அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதன் நிர்வாகத்தினால் பிளாஸ்டிக் பை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது நாம் அறிந்ததே. இதன் தொடர்ச்சியாக நேற்று அதிரை பேரூராட்சி அலுவலர் மற்றும் ஊழியர்களால் ஒரு சில இடங்களுக்குச் சென்று பிளாஸ்டிக் பை புழக்கத்தில் உள்ளனவா என கண்காணிக்கும்போது ஏற்பட்ட அசம்பாவிதங்களை அடுத்து இன்று மாலை பேரூராட்சியின் சார்பாக அவசரக்கூட்டத்திற்கு ஏற்பாடுச் செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் பிளாஸ்டிக் பை ஒழிப்பு முழுவதும் நிறைவேற்றும் வண்ணமாக நாளை மாலை அதிரையிலுள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்கள், கடைகள், ஹோட்டல்களுக்குச் சென்று “மீண்டும் நினைவூட்டல் அறிவிப்புகளை” நோட்டிஸ் மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்துவது என்றும் மேலும் பிளாஸ்டிக் பை தடைகளை மீறி பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுப்பது என்று ஆலோசிக்கப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
1 பின்னூட்டங்கள்:
நாங்கள் யாரும் யாரோடும் பேசவும் மாட்டோம்
பக்கத்தில் இருந்தாலும் பார்க்கவும் மாட்டோம்
நாங்கள் நினைப்பதை நடத்துபவர்கள், ஆம்...எங்கள் கட்சி நினைப்பது மட்டும் தான் எங்களுக்கு முக்கியம்.
தயாராகுங்கள் எங்களின் சேவைகளுக்கு.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment