தனித் தூதுகள் – messengers
சமூக பினைப்பு வலைத் தளங்களின் (social networking) ஆதிக்கம் அதன் உள்நோக்கு ஆக்கப் பனிகளை காட்டிலும் சீரழிவுப் புதை குழிகளை வெட்டி வைத்து வீழ்த்துவதில் முன்னனியில் இருப்பதை யாவரும் அறிந்ததே இதனை
மேலும் இனி வரும் பதிவுகளில் விரிவாக நிச்சயம் நாம் தெரிந்து கொள்ளத்தான் இருக்கிறோம், இதற்கு முன்னர் வெளிவந்த இரண்டு தொடர்களை வாசித்த சில நண்பர்கள் தனி மின்மடல் மூலமாக அவர்களுக்குரிய சந்தேகங்களை வாதமாக வைத்தார்கள், அவர்களுக்கு மறுமொழி அளிக்கும்போதே விளக்கம் கொடுத்திருந்தேன் அவைகளின் சுருக்கச் சாரம் இங்கே பதியலாமே என்று தோன்றியதால் பதிகிறேன்.
நம் மக்கள் கணினியின் உதவியுடன் உலவியில் வலை மேய்ச்சலுக்கு ஈடாக அதிகம் பன்படுத்தும் மற்றொரு இணைய பயன்பாடுதான் "தனித்தூது" (messenger) மென்பொருள்கள் (software) இவைகளை மிகப் பிரபலமான நிறுவனங்களும், வேறு பல வலைத்தளங்களை நிர்வகிக்கும் நிறுவனங்களும் இலவசமாக வழங்கி வருகின்றன. சரி இந்த "தனித்தூது" (messanger) எப்படி உருவானது? இன்று இதன் உச்சம் எந்நிலையில் உள்ளது ! என்று துருவ ஆரம்பித்தால் பதிவின் நீளம் நீண்டு கொண்டேயிருக்கும். இதனை சுருக்கமாக இரண்டு வரிகளில் சொல்வதனால் இரு கணினிக்கிடையில் தகவல் பரிமாறிக் கொள்ள பயன்படுத்தப்பட்ட மிகச் சாதாரன மென்பொருளின் வளர்ச்சிதான் இன்று பலகோடி கணினிகள் உதவியுடன் ஒரே நேரத்தில் கணக்கிடங்கலாத கணினி பயன்பாட்டளர்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது.
இன்றைய சூழலில் எத்தனையோ வகையான தொலைவு அனுகுமுறை (remote access) அதாவது நமக்கு அருகிலிருக்கும் அல்லது தூரத்திலிருக்கும் கணினியை நாம் இருக்கும் இடத்திலிருந்து கொண்டே இயக்குவதற்கு நல் நோக்கத்தில் இலவசமாக உலவ விட்ட மென்பொருள்கள் (remote access softwares) கலப்போக்கில் வேவு பார்க்கவும், நிறுவப்பட்டிருக்கும் (installed) கணினியையே வேட்டு வைக்கவும் பயன்படுத்தப் பட்டு வருவது விஞ்ஞான வளர்ச்சி சீர்கேட்டுக்கு வாய்கால் வெட்டி வரப்பு உயர்த்தி வைத்திருப்பது என்னவோ உண்மை.
எனக்கு வந்த தனிமடலில் அதெப்படி அடுத்தவங்க கணினியில் உள்ளே செல்ல முடியும் என்று கேட்டதோடில்லாமல் வாதம் செய்வதுபோல் சில கேள்விகளையும் அடுக்கியிருந்தார் எனது நண்பன் அதோடு சற்று அந்த விசயத்தை சில நாட்களே ஆறப்போட்டேன், அப்படி என்னதான் கேட்டுபுட்டானாம் முனுமுனுக்க வேண்டாம்.
நான் அவனிடம் வழக்கமாக மிகப் பிரபலமான நம் எல்லோருக்கும் தெரிந்த சுடான மின்அஞ்சல் "தனித்தூது" மூலம் தட்டச்சு செய்தும் (typing) வாயாடி சாட்டிங்கில் (voice chatting) ஈடுபட்டிருந்தேன் அவரது கணினியில் இருந்த சிக்கல்கள் பற்றி சில சந்தேகங்கள் கேட்டார் நான் எவ்வளவு சொல்லியும் அவருக்கு சரியாக பிடிபடவில்லை வெறுப்பில் திட்ட ஆரம்பித்து விட்டார் அவரிடம் சமாதானம் செய்து விட்டு நான் சொல்வதை செய்டான்னு சொல்லி ஒவ்வொன்றாக செய்தார் “மைவைத்து மயக்கியவர்” போல் ஏன்னா அவருக்கு அந்தச் சிக்கல் சரியாக வேண்டுமே அப்படியொரு நெருக்கடி.
சற்று நேரத்தில் DTH அதிர்வதுபோல் சத்தமாக கத்த ஆரம்பித்து விட்டார் வாயாடியிலும் (voice chatting) பேசி கொண்டுதான் இருந்தேன் அவரோடு, அதாவது தானாக கணினி இயங்க ஆரம்பிக்குது எல்லாமே மறஞ்சுடுச்சுன்னு மறுபடியும் சரியா வந்திடுச்சு ஆனா மவ்சு தானாக அசையுது, எழுத்துக்கள் வருகிறதேன்னு.
நானும் அவர் சொல்லியிருந்த சிக்கலை சரி செய்வதாக சொன்னேன் சிறிது நேரத்தில் அவரது கணினியின் உள்ளே சென்று அகம் கண்ட பலனாக myPicture folderல் (என்னுடைய படங்கள் கோப்பு) யார் யார் படங்கள் இருக்கிறது என்று நான் பாட்டியலிட்டதும் அதிர்ந்து விட்டார் இதேபோல் இன்னும் சில அதிர்ச்சிகள் கொடுத்து அதிரவிட்டேன் எல்லாவற்றையும் இங்கே விளக்க முடியவில்லை.
இது ஒரு சாம்பிள்தான் இதைவிட கண்ணைக் குத்திவிட்டு ஒன்றுமே தெரியாமல் எவ்வளவோ வலைக்குள் ஊடுருவி செய்வினையோ வஞ்சனையோ அல்லது எதனையும் புதைத்து வைத்து பின்னர் கதவு தட்டிச் சென்று கணினியானந்தாவையோ, கூகிலாண்டவரையோ, சூடுமெயிலாண்டவரையோ யாஹுவாண்டவரையோ வழித் தடம் காட்டிட இழுத்து வைத்துக் கொண்டு கணினிப் பினிபோக்கிட (சீர் செய்ய) வைக்க முடியும், வதைத்து எடுக்கவும் முடியும் என்று சொல்லத்தான் இதனை மேலோட்டமாகத் தான் சொல்லியிருக்கேன்.
தொலைவு தொடர்புகள் (remote access) ஏற்படுத்த இலவசமாக நிறைய மின்பொருள்கள் கொட்டிக் கிடக்கிறது, இதனைக் கொண்டு விபரம் தெரிந்தவர்களின் கண்ணையே கட்டிவிட்டு கண்ணாமூச்சி விளையாட முடியும் ஆனால் நுனுக்கமான கணினி அறிவு இல்லாமல் நம் வீடுகளில் இயக்கப்படும் கணினிகளின் நிலையை யோசித்துப் பாருங்கள்.
- இலகுவாக யாரையும் நண்பர்கள் பட்டியலில் சேர்த்து விடாதீர்கள்.
- புதியப் பழக்கம் கிடைத்து சாட்டிங்கில் இருக்கும்போது அதனை மட்டும் செய்யுங்கள்.
- முடிந்தவரை நெருங்கியவர்களுடன் மட்டுமே சாட்டிங்கில் ஈடுபடுங்கள்.
- வீட்டுக் கணினியை எப்போது கண்கானியுங்கள் ஆனால் வேவு பார்ப்பதாக மாட்டிக் கொள்ளாமல் உங்களின் கவனத்தை தெரியப் படுத்திடுங்கள்.
- பிள்ளைகளின் தனித்தூது ஐடியை தெரிந்து வைத்திருங்கள்
- அவர்களிடம் நண்பர்களின் தொடர்பு பட்டியலை கணினியில் உங்களுக்கு காட்டிவிடச் சொல்லுங்கள்.
