காரைக்குடியிலிருந்து திருவாரூர் வரை சென்று கொண்டிருந்த ரயில் வண்டி 15-03-2012 முதல் நிறுத்தப்படுகிறது. இனிமேல் பட்டுக்கோட்டையிலிருந்து திருவாரூர் வரை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் காரைக்குடி - பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை பணி துவங்க இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. இந்த பணி ஒரு புறம் நடக்க மறுபுறம் பட்டுக்கோட்டையையும் மன்னார்குடியையும் இணைக்கும் புதிய ரயில் பாதை அமைக்கும் பணி ஒரு முன்னாள் மத்திய அமைச்சரின் தீவிர முயற்சியால் வெகு விரைவில் துவங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இவ்வழித்தடங்கள் முழுமை பெறும் பட்சத்தில் அதிராம்பட்டினம் - முத்துப்பேடை - திருத்துறைப்பூண்டி வழித்தடங்களுக்கு ஆப்பு வைக்கப்படுமா என்ற அச்சம் நிழவுகிறது.
இவ்வழித்தடங்கள் முழுமை பெறும் பட்சத்தில் அதிராம்பட்டினம் - முத்துப்பேடை - திருத்துறைப்பூண்டி வழித்தடங்களுக்கு ஆப்பு வைக்கப்படுமா என்ற அச்சம் நிழவுகிறது.
புதிய வழித்தடத்தையோ, புதிய ரயிலையோ நாம் கேட்கவில்லை. தற்பொழுது உள்ள குறுகிய ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றி இந்த வழித்தடத்தில்
ஏற்கனவே சென்றுகொண்டிருந்த கம்பன் ரயிலைதான் இயக்க சொல்லுகிறோம்.
இந்த விசயத்தில் அதிரை, முத்துப்பேடை, திருத்துறைப்பூண்டி மற்றும் திருவாரூர் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தி நமது நியாமான கோரிக்கையை ரயில்வே இலாகாவின் காதுகளுக்கு விழ செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
6 பின்னூட்டங்கள்:
என் இனிய அற்பதமான அதிரை மக்களுக்கு, இனிவரும் நாடாளுமன்ற! மற்றும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கும் நம் ஊர் விசுவாசியான திரு. திரு. திரு. பழனிமாணிக்கம் மற்றும் என். ஆர். ரங்கராஜன் அவர்களை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களை பார்த்து கட்டாயமாக வாக்களித்து அரிதிப் பெரும்பான்மையுடன் இருவரையும் வெற்றிபெற செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! இதில் ஒரு ஓட்டு கூட எதிர் அணிக்கு போய் விடாது சிந்தாமல் சிதறாமல் வாக்களிக்க வேண்டுமாய் கேட்டுகொள்கிறோம்!!
ஹி! ஹி! ஹி! ஹி!!!
அர்ப்பத்தனமாவர்கள்.......ஆபத்தானவர்கள்.
கிளர்ச்சியாளர்கள்.....சில சமயம் கீழ்த்தனமானவர்கள்.
சேவை செய்பவர்கள்.....சில்லறையைக் கிடப்பார்கள்.
அலங்கரிப்பார்கள்......ஆத்திரப்படுவார்கள்.
அல்லோலப்படுபவர்கள்.....அடியாள் விட்டு அடிப்பார்கள்.
சிரித்துக்கொண்டே இருப்பார்கள்......சீரழித்தும் விடுவார்கள்.
யாரென்று யோசியுங்கள்........
கடந்த காலத்தில் எலெக்ட்ரிக் இணைப்பை அதிகபடுத்த நாமே பணம் கொடுத்தோம். பள்ளிக்கூடங்களையும் கல்லூரியையும், மருத்துவ மனைகள் என்று எத்தனையோ காரியங்கள் நாமே செய்துவிட்டோம். கடைசியாக அகல இரயில் பாதயயுமா நாம போடணும்.?
நமதூருக்கு இரயில் பயணம் எட்டாத கனியாக இருந்துவிடுமோ என்ற அச்சம் எழுகின்றது.
சேது சாலை (ECR) ஸ்தம்பிக்கும் அளவிற்கு பெரிய போராட்டத்தினை அறிவிக்க வேண்டும். சேது சாலையை மறியல் செய்தால் அது பார்லிமெண்ட் வரைக்கும் நிச்சயம் எதிரொலிக்கும். பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுகின்ற இந்த நேரத்தில் நமது போராட்டத்தை நடத்த சரியான தருணம் இது.
நம் தொகுதி M.P திரு. பழனிமாணிக்கம் அவர்களும், தொகுதி M.L.A திரு. ரெங்கராஜன் அவர்களும் இந்த விசயத்தில் தலையிடுவதாக தெரியவில்லை, மத்தியில் ஆட்சி நடத்துவது இவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சிதான், ஆனால் ஏனோ தெரியவில்லை நம் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மாட்டுகிறார். வெட்டு வாக்குறுதிகளுக்கு மட்டும் சொந்தக்காரர் போலும். இனி இவர்களை(அரசியல்வாதிகளை) நம்பி பயனில்லை.
ஒரு எழுச்சிமிகு போராட்டத்தை நடத்தி நமது நியாமான கோரிக்கையை அதிகாரிகளுக்கு புரிய வைப்போம்.
அதிரை மக்கள் மட்டும் இதில் பங்கு கொள்ளக்கூடாது இவ்வழித்தடத்தில் உள்ள அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்க வேண்டும். அதற்காக ஒரு போராட்டக்குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
இனிமேல் அதிரை நகருக்கு அகல ரயில் பாதை வருவது கடினம் தான். பட்டுக்கோட்டை டு காரைக்குடியை அகல ரயில்பாதையாக மாற்ற போகிறார்கள். இதற்கு தான் இவ்வளவு வேசமும்,கோசமும் போட்டது அரசு.
அதிரை நகரை பெரிதாக கருதவில்லை ரயில்வே துறை. நாம் முயற்சி செய்வதை செய்துக்கொண்டே இருப்போம் எல்லாம் வல்ல இறைவன் நமதூருக்கு அகல ரயில்பாதை வருவதருக்கு உதவி செய்வானாகவும் ஆமீன்.
Dear Respected people of ADIRAITIS,
It is very usefull way to approach through NRI/NRE's Who can contact their Embassies to implement the Thiruvarur-Karaikudi Gauge conversion plan,We should give pressure through the Indian Embassy Abroad.
With Warm Regards
fathah
அதிரைக்கு ஆப்பு
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment