அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Thursday, June 28, 2012

யுரோ கால்பந்து : ஸ்பெயின் வெற்றி.

நேற்று நள்ளிரவு நடைப்பெற்ற முதலாவது அரை இறுதியாட்டத்தில் போர்ச்சுகல் அணி நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் அணியுடன் மோதியது. பரபரப்பாக நடந்த இந்த போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணியினரும் ஆக்ரோஷமாக ஆடினர். குறிப்பாக போர்ச்சுகல் அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஆட்டத்தில் அனல் பறந்தது. சகவீரர்களான ஜோவோ பெரீரா, கோயண்ட்ராவோ, மௌடின்ஹோ ஆகியோர் ரொனால்டோவுக்கு சிறந்த முறையில் ஒத்துழைப்பு அளித்தனர். 

எனினும் ஸ்பெயின் வீரர்களும் சிறப்பாக ஆடியதால் போர்ச்சுகல் அணியினரால் எளிதாக கோல் அடிக்க இயலவில்லை. ஸ்பெயின் அணியின் கேப்டனும், கோல் கீப்பருமான இகர் காஸில்லஸ் சிறப்பாக செயல்பட்டு போர்ச்சுகல் வீரர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டை போட்டார். இதனால் முதல் பாதியின் முடிவில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. 

ஆட்டத்தின் இரண்டாவது பாதியும் துவக்கம் முதலே விறுவிறுப்பாக நடந்தது. 90 நிமிடங்களின் முடிவிலும் கோல் எதுவும் அடிக்கப்படாததால், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதலாக வழங்கப்பட்ட 30 நிமிடங்களிலும் இரு அணியினராலும் கோல் அடிக்க இயலவில்லை. இறுதியில் போட்டியின் முடிவை நிர்ணையிப்பதற்காக பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது. பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தி ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 

இன்று நடைபெறும் (28/06/2012) இரண்டாவது அரை இறுதியில் ஜெர்மனி Vs இத்தலி அணிகள் விளையாடுகின்றன. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15 மணிக்கு ஆட்டம் துவங்கும். இன்றைய ஆட்டத்திலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது உண்மை..

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.