வரும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் துவங்குகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பள்ளி கல்வி துறையின் மூலம் இன்று வெளியானது. 2011-2012 கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் சமச்சீர் கல்வி அமல்படுத்துவதில் ஏற்பட்ட குளறுபடிகளால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தாமதமாக துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பாடங்கள் முழுமையாக நடத்தப்படாதது தான் அதற்கு காரணம். வழக்கமாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு மார்ச் மாத இறுதியில் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு தாமதமாக ஏப்ரல் மாதம் 4ம் தேதி துவங்குகிறது.தேர்வு அட்டவணை:
4-4-12 : தமிழ் முதல் தாள்
9-4-12: தமிழ் இரண்டாம் தாள்
11-4-12: ஆங்கிலம் முதல் தாள்
12-4-12: ஆங்கிலம் இரண்டாம் தாள்
16-4-12: கணிதம்
19-4-12: அறிவியல்
23-4-12: சமூக அறிவியல்
நடப்பு கல்வியாண்டில் சுமார் 11 லட்சம் மாணவ, மாணவியர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுகின்றனர்.


