அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Saturday, December 10, 2011

புங்க மர விதையில் பயோ டீசல் : முஸ்லீம் மாணவிகள் சாதனை !




மயிலாடுதுறை :- மயிலாடுதுறை அருகே, பள்ளி மாணவியர், புங்க மர விதையில் இருந்து எடுக்கப்பட்ட பயோ டீசலை கொண்டு, கார் இன்ஜினை இயக்கிக் காண்பித்தனர்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த வடகரையில் உள்ள ஹாஜா சாரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியர், பள்ளி நிர்வாகி ஜியாவுதீன் மற்றும் முதல்வர் குணசேகரன் ஆகியோர் உதவியுடன், புங்க மர விதையிலிருந்து எடுக்கப்பட்ட பயோ டீசலை கொண்டு, வாகன இன்ஜின்களை இயக்க முடியும் என கண்டுபிடித்துள்ளனர். ஹாஜா சாரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், நாகை கலெக்டர் முனுசாமி முன்னிலையில், முஸ்லீம் மாணவிகள் செயல் முறை விளக்கம் காண்பித்தனர். முதலில், டீசலை கொண்டும், பின் தாங்கள் கண்டுபிடித்துள்ள புங்க மர விதையிலிருந்து எடுக்கப்பட்ட பயோ டீசலை கொண்டும், தொடர்ந்து கார் இன்ஜினை இயக்கிக் காண்பித்தனர். நிகழ்ச்சியில், மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் திருவளர்ச்செல்வி, மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலர் சக்திவேல், தரங்கம்பாடி தாசில்தார் சூரியமூர்த்தி, தனி தாசில்தார் பாலச்சந்திரன், செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, மாணவியரின் கண்டுபிடிப்பை பாராட்டினர்.

நன்றி : காலை நாளிதழ்

6 பின்னூட்டங்கள்:

அபூ இஸ்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தமிழக அரசு இதை போன்ற கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இம்முறையில் பயோ டீசலை உற்பத்தி செய்து மக்களுக்கு பயன்தரும் வகையில் மார்க்கெட்டிங் செய்யவேண்டும்.

abu ismail said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அபு இஸ்மாயில்
இளம் சஹோதரிகளின் சாதனைக்கு வாழ்த்துக்கள்,தேசநலனில் அக்கறையுடன் இத்துறையில் கவனம் செலுத்தி, இன்றைய இந்திய விலைவாசி உயர்வில் முன்னிலையில் இருந்து அணைத்து தரப்பு மக்களையும் பாதிப்படைய செய்துள்ள பெட்ரோல் டீசல் விலைவுயர்வு ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்துமோ என்று ஆட்சியாளர்கள் அஞ்சும் நிலையில், ஆட்சியாளர்களும் அதிகரிகளும் கவனம் செலுத்தி சஹோதரிகளின் சாதனைக்கு உரிய அங்கிகாரம் கொடுத்து. அவர்களின் சாதனையை மேலும் மேருகேற்ற அனைத் உதவிகளையும் செய்ய முன்வரவேண்டும். இதன் முலம் தேசமும் தேசமக்களும் நலம் பெறமுடியும் செய்வார்கலா. மக்களையும் பாதிப்படைய செய்துள்ள பெட்ரோல் டீசல் விலைவுயர்வு ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்துமோ என்று ஆட்சியாளர்கள் அஞ்சும் நிலையில், ஆட்சியாளர்களும் அதிகரிகளும் கவனம் செலுத்தி சஹோதரிகளின் சாதனைக்கு உரிய அங்கிகாரம் கொடுத்து. அவர்களின் சாதனையை மேலும் மேருகேற்ற அனைத் உதவிகளையும் செய்ய முன்வரவேண்டும். இதன் முலம் தேசமும் தேசமக்களும் நலம் பெறமுடியும் செய்வார்கலா.

அதிரை நியூஸ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் !
புங்க மர விதையில் இருந்து எடுக்கப்பட்ட பயோ டீசலின் ஆய்வுகளை ஐ.ஐ.டி. சென்னையை அணுகி முறையாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இம்முறையைக் கொண்டு பெறப்படும் எரிபொருள்கள் சுற்று சூழல் பாதிப்புகள் ஏதும் உண்டா என்ற ஆராய்ச்சிகளிலும் சகோதரிகள் ஈடுபடலாம்.

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மாஷாஅல்லாஹ்

அருமை முஸ்லிம் சகோதரிகளின் வியக்கத்தக்க சாதனையில், அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் படி புர்கா அணிந்து கண்ணியமிக்க சாதனயாலராகி விட்டார்கள்.

இஸ்லாமிய பெண்களின் கண்ணியத்திற்கு உயிரோட்டம் கொடுத்தவர்கள்.

இவர்கள் கண்ணியமான கண்டுபிடிப்பாளர்கள்.

வாழ்த்துக்கள் சகோதரிகளே........

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

எங்களுக்கும் சாதிக்க தெரியும்..... என்பதை உலகுக்கு உணர்த்திய சகோதரிக்களுக்கு வாழ்த்துக்கள்... உலகியல் கல்விக்கு அளிக்கும் முக்கியத்தோடு மார்க்கத்தையும் இணைத்துகொண்டால் ஈருலக வெற்றிக்கு வித்திடலாம்...... அல்லாஹ் நம் சமுதுயத்தை என்றும் மேலோங்கி தளைத்து நிற்க வழி வகை செய்வானாக ஆமீன்.

MOHAMED RAFIQ said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மாஷாஅல்லாஹ் ..............
வாழ்த்துக்கள் சகோதரிகளே...............

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.