அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Tuesday, April 10, 2012

அதிரையின் புதிய அரசியல்...அதிராம்பட்டினத்தில் பெரும்போட்டிகளிடையே வெற்றி பெற்ற சேர்மன் நமதூர் S.H.அஸ்லம் அவர்கள். துணைச்சேர்மனுக்கு பெரும் பெரும் போட்டியை தழுவி வெற்றியைக் கண்டவர் நமதூர் A.பிச்சை அவர்கள். சேர்மன் பதவியேற்றதும் ஆங்காங்கே துடிப்பாய் செம்மையாய் அதிரையை வலுப்படுத்துவேண்டும் என்று பல விதமான நேரடி ஆய்வுகளை மேற்க்கொண்டு தனது பணியை செம்மையாய் செய்து கொண்டிருக்கிறார்(கள்). துணைச்சேர்மன் அவர்கள் அதிரையில் ஆரவராமாய் களப்பணிகளில் இறங்கவில்லையோ என்ற எண்ணத்தை உருவாக்கும் வகையில் சேர்மன் மற்றும் பேரூராட்சி செயல்அதிகாரி பெயர் மட்டும் பொருந்திய அதிக நோட்டிஸ்கள், பேனர்கள் வெளியாகியிருக்கின்றன. அரசியல் விவகாரம் நம்ம தலையிட்டால் நாமும் ..... என்பது அனைவரும் புரிந்த உண்மை.

தற்பொழுது எல்லை கல் போர்டுகளில் சேர்மன் பெயர் திமுக வண்ணத்திலும், துணைச்சேர்மன் பெய்ர் அதிமுக வண்ணங்களிலும் எழுதி அசத்தியுள்ளார்கள். ஏரிப்புறக்கரை மற்றும் கிராமப்புறங்களில் இதுபோன்ற அசத்தல் செயல்கள் அவர்கள் செய்யவில்லை. அதிரைவாசிகளுக்கு சேர்மனும், துணைச்சேர்மனும் அவரவர்களின் கையயழுத்துக்களை கட்சி வண்ணத்தில் எழுதினால்கூட கவலைதெரிவிக்கமாட்டார்கள் போலும்.
பேரூராட்சி மூலம் செய்யக்கூடிய ஒவ்வொன்றும் மக்களுக்கு சேவைசெய்யும் தலைவனாகவும், தொண்டனாகவும் செய்யவேண்டும் இது தனிப்பட்டவர்களின் பணம் அல்ல அதிரைபேரூராட்சியின் பணம் இது போன்ற செயல்களில் (தலைவர்களும்.பணியாளர்களும்) உங்கள் சுயநலத்தை திணிக்காதீர்கள். மக்களின் அடிப்படை தேவையை அழகாய் பூர்த்திசெய்துகொடுத்தால் இந்த வண்ணத்தைவிட அழகாய் ஜொலிக்கும் உலகம் முழுதும் உங்களது பெயர்கள்.

7 பின்னூட்டங்கள்:

அதிரை என்.ஷஃபாத் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஒரு மாற்றுச் சிந்தனை:

தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டும் தான் இருகட்சிக்காரர்களின் பெயர்கள் ஒரே பலகையில் இருக்கின்றன. வண்ணம் கடந்து, வெள்ளந்தியாய் நிற்கிறது நமதூரின் பெயர்.

shahul said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

rombooo vilangkitum

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//மக்களின் அடிப்படை தேவையா//?

அதுதான் புதிய EB கிட்ட, புதுசா குடிமகன் கலுக்காஹ் புதிய கடை ஒன்று விரைவில்லாமே? இதர்க்கு ஆளும்கட்சி சார்ந்தவர்தான் முயர்சியமே! நமைஎல்லாம் அல்லாஹுதான் பாதுக்காகனும்.

UBAYATHULLA said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

vannam enbathu mukkiyamillai thaan aanal athanal avarhalin ennam maaramal iruthale pothum. Katchi betham illamal Iruvarum adiraiyin munnetrathukku uthava vendum. Athai makkalum othulaikka vendum......

அர அல said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இஸ்லாம் நம்மை ஆளாதவரை,இதுவும் நடக்கும்,இன்னமும் நடக்கும்.

Haja Mohideen said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//இஸ்லாம் நம்மை ஆளாதவரை,இதுவும் நடக்கும்,இன்னமும் நடக்கும்//
இஸ்லாமிய வழி நாம் அதிகம் நடக்க ஆரம்பித்துவிட்டால் விரைவில் ஆட்சி வரும் என்பது வுண்மை.

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கொஞ்சம் புத்திசாலித்தனம் தெரிகிறது.

மற்றபடி துணைச் சேர்மன் கட்சி மாநிலத்தில் எதிர் கட்சியாக இருந்திருந்தால் "கொஞ்சம் பார்த்து செய்யுங்கோன்னா" என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்க வேண்டி வரும்.

தப்-பிச்சா-ரய்யா...... துணைச் சேர்மன்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.