அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Thursday, March 22, 2012

உண்மைக்கு வெற்றி!·         ஜனாஸாவைஅமைதியாகதூக்கிச்செல்லவேண்டும்...!


·         ஜனாஸா தொழுகைக்கு பிறகு துஆ ஓதுவது பித்அத்...!


மர்ஹூம் மௌலவி கே.ஏ. நிஜாமுதீன் அவர்கள் தமது இறுதி நூலில் வலியுறுத்தல்...!


தமிழகத்தில் பெரிய மார்க்க அறிஞராகத் திகழ்ந்த மர்ஹூம் மௌலவி கே.ஏ.நிஜாமுதீன் மன்பயீ அவர்கள் மரணிக்கும் முன் தமது கடைசி நூலாக எழுதிய 'மரணமும் மறுமையும்' என்ற புத்தகம் தற்போது வெளியிடப்பட்டு, பல ஊர்களில் இலவசமாகவும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இதில் மர்ஹூம் ஹள்ரத் அவர்கள் மரணம் மற்றும் ஜனாஸாவின் சட்டத்திட்டங்கள் குறித்து குர்ஆன்-ஹதீஸ் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்கள். (அல்ஹம்துலில்லாஹ்)

ஜனாஸா அடக்கம் செய்யத் தூக்கிச் செல்லும் போது, பின் செல்பவர்கள் கலிமா ஷஹாதத் எதுவும் ஓதாமல் அமைதியாகச் செல்லவேண்டும் என்றும், ஜனாஸா தொழுகைக்குப் பிறகு துஆ ஓதுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் குறிப்பிட்டதோடு, ஜமாஅத்தில் குழப்பங்கள் ஏற்படும் என்பதற்காக சுன்னத்திற்கு மாற்றமாக நடைபெற்று வரும் காரியங்களை அப்படியே விட்டுவிடாமல், உரிய முறையில் மக்களிடம் ஹதீஸ்களை விளக்கிக் கூறி பித்அத்களை அகற்ற முயலவேண்டும் என்பதை வலியுறுத்தி எழுதியுள்ளார்கள்.

பித்அத்தான இக்காரியங்களைக் கண்டித்தும் சுன்னத்தான முறைகளை
வலியுறுத்தியும் குர்ஆன் ஹதீஸை மட்டுமே பின்பற்றவேண்டும் என்று
கூறுபவர்களின் நீண்டகாலப் பிரச்சாரத்திற்கு ஹள்ரத் அவர்களின் இக்கூற்று வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.

நமதூரில் சமீபத்தில் காலம் சென்ற நடுத்தெரு EPMS பள்ளியின் நிறுவனர்
மர்ஹூம் அபுல்ஹசன் அவர்களின் ஜனாஸா காரியங்கள் அனைத்தும் சுன்னத்தான முறையில் நடைபெற்றது நினைவுகூரத்தக்கது. இந்த சுன்னத்தான நடைமுறையக்கூட விமர்சித்த சிலருக்கு, ஹள்ரத் அவர்களின் இந்தப் புத்தகம் பதிலடியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒருவரின் இறப்பிற்குப் பின் நடைபெறும் காரியங்கள் பெரும்பாலும் ஊர் ஜமாஅத்தார்களின் மூலமாகவே நடைபெறுவதால், பித்அத்தான செயல்களுக்கு ஜமாஅத்தார்களே அல்லாஹ்விடம் பதில்  சொல்லவேண்டும். எனவே ஆலிம்களும் ஜமாஅத்தார்களும் ஜனாஸா காரியங்களில் பித்அத்தைத் தவிர்த்து சுன்னத்தான முறையைப் பின்பற்றிச் செயல்பட வலியுறுத்த வேண்டும்.

ஜனாஸாவில் நடைபெறும் நூதன அனுஷ்டானங்களைக் கண்டித்து, சுன்னத்தான முறையைத்  தமது இறுதி நூலில் வலியுறுத்திய மௌலவி மர்ஹூம் நிஜாமுத்தீன் மன்பயீ அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற சுவர்க்கத்தைத் தந்தருள்வானாக!

'நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால், அது
நிராகரிக்கப்படும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புஹாரி, முஸ்லீம்

 அபுபக்கர் (முகி)

சென்னை

4 பின்னூட்டங்கள்:

MS said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இறுதித்தூதர் முகம்மத் நபி(ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்...

அதாவது நபிகளாரை நாம் பின்பற்றினால் தோல்வி என்பதே இல்லை, மேற்குறிப்பிட்டவை, ஒரு மனிதருடைய வெற்றி அல்லது தோல்வி முடிவு செய்ய பட்டு விட்டது மரணத்தின் மூலம், ஆகையால் அமைதியாக இறைவனுக்கு பயந்து நபி கூறியபடி அடக்கம் செய்து விட்டு, அடக்கம் செய்ய வந்தவர்களுக்கு அல்லாஹ்வை நியாபகம் செய்து விட்டு திரும்ப வேண்டியது தான் நமது வேலை...

நமக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் போதும்...

Adirai Aslam said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மாஷா அல்லாஹ்

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மன நிறைவைத் தரும் நூல் என்பது நிச்சயம்.

அதேபோல் ஜமாத்காரர்களை நாம் சாடிவிடவோ அல்லது தர்க்கம் செய்வதோ முறையாகாத விஷயம். (நாமளும் ஜமாத்காரர்கல்தான்) காரணம் அல்லாஹ்வின் அச்சம், நபிகளாரின் மீது பற்றுதல் அதே சமயம் கலிமாவின் அடிப்படை விஷயங்களை சரிவர புரியாத மக்களை, குறிப்பாக வசதிப் படைத்தவர்களை இனம் கண்டு தரீக்காவாதிகள் (வழிகேட்டார்) செய்யும் மாபெரும் குழப்பமும், நபி வழிக்கு எதிராக செய்யும் பொய் ப்ரச்சாரமும்தான் அதிமுக்கிய காரணம்.

ஆகையினால் இந்த குழப்பவாதிகள் (நூரீயா தரீக்க, காதியானி போன்ற தரீக்கா அமைப்புகள்) செய்யும் நூதன மார்க்கத்தை களைந்தெறிய மர்ஹூம் மௌலவி கே.ஏ.நிஜாமுதீன் மன்பயீ அவர்கள் கடைசி நூலாக எழுதிய 'மரணமும் மறுமையும்' என்ற புத்தகம் ஒரு முதல் ஆயுதமாக அமைய வாய்ப்புள்ளது.

உலமாக்கள் கை ஓங்கட்டும்
அடிமைத்தனம் எண்ணம் ஒழியட்டும்

அர அல said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இன்ஷா அல்லாஹ்,ஷிர்க்,பித் அத முற்றிலும் ஒழிய - இன்னும் நாம் பாடுபடுவோம்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.