அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Showing posts with label SBI. Show all posts
Showing posts with label SBI. Show all posts

Tuesday, November 15, 2011

அதிரையில் SBI ATM விரைவில்...

சில மாதங்களுக்கு முன் புதிதாக உதயமாகி அதிரையில் சேவையை துவங்கி உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அதிரை கிளை இன்னும் ஒரு சில மாதங்களில் தனது தானியங்கி பணம் வழங்கி(ATM) மையத்தை திறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து வங்கி மேலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டப்பொழுது, ATM மையத்தை செயல்படுத்துவதற்கான ஆனை(APPROVAL) இன்னும் மும்பையிலிருந்து வரவில்லை என்றும், அந்த ஆனைக்காக காத்திருப்பதாகவும் ஆனை வந்தவுடன் ATM மையத்தை உடனே செயல்படுத்துவதற்கான வேலைகளில் இறங்குவோம் என்றும் தெரிவித்தார்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா - அதிராம்பட்டினம் கிளை தற்பொழுது நம்-ஊரில் அதிக வணிக நிறுவனங்கள் இயங்கி வரும் பிரதான சாலையில்(தக்வா பள்ளி முனையிலிருந்து - கனரா பேங்க் வரையிலும்) கீழ்கண்ட முகவரியில் செயல் பட்டு வருகிறது. ATM மையமும் வங்கியின் அருகாமையில் அதே சாலையில் (புதுத்தெருவில்) செயல்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கியின் முழு விபரம். (இந்த தகவல் நெட் பேங்கிங் செய்பவர்களுக்கு உதவியாக இருக்கும்)
Bank : State Bank Of India
State : Tamilnadu
District : Thanjavur
Branch : Adirampattinam
IFSC Code : SBIN0014370 (5th character is zero)
Branch Code :014370 (Last 6 Characters of the IFSC Code)
City : Adirampattinam
Address :
30, New Street, Market Road,
Adirampattinam, Thanjavur Dist-614701
Contact No : 09445860469

SBI ATM மையம் செயல்பட துவங்கினால் அதிரையில் ATM மையங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயரும்.

அதிரையில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள ATM மையங்கள்.
1. AXIS BANK ATM.
2. CANARA BANK ATM.
3. INDIAN BANK ATM.
4. DHANALAKSHMI BANK ATM.
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.