அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Showing posts with label அறிவிப்பு. Show all posts
Showing posts with label அறிவிப்பு. Show all posts

Wednesday, March 28, 2012

காரைக்குடி - திருவாரூர் வழித்தட பயணிகளுக்கு இரயில்வே இலாகாவின் புதிய அறிவிப்பு.


காரைக்குடியிலிருந்து திருவாரூர் வரை சென்று கொண்டிருந்த ரயில் வண்டி 15-03-2012 முதல் நிறுத்தப்படுகிறது. இனிமேல் பட்டுக்கோட்டையிலிருந்து திருவாரூர் வரை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் நோட்டீஸ்  போர்டில் ஒட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் காரைக்குடி - பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை பணி துவங்க இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. இந்த பணி ஒரு புறம் நடக்க மறுபுறம் பட்டுக்கோட்டையையும் மன்னார்குடியையும் இணைக்கும் புதிய ரயில் பாதை அமைக்கும்  பணி ஒரு முன்னாள் மத்திய அமைச்சரின் தீவிர முயற்சியால் வெகு விரைவில் துவங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

இவ்வழித்தடங்கள் முழுமை பெறும் பட்சத்தில் அதிராம்பட்டினம் - முத்துப்பேடை - திருத்துறைப்பூண்டி வழித்தடங்களுக்கு ஆப்பு வைக்கப்படுமா என்ற அச்சம் நிழவுகிறது. 


புதிய வழித்தடத்தையோ, புதிய ரயிலையோ   நாம் கேட்கவில்லை. தற்பொழுது உள்ள குறுகிய ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றி இந்த வழித்தடத்தில்  ஏற்கனவே  சென்றுகொண்டிருந்த கம்பன் ரயிலைதான் இயக்க சொல்லுகிறோம்.

இந்த விசயத்தில் அதிரை, முத்துப்பேடை, திருத்துறைப்பூண்டி மற்றும் திருவாரூர் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தி நமது நியாமான கோரிக்கையை ரயில்வே இலாகாவின் காதுகளுக்கு விழ செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

Monday, September 26, 2011

முக்கிய செய்தி .......

அதிரை நகரை சேர்ந்த 5வாலிபர்கள் ஒரத்தநாடு அருகே உள்ள ஆற்றில் இன்று 3மாலை மணியளவில் குளித்து கொண்டிருக்கும் பொழுது ,நிஜாம் அலி என்ற வாலிபர் மட்டும் ஆற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அடித்து செல்லப்பட்டார்.தற்போது இவரை தேடும் பனி திவிரபடுத்தபட்டு உள்ளது. சகோதரர் நலமுடன் திரும்பி வர இறைவனை பிராத்திப்போம்

அதிரை மக்களின் கவனத்திற்கு



கடந்த சில மாதங்களாக நமதூரில் கேஸ் சிலிண்டர் விநியோகிப்பவர்கள் அரசாங்கம் நிர்ணயம் செய்த பில் 397ரூபாயைவிட கூடுதலாக 23 ரூபாய் சேர்த்து 420 ரூபாய் மக்களை கட்டாயப்படுத்தி வசூல் செய்கிறார்கள் 23ரூபாய்க்கு காரணம் கேட்டால் இது நாங்கள் கேஸ் கம்பெனியில் இருந்து உங்கள் விடு வரை எடுத்து வருவதற்கு என்று காரணம் சொல்கின்றனர் . இந்த உழியர்கள் சம்பளம் பெற்றுக்கொண்டுதான் வேலை செய்கின்றனர் இது போன்று கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்களை பற்றி மேல் அதிகாரியிடம் புகார் செய்வதற்கு 9443363634 என்ற என்னை தொடர்பு கொண்டு புகார் செய்யவும் .




நன்றி தகவல் : Digitech sena muna

Thursday, September 8, 2011

ஆன்லைனில் பேங்க் account வைத்து இருப்பவர்களே !! உஷார்!!!

இப்பபதிவு ''மதுரை பாண்டி''யின் மதுரைக்காரன் என்ற வலைபூவில் பார்த்தது ! படித்தது !!!!! உங்களை உஷார் படுத்துவதற்காக அதிரை bbc யில்

சில நாளுக்கு முன்பு என் ஈமெயில்-ஐடி க்கு SBI ல இருந்து ஒரு மெயில் வந்துச்சு.. நானும் திறந்து பார்த்தேன். இப்படி இருந்துச்சு அந்த மெயில்..

(படம் பெரிதாக தெரிய படம் மீது கிளிக்கவும்.. )

பொதுவா பேங்க்-இடம் இருந்து எந்த மெயில் வந்தாலும் அதோட " sender " அட்ரஸ் பார்த்துட்டு தான் மெயில்-அ படிச்சு பார்ப்பேன்.. இதுல " sender " அட்ரஸ் ல <server-alert@onlinesbi.co.in> இருந்துச்சு... உண்மைலேயே பேங்க் ல இருந்து தான் அனுப்பி இருக்காங்க போல நு நினைச்சு அவங்க அனுப்பி இருந்த அந்த " File " அ ஓபன் பண்ணேன்...

அவங்க சிஸ்டம் ல என்னமோ error வர்றதாகவும் , அதை சரி பண்ண என்னுடைய சுய விவரங்களை ஒண்ணு விடாம கொடுத்தா தான் அந்த பிரச்சனைய சரி பண்ண முடியுமுன்னு போட்டு இருந்துச்சு. சரி, நாம தான் ஏதோ தப்பு பண்ணிட்டோம் போல, அதான் SBI இந்த மாதிரி அனுப்பி இருக்குனு அவன் கொடுத்த link -ஐ ஓபன் பண்ணதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுச்சு அதோட வில்லங்கம் என்னன்னு..

இது தான் அந்த லிங்க் " http://jonathangosselin.info/wp-theme.php " SBI க்கும் இந்த லிங்க் அட்ரஸ்க்கும் என்னடா சம்பந்தம் நு ஓபன் பண்ணி பார்த்தேன்.. (Chrome , Firefox இந்த லிங்க் ஓபன் பண்ணும் போதே warningகாமிக்குது ) ... நான் ஓபன் பண்ணுனது " IE " ல... அந்த லிங்க்-அ ஓபன் பண்ணுனா அது இன்னொரு லிங்க்-க்கு redirect ஆச்சு.. "http://amexapparel.com/online/sbi/indexx.html "



அச்சு அசலாக "SBI Bank website " போலவே டிசைன் பண்ணி இருக்குற போலியான வெப்சைட் அது... இந்த வெப்சைட் ல என்னுடைய விவரங்களை கொடுத்து இருந்த என்னுடைய கணக்கில் இருந்துஎன்னுடைய பணம் களவாடப்பட்டு இருக்கும்.. உண்மையான SBI பேங்க் வெப்சைட் https://www.onlinesbi.com


உடனடியாக "SBI " கு மெயில் அனுப்பி இந்த விஷயத்தை தெரிவித்தேன்.. அவர்கள் இந்த மாதிரி வர்ற மெயில்-க்கு respond பண்ண வேண்டாம் என்று பதில் அனுப்பி இருந்தனர்.. மேலும் சில விவரம் கேட்டு இருந்துந்தாங்க.. அதையும் அனுப்பிட்டேன்...

ஏமாற்ற படுவதை தவிர்க்க வழிகள்..
1 . ஈமெயில் ல வர்ற இந்த மாதிரி link - அ கிளிக் பண்ண கூடாது ..
2 . பொதுவா பேங்க் சைட் லாம் " https " ல தான் ஆரம்பிக்கும்.. நம்முடைய பெயர் மற்றும் passwordகொடுப்பதற்கு முன் இதை உறுதி படுத்திகொள்ளணும் ..
3 . நாம தான் ரொம்ப உஷாரா இருக்கணும்.. இந்த மாதிரி எந்த சுய விவரம் கேட்குற மாதிரி மெயில் வந்தா,உடனடியா சம்பந்தப்பட்ட பேங்க் -ஐ தொடர்பு கொண்டு உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும்..
4 . இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி இதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தணும்..

எனக்கு சில சந்தேகம் இருக்குது..
1 . நான் SBI ல கணக்கு ஆரம்பிச்சு மூணு மாதம் தான் ஆகுது... இதுக்கு முன்னாடி எனக்கு இந்த மாதிரி மெயில் வந்தது இல்ல.. நான் SBI ல கணக்கு ஆரம்பிச்சது எப்படி இவங்களுக்கு தெரிஞ்சுது... (எனக்கு இன்னும் பல வாங்கி கணக்குகள் ஏற்கனவே இருக்கு.. வேற எந்த "பேங்க்" த இருந்தும் இந்த மாதிரி மெயில் வந்தது இல்ல.
2 . "sender " அட்ரஸ் ல எப்படி "server-alert@onlinesbi.co.in> " இந்த மாதிரி அனுப்ப முடிஞ்சுது.. கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம், சில நிமிட அஜாக்கிரதையால் தொலைத்து விடாமல் , நாம தான் விழிப்புணர்வாய்இருக்கணும் .. டிஸ்கி: இந்த லிங்க் அ ஓபன் பண்ணி "http://amexapparel.com/online/sbi/indexx.html " , தப்பும் தவறுமா நம்முடைய விவரங்களை குடுத்தாலும் அமைதியா நம்முடைய விவரங்களை களவாடி கொண்டதாக நினைத்து வாங்கி கொண்டு அடுத்த பக்கத்திற்கு தாவுகிறது..

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.