இதெல்லாம் செய்தாலும், நம் குழந்தைகளுக்கு நாம் நல்லவர்களாக இருப்போம் என்று நம்பிக்கை ஏற்படுத்துவோம் அதேபோல் அவர்களையும் நமக்கு நல்லவர்களாக இருக்க வைப்பதற்கு முயற்சிகள் அனைத்தையும் செய்வோம் இன்ஷா அல்லாஹ்..!
நம்பிக்கையூட்டுங்கள் அவர்களின் தனித் தன்மையில் தலையிடமாட்டீர்கள் என்றும், அதே நேரத்தில் அத்துமீறல்கள் கண்டால் மவுனம் காக்க மாட்டீர்கள் என்றும் வெளிக்காட்டி விடுங்கள்..
இதைவிட இன்னும் சொல்லித்தர நீங்களும் இருக்கிறீர்கள் தானே சொல்லுங்களேன் பின்னுட்டம் வாயிலாக...
குறிப்பு : வீட்டிலிருக்கும் இண்டெர்நெட் இணைப்புக்கு பயன்படுத்தும் அகல அலைவரிசை இணைய அணுகல் - இணக்கி / வழிச்செயலி (ADSL modem / router) பாதுகாப்பும் அதன் பயன்பாடுகள் என்னவென்றும் அவசியம் நாம் யாவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதனைப் பற்றி விலாவாரியாக அடுத்தடுத்து பார்க்கத்தான் வேண்டுமா ?
4 பின்னூட்டங்கள்:
//செய்வினையோ வஞ்சனையோ அல்லது எதனையும் புதைத்து வைத்து பின்னர் கதவு தட்டிச் சென்று கணினியானந்தாவையோ, கூகிலாண்டவரையோ, சூடுமெயிலாண்டவரையோ யாஹுவாண்டவரையோ துணைக்கு இழுத்து வைத்துக் கொண்டு கணினிப் பினிபோக்கிட வைக்க முடியும், வதைத்து எடுக்கவும் முடியும் என்று சொல்லத்தான் இதனை மேலோட்டமாகத் தான் சொல்லியிருக்கேன்.//
இந்த வரிகளை மீண்டும் படியுங்கள்.ஷிர்க்கான சொற்கள்,உடனே நீக்குங்கள்.பிளீஸ்
//இந்த வரிகளை மீண்டும் படியுங்கள்.ஷிர்க்கான சொற்கள்,உடனே நீக்குங்கள்.பிளீஸ்//
மீண்டும் வாசித்ததில் சுட்டலின் காரணம் உணர்ந்ததை மாற்றம் செய்து பதிந்து விட்டோம், இனியேதும் அவ்வாறு இருப்பின் சுட்டிக் காட்டவும் தயங்காமல் - ஜஸாக்கல்லாஹ் ஹைர் !
இனி வரும் சந்தர்பங்களில் சுட்டலில் எவ்வாறு அல்லது அங்கே ஷிர்க்கான விடயங்கள் காணப்படுகிறது என்று ஒரு சிறு விளக்த்துடன் காட்டுகள் எடுத்து வைத்தால் வாசிப்பவர்களுக்கும் இலகுவாக புரியும் இன்ஷா அல்லாஹ்.
அருமையான கட்டுரை தமிழ் இலக்கிய நெறியோடு வரையபட்ட இந்த கட்டுரை...... மிக அற்புதமான சொற்றொடர்களுடன் வடிவமைக்கபட்டுள்ளது...... ஆனால் //"கூகிலாண்டவரையோ,
சூடுமெயிலாண்டவரையோ யாஹுவாண்டவரையோ"// சொற்களிலும் இனைவைப்புண்டு என்பதை மறந்து எழுதியுள்ளார் எழுத்தாளர்...... எழுத்திலும் அல்லாஹ்வை நினைவு கூறவேண்டும் என்பதை மறந்து விட்டார் போலும்.... திருத்திகொண்டால் மிகச்சிறப்பாக இருக்கும் என்பது என் அவா....
அஸ்ஸலாமு அலைக்கும்
விளக்கமும் எச்சரிக்கையும் அருமை - நல்லதை எடுத்துக்கொண்டு தீயதை தள்ளிவிடுவோம் . இன்ஷா அல்லாஹ்.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment