அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),
நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி வலைத்தளத்தில் பதியப்பட்டதால் வெளிநாடு வாழ் அதிரைவாசிகளை மட்டுமல்ல உள்ளூர் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கான காரணம் என்ன? இதன் பின்னணியில் யார் இருந்திருக்கிறார்கள்? என்ற கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. அவ்வாறான சந்தேகங்களை நிவர்த்தி செய்யவே இந்த விளக்கம்.
இந்த பதிவு எந்த தனிநபரையோ, ஒரு அமைப்பில் உள்ளவர்களையோ உயர்த்தி / தாழ்த்தி எழுதப்பட்டதல்ல, மாறாக உண்மை நிலை மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக மட்டுமே. நம் செயல்கள் அனைத்தையும் அல்லாஹ் கண்கானித்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தில் எழுத்தபட்டது.
யார் இந்த ஹைதர் அலி ஆலிம்?
கடந்த பல வருடங்களாக ஊரில் நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக அதிரையின் மறைந்த ஆலிம் பெருமக்கள் பலர் பகிரங்கமாக குரல் கொடுத்து வந்தார்கள் இதில் மிகவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் மரியாதைக்குரிய மர்ஹூம் முஹம்மது அலீய் ஆலிம் (ரஹ்) அவர்கள் ஊரில் நடைபெறும் மிகப்பெறும் பித்அத்களுக்கு எதிராக பகிரங்கமாக குரல் கொடுத்தவர்கள். மர்ஹூம் முஹம்மது அலீய் (ரஹ்) ஆலிம் அவர்கள் இருக்கும் காலத்திலும் அவர்களின் மறைவுக்கு பிறகு மார்க்கம் என்ற பெயரில் புதிதாக தினிக்கப்பட்டுள்ள பித்அத்துக்களை (புதின்ங்கள்) பகிரங்கமாக மார்க்க மேடைகளில் எதிர்த்து குரல் கொடுத்து வரும் மார்க்க அறிஞர்களில் முக்கியமானவர்களில் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களும் ஒருவர். தமிழ்நாட்டில் சித்திரக்கோட்டையிலிருந்து அதிரைக்கு குடிபெயர்ந்து மார்க்க பிரச்சாரம் (பெரிய ஜும்மா பள்ளி பயான், பெண்கள் பயான், தக்வா பள்ளி பயான்) செய்துவருகிறார்கள்.
என்ன பிரச்சினை?
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சித்தீக் பள்ளி சொத்து விவகாரத்தில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளை சித்திக்பள்ளி நிர்வாகம் உண்மையை வெளியில் கொண்டு வந்தது என்பது ஊரில் உள்ள அனைவரும் அறிவார்கள். இதனால் சிலருக்கு ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மேல் தனிப்பட்ட கோபமும் குரோதமும் ஏற்பட்டது. மேலும் ஊரில் நடைபெற்று வரும் பித்அத்களை எதிர்த்து குரல் கொடுத்து வருவதாலும் பல ஆண்டுகளாக அதிரையில் பித்அத்களை ஆதரித்து வரும் சில உலமாக்கள் மற்றும் மவ்லித் லெப்பைமார்களுக்கு ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மேல் ஒரு கோபப்பார்வை தொடர்ந்து இருந்து வந்துள்ளது என்பது ஊரில் உள்ள அனைவரும் மிகவும் அறிந்ததே. இதற்கிடையில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவை கேட்க ஆண்கள் மற்றும் பெண்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருவது ஊரில் உள்ள அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை.
கடந்த ஓரிரு மாதங்களாக அதிரை தக்வா பள்ளியின் நிர்வாகிகளில் ஒருவரின் முயற்சியால் ஊரில் மிகச் சிலரிடம் மட்டுமே கையொப்பம் பெற்று, தவறான அதாவது பொய்யான தகவலை வைத்து தக்வா பள்ளி நிர்வாகத்திற்கு ஒரு கடிதம் கொடுக்கப்பட்டது. இந்த தகவல் தவறான தகவல் என்பதால் தக்வா பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் அதே நபர், தக்வா பள்ளி நிர்வாக கூட்டத்தில் எடுக்கப்படாத தீர்மானத்தை அதில் எடுத்தது போல் மினிட் புத்தகத்தில் தானாகவே எழுதி (மினிட் புத்தகம் திட்டமிட்டு இதுவரை மறைக்கப்பட்டுள்ளது) ஷம்சுல் இஸ்லாம் சங்கம், தமிழ்நாடு வக்பு வாரியம், காவல்துறை, ரிசீவர் ஜெயச்சந்திரன் அட்வகெட். இவர்கள் அனைவருக்கும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இதில் தக்வா பள்ளி ட்ரஸ்ட் தலைவர் கையொப்பமின்றியும், அவரின் அனுமதியின்றியும் அவராகவே எழுதுகிறார். இதில் தக்வா பள்ளியில் மார்க்க பிரச்சாரம் செய்யும் ஒட்டுமொத்த தாயிக்கள் அனைவரின் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இங்கு குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய விசயம் என்னவென்றால், மேற்குறிப்பிட்ட புகாரை அளிக்கும் அந்த சகோதரரே சென்ற வருடம் அதிரை உலமாக்கள் சபையிடம் அதிரை தக்வா பள்ளியில் ஓதப்பட்டுவரும் மவ்லிதை நிறுத்த வேண்டும் என்று கோரிகை மனு அளித்துள்ளார்.
மேலும் அவர் கடந்த 18.08.2012 அன்று பட்டுக்கோட்டை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு போடுகிறார். இதில் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் தீவிரவாத பிர்ச்சாரம் செய்து, ஊரில் உள்ள இளைஞர்களை வழிகெடுத்து வருதாகவும் மேலும் ஊரில் உள்ள இளைஞர்களை ஒன்று திரட்டி பிரிவினை ஏற்பட தூண்டுவதாகவும் இல்லாத பொல்லாதவைகளை எழுதி ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் போலீஸ் நிலையத்திலும் ஹைதர் அலி ஆலிம் தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார் என்ற புகாரும் கொடுத்து இந்த வருட ரமளானில் மிகப்பெரிய தொந்தரவை கொடுத்து வந்துள்ளார். ஊரில் உள்ள பல சகோதரர்களின் முயற்சியால் அந்த சகோதரர் காவல் நிலையத்தில் கொடுத்த தவறான புகார் திரும்ப பெறப்பட்டுள்ளது. இருப்பினும் நீதிமன்ற வழக்கு இன்னும் விசாரனையில் உள்ளது.
நிலைமை இப்படி இருக்க, போலீஸ் புகாரை திரும்ப பெற்ற அவர் மீண்டும் சம்சுல் இஸ்லாம் சங்கத்தை அனுகி, தான் முன்பு கொடுத்த புகாருக்கு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று முறையிட்டுள்ளார். இதன் அடிப்படையில் சம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் அவர்கள் ஹைதர் அலி ஆலிம் அவர்களை அழைத்து சங்க தலைவர் வீட்டில் பேச முற்பட்டுள்ளார்கள்.
ஹைதர் அலி ஆலிம் அவர்களை அன்றைய தினம் (29-08-2012) காலை 10:30 மணியளவில் சங்க தலைவர் வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்த சங்க பிரதிநிதியாக வந்த சகோதரர் அவர்களிடம் "தக்வா பள்ளி நிர்வாகிகளில் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதால் வழக்கமான நிகழ்வுகளை தவிர மற்ற எந்த கூட்டத்திற்கும் செல்ல வேண்டாம் என்று வழக்கறிஞர் அறிவுறுத்தியிருக்கிறார், ஆகையால் வழக்கு முடிந்த பிறகு நானே நேரில் வந்து சந்திக்கிறேன் என்று சொல்லி அனுப்பினார். ஆனால் அசர் தொழுகைக்கு பிறகு சங்க பிரதிநிதியாக வந்த சகோதரர் அவர்கள், ஹைதர் அலி ஆலிம் அவர்களிடம் மீண்டும், நீங்கள் வர இயலவில்லை என்றால் நாங்கள் வந்து சந்திக்கிறோம் என்று தலைவர் சொல்லியனுப்பினார்கள் என்று சொல்லியிருக்கிறார்.
அதற்கு ஹைதர் அலி ஆலிம், அவர்கள் "சங்க தலைவர் வந்து என்னை சந்திப்பதற்கு நான் பெரிய ஆள் இல்லை, தக்வா பள்ளி பயான் முடித்துவிட்டு போன் பேசிவிட்டு சந்திக்கலாம்" என்று சங்க பிரதிநிதியிடம் சொல்லி அனுப்பிய 10 நிமிடத்திலேயே மீண்டும் சகோதரர்கள் சங்க தலைவர், பேரூராட்சி தலைவர், சங்க துனை தலைவர், துணை செயலாளர் மற்றும் இரண்டு பிரதிநிதிகள் சகிதமாக சென்று ஹைதர் அலி ஆலிம் அவர்களின் வீட்டிற்கு சென்று சந்திக்க முற்பட்டுள்ளார்கள்.
பள்ளியில் வைத்து சந்திக்கலாம் என்று தெரிவித்துவிட்டு ஹைதர் அலி ஆலிம் அவர்கள் தன் வீட்டிலிருந்து சித்தீக் பள்ளிக்கு வந்தவுடன் சங்க தலைவர் அவர்கள் "வெளியூர்காரர்" என்ற வார்த்தையை பிரயோகித்த காரணத்தால் நடைபெறவிருந்த சந்திப்பு சலசலப்பால் தடைபட்டது. சங்க தலைவர் மற்றும் அவருடன் வந்த சகோதரர்கள் சித்தீக் பள்ளியிலிருந்து சென்று விட்டார்கள், இது தான் நடந்த சம்பவம்.
இதனை தொடர்ந்து ஷம்சுல் இஸ்லாம் சங்கம் நிர்வாகிகள் (தலைவர், துணை தலைவர், துணை செயலாளர்) மூன்று நபர்கள் மட்டும் கூடி ஹைதர் அலி ஆலிம் அவர்கள் பயான் செய்து வரும் ஆயிஷா மகளிர் அரங்கத்தில் நடைபெறும் மகளிர் வாராந்திர பயான் தற்காலிகமாக நிறுத்தபடுவதாக தங்கள் அறிவிப்பை அதிரை வலைப்பூ ஒன்றுக்கு மட்டும் அறிவிப்பை தெரிவித்து விட்டு. அதிரையில் உள்ள அனைத்து முஹல்லாக்களுக்கு ஹைதர் அலி ஆலிமை மார்க்க சொற்பொழிவு செய்ய தடைவிதிக்க வேண்டும் என்று கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலத்தெரு சங்கத்திற்கு அனுப்பட்ட கடித நகல் மற்றும் ஆயிசா மகளிர் அரங்கத்தின் நிர்வாகி அவர்களுக்கு அனுப்பட்ட கடித நகல் இணைக்கப்பட்டுள்ளது.

ஊரில் இருப்பவர்களுக்கும் வெளியூர்களில் இருக்கும் அதிரைவாசிகளுக்கும் எழும் சந்தேகம் இதே..
1. ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவை தடை செய்யும் அளவுக்கு அவர் என்ன மன்னிக்க முடியாத குற்றம் செய்தார்?
2. ஒரு பிரச்சினை சங்கத்துக்கு வந்தால் முறையாக பொதுக்குழு அல்லது செயற்குழு அல்லது நிர்வாக குழு கூடி தீர்மானம் போட்டு அல்லது முடிவு எடுத்த பின்னர்தானே நடவடிகை எடுப்பது சம்சுல் இஸ்லாம் சங்கம் மட்டுமல்ல ஊரில் உள்ள எல்லா சங்கத்திலும் வழக்கம் மற்றும் நெறிமுறை. ஹைதர் அலி ஆலிம் அவர்களின் விசயத்தில் சங்கம் போர்கால அடிப்படையில் 24 மணி நேரத்துக்குள் பயான் செய்ய தடை விதித்ததின் மர்மம் என்ன?
3. மற்ற இரண்டு நிர்வாகிகளை கலந்தாலோசிக்காமல் மூன்று நிர்வாகிகளை கொண்டு முடிவு எடுக்கும் அளவுக்கு அப்படி என்ன அவசர நிகழ்வு நடத்துவிட்டது?
4. ஷம்சுல் இஸ்லாம் சங்கத்துக்கு உட்பட்ட ஆயிஷா மகளிர் அரங்கில் நடைபெரும் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் பயான் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை மட்டும் சங்கத்திற்கு என்று இருக்கும் வலைப்பூவில் வெளியிடாமல் பொதுவான வலைப்பூ ஒன்றில் அவசர அவசரமாக வெளிட்ட மர்மம் என்ன?
5. ஷம்சுல் இஸ்லாம் சங்கம் எப்போது ஊரில் உள்ள சங்கங்களுக்கு (மேலத்தெரு ஜும்மா பள்ளி சங்கம் உட்பட) கட்டளையிடும் அதிகாரம் பெற்றது?
6. தீவிரவாதி என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள தக்வா பள்ளி நிர்வாகத்தில் இருக்கும் அந்த சகோதரர் மீது சம்சுல் இஸ்லாம் சங்கம் என்ன நடவடிக்க எடுக்க போகிறது?
இவ்வாறான பல கேள்விகள் பொது மக்கள் மத்தியில் எழத்தான் செய்கிறது. உண்மை நிலையை அறிய இந்த கேள்விகளுக்கு ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் பதிலை மக்கள் மத்தியில் வைக்க வேண்டும்
நேற்று முன் தினம் 30-08-2012 அன்று இரவு சித்தீக் பள்ளி முஹல்லா சகோதரர்கள் சிலரை ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர், துணை தலைவர், துணை செயலர், பேரூராட்சி தலைவர் ஆகியோர் அழைத்து பேசினார்கள். இதில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் சொற்பொழிவில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையில்லை என்று ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர், துனை தலைவர், துனை செயலர், பேரூராட்சி தலைவர் ஆகியோர் ஒருமனதாக வந்தவர்கள் முன்னிலையில் ஒத்துக்கொண்டார்கள். ஆனால். சம்சுல் இஸ்லாம் சங்கம் ஆயிசா மகளிர் அரங்கம் மற்றும் மேலத்தெரு ஜும்மா பள்ளிக்கு அனுப்பிய கடிதத்தில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு தொடர்பான காரணங்களை கூறியே அவரை வைத்து மார்க்க சொற்பொழிவாற்ற வேண்டாம் என்று கூறிப்பிட்டுள்ளார்கள்.
இது அப்பட்டமான இரட்டை நிலைபாடு என்பது நிரூபனமாகியுள்ளது. சித்திக் பள்ளி முஹல்லா சகோதரர்களிடம் ஒரு நிலை, சங்கம் எழுதிய கடிதத்தில் ஒரு நிலை. இதில் நிறைய மர்மங்கள் உள்ளது என்பது மட்டும் உண்மை.
இந்நிலையில் மேலத்தெரு பெரிய ஜும்மா பள்ளியில் வழக்கம் போல் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ஜும்மா பயான் (31-08-2012) நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.
மேலும் தகவல்கள் விரைவில்… இன்ஷா அல்லாஹ் !
L.M.S. Mohamed Yousuf
நன்றி : அதிரை நிருபர்