மன்னார்குடிக்கும் பட்டுக்கோட்டைக்கும் இடையே, அகல ரயில்பாதை அமைப்பதற்கான நில சர்வே முடிந்து விட்டது. தமிழகத்தின் பல பகுதிகளில் அகல ரயில்பாதை முடியாமல், ரயில் பயணம் சுமையாக இருக்கும் போது இது மிகவும் அவசியமானதா என்று புரியவில்லை.
மன்னார்குடிக்கும் பட்டுக்கோட்டைக்கும் இடைப்பட்ட தூரம், 39 கி.மீ., இங்கு அகலரயில்பாதை அமைப்பது என்றால், 39 ஆயிரம் மீட்டர் நீளத்திற்கும் நூறு மீட்டர் அகலத்திற்கும் குறைந்த பட்சம் நிலம் தேவை. அதன் அளவு, 983 ஏக்கர் ஆகும்.75 லட்சம் பேர் உணவு: இப்பகுதியில் உள்ள வீட்டு மனைகள் மற்றும் ஆற்றுப்பகுதி, புறம்போக்கு நிலங்களை அதில் கழித்து விட்டால், குறைந்த பட்சம், 900 ஏக்கர் நிலம் தேவை. இப்பகுதியில் அதிகம் நெல் விளையும் நஞ்சை நிலப்பரப்பு அதிகம். நெல்விவசாயம் பாதிக்கப்படும். இப்பகுதியில் சராசரியாக ஒரு ஏக்கருக்கு குறைந்தது, 50 மூட்டை நெல் விளையும். ஒரு மூட்டையின் எடை 60 கிலோ. ரயில் பணிக்கு எடுக்கப்படும், 900 ஏக்கர் நிலத்தில் மொத்தம், 27 லட்சம் கிலோ நெல் கிடைக்கும். இதனை அரிசியாக மாற்றினால் ஒரு நாளைக்கு 75 லட்சம் பேருக்கு உணவாகும்.
அதே சமயம் ஏற்கனவே காரைக்குடியில் இருந்து திருவாரூர்வரை , மீட்டர்கேஜ் ரயில் பாதை இருக்கிறது. அதை அகலரயில்பாதையாக்கினால், புதிதாக நிலம் கையகப்படுத்தத் தேவையில்லை. விளைநிலங்கள் அழியாது. அந்தப் பாதை அகலரயில் பாதையாக்கப்படும் போது, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராமபட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி போன்ற நகராட்சிகளும், மூன்று தேர்வு நிலை நகராட்சிகளும் பயன் பெறும். அப்பகுதி மக்களும் அதிக போக்குவரத்து வசதியால், பொருளாதார வளம் பெறுவர்.இதைத் தவிர திருத்துறைப்பூண்டிக்கு அருகே உள்ள, வேதாரண்யத்தில் வருடத்திற்கு ஆயிரம்கோடி ரூபாய் மதிப்பில், உப்பு உற்பத்தி நடக்கிறது. இதைச் சென்னை போன்ற பகுதிகளுக்கு, ரயில் மூலம் கொண்டு செல்லவும், ரயில்வேக்கு அதிக வருமானம் கிடைக்கவும் உதவிடும்.
மேலும், சென்னையில் இருந்து மாயாவரம், திருவாரூர், பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடி மார்க்கத்தில் ரயில் சென்றது உண்டு. ராமேஸ்வரம் வரை மக்கள் பயணிக்க வசதியாக இருந்தது. இந்த வழித்தடத்தில், மீட்டர் கேஜை மாற்றி அகலரயில்பாதை அமைத்தால் மக்களுக்கு அதிக வசதி ஏற்படும். பின்தங்கிய பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைவர். தவிரவும் காரைக்குடியில் இருந்து திருவாரூர் வரை ஏற்கனவவே உள்ள மீட்டர்கேஜ் பாதை அகலரயில் பாதையாக மாற்றும் திட்டம் கடந்த பத்து ஆண்டுகளாக ரயில்வே துறையால் கிடப்பில் போடப்பட்ட திட்டம்.இவற்றை எல்லாம் பார்க்கும் போது பட்டுக் கோட்டையில் இருந்து மன்னார்குடிக்கு புதிய ரயில் பாதை அவசியம் தானா? அரசுப்பணம் விரயம் ஆவதில், மக்களுக்கு என்ன லாபம் கிடைக்கப் போகிறது?
அகலரயில்பாதையாக மாற்றும் முக்கியத் திட்டங்கள் பலவும் முழுவதும் நிறைவேறாமல் தமிழகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் போது, பட்டுக்கோட்டைக்கும் மன்னார்குடிக்கும் இடையே புதியதிட்ட சர்வே ஏன் என்பது தெரியவில்லை என்று, இப்பகுதி மக்கள் அங்கலாய்க்கின்றனர். தவிரவும் விளைநிலங்களை இழக்க நேரிடுமோ என்று விவசாயிகளும் அச்சப்படத் துவங்கி விட்டனர். இத்திட்டத்திற்கு ஓர் அரசியல்வாதி மிகவும் ஆர்வம் காட்டுவது ஏன் என்றும் புரியவில்லை
நன்றி
தின மலர்
8 பின்னூட்டங்கள்:
திருவாரூர் டு காரைக்குடி அகல ரயில் பாதைக்கு ஆப்பு வைப்பது நம்ம டி.ஆர். பாலுதான் வடசேரியில் இயங்கிவரும் அவரது சொந்த "கிங்ஸ் கெமிக்கல்ஸ் சாராய சுத்திகரிப்பு " ஆலைக்கு ரயில் மார்க்கம் கிடைத்தால் இந்திய முழுதும் அவர் சப்ளை செய்ய முடியும்! நமக்கு ஒதுக்கிய தொகை வீணாக தேவையற்ற ஒரு சுயநலமான ரயில்வே பாதைக்கு செலவிடப்படுவது வேதனைக்குரியது? மன்னார்குடிக்கும் பட்டுக்கோட்டைக்கும் அகலரயில் திட்டம் கைவிடப்பட்டால் சுமார் 2 வருடங்களுக்குள் திருவாரூர் டு காரைக்குடி திட்டம் முழுமை பெற்றுவிடும் என்பது சந்தேகமே இல்லை. இதுவே உண்மை.
நமது தொகுதி திமுக MP மத்திய இணை அமைச்சர் பழனி மாணிக்கம் அவர்களிடமும், மேலும் திமுக ஆதரவு பெற்று வென்ற காங்கிரஸ் MLA இரங்கராஜன் அவர்களிடமும், T R பாலுவின் பலாத்காரமான இந்த செயலை சுட்டிக் காட்டி, முறைப்படி திருவாரூர் டு காரைக்குடி அகல இரயில் பாதைக்கு ஆவண செய்யுமாறு கோரிக்கையாகிய கட்டளையை கொடுக்கவும். இதையே திமுக மேலிடமாகிய கலைஞருக்கும் ஸ்டான்லினுக்கும் எத்தி வைக்கவும்.
திருவாரூர் டு காரைக்குடி அகல இரயில் பாதைக்குரிய கால தாமதத்தை இப்போதுதான் நம்மால் உணர முடிகிறது.
எப்படியோ நல்லது நடந்தால் சரிதான்
அரசியல் அதிகாரம் இல்லாத காரணமோ என்னவோ நமதூரின் அகல ரயில் பாதை காலம் கடந்த கனவுகளாக இன்று வரை எட்டாக்கனியாக இருந்து கொண்டிருக்கிறது... தன் வளம் பெருக்க தி மு க வின் பாலுவின் செயல் மேலும் வேதனையளிக்கிறது.... நமதூருக்கு வெள்ளையன் அளித்த பிரதிநிதித்துவம் கூட தற்போது இந்த கொள்ளையர்களால் மறுக்க படுகிறது.... சமீபத்திய 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்வி போல் வருங்காலத்தில் குறிப்பாக நமதூர் சார்ந்த பாதிக்கப்பட்ட அனைவரும் பாடம் கற்பிக்க வேண்டும்.
அகல ரயில்பாதை தேவை உள்ளதுக்கு போடாமல் தேவை இல்லாததுக்கு முயற்சி செய்கிறார்கள். மன்னார்குடி டு பட்டுக்கோட்டை அகல ரயில்பாதைக்கு மட்டும் ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.
திருவாரூர் டு காரைக்குடி அகல ரயில் பாதைக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள் போல் தெறுகிறது. இந்த ரயில் வழியை ஒட்டு மொத்தமாக மூடிவிடுவார்கள் போல் இருக்கிறது.
அகல ரயில்பாதை தேவை உள்ளதுக்கு போடாமல் தேவை இல்லாததுக்கு முயற்சி செய்கிறார்கள். மன்னார்குடி டு பட்டுக்கோட்டை அகல ரயில்பாதைக்கு மட்டும் ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.
திருவாரூர் டு காரைக்குடி அகல ரயில் பாதைக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள் போல் தெறுகிறது. இந்த ரயில் வழியை ஒட்டு மொத்தமாக மூடிவிடுவார்கள் போல் இருக்கிறது.
அரசியல்வாதிகள் சுயலாபத்திற்காக பொது மக்களின் வாழ்க்கையில் விளையாடும் கேடு கேட்ட தரம் நாடே அறிந்த ஒன்று தான் , சட்டத்தின் ஆட்சி நடைபெறும் இந்தியாவில் தான் சட்ட மீறல் அதிகார மீறல் அதிகமாக நடைகிறது , பட்டுகோட்டை டூ மன்னார்குடி திட்டம் தேவை அற்ற ஒன்று வர்த்தக ரீதியாக , மருத்துவ தேவைக்காக தினமும் சென்னை செல்லும் நூற்றுக்கும் அதிகமான பயணிகள் நலன் கருதி மத்திய ரயில்வே நிர்வாகம் காரைக்குடி டூ சென்னை அகல ரயில்பாதையை விரைவாக செயல்பட வைக்க வேண்டும் அரசு செய்யாத பட்சத்தில் வீதியில் இறங்கி நாம் போராட வேண்டும் நம்முடைய தேவையை விளக்கி மத்திய ரயில்வே அமைச்சர், தொகுதி அமைச்சர் ஆகியோருக்கு நாம் அனைவரும் தந்தி அனுப்ப வேண்டும் , சமுதாய அமைப்புகள் டெல்லி யில் போராடவேண்டும் ,,,
முதலில் நம்ம ஊர் நல்ல பலன்களை அடைய வேண்டுமென்றால் ஊர் திருந்த வேண்டும், குறிப்பாக "தி.மு.க. மோகம்" அடியோடு களையப்பட வேண்டும். நான் எந்த கட்சியையும் ஆதரிப்பவனல்ல. அந்த தி.மு.க. மோகம்தான் இன்று நம்மை புலம்ப வைத்து விட்டது. எங்கே அந்த என்.ஆர். ரங்கராஜன் ? எங்கே அந்த பழனிமாணிக்கம்? காங்கிரசாகட்டும் தி.மு.க ஆகட்டும் எல்லாம் தோழமையில் உலாவரும் சுயநலவாதிகள்தானே? கண்மூடி ஓட்டளித்ததால் கை கண்ட பலன் இதுதான்! இது நமக்கு நாமே வைத்துக் கொண்ட சூனியம்! போதுமா இந்த அகலப்பாதை இழப்பு? அல்லது இன்னும் கொஞ்சம் வேண்டுமா?
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment