அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Showing posts with label நுகர்வோர். Show all posts
Showing posts with label நுகர்வோர். Show all posts

Tuesday, July 5, 2011

யுவதிகள் படும் அவதி!




கேஸ் பதிவதற்கு இன்று(05/7/2011) தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்களுக்கு தொலைபேசியில் பதியப்படமாட்டாது என்றும் நேரில் குடும்ப அட்டையுடன் வரவேண்டும் என்றும் கேஸ் நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக முன்னறிவிப்பு செய்யப்பட்டதாக தகவல் இல்லை.

பட்டுக்கோட்டை செல்லும் வழியில் அமைந்துள்ள இந்தியன் கேஸ் அலுவகத்தில் ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து பதிவு செய்தனர்.

குடும்ப அட்டைகளை சரிபார்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சரிபார்க்கும் பணி பத்து நாட்களுக்கு நடைபெறும் என்று தாசில்தார் அலுவலக ஊழியர் ஒருவர் நமது செய்தியாளரிடம் தெரிவித்தார். பொதுமக்களை பாதிக்காமல் இருந்தால் சரிதான்.
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.