அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Wednesday, March 7, 2012

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியிலிருந்து அக்கட்சியின் முன்னாள் தலைவர் ஏ.கே.ஏ.அப்துஸ் ஸமத் மகளும், முஸ்லீம் லீக் கட்சியின் மகளிர் அணி அமைப்பாளருமான ஃபாத்திமா முஸப்பர் அக்கட்சியிலிருந்து உட்கட்சி விவகாரங்களினால் வெளியேற்றப்பட்டார்.இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டதாவது-

1906-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி தொடங்கப்பட்ட அகில இந்திய முஸ்லிம் லீக் 1948-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உருவானது.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உருவாக்கப்பட்ட அன்றைய காலகட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநிலப் பெயர்களில் செயல்பட்டு வந்தது.. இந்திய யூனியன் முஸ்லிம்லீகிற்கு இ.அஹமது சாஹிப் தலைவராகவும், பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகிய நான் பொதுச்செயலாளராகவும், தேர்ந்தெடுக்கப்பட்டதும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நாடு முழுவதும் ஒரே பெயரில் இயங்குவது என முடிவு செய்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டோம்.இதற்காக கேரள மாநிலத்தின் பிரைமரி, மாவட்ட, மாநில அமைப்புக்கள் முறைப் படியாக தீர்மானங்கள் நிறைவேற்றி அம்மாநிலத்தின் 20 எம்.எல்.ஏக்கள், 2 எம்.பி.க்கள், 4 அமைச்சர்கள் என அத்தனை பேரின் வாக்குமூலங்களும் பெற்று தேர்தல் ஆணையத்திடம் முறைப்படியாக சமர்ப்பிக்கப்பட்டது.ஆனால், தாவூத் மியாகான், ஃபாத்திமா முஸப்பரால் தலைவர் என சொல்லப்படும் உ..பி.யின் பஷீர் அஹமதுகான் ஆகியோர் இதற்கு ஆட்சேபணை தெரிவித்து தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்தனர். அனைத்தையும் பரிசீலனை செய்த இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் மாதம் 3-ம் தேதி தெளிவான ஆணை பிறப்பித்தது.

அந்த ஆணையின்படி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுகிறது என்றும், முஸ்லிம் லீக் கேரள ஸ்டேட் கமிட்டி என்னும் பெயர் தேர்தல் ஆணையத்தின் அரசியல் கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாகவும், கேரளாவில் அங்கீகரிக்கப்பட்ட `ஏணி சின்னம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஒதுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த ஆணையில் எம்.ஜி. தாவூத் மியாகான், ஃபாத்திமா முஸப்பரால் தலைவராக சொல்லப்படும் பஷீர் அஹமதுகான் ஆகியோர் தனி நபர்கள் என்றும், அவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் உறுப்பினர்கூட இல்லை. இந்த கட்சி பற்றி அவர்கள் ஆட்சேபணை தெரிவிப்பதற்கு தகுதி இல்லை என்று தெளிவுபடுத்தி விட்டது.எனவே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரையும், பச்சிளம் பிறைக்கொடியையும் நாங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இவைகளைத் தவறாக பயன்படுத்துவோர் மீது நாஙகள் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

மார்ச் 10 இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 65-வது நிறுவன தினம். இந் நாளை தேர்தல் ஆணையத்தின் அங்கீகார வெற்றி விழா நாளாக நாடு முழு வதும் கொண்டாட உள்ளோம். தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊர்களில் பச்சிளம் பிறைக் கொடிகள் ஏற்றப்படுகின்றன. 60-க்கும் மேற்பட்ட ஊர்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.செய்தியாளர்கள் சந்திப்பின் போது மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், காயிதெமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான், எம்.பி. மாநிலச் செய லாளர்கள் காயல் மகபூப், கமுதி பஷீர், திருப்பூர் சத்தார், ஆகியோர் உடனிருந்தனர்.


நன்றி இந்நேரம்.காம்

2 பின்னூட்டங்கள்:

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

என்னதான் அங்கீகாரம் கிடைத்தாலும் சுயமாக சிந்திக்காதவரை தி மு க வின் சிருபான்மைபிரிவாக இன்றி ஒன்றையும் சாதிக்க முடியாது....

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தலைவர் கட்சியை வளர்ப்பதற்கு முன்....
நன்றாக தாடியை வளர்க்கட்டுமாக.....

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.