அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Showing posts with label AFFA. Show all posts
Showing posts with label AFFA. Show all posts

Saturday, April 14, 2012

AFFA அதிரை ப்ரண்ட்ஸ் புட்பால் அசோசியேஷன் கால்பந்து தொடர் போட்டி நாளை (15/4/12) துவக்கம்

அதிரை ப்ரண்ட்ஸ் புட்பால் அசோசியேஷன் AFFA வால் நடத்தப்படும் 9ஆம் ஆண்டு  கால்பந்து தொடர் போட்டி நாளை (15/4/12)கிராணி மைதானத்தில் நடைபெற உள்ளது
முதல் ஆட்டமாக பொதக்குடி அணியும் கலைவாணர் கண்டனூர் அணியும் மோதிகின்றன.

Sunday, August 21, 2011

அதிரையில் இன்று (21/08/2011) AFFA நடத்திய இஃப்தார் நிகழ்ச்சியின் காணொளி

இன்று(21/08/2011) அதிரையில் AFFA சார்பாக இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. நமதூர் கிராணி மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் சுமார் 150 பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Tuesday, June 28, 2011

AFFA - பொதுக்குழு கூட்டமும் தீர்மானங்களும்.



அதிரை AFFA (ADIRAI FRIENDS FOOTBALL ASSOCIATION) கால்பந்து அணி கடந்த 5 வருட காலமாக அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட-முறைப்படி பைலா அமைக்கப்பட்ட அணியாக திகழ்கிறது . தஞ்சை மாவட்ட அளவில் சிறந்த அணியாக AFFA அணி விளங்குகின்றது. அதன் சாட்சியாக, கடந்த வருடம் மாவட்ட அளவிலான போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது . இந்த வருடம் தஞ்சை மாவட்ட கால்பந்து அணிக்கு, இமாம் ஷாஃபி பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவர்கள் (AFFA அணியைச் சார்ந்த இரண்டு இளம் வீரர்கள்) அந்த அணியில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

AFFA வின் பொதுக்குழு கடந்த (26/06/2011) அன்று, AFFA வின் தலைவர் செய்யது முகம்மது தலைமையில் நடைபெற்றது . முதலில் AFFA வின் பொருளாளர் அபுல் ஹசன் 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார் . பின்னர் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. AFFA-வின் தொடர்போட்டி நடைபெற ஒத்துழைப்பு தந்த அனைத்து வீரர்களுக்கும் அதிரை நகர மக்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது .

2.தொடர் போட்டி நடைபெறுவதற்கு பெருளாதார உதவி செய்த உள்நாடு மற்றும் வெளிநாடு நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது .

3.கடைசியாக நடைபெற்ற குல் முகம்மது நினைவு தொடர் போட்டியில் நடந்த சில விரும்பத் தகாத சம்பவங்களால் ஊர் ஒற்றுமையை கருத்தில் கொண்டு, இனி வரும் காலங்களில் AFFA நடத்தும் தொடர்ப்போட்டி தவிர வேறு எந்த உள்ளூர் போட்டிகளிலும் கலந்து கொள்வதில்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4. அணியின் பயிற்சியாளர் (Coach) மற்றும் தேர்வாளர் (Team selection head) ஆக லியாக்கத் அலி(முன்னாள் கால்பந்து விளையாட்டு வீரர் )அவர்கள் நியமிக்கப் பட்டுள்ளார்கள் .

தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றி கூட்டம் நிறைவுப்பெற்றது.
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.