அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Monday, May 7, 2012

அணு குண்டுகள் ஏற்படுத்தும் அழிவை விட, பிளாஸ்டிக் பைகள் !



அணு குண்டுகள் ஏற்படுத்தும் அழிவை விட, பிளாஸ்டிக் பைகள் !
''அணு குண்டுகள் ஏற்படுத்தும் அழிவை விட, பிளாஸ்டிக் பைகள் நீர்நிலைகளின் அடிப்பகுதியில் அடைத்துக் கொண்டு ஏற்படுத்தும் அழிவு மிகப் பயங்கரமானதாக உள்ளது'' என்று உச்ச நீதிமன்றம் அபாய எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.

மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் தாக்கல் செய்த பொது நல மனு‌வி‌ல், நாட்டில் பிளாஸ்டிக் பைகள் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மாடுகளின் வயிற்றை அறுவை சிகிச்சை செய்து 30 முதல் 50 கிலோ பிளாஸ்டிக் பைகள் எடுக்கப்படுவதாக கால்நடை மருத்துவமனை அறுவை சிகிச்சை குறித்த புள்ளி விவரம் தெரிவிப்பதாக கூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌‌ந்த மனுவை இ‌ன்று விசாரித்த உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌திக‌ள் ஜி.எஸ். சிங்வி, எஸ்.ஜே. முகோபாத்யாய், இந்தியாவில் உடனடியாக பிளாஸ்டிக் பைகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் இந்த நிலையை கட்டுப்படுத்த முடியாது என்றன‌ர்.

மேலு‌ம், அணு குண்டுகள் ஏற்படுத்தும் அழிவை விட, பிளாஸ்டிக் பைகள் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளின் அடிப்பகுதியில் அடைத்துக் கொண்டு ஏற்படுத்தும் அழிவு மிகப் பயங்கரமானதாக உள்ளது எ‌ன்று‌ம் ‌‌‌நீ‌திப‌திக‌ள் அபாய எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்தன‌ர்.

இது குறித்து பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் ‌நீ‌திப‌திக‌ள் உத்தரவி‌ட்டன‌ர்.

1 பின்னூட்டங்கள்:

அதிரை சித்திக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பிளாஸ்டிக் உபயோகத்தினால் .ஏற்படும்

இடையூறுகளை உள்ளூர் மக்கள் அறிந்து கொள்ளும்

விதமாக துண்டு பிரசுரம் வெளியிடலாமே

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.