Thursday, September 8, 2011
ஆன்லைனில் பேங்க் account வைத்து இருப்பவர்களே !! உஷார்!!!
இப்பபதிவு ''மதுரை பாண்டி''யின் மதுரைக்காரன் என்ற வலைபூவில் பார்த்தது ! படித்தது !!!!! உங்களை உஷார் படுத்துவதற்காக அதிரை bbc யில்
சில நாளுக்கு முன்பு என் ஈமெயில்-ஐடி க்கு SBI ல இருந்து ஒரு மெயில் வந்துச்சு.. நானும் திறந்து பார்த்தேன். இப்படி இருந்துச்சு அந்த மெயில்..
(படம் பெரிதாக தெரிய படம் மீது கிளிக்கவும்.. )
பொதுவா பேங்க்-இடம் இருந்து எந்த மெயில் வந்தாலும் அதோட " sender " அட்ரஸ் பார்த்துட்டு தான் மெயில்-அ படிச்சு பார்ப்பேன்.. இதுல " sender " அட்ரஸ் ல <server-alert@onlinesbi.co.in> இருந்துச்சு... உண்மைலேயே பேங்க் ல இருந்து தான் அனுப்பி இருக்காங்க போல நு நினைச்சு அவங்க அனுப்பி இருந்த அந்த " File " அ ஓபன் பண்ணேன்...
அவங்க சிஸ்டம் ல என்னமோ error வர்றதாகவும் , அதை சரி பண்ண என்னுடைய சுய விவரங்களை ஒண்ணு விடாம கொடுத்தா தான் அந்த பிரச்சனைய சரி பண்ண முடியுமுன்னு போட்டு இருந்துச்சு. சரி, நாம தான் ஏதோ தப்பு பண்ணிட்டோம் போல, அதான் SBI இந்த மாதிரி அனுப்பி இருக்குனு அவன் கொடுத்த link -ஐ ஓபன் பண்ணதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுச்சு அதோட வில்லங்கம் என்னன்னு..
இது தான் அந்த லிங்க் " http://jonathangosselin.info/wp-theme.php " SBI க்கும் இந்த லிங்க் அட்ரஸ்க்கும் என்னடா சம்பந்தம் நு ஓபன் பண்ணி பார்த்தேன்.. (Chrome , Firefox இந்த லிங்க் ஓபன் பண்ணும் போதே warningகாமிக்குது ) ... நான் ஓபன் பண்ணுனது " IE " ல... அந்த லிங்க்-அ ஓபன் பண்ணுனா அது இன்னொரு லிங்க்-க்கு redirect ஆச்சு.. "http://amexapparel.com/online/sbi/indexx.html "
அச்சு அசலாக "SBI Bank website " போலவே டிசைன் பண்ணி இருக்குற போலியான வெப்சைட் அது... இந்த வெப்சைட் ல என்னுடைய விவரங்களை கொடுத்து இருந்த என்னுடைய கணக்கில் இருந்துஎன்னுடைய பணம் களவாடப்பட்டு இருக்கும்.. உண்மையான SBI பேங்க் வெப்சைட் https://www.onlinesbi.com
உடனடியாக "SBI " கு மெயில் அனுப்பி இந்த விஷயத்தை தெரிவித்தேன்.. அவர்கள் இந்த மாதிரி வர்ற மெயில்-க்கு respond பண்ண வேண்டாம் என்று பதில் அனுப்பி இருந்தனர்.. மேலும் சில விவரம் கேட்டு இருந்துந்தாங்க.. அதையும் அனுப்பிட்டேன்...
ஏமாற்ற படுவதை தவிர்க்க வழிகள்..
1 . ஈமெயில் ல வர்ற இந்த மாதிரி link - அ கிளிக் பண்ண கூடாது ..
2 . பொதுவா பேங்க் சைட் லாம் " https " ல தான் ஆரம்பிக்கும்.. நம்முடைய பெயர் மற்றும் passwordகொடுப்பதற்கு முன் இதை உறுதி படுத்திகொள்ளணும் ..
3 . நாம தான் ரொம்ப உஷாரா இருக்கணும்.. இந்த மாதிரி எந்த சுய விவரம் கேட்குற மாதிரி மெயில் வந்தா,உடனடியா சம்பந்தப்பட்ட பேங்க் -ஐ தொடர்பு கொண்டு உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும்..
4 . இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி இதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தணும்..
எனக்கு சில சந்தேகம் இருக்குது..
1 . நான் SBI ல கணக்கு ஆரம்பிச்சு மூணு மாதம் தான் ஆகுது... இதுக்கு முன்னாடி எனக்கு இந்த மாதிரி மெயில் வந்தது இல்ல.. நான் SBI ல கணக்கு ஆரம்பிச்சது எப்படி இவங்களுக்கு தெரிஞ்சுது... (எனக்கு இன்னும் பல வாங்கி கணக்குகள் ஏற்கனவே இருக்கு.. வேற எந்த "பேங்க்" த இருந்தும் இந்த மாதிரி மெயில் வந்தது இல்ல.
2 . "sender " அட்ரஸ் ல எப்படி "server-alert@onlinesbi.co.in> " இந்த மாதிரி அனுப்ப முடிஞ்சுது.. கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம், சில நிமிட அஜாக்கிரதையால் தொலைத்து விடாமல் , நாம தான் விழிப்புணர்வாய்இருக்கணும் .. டிஸ்கி: இந்த லிங்க் அ ஓபன் பண்ணி "http://amexapparel.com/online/sbi/indexx.html " , தப்பும் தவறுமா நம்முடைய விவரங்களை குடுத்தாலும் அமைதியா நம்முடைய விவரங்களை களவாடி கொண்டதாக நினைத்து வாங்கி கொண்டு அடுத்த பக்கத்திற்கு தாவுகிறது..
Wednesday, September 7, 2011
சேமிப்பு பற்றி ஓர் அதிரடி அலசல் (அனைவருக்கும் ஏற்ற முக்கியமான தகவல்கள்)
உலக நாடுகள் பலவற்றில் பொருளாதார பெருமந்தம் அடிக்கடி ஏற்படுகிறது.இதனால் பலர் வேலை இழக்கும் சூழல் உருவாகிறது.திடீரென்று குடும்பத்தலைவர் வேலை இழப்பதால், அதன் பிறகு வாழ்க்கையை வாழ வருமானத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அந்த குடும்பமே தவிக்கிறது.இன்னும் சிலர் இளமையில் ஓடியாடி வேலை பார்க்கிறார்கள். கிடைக்கும் வருமானத்தை எதிர்காலத்தை பற்றி சிறிதும் சிந்திக்காமல்,ஆடம்பரமாக செலவு செய்து விடுகிறார்கள். வயதாகி ஓய்ந்து போகும் வேளையில் வயிற்றுபாட்டைத் தள்ளக்கூட வழியில்லாமல் போகிறார்கள்.
நமக்கோ நம் பிள்ளைகளுக்கோ திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்படலாம்.கையில் அறவே பணம் இல்லாவிட்டால் மருத்துவ செலவுக்கு என்ன செய்வது?
அடுத்தவர் கையை எதிர்பார்க்க வேண்டிய சூழல் உருவாகும்.அடுத்தவரிடம் கடன் பெறுவது மகிழ்வானதா?அது நம் தன்மானத்திற்கு இழுக்கல்லவா?கேட்டவுடன் கடன் தான் கிடைத்து விடுமா?அவ்வாறு கடனாக பெறும் பணம் கையில் கிடைக்கும் வரை நோய்வாய்ப்பட்டவரின் நிலை என்னாகும்?
கடன்பட்டு மருத்துவ செலவும் செய்தாகிவிட்டது என வைத்துக் கொள்வோம் பட்ட கடனை அடைக்க முடியாமல்,கடனீந்தவரின் முன் நாம் தலைகுனிந்து நிற்பதை,நம் குடும்பத்தார் பரிதாபமாக(சிலர் ஏளனமாக)பார்ப்பார்களே?அப்போது நம் மனம் சொல்ல இயலாத அளவிற்கு வேதனைப்படும் அல்லவா?
இந்த வேதனையை எல்லாம் தவிர்க்க இன்றே சேமிக்க ஆரம்பிக்கலாமே…!
ஆம்! மாதந்தோறும் கிடைக்கும் வருமானத்தில் குறைந்தபட்சம் 5% தொகையையாவது சேமிக்க வேண்டும்.பணத்தை சேமிக்க விரும்பினால் நாம் சில காரியங்கள் செய்ய வேண்டும்.
•சேமிப்பின் தாரக மந்திரமே சிக்கனம் தான். நாம் நீண்டகால பண சேமிப்புத் திட்டத்தில் சேருவதைவிட, தினமும் சிறுதொகை சிக்கனம் பிடிப்பதே பெரிய பலன் தரக்கூடியதாகும்.
•முதலில் நாம் பணத்தை எந்த வழியில் செலவு செய்கிறோம் என்பதைக் கவனித்து தவிர்க்க வேண்டிய வீண் ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும்.
•செல்போன் அழைப்புகளை தேவையான நேரத்தில் மட்டும் பேசலாம். கண்டிப்பாக குறிப்பிட்ட தொகை மிஞ்சும்.
•சேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து பணத்தை சேமிப்பது நல்ல வழி. மாதம் தோறும் சிறு தொகையை சேமிப்புக் கணக்கில் போடலாம். அது `சிறுதுளி பெருவெள்ளம்’ எனும் பொன்மொழிக்கேற்ப பெருகி வளரும்.
•முதலில் சேமிக்க பழகுவது கொஞ்சம் கடினமான காரியம். எனவே காலத்தை ஒத்திபோடாமல் அந்த சிந்தனை தோன்றிய இக்கணமே சேமிப்பை ஆரம்பிக்க வேண்டும்.
•வீட்டுச் செலவுக் கணக்கை எழுதலாம். பணத்தைச் சேமிக்க இதைவிட சிறந்த வழியில்லை. பணம் வரும் வழியும், போகும் வழியும் தெரிந்தால்தான் `பணம் எப்படித்தான் காலியாகுதோ’ என்று புலம்பும் நிலைமையைத் தவிர்க்க முடியும்.
•பணம் வீணாகும் வழியை செலவுக் கணக்கு முலம் தெளிவாகக் கண்டுபிடிக்கலாம். சேமிக்க முடியாமல் போனதற்கான காரணத்தையும் கண்டறிந்து விடலாம். பின்னாளில் நாம் மனநிம்மதியுடன் வாழ, இப்போதே வீட்டுச் செலவை எழுத வேண்டும்.
•நேற்று வரை இந்த பழக்கம் இல்லாதிருந்தால் இன்றிலிருந்தாவது வரவு செலவை எழுத பழக வேண்டும்.
•வீட்டு மளிகைச் சாமான்களை மொத்தமாக வாங்கி விடுவதும் பணத்தைச் சேமிக்கும் சிறந்த வழியே.
•அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுவது, நம் பணத்தைக் காலியாக்கி விடும். வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது பணத்தைச் சேமிக்கும் சிறந்த சக்தியாகும். இதனால் உடல்நலமும் பாதுகாக்கப்படும்.
•வாழ்வெனும் போர்க்களத்தில் திடீர் பணத் தேவைகள் நம்மை சூழ்நிலைக் கைதியாக்கலாம். அப்போது மற்றவர்களை எதிர்பார்த்து மதில்மேல் பூனையாக தவிக்கும் நிலைமையை இது தடுக்கும்.
•மொத்தமாக வாங்கிய சமையல் பொருட்களையும் தேவைக்கு ஏற்ப பக்குவமாக பயன்படுத்த வேண்டும், தேவைக்கு அதிகமாக சமைத்து வீணாக்கக் கூடாது.
•ஏமாறாமல் இருப்பதுவும் சேமிப்பு வழிகளில் ஒன்றாகும். இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் சலுகை அறிவிப்புகள் வருவதை பார்க்கலாம். ஒன்று எடுத்தால் ஒன்று இலவசம், 50 சதவீதம் தள்ளுபடி என்று கவர்ச்சி அறிவிப்புகள் வருகின்றன. இவையெல்லாம் வியாபார தந்திரம் தான்.
•கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் நம் சிந்தனை மழுங்கடிக்கபடுகிறது என்பதை மறந்துவிடக்கூடாது.ஆழமாக சிந்தித்து பார்த்தால் உண்மை விலை, தள்ளுபடி விலையை விடக் குறைவாக இருக்கும்.
•பழமையில் பெருமை காண விரும்பினால் புதுமையாக பணம் சேமிக்கலாம். ஆமாம், ஏற்கனவே பயன்படுத்தபட்ட பொருட்களை செகட் ஹேண்டாக வாங்குவது பணத்தை மிச்சம் பிடிக்கும் சிறந்த வழியாகும்.
•வாங்கிய ஓராண்டு காலத்திற்குள்ளாக புதிய காரின் விலை முன்றில் ஒரு பங்கு குறைந்து விடுகிறது. தரமும் தாழ்ந்து போவதில்லை. அப்படி இருக்கும்போது இரண்டாம் தரமாக வாங்கி பயன்படுத்துவதில் என்ன பிழையிருக்கிறது? போதிய அளவு சோதனை செய்து பார்த்து வாங்கி பயன்படுத்தினால் நமக்குத்தானே லாபம்.
•டீ, காபி செலவு, நொறுக்குத் தீனி, ரெஸ்டாரண்ட் உணவுகள் போன்றவற்றின் செலவுக் கணக்கை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு முறை அவற்றை சொந்த தயாரிப்பில் உபயோகித்தால் எவ்வளவாகிறது என்பதையும் கணக்கு போட்டு பார்த்தால், இரண்டு நிலைக்கும் செலவில் எவ்வளவு வித்தியாசம் என்பது நமக்கே கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும். அதோடு வீட்டு உபயோகம் என்பது நுறு சதவீத ஆரோக்கியமான விஷயமும் கூட.
•வீணாக்காமல் பயன்படுத்துவதும் ஒரு சேமிப்புதான். நாம் வாழ்க்கை முழுவதும் நுகர்வோராகவே இருக்கிறோம்.
•வாழ்வில் சிலவற்றை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். சிலவற்றை குறைவாக பயன்படுத்த வேண்டும். இன்னும் சிலவற்றை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இந்த மூன்றையும் சரியாகச் செய்வதுதான் உண்மையான சேமிப்பாகும்.
•மின்விளக்கு, மின்விசிறி, ஏ.சி. போன்ற சாதனங்களை தேவைக்கேற்ப குறைவாக பயன்படுத்துவதன் முலம் மின்சார பயன்பாட்டைக் குறைத்து,மின்சார கட்டணத் தொகையில் ஓரளவு சேமிக்கலாம்.
•பிராட்பேண்ட் இணைப்பு வைத்திருப்போர்,தம் பயன்பாட்டு அளவைப் பொறுத்து Broadband plan-ஐ தேர்ந்தெடுக்கலாம்.அதிக அளவில் இன்டர்நெட் உபயோகிப்போர் Unlimited Plan-ஐயும்,குறைவாக இன்டர்நெட் உபயோகிப்போர் Limited Plan-ஐயும் தேர்ந்தெடுப்பதன் மூலம் டெலிபோன் பில்லிலும் ஓரளவு சேமிக்கலாம்.
•மற்றவர்கள் நம்மை ராஜா என்று நினைக்க வேண்டும் என்பதற்காக ராஜா வேடம் போடுவது எவ்வளவு பெரிய மூடத்தனம்! எனவே மற்றவர்களுக்காக பகட்டாக காட்டிக் கொள்ளவும், அலங்காரத்திற்காகவும் கவர்ச்சிக்காகவும் பொருட்களை வாங்காமல் இருந்தால், அதுவும் சேமிப்புதான்.
எனவே மாதந்தோறும் கிடைக்கும் வருமானத்தில் குறைந்தபட்சம் 5% தொகையையாவது சேமிக்க ஆரம்பிப்போம்!
கஞ்சத்தனமாகவோ,ஊதாரியாகவோ இல்லாமல்,சிக்கனமாக வாழ்வோம்!
வளமும், நலமும் பெறுவோம்!
ஆக்கம்: அதிரைபூங்கா
Tuesday, September 6, 2011
"தோழர்கள்" நூல் வெளியீட்டு நிகழ்ச்சி
இன்ஷா அல்லாஹ் வரும் 11.09.2011 அன்று, அஹ்மது காக்கா தலைமையில் "தோழர்கள்" நூல் வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னையில் நடைபெறவுள்ளது (இணைப்பு).

Monday, September 5, 2011
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் தெரிவிப்போம்
உலகத்தில் எல்லாவற்றிக்கும் ஒரு நாள் இருப்பது போல் ஆசிரியர் தினமும் சாதாரண தினம் இல்லை. 

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை தருவது அவன் கற்ற கல்வி மட்டுமே .அப்படிப்பட்ட மிக உயர்ந்த கல்வியை தருவது ஆசிரியர் பணி மட்டுமே .ஆசிரியர் என்பவர் ஏணி போன்றவர் எல்லோரயும் ஏற்றிவிட்டு அந்த ஆசிரியர் ஏணி மட்டும் அந்த இடத்தில இருக்கும் அப்படிப்பட்ட ஆசிரியர் தினம் இன்று "முன்னாள் குடியரசுத் தலைவருமான மறைந்த டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் பிறந்த நாளில் அவர்களின் நினைவாக கொண்டாடப்படும் ஆசிரியர் தினம் அன்று நமக்கு பிடித்த அந்த ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிப்போம்.
ஒவ்வொருவரின் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டாக்கிய ஆசிரியர் பற்றி இரத்தின சுருக்கமாக பின்னுட்டம் இடவும்.
"ஒரு சமுதாயத்தில் நல்ல மாற்றத்தை தருவது சிறந்த கல்வி மட்டுமே அப்படிப்பட்ட நல்ல கல்வி தரும் ஆசிரியர்களுக்கு ஒரு சல்யுட் "
சிறப்பாக நடந்து முடிந்த -எலும்பு கனிம சத்து கண்டறியும் இலவச முகாம்.
பட்டுக்கோட்டை பெஸ்ட் ஆர்த்தோ சென்டர் மற்றும் அதிராம்பட்டினம் ஃபேமிலி மார்ட் சூப்பர் மார்க்கெட், காசிம் ரியல் எஸ்டேட், சம்சுல் இஸ்லாம் சங்கம் சேர்ந்து நடத்திய எலும்பு கனிம சத்து கண்டறியும் இலவச முகாம் நேற்று 04 - 09 - 2011 ஞாயிற்றுக் கிழமை சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் மதியம் 2:00 மணியிலிருந்து மாலை 7.30 மணிவரை நடைபெற்றது.சுமார் 160 பேர் கலந்துகொன்டனர் .
Sunday, September 4, 2011
அதிராம்பட்டிணம் அருகே புதிய பெண்கள் கலை அறிவியல் கல்லூரி!
CMN சலீம் அவர்களின் முயற்சியால் ECR ரோட்டில் அமைந்துள்ள அதிராம்பட்டிணத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்மாபட்டிணம் அருகே இன்ஷா அல்லாஹ் இஸ்லாமிய அடிப்படையில்…
புதிய பெண்கள் கலை அறிவியல் கல்லூரி வருகிற கல்வி ஆண்டு முதல் துவங்கப்பட உள்ளது.
100 கல்வி ஆர்வலர்களின் முதலீட்டில் உருவாக உள்ள இக்கல்வி நிறுவனத்தில் நீங்களும் முதலீடு செய்து பங்குதாரராக ஆகலாம்.
இஸ்லாமிய அடிப்படையில் பெண் கல்வியாளர்களை உருவாக்கிடவும் இந்த சிறப்புமிகு முயற்சிக்கு துணை செய்து இறைவனுடைய அருளைப் பெறலாம்.
மேலும் விபரங்களுக்கு
CMN சலீம்
93821 55780
cmnsaleem@yahoo.co.in
புதுமனை தெருவின் அவல நிலை. கண்டு கொள்ளாத வார்டு கவுன்சிலர்
நீங்கள் பார்க்கும் இந்த புகைபடங்கள் நேற்று முன்தினம் அதிரையில் மழை பெய்த நிலையில்19 வது வார்டு புதுமனை தெருவில் எடுக்கப்பட்ட புகைப்படம்.
அங்கு ஒரு மாதத்துக்கு முன் சிமெண்ட் சாலை போடப்பட்டு உள்ளது.அந்த சாலை திட்டத்துக்கு கடந்த திமுக ஆட்சியில் தமிழக அரசால் சுமார் ரூ 1கோடிஒதுக்கப்பட்டு உள்ளது.சாலையை முன்பு இருந்த பழைய ரோட்டை தூர்வாராமல் அதற்க்கு மேலாக சுமார் முன்று அடிக்கு உயர்த்தி போட்டு இருக்கிறர்கள். அதற்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெருவித்தும் அங்கு உள்ள வார்டு உறுப்பினர் (பொறுப்பு) மற்றும் அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருந்து இருக்கிறார்கள்.மேலும் இந்த சாலையை மழை தண்ணிர் செல்ல வாட்டம் இல்லாமல் கட்டி இருக்கிறார்கள் .மேலும் இந்த தெருவை முறையாக இந்த வார்டு உறுப்பினர்(பொறுப்பு) சரியாக கவனிக்கவில்லை என்று புகார்கள் வருகின்றன.இங்கு அதிரை பேருராட்சி15 நாள்களுக்கு ஒரு முறை தான் குப்பையை சுத்தம் செய்கிறார்கள்.மேலும் இங்கு உள்ள மின் விளக்குகள் சரியாக எரியவில்லை.இந்த தெருவுக்கு அடிப்படை வசதிகள் செய்து தராவிட்டால் சாலை மறியலில் இடுபடபோவதாகவும் மற்றும் வரும் உள்ளாச்சி தேர்தலில் எந்த உறுபினர்க்கும் ஓட்டு போடாமல் தேர்தலை புறகணிக்க போவதாக அந்த வார்டு மக்கள் தெருவிக்கிறார்கள்.

நேற்று முன்தினம் மழையால் பாதித்த விடுகளை படத்தில் காணலாம்
விட்டின் உள்ள செல்லும் மழை தண்ணிரை வெளியேற்றும் இங்கு உள்ள வாலிபர்கள்
குளம் போல் காட்சி அளிக்கும் CMPலைனுக்கு செல்லும் பொது வழி
மழை தண்ணீர் செல்ல முடியாமல் கழிவு நீரைப்போல் காட்சி அளிகிறது சிமெண்ட் சாலை
ஒரு செருப்பின் அளவு உயர்த்தப்பட்ட அந்த சிமெண்ட் சாலை

நேற்று முன்தினம் மழையால் பாதித்த விடுகளை படத்தில் காணலாம்
மக்கள் நடந்து செல்லும் பொது வழியில் தேங்கி கிடக்கும் மழை தண்ணிர்
விட்டின் உள்ள செல்லும் மழை தண்ணிரை வெளியேற்றும் இங்கு உள்ள வாலிபர்கள்
குளம் போல் காட்சி அளிக்கும் CMPலைனுக்கு செல்லும் பொது வழி
மழை தண்ணீர் செல்ல முடியாமல் கழிவு நீரைப்போல் காட்சி அளிகிறது சிமெண்ட் சாலை
Saturday, September 3, 2011
ஹைதர் அலி ஆலிம் அவர்களின் சிறப்பு நோன்பு பயான்கள் - 2011 (பதிவிறக்கலாம் - Downloadable)
கடந்த நோன்பு நாட்களில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் சொற்பொழிவு அதிரை பிபிசில் வெற்றிகரமாக நேரலை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!
மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதை நாம் அவ்வபோது அறிந்தோம் மாஷா அல்லாஹ். இப்பொழுது அந்த சொற்பொழிவுகளை அதிரை பிபிசிலிருந்து பதிவிறக்கம் (Download) செய்யலாம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
Set #1: Ramalan 01 to 05 Days
Set #2: Ramalan 06 to 10 Days
Set #3: Ramalan 11 to 15 Days
Set #4: Ramalan 16 to 20 Days
Set #5: Ramalan 21 to 25 Days
Set #6: Ramalan 26 to 29 Days
Downloaded files are in Compressed ZIP format (Please unzip the files after download to play the audio in MP3 format)
-அதிரை பிபிசி
Friday, September 2, 2011
திருந்தவே திருந்தாத அதிரை பேரூர் நிர்வாகம்
நமதூரில் உள்ள அணைத்து வலைதளங்களிலும் அதிகமாக வரும் செய்தி இந்த அதிரை பேருராட்சியை பற்றி தான்.
எதோ செய்தி என்று அதிரை பேரூர் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்ற தலைப்பில் மாதம் மூன்றுமுறையாவது வந்து விடும்.ஆனால் இந்த செய்தியை பார்த்தும் ஒன்றும் நடவடிக்கை எடுக்கபடாத நிலையில் உள்ளது இந்த பேரூர் நிர்வாகம். இதற்கு காரணம் நம்மால் தேர்ந்து எடுக்கப்பட்ட வார்டு உறுபினர்களே.
நேற்று எமது நிருபர்களால் எடுக்கப்பட்ட புகைப்படம் உங்கள் பார்வைக்கு.

நீங்கள் பார்க்கும் இந்த முதல் புகைப்படம் எடுக்கபட்ட இடம் 21 வது வார்டு CMP லைன்
அந்த குப்பையை சரிவர அதிரை பேருராட்சி அல்லாததால் அங்கு உள்ள மக்கள் அவர்களே குப்பையை எரித்து விடுகிறார்கள்

இந்த தண்ணிர் குழாய் இருக்கும் இடம் புதுமனைதெரு வார்டு .இங்கு பல பேர்
விட்டில் மோட்டார்வைத்து குடிதண்ணிரை அதிகமாக எடுத்து விடுகிறார்கள்
ஆதலால் அங்கு உள்ள வசதியற்றமக்களுக்கு குடி தண்ணிர் தட்டுபாடு
ஏற்படுகிறது.

ஒரு மாதத்துக்கு முன் புதுமனை தெருவில் சிமெண்ட்ரோடு போடப்பட்டது.
அதற்கு மேலாகதேங்காய் நார்களை பேரூர்ராட்சி ஊழியர்கள் போட்டார்கள்.
ஆனால் இதுவரைக்கும் அல்லாமல்இருக்கிறது.அங்கு உள்ள மக்கள் பேருர்ராட்சி ஊழியர்கள் வராத காரணத்தால் தெருவை சுத்தம் செய்யும் நிலை எற்பட்டுள்ளது.

நீங்கள் பார்க்கும் இந்த புகைப்படம் ரொம்ப முக்கயமானது ஏன்னன்றால்
நீங்கள் பார்க்கும் இடம்19 வது வார்டு உறுப்பினரின்விட்டுக்கு எதிராக உள்ள குப்பை.
எமது நிருபர் எடுக்கப்பட்ட குப்பையில் அதிகமாக துர்நாற்றம் விசிய இடம் .இதை கவனிக்காமல் இருக்கும் வார்டு உறுப்பினர்.
அதிரை கல்விச் சேவையகம் - Adirai Educational Mission (AEM)
அன்பின் அதிரைச் சொந்தங்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது வருங்காலச் சந்ததியினர் அனைவரையும் கல்வி அறிவு நிறையப் பெற்றவர்களாக ஆக்குவதற்கும், கல்விக் குறையினால் நம்மில் பெரும்பாலோர் வெளிநாடுகளில் மூன்றாந்தரப் பணியாளர்களாக வேலை செய்து குறைந்த சம்பளம் பெறுகின்ற அவல நிலையை மாற்றியமைப்பதற்காகவும் கல்வியில் கவனம் குவிக்கும் சில சகோதரர்கள் ஒன்றுகூடி, 'அதிரைக் கல்விச் சேவையகம் (Adirai Educational Mission)' என்ற பெயரில் ஓர் அமைப்பைக் கடந்த 16.12.2010 வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் துபையில் தொடங்கினர்.
அந்த அமர்வின் தீர்மானப்படி, அதிரையில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்துவது என்று முடிவு செய்து, கடந்த 14 & 15 ஜனவரி 2011இல் இருநாட்கள் நமதூரில் 'கல்வி விழிப்புணர்வு மாநாடு' நடத்தப்பட்டது. மாநாட்டைப் பற்றிய முழுச் செய்தியும் 'அதிரை நிருபர்' வலைத்தளத்தில் http://adirainirubar.blogspot.com/2011/01/blog-post_16.html பதியப்பட்டது.
மாநாட்டு நிகழ்ச்சிகள் காணொளியாக அதிரை நிருபரில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன. அந்நிகழ்வின் சகோ. CNM சலீம் அவர்களின் சிறப்புரை, தமிழன் தொலைக்காட்சியில் கடந்த 21.01,2011 அன்று ஒளிபரப்பப்பட்டது.
அந்த மாநாட்டின் தீர்மானங்கள் அதிரை நிருபர் வலைத்தளத்தில் http://adirainirubar.blogspot.com/2011/01/2011-14-15.html பதிவிடப்பட்டன. அவை தங்கள் பார்வைக்கு:
பொதுவாகக் கல்வியை உலகக் கல்வி, மார்க்கக் கல்வி என்று பிரிக்காமல், சமூகத்திற்குப் பயன்படும் எந்தக் கல்வியையும் கல்வியாகவே கருதி, அதன் முன்னேற்றத்திற்கும் விழிப்புணர்வுக்கும் தேவையான முயற்சிகளில் 'அதிரை எஜுகேஷனல் மிஷன்' (AEM) பாடுபடும்.
அதிரையின் எதிர்கால முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, இஸ்லாமியப் பிரச்சாரகர்கள் தாம் செய்யும் ஜுமுஆ பிரசங்கங்களில் கல்வியின் இன்றியமையாத் தன்மையையும் தேவையையும் பற்றி விரிவாகப் பேசவேண்டும் என்று மார்க்க அறிஞர்களையும் வெள்ளி மேடையின் பள்ளிப் போதகர்களையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
அதிரை மாணவ மாணவியரிடம் கல்வியின் பரிணாமங்கள் பலவற்றை அறிமுகம் செய்தும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அவர்களின் கவனத்தைத் திருப்பச் செய்தும், கல்வியின் நோக்கமே ஒழுக்கம்தான் எனும் அடிப்படையில், அவர்களிடம் ஒழுக்க மாண்புகளை ஓங்கச் செய்தும் 'அதிரை கல்விச் சேவையகம்' (AEM) பாடுபடும்.
மாணவர்களின் வீணான வேகத்தைக் குறைத்து, விவேகத்தைக் கூட்டி, மார்க்கம், சமுதாயம், மொழி, நாடு ஆகியவற்றின் மீது அவர்களுக்குள்ள கடமைகளை உணரச் செய்து, அவர்களைத் தூய்மை என்னும் அச்சில் வார்த்தெடுக்கும் வகையில், சமூக நல்லிணக்கமும் புரிந்துணர்வும் கொண்ட விவேகமுள்ளவர்களாக மாணவ மாணவியரை உருவாக்க, அவர்களுக்குப் பயிற்சியளிக்கும் எல்லா விதமான வழிகளிலும் AEM துணை செய்யும்.
சமூகம் மற்றும் நாடு எதிர்கொள்ளும் சவால்களை அறியச் செய்து, மாணவ மாணவியர்களின் உரிமைகளையும் கடமைகளையும் அறியச் செய்து, அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு நமது இந்த அமைப்பு பாடுபடும்.
கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் மாணவ மணிகளுக்கு முறையான வழிகாட்டல்களை அவ்வப்போது வழங்கி, அவர்களின் எதிர்கால வாழ்க்கையை வளமுள்ளதாக ஆக்கிக்கொள்ள அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும்.
ஒவ்வோர் ஆண்டும் இது போன்ற மாநாடுகளையும், கோடைக்காலப் பயிற்சி முகாம்களையும் நடத்தி, மாணவ மாணவியரைப் பக்குவப் படுத்தும்.
தேர்வுகளில் தோல்வியுற்ற (dropout) மாணவ மாணவியரை அடையாளம் கண்டு, கல்வி விற்பன்னர்களைக்கொண்டு அவர்களுக்கு ஊக்கப் பயிற்சிகளையும் பாடப் பயிற்சிகளையும் அளித்துக் கைதூக்கி விடும். இதற்காகவும், இன்னும் இது போன்ற கல்விச் சேவைகளுக்காகவும், Institute of Adirai Educational Mission எனும் பெயரில் கல்விப் பயிற்சியகம் ஒன்றை நிறுவ, இந்த எழுச்சி மாநாட்டைக் காரணமாக்கிச் சேவை புரியத் தொடங்கும்.
தொலைதூரக் கல்வி நிலையங்களில், வீட்டில் இருந்துகொண்டே படிக்கும் வசதியை, குறிப்பாகப் பெண்களுக்கு, இவ்வமைப்பு நமதூரில் ஏற்படுத்திக் கொடுக்கும்.
உடற்குறையுற்ற மாற்றுத் திறனாளிகளுக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அரசு மற்றும் தனியார் உதவிகள் தொடர்பான ஏற்பாடுகளில் உதவியாக இருந்து, அவர்களின் எதிர்கால வளவாழ்வுக்குத் துணை நிற்கும்.
படிப்பு நிறைவுற்ற மாணவர்களுக்கு, அரசு அல்லது தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளுக்குத் தம்மை ஆயத்தப் படுத்திக்கொள்ளும் வகையில், நுழைவுத் தேர்வுக்கும் நேர்காணலுக்குமான பயிற்சிகளை அளிக்கும்.
தகுதியும் திறமையும் வாய்ந்த மாணவ மாணவியரை அடையாளம் கண்டு, அவர்களை மருத்துவம், பொறியியல், சட்டம் சார்ந்த படிப்புகளில் தொடர ஆர்வமூட்டி, அதற்கான முன்னேற்பாடுகளில் முனைப்போடு செயல்படும்.
UPSC, (Union Public Service Commission) TNPSC (Tamil Nadu Public Service Commission) ஆகிய அரசுத் தேர்வுகளை எழுத மாணவர்களை ஊக்கப்படுத்தி, அதற்கான பயிற்சிகளையும் அளிக்கும்.
அதிரையின் எல்லாக் கல்வி நிலையங்களிலும் தொடக்க வகுப்புகளில் கணினியுடன் தொடர்புடைய பயிற்சியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகின்றது.
மாணவ மாணவியரின் ஆங்கில அறிவை விரிவாக்கும் விதத்தில் தனிப் பயிற்சிகளுக்கான வாய்ப்பு வசதிகளை நமது பயிற்சியகம் அமைத்துக் கொடுக்கும்.
ஊரின் ஒதுக்குப் புறத்தில் அமைந்துள்ள அரசு நூலகத்தை ஊரின் மையப் பகுதிக்கு மாற்ற நூலகத் துறையை இம்மாநாடு கேட்டுக்கொள்கின்றது; அல்லது, புதிதாக ஒரு கிளை நூலகத்தை ஊரின் மையப் பகுதியில் ஏற்படுத்தித் தர அரசின் நூலகத் துறையைக் கேட்டுக்கொள்கின்றது.
தற்போது மாணவர்களிடமிருந்து பெறும் கருத்துக் கணிப்புப் படிவங்களைக் கோப்புகளில் பாதுகாத்து, அவைகளை ஆராய்ந்து அவர்களின் படிப்பு முடிந்தவுடன், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க அவ்வத்துறைகளை நமது அமைப்பு வலியுறுத்திப் பாடுபடும்.
தொடர்ச்சியாக, மேற்கொண்டு நமது திட்டங்களைக் கலந்தாலோசித்துச் செயல்படுவதற்காக http://groups.google.com/group/adirai-edu-mission?hl=ta எனும் பெயரில் கூகுள் குழுமம் தொடங்கப்பட்டது. சகோதரர்கள் அனைவரின் கருத்துகளும் பரீசீலிக்கப்பட்டு 'அதிரைக் கல்விச் சேவையக'த்துக்கென்று நெறிமுறைகள் (பை-லா) வகுக்கப்பட்டன.
மேற்கொண்ட கலந்தாலோசனைகளில், முக்கியமாக 'உலகம் முழுதும் பரந்து வாழும் அதிரைச் சொந்தங்களை மேற்காணும் குழுமத்தில் இணைத்து, அவர்களின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெறவேண்டும்' என்ற முடிவு ஒருமனதாகப் பெறப்பட்டு இந்த பதிவின் வாயிலாக உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
இத்துடன் அல்லது இதையடுத்து, உங்களை Adirai Educational Missionஇல் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு அனுப்புவோம். தயை கூர்ந்து அழைப்பை ஏற்றுக் கொண்டு, தங்களுடைய உற்சாகமான கலந்தாலோசனைகளையும் வழிகாட்டல்களையும் கருத்துகளையும் அள்ளித் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
வாருங்கள், நம் அடுத்த தலைமுறையை அல்லாஹ்வின் உதவியால் முழுக்கப் படித்த தலைமுறையாக மாற்றுவோம்!
நன்றி,
வஸ்ஸலாம்.
அதிரை கல்விச் சேவையகம்
Adirai Educational Mission
email : adiraieducationalmission@gmail.com
Subscribe to:
Posts (Atom)
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.















