நம்ம அபுல்கலாம் வீடு எங்கே இருக்கிறது என்று வெளியூரிலிருந்து வருபவர்கள் கேட்டால் அபுல்கலாம் வீட்டின் அடையாளங்களை அங்க அங்கமாய் புட்டு வைப்பார்கள் அன்று...
காக்கா எந்த அபுலகலாம் வீட்டை கேட்கிறீங்க? அவரா ............. இல்லை இங்கே ஜவுளிக்கடையில் வேலை செய்கிறாரே அந்த அபுலகலாமா?
சவுதிலே வேலைசெய்கிறவர்.
அவர் வீடா...
சோத்தாங்கைப்பக்கம் போய்க்கிட்டேயிருங்க வாசலில் 2 பெரிய திண்ணை இருக்கும் அந்த வீட்டுக்கு அருகில் கொழுக்கி ஓடு போட்டு ஒரு வீடு இருக்கும் அதற்கு அடுத்தாற்போல் நாட்டு ஓடுப்போட்டு கீற்றுகள் முடைந்த தாவரம் வீட்டு வாசலில் இருக்கும் அந்த வீடுதான். அன்று விளக்கமாய் சொல்லி முடிக்கும்போது. வெளியூரிலிருந்து வந்தவரும் இவரும் பலநாட்கள் பழகியது போல் பார்த்துசெல்வார்கள்... சரி மேட்டருக்கு வருவோம்.
மாதங்கள் பல, வருடங்கள் சில வென்று வணிகமே இல்லை வெளிநாடே வாழ்க்கை என சென்றுயிருக்கும் சென்று கொண்டிருக்கும் நமதூர் மற்றும் நம்மைச் சார்ந்தவர்கள் வாழ்க்கையை கொடுத்து, சந்தோசத்தை இழந்து கஷ்டப்பட்டு சம்பாதித்த சம்பாத்தியத்தில் கட்டிய அடித்தளமில்லா அழகிய வீடுகளின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டேயிருக்கின்றது என்பதும் அழகிய உண்மை.
அன்று கூறிய அடையாளங்களின் அணிவகுப்புகள் மனிதனை அதிகம் கஷ்டப்படுத்தாது உழைத்து சந்தோசமாய் கட்டிய அரண்மனைகள் என்பது கூறுவதில் தவறேதுமில்லை எனலாம். அந்த மண்வீட்டிற்கு மதிப்பு கொடுக்காமல் மனிதன் உறங்கத்திற்கும்,உறைவிடத்திற்கும் வீடு என்ற உண்மையை உணரந்திருந்தார்கள். அதிநவீனங்கள் இன்று மனிதனை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தாலும் அன்றைய மனித அறிவும் மிகைத்தவண்ணம்தான் இருந்தது என்பதையும் சரித்திரம் உணர்த்தும்.
உதாரணமாக அதிராம்பட்டினத்தில் வீடு கட்டுவதற்கு ஒரு வீட்டு மனை வாங்கவேண்டுமென்றால் 6 வருடத்திற்கு மேல் உழைக்கவேண்டும். ஒரு பெண்ணுக்கு சீதனமாக கொடுத்த மனை என்றாலும் அதனை ஒழுங்குபடுத்துவதற்கே ஒரு வருடம் உழைக்கவேண்டும். மேலும் எழில் சூழும் ஒரு வீடு தற்பொழுது கட்டவேண்டுமென்றால் சுமார் 12வருடம் உழைக்கவேண்டும். இத்தருணத்தில் ஒரு வீட்டின் மதிப்பு 35 லடசம் ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். இந்த வீட்டில் எத்தனை வருடங்கள் வசிப்போம் என்ற சிந்தனையை மக்கள் முன்னிறுத்தினால் 30 முதல் 40 வருடங்கள் என்ற குரலின் வலிமைத்தான் சற்று ஓங்கி நிற்கிறது.
35 வருடம் இந்த வீட்டினில் வசித்தால் வருடத்திற்கு ரூ.1,0o000/ லட்சம் வாடகை கொடுக்கின்றோம் என்பதையே இங்கே உணர்த்துவதற்கு கடமைபட்டுள்ளோம். முன்னோர்கள் வசிக்க கட்டிய வீடுகள் எளிçயாகவும், வலிமையாகவும், மக்களின் இன்பத்தில் இன்னல்களை குறைத்தே வாழ்ந்தார்கள் அல்ல அல்ல வசித்தார்கள். நம்மை போன்று (வீட்டின் லட்சனம் ஓட்டையாய் தெரிவதற்கே நாம் லட்சக்கணக்கில் செலவு செய்கின்றோம். மழைத்தண்ணி ஓழுகுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை செலவு செய்ய தயங்க மறுக்கின்றோம்) "அடித்தளமற்ற வீடு"களை கட்டுவதற்காய் வாழ்க்கையின் மகிழ்வுகளை அதிகம் அன்று இழக்கவில்லை ....
4 பின்னூட்டங்கள்:
இப்போ என்ன கஷ்டப்பட்டாவது கவரவதிர்காக வீடுகள் கட்டுகிறோம்.
அழகான கட்டுரைத் தலைப்பு.
அதிரை அன்பு அவர்களே, உங்களது இ-மெயில் முகவரியை shafathhere@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு தெரியப் படுத்துங்கள்.
தங்களின் இந்த கட்டுரை கடந்த கால நினைவினை தட்டி எழுப்பியது.... ஆகா என்ன அருமை கொளுக்கி ஓடும் கேரளாவில் இருந்து வரும் ஓடுகளும் எத்தனை அழகு.... எத்தனை மழைகாலம் வந்தாலும் உறுதியான அந்த கட்டிட அமைப்பு ஒரு அதிசயமே.... ஏசியே இல்லாத ஒரு குளுமை இன்னும் அடுக்கி கொண்டே போகலாம்.... கடந்த காலத்திற்கு சென்று விட முடியாத என்று ஏங்குகிறது மனம்.... ம் என்ன செய்வது தாங்கள் கூறியது போன்றே அடுக்குமாடி குடியிருப்புகளும் அதை அமைக்க நம் சகோதரர்கள் ஓய்வின்றி உழைப்பதும் நம்மை வேதனை பட வைக்கிறது.... இது ஒரு புறம் இருக்க ஏறத்தாள 50 சதவிகித வீடுகள், காட்சி பொருட்களாக தான் இருக்கின்றன காரணம் கட்டியவர்கள் அண்டை ஊர்களில் தஞ்சம் அடைந்து வருடத்திற்கு இரண்டு மாதம் கூட இருப்பதில்லை..... எங்கே செல்கிறது நமதூர்..... நம் அனைவரையும் அல்லாஹ் தான் பாதுகாக்க வேண்டும்.
பிரமிப்பூட்டும் சிந்தனை.வீணே ஆடம்பரமாக,பகட்டாக கட்டுவதுதான் பரக்கத் இல்லாமல் போய் விடுகிறதோ?
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment