கல்லூரியின் விளையாட்டு திடலில் அமைந்திருக்கும் சலாஹிய்யா அரபி கல்லூரியின் அருகே
புல் மிக நீளமாக வளர்ந்து காய்ந்து போய் அடர்ந்த காடு போல் காட்சியளிக்கின்றது. 25 - 03 - 2012 அன்று மாலை சுமார் 4 மணிக்கு திடீரென அடர்ந்த புல் புதரின் மேல் தீப்பற்றிக் கொண்டது. தீ மள மள வென பரவவே உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்பு வண்டி விரைந்து வந்து தீயை அணைத்து, தீ பரவுவது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்து நடந்த கல்லூரியின் மைதானத்தின் சுற்று சுவருக்கு பின்புறம் மிக அருகில் பிலால் நகரின் பல குடிசைகள் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படாமல் அல்லாஹ்வின் கிருபையால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. தீவிபத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
காதிர் முகைதீன் கல்லூரி பள்ளிவாசல், சலாஹிய்யா அரபிக்கல்லூரி மற்றும் காதிர் முகைதீன் கல்லூரியின் உள் விளையாட்டு அரங்கம் ஆகிய பகுதிகளில் புல் புதர்கள் வளர்ந்து காடு போல்
காட்சியளிக்கின்றது. விஷ ஜந்துகள் இந்த பகுதியில் இருக்க மிக அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. இரவு நேரங்களில் சலாஹிய்யா அரபிக்கல்லூரி மாணவர்கள் அருகே இருக்கும் கல்லூரி பள்ளிவாசலுக்கு சென்று தொழுவதற்கு ஒரு வித அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை இருக்கின்றது.
கல்லூரி நிர்வாகம் இந்த விசயத்தில் கவனம் செலுத்தி காடு மிகுந்து கிடக்கும் இந்த பகுதியை சுத்தம் செய்ய முன் வருவார்களா?
எரிந்து சாம்பலான புல் புதர்களை படத்தில் காணலாம்.
எரிந்து சாம்பலான புல் புதர்களை படத்தில் காணலாம்.
0 பின்னூட்டங்கள்:
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment