அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Monday, May 28, 2012

டெ‌ங்குவை பர‌ப்பு‌ம் அ‌திபய‌ங்கர ஏடி‌ஸ் கொசு - தப்பிப்பது எப்படி ?

டெ‌ங்குவை பர‌ப்பு‌ம் அ‌திபய‌ங்கர ஏடி‌ஸ் கொசு - தப்பிப்பது எப்படி ?

Webdunia
FILE
நெ‌ல்லை, தூ‌த்து‌க்குடி உ‌‌‌ள்‌ளி‌ட்ட தென் மாவட்ட மக்களை அதிரவை‌க்கு‌ம் அதிபயங்கரமாக கொசு ஏடிஸ் கொசு. இ‌ந்த கொசு எப்படி பிறக்கிறது? இது கடித்தால் என்னவாகும்? டெங்கு ஏற்படுவதற்கான அறிகுறி என்ன? வராமல் தடுப்பது எப்படி? வந்தால் தடுப்பது எப்படி? என்பது குறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் செந்தில்குமார் ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

அவ‌ர் அ‌ளி‌‌க்கு‌ம் தடு‌ப்பு நடவடி‌க்கைக‌ள்: வழக்கமாக கொசுக்கள் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் இருந்து உற்பத்தி ஆகும். ஆனால் ஏடிஸ் கொசு தேங்கி கிடக்கும் நல்ல தண்ணீரில் இருந்து உற்பத்தியாகும் ஒரு பூச்சி வகையை சேர்ந்தது.

தேங்காய் சிரட்டைகள், தெருவில் வீசப்பட்ட பிளாஸ்டிக் கப்கள், பழைய பாத்திரங்கள், ஆட்டு உரல்கள் போன்றவற்றில் தேங்கி இருக்கும் மழை நீர் மூலம் இந்த கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. இவை பெரும்பாலும் வீட்டிற்குள்ளும் வீட்டை சுற்றியும் அதிகமாக வலம் வரும்.

இந்த வகை கொசுக்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களையோ, குழந்தைகளையோ கடித்தால் உடனடியாக அவர்களை டெங்கு காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது. பெரும்பாலும் இந்த கொசுக்கள் குழந்தைகளை கடிக்கும்போது எளிதில் நோய் தாக்குதலுக்கு ஆளாவர்.

ஒருவரை ஏடிஸ் கொசு கடித்தால் முதலில் காய்ச்சல் வரும். உடல் வலியுடன் எலும்புகளிலும் வலி ஏற்படும். இப்படி ஏதாவது உடல் வலிகள் தொடங்கும்பட்சத்தில் அது டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி என்று அர்த்தம். உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொண்டு டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபடலாம்.

இந்த நோய் எளிதில் குணப்படுத்த கூடிய நோய். அதே நேரத்தில் போதிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் காய்ச்சல் தொடர்ந்து நீடித்தால் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நோய் முற்றிய நிலையில் இதே கிருமிகள் ரத்தத்தில் உள்ள பிளட்லெட்களை சாப்பிடும். இதனால் மனித உடலில் உள்ள ரத்தம் உரையும். வாய், மூக்கு என உடலின் பல்வேறு பகுதிகளில் ரத்த கசிவு ஏற்படும். இதனால் விலைமதிக்க முடியாத உயிர் இழப்பும் ஏற்படும்.

அதனால் இந்த நோய்க்கான அறிகுறி தென்பட்டவுடன் உரிய சிகிச்சை மேற்கொண்டு உடல்நலத்தை காத்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் சுற்றுப்புறத்தை மழைநீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் மூலமாகவும் வீட்டிற்குள் கொசுவராமல் தடுப்பாக ஜன்னலில் கொசுவலைகளை பயன்படுத்துவது, கொசு ஒழிப்பான்கள் பயன்படுத்துவ தன் மூலமும் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுவை விரட்டி நோய் வராமல் தடுக்கலாம் எ‌ன்று டா‌க்‌ட‌ர் செ‌ந்‌தி‌ல்குமா‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

1 பின்னூட்டங்கள்:

அதிரை சித்திக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கொசு தொல்லை .உயிரை குடிக்கும் அளவிற்கு

கொடூரமாக மாறி வருவதை மனதில் கொண்டு

நம் மக்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல்

நல்லது ..,இரவு நேரங்களில் கொசு வராமல் தடுக்க

காய்ந்த தேங்கா மட்டையில் நெருப்பு உண்டாக்கி அதில்

வேப்பிலையை போட்டு புகை உண்டாக்கினால் கொசு

அந்த இடத்தில் கொசு அண்டாது .. இது கடந்த காலத்தில்

பெரியவர்கள் செய்வதை பார்த்திருக்கிறேன் ...

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.