அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Showing posts with label விபத்து. Show all posts
Showing posts with label விபத்து. Show all posts

Wednesday, October 19, 2011

வாகன விபத்து ! அதிர்ச்சி !

தஞ்சையிலிருந்து அதிரைக்கு இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த சகோ.இல்முதீன் மற்றும் இஸ்மாயில் ஆகியோரது இரு சக்கர வாகனம் மீது மினி லாரி மோதியதில் விபத்துக்குள்ளானார்கள். சகோ.இல்முதீன் (மரைக்கா வீட்டு) அவர்களுக்கு இடது காலில் பலத்த காயமும், இஸ்மாயில் அவர்களுக்கு கால் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன. இருவருக்கும் பட்டுகோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு அதிரை த.மு.மு.க ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சைக்கு சென்று கொண்டிருக்கின்றார்கள்.

வெளிநாட்டில் வாழும் அனைத்து சகோதரர்களும் துவா செய்யுமாறு அதிரை பிபிசி கேட்டுக்கொள்கின்றது.

Thursday, June 30, 2011

மக்கள் நினைத்தால் விபத்துக்களை தவிர்க்கலாம்!

நமதூரில் மக்கள்தொகையை விட வீடுகள் தான் அதிகமாக உள்ளதோ என்று சில நேரங்களில் எண்ணுவதுண்டு.



நமது ஊரிலுள்ள தெருக்களில் வீடு கட்டுவதற்காக செங்கல், ஜல்லி, மண், ஆகியவற்றை மனையின் வெளியில் அடுக்குவது, கொட்டுவது இதுதான் நம்மூரின் பழக்கம். ஆனால் சென்னை மாநகரம் போன்ற இடங்களில் செங்கல், ஜல்லி, மண், ஆகியவற்றை மனையின் உள்ளே கொண்டு செலுத்துவார்கள்.
அவற்றை கட்டடத்தின் வெளியே (ரோட்டில்) பார்ப்பது கடினம். அவற்றை வெளியில் வைத்தால் முனிசிபாலிட்டி அலுவலகத்திலிருந்து அதனை அகற்ற கெடு கொடுப்பார்கள். கெடுவிதிக்கப்பட்டு கட்டட உரிமையாளர் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் கடும் அபராதம் விதிப்பார்கள். சிலநேரங்களில் அந்த கல் மண் போன்றவற்றை உரிமையாளர் அப்புறப்படுத்தாவிட்டால் அவற்றை பறிமுதல் செய்து பின் அபராதமும் விதிக்கப்படுவதுண்டு.

இதனால் ஒரு தனி மனிதனுடைய உழைப்பு வீணாக போய்கிறது. இது இஷ்ராப் என்கிற விரயத்திலும் போய் முடிகிறது.

ஆனால் இது அதிரை போன்ற இடங்களில் சாத்தியம் ஆகுமா என்று தெரியவில்லை. செங்கல், ஜல்லி, மண், ஆகியவற்றை வெளியே வைப்பதால் ஊரில் இருக்கும் சிறுவர்களில் சிலர் மண்ணில் சரிந்துக் கொண்டும் மற்றும் சிலர் ஜல்லியை சரிப்பதும், நாய்களைக் கண்டால் ஜல்லி கற்களை எடுத்து அதனை அடிப்பதும் வழக்கமான நிகழ்வுகளாக இன்றும் தொடர்கிறது. 


மேலும் சாலையில் மண்ணும் கல்லுமாக சரிந்துக் கொட்டிக்கிடக்கும்போது விபத்துக்கள் எற்படுகிறது. இதனை நமதூரில் உள்ள அனைத்து முஹல்லா வாசிகளும் மற்றும் கட்டட கான்ட்ராக்டர்கள் அனைவரும் இது போன்ற போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மணல் ஜல்லி போன்றவற்றை வீண்விரயம் செய்யாமல் தன் கட்டடத்துக்கு உள்ள போட வேண்டும். அனைத்து மக்களும் நமது ஊரில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தெருக்களை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் ஆக்க அனைவரும் முன்வரவேண்டும்.

அதிரை பிபிசிக்காக நிருபர்அப்துல்லா
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.