அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Friday, June 29, 2012

யுரோ கால்பந்து : இரண்டாவது அரை இறுதியில் இத்தாலி வெற்றி!

நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் மூன்று முறை சாம்பியனான ஜெர்மனி அணி, மற்றொரு முன்னாள் சாம்பியனான இத்தாலியுடன் மோதியது. 

விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் கசானோ கடத்தி கொடுத்த பந்தை தலையால் முட்டி பலோடெலி அருமையான கோல் அடித்தார். அந்த அதிர்ச்சியிலிருந்து ஜெர்மனி வீரர்கள் மீள்வதற்குள், ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் அவர்களுக்கு அடுத்த அதிர்சியையும் பலோடெலி அளித்தார். இம்முறை களத்தில் பம்பரம் போல புயல் வேகத்தில் செயல்பட்ட பலோடெலி, பந்தை வெகுதூரத்திலிருந்து தனி ஆளாகக் கடத்தி கொண்டுவந்து, கம்பீரமாக கோல் அடித்தார். 

முதல் பாதி ஆட்ட முடிவில் இத்தாலி 2 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் கோலடித்தாக வேண்டிய நெருக்கடியில் ஜெர்மனி மும்முரம் காட்டியது. ஆனால் ஜெர்மனியின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. 90-வது நிமிடத்தில் ஜெர்மனியின் ஓசில் தனக்கு கிடத்த பெனால்டி கிக் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். இருப்பினும் ஆட்டத்தின் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி இத்தாலி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதிப்போட்டியில் இத்தாலி அணி, ஸ்பெயினை எதிர்த்து விளையாடுகிறது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12:15 மணிக்கு ஆட்டம் துவங்குகிறது.

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.