிரை மக்களுக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். லோக்களை தவிர மற்ற எல்லா ஊர்களுக்கும் போகுவதற்கு கணினி மூலமாக முன்பதிவு வசதி வந்தால் எல்லா மக்களுக்கும் சந்தோசமாக இருக்கும்.
//New Line Surveys proposed to be taken up in 2011-12:-
I Thakaz.hy-Tiruvalla
2. Salem - Karaikal via Perambalur, Mayiladuthurai
3. Nagore - Falaudi
4. Mannargudi - பட்டுக்கோட்டை//
அதிரை மக்களுக்காக அதிரை பிபிசி கடந்த காலங்களில் இன்னும் எதிர்காலங்களில் செய்ய விருக்கும் நன்மைகளை நினைத்து இவ்விசயத்தை பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறேன்
ஊடகத்தில் புதிய முயற்சிகளை புகுத்திய முறையும்,அதிரை பிபிசியின் நடுநிலையும் என்றும் மறக்க முடியாது
செய்திகளை பரபரப்புகளுக்காக ஆதாரமில்லாமல் வெளியிடுவது, வெளியிடுபவரின் நம்பகத்தன்மை கேளிக்குரியதாகிவிடும்.
குறைந்தபட்சம் கிடைக்கின்ற செய்திகளை சரிபார்த்து பிரசுரிப்பது நல்லது.
காதில் விழுவதை எல்லாம் பிறருக்கு எத்திவைப்பதை ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்கள் கடுமையாகவே எச்சரித்திருப்பதை கொள்கையாகவே கொண்டு செயல்பட்டால் இதுபோன்று தவறுகள் நடவாதிருக்க ஏதுவாக இருக்கும் என்று சொல்லிக்கொள்ளும் ...
அதே வேளையில்,
மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வரை புதிய வழித்தடம் அடுத்த வருடம் survey செய்ய இருப்பதாக மேல்கண்ட இணைப்பிலிருந்து அறியமுடிகிறது.
நல்லது.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment