அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Saturday, January 14, 2012

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ( AAMF ) அவசரக்கூட்டம் !


அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) !


அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக இன்று ( 14-01-2012 ) அஸர் தொழுகைக்குப் பின் மரைக்காயர் பள்ளியில் மொளானா மொளவி அப்துல் காதர் ஆலிம், ஹைதர் அலி ஆலிம் அவர்களின் முன்னிலையில், M.M.S. சேக் நசுருதீன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற அவசர இக்கூட்டத்தில்,


நமதூரில் நிகழக்கூடிய இறப்புகளுக்காக ( மவுத் ) குழி வெட்டுதலில் ஏற்படுகிற சிரமங்களை கருத்தில் கொண்டு அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ( AAMF ) சார்பாக வெளி மாநிலத்திலிருந்து மூன்று முஸ்லீம் சகோதரர்களை வரவழைத்து இப்பணிக்காக நியமிப்பது என்றும் அவர்களுக்கு தங்குவதற்க்காக “ சித்திக் பள்ளியில் “ அனுமதிப்பது என்றும் மேலும் இவர்களைக் கொண்டு ஒவ்வொரு வாரம் ஒரு பள்ளி என்ற வீதத்தில் நமதூரில் உள்ள ஐந்து பள்ளிகளின் மைய வாடிகளையும் ( கஃப்ர்ஸ்தான் ) சுத்தம் செய்வது என்றும் தீர்மானம் செய்யப்பட்டது.


மேலும் இக்கூட்டத்தில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ( AAMF ) நிர்வாகிகள் மற்றும் செயற்க்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இறுதியில் மொளானா மொளவி அப்துல் காதர் ஆலிம் அவர்களின் துவாவுடன் நிறைவு பெற்றது.



இப்படிக்கு,
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ( AAMF )
அதிராம்பட்டினம்

6 பின்னூட்டங்கள்:

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அதிரையில் ஹஜரத் சித்திக் ( ரலி ) பள்ளியில் எங்கு உள்ளது?

mohamed said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அழைக்கும் அல்ஹம்துரில்லாஹ் இது ஒரு நல்ல முயர்ச்சி

புஹாரி தமாம்

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அல்ஹம்துலில்லாஹ் AAMF இன் இந்த முயற்சி பாராட்டளுக்குரியது.... இது போன்றே மற்ற இயக்கங்களும் சீராக செயல்பட்டு அதிரை செழிக்க முயற்ச்சிக்க வேண்டும்....

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வ அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்)

//அல்ஹம்துரில்லாஹ் //

அல்ஹம்துலில்லாஹ்...الحمد لله

அதிரை என்.ஷஃபாத் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இந்த தேவையின் அவசரத்தைக் கருத்தில் கொண்டு துரித முறையில் ஆலோசித்து அதை செயல் வடிவம் பெறச்செய்ய முயலும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் அல்லாஹ் கூலி தரப் போதுமானவன்.

blogger said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இறைவனின் வழிகாட்டல் நிச்சயம் உக்களுக்கு வரும் இன்ஷா அல்லாஹ் ...

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.