அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் துபை வாழ் அதிரை பெருமக்களின் மாபெரும் முயற்சியால் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு(AAMF) உருவாக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்! வரவேற்போம்!துபையில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு(AAMF) ஆரம்பிக்கப்பட்டவுடன் முதலில் நான் மகிழ்ச்சியடைந்தேன். துபை வாழ் அதிரை சகோதரர்களுக்கென்று ஒரு அமைப்பு இல்லாமல் இருந்தது அல்ஹம்துலில்லாஹ். மேலும் இது விரிவடைந்து அதிரைவாசிகள் உள்ள அனைத்து நாடுகளிலும் தோன்ற யாவரும் துஆ செய்வோம்.
முதலில் நான் இந்த கூட்டமைப்பு வெளிநாடு வாழ் அதிரை சகோதரர்களின் மேன்மைக்காக ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டேன் ஆனால் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் சட்டத்திட்டங்கள் உள்ளூர் விவகாரங்களில் தலையிடுவதாக தெரிகிறது. ஆதலால்தான் இந்த ஆக்கத்தை எழுத எனது மனம் உந்தப்பட்டது.
நீங்கள்(AAMF) அதிகம் கவனம் செலுத்த வேண்டியவைகள்....
1. சொந்த பந்தங்களை பிரிந்து தனது குடும்ப பொருளாதார தேவைக்காக அயல்நாட்டில் பணிபுரிந்து வரும் அனைத்து முஹல்லா சகோதரர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குள் ஓர் ஒற்றுமையையும், பாசத்தையையும் ஏற்படுத்திய அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பிற்கு(AAMF) முதற்கன் என் நன்றியையும் வாழ்த்துககளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கு சாட்சியாக உங்களின் பெருநாள் சந்திப்பு காணொளிகளை கண்டு மனம் மகிழ்ந்தேன். இந்த முயற்சியை இடைவிடாது தொடருங்கள்.
2. எத்தைனையோ நம் சகோதரர்கள் வேலை பழு காரணமாக மன அழுத்தம், தூக்கமின்மை, இன்னும் பல சிரமங்களுக்கும், பிரச்சனைகளுக்கும் மத்தியில் தனது குடும்ப சூழ்நிலையை நினைத்து சம்பாதித்து வருகிறார்கள். இது போன்ற சகோதரர்களுக்கு ஊர் சகோதரர்களை ஒரே இடத்தில் பார்க்கும்போது ஒரு வித மன நிம்மதியை தரும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை.
3. வேலை தேடி விசிட் விசாவில் வரும் சகோதரர்களை அரவனையுங்கள், அவர்களுக்கு வேலை கிடைப்பதற்கு தகுந்த வழிவகைகளை செய்யுங்கள், உதாரணமாக உங்களுக்கு முடிந்தால் நீங்கள் பணிபுரியும் கம்பெனிகளில் வேலை கிடைப்பதற்கு அதற்குறிய தகுதி அவர்கள் பெற்றிருப்பின் அவர்களுக்கு வேலை கிடைக்க சிபாரிசு செய்யங்கள்.
4. எத்தனையோ சகோதரர்கள் பல சிரமங்களுக்குக்கிடையில் பட்டப்படிப்பை முடித்துவிடுகிறார்கள் அல்ஹம்துலில்லாஹ், ஆனால் அவர்களுக்கு படிப்பிற்குரிய வேலை கிடைப்பதில்லை. தனது குடும்ப (வறுமையை) சூழ்நிலையை நினைத்து ஆபிஸ் பாய்களாகவும், தூதுவர்களாகவும் (Messenger) பணியாற்றி வருகிறார்கள், இவர்களுக்கு அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப வேலை கிடைக்க உதவி செய்ய வேண்டும். உயர் பதிவிகளிலும், அதிகாரி மட்டதிலும் வேலையில் இருக்கும் நம் சகோதரர்கள் இதில் முழு கவனம் எடுத்து அவர்களுக்கு உதவ முன்வாருங்கள்.
5. குறைந்தபட்சம் சக நண்பர்களிடமிருந்து வேலைவாய்ப்பிற்கான தகவல்களை திரட்டி அவர்களிடம் தெரிவியுங்கள்.
6. தனது சொந்த சகோதரியின் திருமணத்தை நடத்த முடியாமல் எத்தனையோ சகோதரர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறார்கள், இது போன்ற சகோதரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
7. அல்லாஹ்வின் நாட்டபடி யாரேனும் வபாத்தாகினால் அவர்களின் உறவினர்களுக்கு துரிதமாக தகவல் கொடுப்பது, மையத்தை ஊருக்கு அனுப்ப நேரிடும் போது அதற்கு உறுதுனையாக இருந்து உதவிகள் செய்வது.
8. வெளிநாடுவாழ் அதிரை சகோதரர்களின் மேம்பாட்டிற்காக மட்டும் இந்த கூட்டமைப்பபு(AAMF) செயல்பட்டால் நன்றாக இருக்கும். 18 ஆண்டுகளுக்கு மேலாக அதிரையில் மக்கள் சேவையாற்றி வரும் அதிரை பைத்துல்மால் போன்ற நிறுவனம் மூலம் உங்களுடைய உள்ளூர் உதவிகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்
9. அனைத்து முஹல்லா சார்பாக 18 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றிவிக்கப்ட்ட அதிரை பைத்துல்மால் என்ற பொதுநல மக்கள் நிறுவனம் கீழே கூறப்படடுள்ள பணிக்கு முன்னுரிமை கொடுத்து மிக சிறப்பாக தனது பணியை செய்து வருகிறது.
1. வட்டியில்லாக் கடன்
2. ஜக்காத் வசூல்
3. ஃபித்ரா வசூல்
4. கல்வி உதவி
5. மாதாந்திர பென்சன்(முதியோர் உதவித்தொகை)
6. இலவச திருமணம்
7. அவசர ஆம்புலன்ஸ் சேவை
8. கல்வி மற்றும் சீருடை உதவித்திட்டம்.
9. மாணவர்களுக்கு வழிகாட்டுதல்
10. இன்னும் பல சமூக நலத்திட்டங்கள்.
மாதாந்திர வரவு - செலவு கணக்குகளையும் அவ்வமயம் அதிரை தளங்களின் மூலமாக மக்களுக்கு தெரிவித்து வருகிறது அதிரை பைத்துல்மால்.
இதை நான் இங்கே அழுத்தமாக சொல்வதற்கு காரணம் நாம் யாவரும் ஒரே நோக்கத்திற்காக ஒருங்கினைந்து செயல்பட ஆசை படுகிறோம், ஏற்கனவே தோற்றிவிக்கப்பட்ட அமைப்பை அதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லவா? அப்படி இல்லையென்றால தமிழக அளவில் முஸ்லிம் அமைப்புகள் சிதறி சின்னாபின்னமாக கிடப்பது போன்று நம் ஊரிலும் பொது நல அமைப்புகள் வந்துவிடுமோ என்ற அச்ச உணர்வுதான், அல்லாஹ் பாதுக்காக்கனும்.
வெளிநாடு வாழ் அதிரை சகோதரர்கள் அதிரை பைத்துல்மாலுக்கு உதவி செய்து மேற்சொன்ன பணிகள் தங்கு தடையின்றி நடக்க ஒத்துழைக்கலாம்.
10. அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு(AAMF) தயவு செய்து உள்ளூர் விவகாரங்களில் தலையிடாமல் வெளிநாட்டில் பணிபுரியும் நம் சகோதரர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது. வெளிநாடுவாழ் அதிரை வாசிகளின் மேம்பாட்டிற்காக மட்டும் முழு கவனம் செலுத்தி பல திட்டங்களை தீட்டி அதை நடைமுறைப்படுத்துங்கள். உள்ளூர் விவகாரங்களில் தலையிட்டால் பல பிரச்சனைகளும் குழப்பங்களும் வரும், ஏற்கனவே அதிரை பைத்துல்மால் முஹல்லா வாரியாக பொருப்புதாரிகளை நியமித்து அவர்கள் மூலம் ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்து வருகிறது. நீங்கள் ஊரில் இருக்கும் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய எண்ணினால் அதிரை பைத்துல்மால் மூலம் உங்களது உதவிகளை செய்யலாம்.
அமீரக அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு(AAMF) போன்று அதிரை வாசிகள் கணிசமாக உள்ள அனைத்து நாடுகளிலும் இக்கூட்டமைப்பு(AAMF) தோற்றிவிக்கப்பட்டு அந்தந்த நாடுகளில் பணிபுரியும் நம் அதிரை சகோதரர்களின் மேம்பாட்டிற்காக உதவ வேண்டும்.
உதவிகள் புரிபவர்களுக்கு நற்கூலி நிச்சயம் உண்டு, அதற்குரிய பலன்களை நிச்சயமாக அவர்கள் மறுமையில் காண்பார்கள்.
எனவே நம் சமுதாய ஒற்றுமை கருதி
ஒரே குடையின் கீழ் யாவரும் வருவோம்!
உதவிகள் பல புரிவோம்!!
நற்கூலி பெறுவோம்!!! இன்ஷா அல்லாஹ்.
நமது ஊரின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு எழுத்தப்பட்ட ஆக்கம், தயவுசெய்து ஆரோக்கியமான கருத்துக்களையும் உங்களது யோசனைகளையும் இங்கே பகிர்ந்து கொண்டால் நன்மையாக இருக்கும்.
அன்புடன்.
வளர்பிறை...


