அகல ரயில் பாதையும், அயராத முயற்சியும் !
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே ! சென்னையிலிருந்து அதிரை செல்ல அகல ரயில் பாதை சம்பந்தமாக தொடர்ந்தாற்போல் முயற்சிகள் பல செய்து வருகின்றோம். லாலு,வேலு , அஹமத் , ப சிதம்பரம் , முனியப்பா போன்ற மந்திரிகளை சந்தித்து நமது கோரிக்கையை முன் வைத்து வந்தோம். குறிப்பிட்டு சொல்லும்படி எந்த முன்னேற்றமும் ஏற்படாத சூழ் நிலையில் , கடந்த ஒரு மாதத்திற்கு முன் மாண்புமிகு உள்துறை அமைச்சர் ப சிதம்பரத்தை காரைக்குடி சென்று சந்தித்தோம். அவர் எங்களுக்கு கொடுத்த அவகாசம் 1 .1 / 2 நிமிடம் மட்டுமே !
அவரை சந்திக்க ஹாஜி M .S தாஜுதீன் , S . M அஸ்லம் ( காதர் மொஹிதீன் கல்லூரி தாளாளர் ),S .H . அஸ்லம் அதிரை பேரூராட்சி தலைவர்,மற்றும் A அப்துல் ரஜாக் ஆகியோர் சென்று வந்தோம். அவர் கொடுத்த கால அவாகசத்தை கணக்கில் எடுத்து கொண்டால் , அந்த சந்திப்பு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக தோன்றியது. என்ன ஆச்சரியம் ! அல்லாஹ்வின் உதவி கொண்டு , சந்தித்த அடுத்த வாரமே , ரயில் துறை அமைச்சருக்கு , திருவாரூர் காரைக்குடி அகல ரயில் பாதை சம்பந்தமாக உடனடியாக வேலைகளை தொடரும்படி பரிந்துரை செய்து ஒரு மடல் அனுப்பியதோடு , அதன் நகலையும் ARUDA அமைப்பிற்கு அனுப்பிருந்தார். ரூ 505 கோடி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாய்ன. THE HINDU நாளிதழில் திருவாரூர் காரைக்குடி சம்பந்தமாக செய்திகள் வர ஆவணம் செய்தோம். இதற்கும் காரணம் உண்டு , இது சம்பந்த செய்திகளை அத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்ட செல்லவும் ஒரு வழி வகுத்தது.
கடந்த வாரம் ஹாஜி M S தாஜுதீன் அவர்கள் டெல்லி சென்று முயற்சி செய்தால் நன்மையாக அமைய வாய்ப்புள்ளது என்ற கருத்தை சொன்னார்கள். அதன்படி , நாங்கள் டெல்லி புறப்பட்டு சென்றோம். ஹாஜி அப்துல் ரஹ்மான் M P
அவர்கள் சற்றும் சளைக்காமல் எங்களுடன் உடன் வந்து , மாண்பு மிகு இணை அமைச்சர் முனியப்பா அவர்களிடம் , காரைக்குடி பட்டுகோட்டை வரையிலான வேலைகளை தொடர்வர்திற்கு பதிலாக , திருவாரூர் பட்டுக்கோட்டை வேலைகளை ஆரம்பிக்கும்படி தீர்க்கமாக கோரிக்கை வைத்தார். அமைச்சர் அவர்களும் கவனத்துடன் கோரிக்கைய கேட்டதோடு , வரும் வாரங்களில் அதிகாரிகளுடன் பேசி , திருவாரூர் பட்டுகோட்டை அகல பாதை சம்பந்தமாக வேலைகளை ஆரம்பிக்க ஆவன செய்வதாக உறுதி அளித்துள்ளார். மேலும் ரயில்வே துறை மூத்த அதிகாரிகளையும் சந்தித்து நமது கோரிக்கையை முன் வைத்தோம். அந்த அதிகாரியும் நிச்சயமாக அதற்க்கான முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதி அளித்தது , மன நிறைவை கொடுத்தது. இன்ஷா அல்லாஹ் ! நமது நீண்ட கால தேவையான சென்னை காரைக்குடி கம்பன் எக்ஸ்பிரஸ் இன்னும் 2 வருடத்தில் தொடங்கும் என்ற நம்பிக்கை துளிர்விட்டருக்கிறது . கம்பன் ஏமாந்தான் என்ற சொல் நீங்கி , கம்பன் வந்தான் , என்ற சொல்லும் செயலும் நிலைக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அகல ரயில் பாதை சம்பந்தமாக அயராரது முயற்சி செய்து வரும் ஜனாப் ஜாபர் காக்கா அவர்களுக்கு துவா செய்யவும். மேலும் ஜனாப் அப்துல் ரஹ்மான் M P அவர்களை தொடபுகொண்டு நம் நன்றியினை தெரிய படுத்தவும். இச்செயல் அவரை மேலும் ஆர்வ படுத்தும் .
உங்கள்
அப்துல் ரஜாக்
3 பின்னூட்டங்கள்:
இன்னும் இரண்டு வருடமா? இது பெரும் முயற்சி அல்ல ஜஸ்ட் ஞாபக படுத்துதல் தான்.
இரண்டு வருடம் என்று சொல்வது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. பட்டுக்கோட்டை டு மன்னார்குடி வழியை அகல ரயில் பாதையாக மாற்றி விட்டு காரைக்குடி டு திருவாருரை மூட போகிறார்கள்.
காரைக்குடி டு பட்டுக்கோட்டை டு மன்னார்குடி வழியாக அகல ரயில் பாதை அமைப்பதற்கு மௌனமாக ஏற்பாடு செய்கிறார்கள் போல் தெறுகிறது.
அதிரை உள்ள ரயில் வழிதடலங்களை மூடுவதற்கு தான் இத்தனை ஏற்பாடுகளும் செய்கிறார்கள் போல் இருக்கிறது. முயற்சிக்கு கண்டிப்பாக நிச்சயம் பலன் உண்டு எல்லாம் வல்ல இறைவன் அதை வீணாக்கி விடமாட்டான்.
நாம் முயற்சி செய்வதை செய்துக்கொண்டே இருக்க வேண்டும் எதற்கும் சோர்வு அடைந்து விடக்கூடாது. இன்ஷா அல்லாஹ் நமது ஊருக்கு அகல ரயில் பாதை வருவதற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்வோமாக.
நமதூருக்கு புகை வண்டி வரப்போகுது என்று ரொம்ப புகைச்சலாக இருப்பது மனதிற்கு திருப்தியாக உள்ளது.
இதற்காக முயற்சி செய்யும் நல்லுல்லங்களுக்கு நன்றி உருத்தாகட்டுமாக.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment