Thursday, July 12, 2012
Wednesday, July 11, 2012
Tuesday, July 10, 2012
Sunday, July 1, 2012
அதிரை த.மு.மு.க.வின் விளக்கம் - காணொளி !
கடந்த சில நாட்களாக அதிரையில் பரப்பரப்பாக பேசப்படும் செய்தி மாட்டுக்கறி வியாபாரத்துக்கு தடையா / தடையில்லையா? என்பதுதான். இது தொடர்பாக அதிரை பேரூராட்சி மன்றத் தலைவர் சகோதரர் S.H.அஸ்லம் அவர்கள் நமது சகோதர வலைத்தளங்களில் அவர்களின் நிலையை மக்கள் மத்தியில் விளக்கமாக எடுத்துரைத்தார், மேலும் அதிரை தமுமுக மீது சில குற்றச்சாட்டுகளையும் அதில் முன் வைத்தார்கள்.
இதன் தொடர்ச்சியாக, சமுதாய சேவை செய்கிறோம் என்று சொல்லுகிறீர்கள் ஆனால் பேரூராட்சி மன்றத் தலைவர் அவர்கள் அதிரை த.மு.மு.க. பற்றி பட்டியலிட்டு குற்றம் சாட்டியுள்ளார் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று பொதுமக்களின் வேண்டுகோளுடன் அதிரை தமுமுக நிர்வாகிகளை அனுகினோம். அதன் காணொளியினை இங்கே பதிந்துள்ளோம்.
சகோதரர் செய்யது பேட்டி
சகோதரர் அஹமது ஹாஜா பேட்டி
சகோதரர் சாகுல் ஹமீத் பேட்டி
பட்டுக்கோட்டை பஜக, இந்து முன்னனியினரிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் நகல்கள், மற்றும் அதிரை பேரூராட்சி கூட்ட அழைப்பு நகல்.
இந்த பேட்டி இயக்கங்கள் அல்லது தனிநபர் இவர்களில் யாரையும் உயர்த்தவோ தாழ்த்தவோ அல்ல, நம் சகோதரர்களுக்கிடையே புரிந்துணர்வு ஏற்படவேண்டும், பகைமை போக்கவேண்டும். சம்பத்தப்பட்ட இருசாராரும் தங்கள் தரப்பில் உள்ள தவறுகளை உணர்ந்து, ஒருவருக்கொருவர் பகை மறந்து ஒற்றுமையுடன் அவர்களின் சமுதாய சேவையை செய்யவேண்டும் என்பதே அதிரை மக்கள் அனைவரின் ஆவல். இதனை நிறைவேற்றுவார்களா ? பொருத்திருந்து பார்ப்போம் !.

நன்றி
-அதிரைநிருபர் குழு
Friday, June 29, 2012
இமாம் ஷாஃபி(ரஹ்)பள்ளியின் சர்ச்சைகுறிய பாடத்திட்டம்
இந்த லிங்கில் வாசிக...இமாம் ஷாஃபி(ரஹ்)பள்ளி பாடத்திட்டம்: அடுத்த பதிவிற்கான முன்பதிவு
யுரோ கால்பந்து : இரண்டாவது அரை இறுதியில் இத்தாலி வெற்றி!
நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் மூன்று முறை சாம்பியனான ஜெர்மனி அணி, மற்றொரு முன்னாள் சாம்பியனான இத்தாலியுடன் மோதியது.
விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் கசானோ கடத்தி கொடுத்த பந்தை தலையால் முட்டி பலோடெலி அருமையான கோல் அடித்தார். அந்த அதிர்ச்சியிலிருந்து ஜெர்மனி வீரர்கள் மீள்வதற்குள், ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் அவர்களுக்கு அடுத்த அதிர்சியையும் பலோடெலி அளித்தார். இம்முறை களத்தில் பம்பரம் போல புயல் வேகத்தில் செயல்பட்ட பலோடெலி, பந்தை வெகுதூரத்திலிருந்து தனி ஆளாகக் கடத்தி கொண்டுவந்து, கம்பீரமாக கோல் அடித்தார்.
முதல் பாதி ஆட்ட முடிவில் இத்தாலி 2 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் கோலடித்தாக வேண்டிய நெருக்கடியில் ஜெர்மனி மும்முரம் காட்டியது. ஆனால் ஜெர்மனியின் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
90-வது நிமிடத்தில் ஜெர்மனியின் ஓசில் தனக்கு கிடத்த பெனால்டி கிக் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். இருப்பினும் ஆட்டத்தின் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி இத்தாலி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதிப்போட்டியில் இத்தாலி அணி, ஸ்பெயினை எதிர்த்து விளையாடுகிறது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12:15 மணிக்கு ஆட்டம் துவங்குகிறது.
Thursday, June 28, 2012
யுரோ கால்பந்து : ஸ்பெயின் வெற்றி.
நேற்று நள்ளிரவு நடைப்பெற்ற முதலாவது அரை இறுதியாட்டத்தில் போர்ச்சுகல் அணி நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் அணியுடன் மோதியது.
பரபரப்பாக நடந்த இந்த போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணியினரும் ஆக்ரோஷமாக ஆடினர். குறிப்பாக போர்ச்சுகல் அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஆட்டத்தில் அனல் பறந்தது. சகவீரர்களான ஜோவோ பெரீரா, கோயண்ட்ராவோ, மௌடின்ஹோ ஆகியோர் ரொனால்டோவுக்கு சிறந்த முறையில் ஒத்துழைப்பு அளித்தனர்.
எனினும் ஸ்பெயின் வீரர்களும் சிறப்பாக ஆடியதால் போர்ச்சுகல் அணியினரால் எளிதாக கோல் அடிக்க இயலவில்லை. ஸ்பெயின் அணியின் கேப்டனும், கோல் கீப்பருமான இகர் காஸில்லஸ் சிறப்பாக செயல்பட்டு போர்ச்சுகல் வீரர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டை போட்டார். இதனால் முதல் பாதியின் முடிவில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியும் துவக்கம் முதலே விறுவிறுப்பாக நடந்தது. 90 நிமிடங்களின் முடிவிலும் கோல் எதுவும் அடிக்கப்படாததால், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதலாக வழங்கப்பட்ட 30 நிமிடங்களிலும் இரு அணியினராலும் கோல் அடிக்க இயலவில்லை. இறுதியில் போட்டியின் முடிவை நிர்ணையிப்பதற்காக பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது. பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தி ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இன்று நடைபெறும் (28/06/2012) இரண்டாவது அரை இறுதியில்
ஜெர்மனி Vs இத்தலி அணிகள் விளையாடுகின்றன. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15 மணிக்கு ஆட்டம் துவங்கும். இன்றைய ஆட்டத்திலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது உண்மை..
Wednesday, June 27, 2012
யூரோ கால்பந்து போட்டி : முதலாவது அரையிறுதியில் ஸ்பெயின் - போர்ச்சுகல் பலபரீட்சை!
இன்று நடைபெறும் (27/06/2012) முதலாவது அரையிறுதியில் போர்ச்சுகல் Vs ஸ்பெயின் அணிகள் மோதல்.
இந்திய நேரம் : நள்ளிரவு 12:15 மணி
நாளை நடைபெறும் (28/06/2012) இரண்டாவது அரை இறுதியில் ஜெர்மனி Vs இத்தலி அணிகள் மோதல்.
இந்திய நேரம் : நள்ளிரவு 12:15 மணி
ஜூலை 1ம் தேதி நள்ளிரவு 12:15 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெறும்.
சென்னை : ஜெமினி மேம்பாலத்தில் இருந்து மாநகரப் பேருந்து கவிழ்ந்து விபத்து
சென்னை : மேம்பாலத்தில் இருந்து மாநகரப் பேருந்து கவிழ்ந்து விபத்து
சென்னை, ஜூன் 27 : சென்னை அண்ணா மேம்பாலத்தில் பாரிமுனையில் இருந்து வடபழனிக்கு சென்று கொண்டிருந்த 17M மாநகரப் பேருந்து ஒன்று கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 35க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை உள்ளிட்ட அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 15 பேர் ராயப்பேட்டை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 5 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் மருத்துவமனையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக மருத்துவர்கள் மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டுநர் பிரசாத், நடத்துநர் ஹேமச்சந்திரன் ஆகியோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களில் வடபழனியைச் சேர்ந்த முருகன், ராணி, பல்லவன், பானுப்ரியா உள்ளிட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அண்ணா மேம்பாலத்தின் அருகே உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தின் அருகே செல்லும் சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறை ஆணையர் திரிபாதி சம்பவ இடத்திற்கு வந்து நேரில் ஆய்வு நடத்தி வருகிறார். கவிழ்ந்துள்ள பேருந்தை நிமிர்த்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் வளர்மதி சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். பாண்டிபஜார் காவல்துறையினர் இவ்விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்து கவிழ்ந்து விழுந்ததும், பேருந்தில் இருந்து புகை கிளம்பியதும், பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு போன் செய்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு வாகனம் தண்ணீர் அடித்து புகையை நிறுத்தியுள்ளனர். பேருந்துக்குள் சிக்கிக் கொண்ட பயணிகளை, பொதுமக்கள் பலரும் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து வெளியே மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இன்னும் ஒரு மாதத்தில் லண்டன் ஒலிம்பிக் போட்டி
ஒலிம்பிக் போட்டிகள் துவங்க ஒரு மாதமே உள்ள நிலையில், லண்டன் ஒலிம்பிக் மைதானம் முழுவீச்சில் தயாராகி வருகிறது.
தற்காலிகமாக கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஒலிம்பிக் கோலாகலத்தை எதிர்கொள்ள லண்டன் மைதானம் முற்றிலும் தயார்நிலையில் உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இம்மைதானத்தில் ஒரே நேரத்தில் 80 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 27 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 17 நாட்கள் நடைபெற உள்ளது.
Tuesday, June 26, 2012
காலை உணவின் அவசியம்!
எடை குறைக்க வேண்டும் என்று ஆசை படுபவர்கள் காலையில் உணவை சாப்பிட மாட்டார்கள். ஆனால் அப்படி இருப்பது ஆரோக்கியத்தை பாதிக்கும். ஏனெனில் இரவில் உண்ட பிறகு, நீண்ட நேர இடைவேளைக்குப் பின் காலை நேரத்தில் உணவு உண்போம். ஏனெனில் அப்போது உண்டால் தான் அந்த நாளை தொடங்குவதற்கு ஏற்ற சக்தியானது கிடைக்கும். இத்தகைய சக்தியை காலை உணவில் மட்டுமே கிடைக்கும். மதியம் கூட உண்ணாமல் இருந்து விடலாம், ஆனால் காலையில் உண்ணாமல் இருந்தால் எந்த வேலையையும் செய்ய முடியாது. அப்படி உண்ணாமல் இருப்பவர்கள், இதை படித்தப்பிறகாவது உண்ணும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள்.
காலையில் உண்ணாமல் இருந்தால் என்ன விளைவுகள் ஏற்படும்?
1. காலையில் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கும். அப்போது உடலுக்கு வேண்டிய சக்தியை காலை உணவே தருகிறது. காலை முதல் இரவு வரை நன்கு வேலை செய்ய உடலுக்கு சக்கியானது தேவைப்படுகிறது. அதற்கு காலை உணவே சிறந்தது.
2. சிலர் எடையை குறைக்க காலை உணவை மட்டும் தவிர்த்து, மற்ற நேரத்தில் கொஞ்சம் உண்பர். ஆனால் உண்மையில் காலையில் உண்ணாமல் இருந்து மதியம் குறைவாக உண்ண முடியாது, அப்போது வயிறு நிறைய தான் உண்பர். ஆனால் அது அவர்களுக்குத் தெரியாது. மேலும் அத்தகைய உணவை உண்ணும் போது ஆரோக்கியமான உணவைக் கூட உண்ணமாட்டார்கள். ஆகவே இதனால் எடை தான் கூடுமே தவிர எடை குறையாது.
3. மேலும் உணவை உண்ணாமல் இருந்தால் முதலில் உடலில் சுரக்கும் இன்சுலின் அளவு அதிகரித்து, பின் கலோரியின் அளவு அதிகரிக்கும். மேலும் இது உடலில் மெட்டபாலிக் டிஸ்ஆடரை ஏற்படுத்தும். இதனால் எடை தான் அதிகரிக்கும்.
4. வேலைக்கு செல்பவர்களும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் காலை உணவை உண்ணாமல் சென்றால் அவர்களால் வேலையில் கவனத்தை செலுத்த முடியாது. ஆகவே காலை உணவு அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியைத் தந்து கவனத்தை அதிகப்படுத்துகிறது.
5. காலை உணவை உண்டால், உடலில் இருக்கும் தேவையில்லாத கலோரியானது விரைவில் கரைத்து விடும்.
6. மேலும் வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்கள் எப்போதும் நீங்கள் நடந்து கொள்வதையே பழகுவார்கள். இப்படி நீங்கள் சாப்பிடாமல் இருந்தால் அவர்களும் போக போக சாப்பிடாமல் தான் இருப்பார்கள். பின் அவர்கள் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும். ஆகவே அவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்க நினைப்பவர்கள், சரியான நேரத்தில் சாப்பிடுங்கள், அவர்களும் அதையே பின்பற்றுவார்கள்.
7. காலையில் உண்ணும் போது வேண்டுமென்றால் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளான தானியங்கள், பழங்கள், பால் போன்றவற்றை உண்டால் உடலும் ஆரோக்கியமாக இருப்பதோடு எடையும் கூடாமல் அளவாக இருக்கும்.
8. வேலைக்குச் சென்று சிடுசிடுவென டென்சனாக இருக்கிறீர்களா? அகற்கு காரணம் வேலைப்பளு அல்ல. அதற்கு காரணம் காலை உணவை உண்ணாதது ஆகும்.
எனவே காலை உணவை சாப்பிடுங்க!
அன்றைய தினத்தை ஆரோக்கியமா ஆரம்பிங்க!!
Saturday, June 2, 2012
டாக்டர் மகன் சீக்கு, வாத்தியார் மகன் மக்கு பழ(ல) மொழிக்கு பொருந்தும்...

என்னப்பா ரொம்ப டையடா இருக்கு, வெளியிலே பிரியா கொஞ்சம் போய்ட்டு வரலாமுன்னு கிளிம்பி வந்தால் உட்காரும் இடத்தில் எல்லாம் பிரச்சனையாதான் பேசிக்கொண்டேயிருக்கிறாங்க. இந்த வார சூடான பிரச்சனைகள் நம்ம தவ்ஹீத் வாதிகளிடன் தன்மைகளைபப் பற்றிதான் அப்படியிப்படி பேசிக்கொண்டிருக்காங்கோ....
என்னென்ன பேசிராங்கன்னு கொஞ்சம் தெளிவா கேட்போம்..
என்னடா ஆளுக்காளு வர்ராங்க நாங்க தவ்ஹீத் அமைப்புன்னு சொல்லாறங்க ஆனா அவங்க செய்ற தப்ப சொன்னா மட்டும் ஒத்துகிடாமே விவாத அரங்கமே வைத்து தன்னை நியாயப்படுத்த முயற்சிக்கிறாங்க இதான் இவங்க கொள்கையா? மெளுலூது ஓதக்கூடாத செயல் என்பதை மக்கள் பல பேர் உணர்ந்து மெளலூது ஒதாத நிலைகள் மாறி வருவதை பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் நாங்கள் ஒழிப்போம் நாங்கள் தான் என்ற வீம்பைக் கொண்டு திரும்பவும் தவறை தெளிவாக உணர்ந்தவங்களையயல்லாம் தங்களுடைய வீம்பான வார்த்தைகளாலும், தங்களுடைய சுயநலத்திற்காகவும் எதை எந்த நேரத்தில் எப்படி பேசுவது என்று தெரியாமல் பேசி, எதிலாவது தாம் அல்லது வேறு யாரையாவது சிக்க வைப்பது போன்ற யோசினைகளை மட்டும் சரியாக செய்து வருகின்றார்கள். இப்பவெல்லாம் ஒவ்வொரு அமைப்பிலும் இந்த சேவைகள் செய்தால் இத்தனை பாய்ண்ட்ஸாம். பாய்ண்ட்ஸ் கொண்டே அவர்களின் பதிவிகள் உயர்த்தப்படுதாம். இப்ப நடந்த ஹந்துVரி பிரச்சனைகளில் கூடு செய்தவர் கூட தவ்ஹீத் கொள்கையை கூறும் கொள்கைவாதிகளின் அங்கத்தினராம். பெயருக்காக செய்ய துடிக்கும் செயல்கள்தான் அதிகம் அதிகம் இன்று. ஆக இந்த சேவையின் எண்ணங்களை அல்லாஹ் மட்டுமே அறிவான்.
தவ்ஹீத்வாதிகளுக்கு அன்பான கவனத்திற்கு : நமது TNTJபள்ளியில் தொழுகைகள் சிறப்பாக நடந்துவருகிறது. ஆனால் இந்த பள்ளிவாசலில் வைக்கப்படும் தொழுகை நேரங்களில் ஒலிப்பெருக்கி அதிக சத்தத்துடன் தொழுகை நடைபெறுவதால் மிக நெருக்கத்தில் இருக்கும் மதரஸா பள்ளிவாசலில் நடைபெறும் தொழுçக்கு பெரும் இடையூறாக இருக்கிறது. இதனை சென்ற நோன்பு நேரத்தில் பல முறை அந்த நிர்வாகத்தில் உள்ள உறுப்பினர்களிடையே கூறியும் கூட இந்த இடையூறுகள் இருந்துக்கொண்டேதான் இருக்கிறது. TNTJ பள்ளியில் தொழுகைகள் சிறப்பாக நடக்கிறது அல்ஹம்துலில்லாஹ். ஆனால் மிக நெருக்கத்தில் இருக்கும் பள்ளியில் தொழுபவர்களுக்கு இடையூறில்லாமல் இருக்க முயற்சிக்கலாமே.
நன்மையான விசயத்தை ஏவி நாம் தவ்ஹீத்வாதிகள் என்பதை அடிக்கடி நினைவுப்படுத்திக்கொள்வோமாக!
Friday, June 1, 2012
பான் கார்டின் முக்கியத்துவம்

நம்மில் பலரிடமும் பான் கார்ட் உள்ளது (Permanent Account Number-PAN). ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் தெரிவதில்லை. பான் கார்ட் பற்றிய சில விளக்கங்கள் இதோ...
பான் கார்ட் என்பது 10 இலக்க எழுத்து-எண் கொண்ட அட்டை. இதை வழங்குவது வருமான வரித்துறை. இந்த அட்டை கோரி விண்ணப்பித்து இதைப் பெறலாம். சிலருக்கு வருமான வரித்துறை தானாகவே இந்த அட்டையை வழங்கும்.
ஒரு தனிப்பட்ட நபர் வரி செலுத்தினாரா, வரிப் பிடித்தம் நடந்ததா, அவரது வங்கிக் கணக்கில் நடந்த பரிமாற்றம் உள்ளிட்ட விவரங்களை வருமான வரித்துறை பெற பான் கார்ட் உதவுகிறது.
பான் கார்டில் உள்ள எண்-எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு குறியீடாகும். அதைத் தெரிந்து கொள்வோம். உதாரணத்துக்கு பான் கார்ட் எண் AFZPK7190K என்று வைத்துக் கொள்வோம்.
முதல் 3 எழுத்துக்கள் வரிசை எண்களாகும். 4வது எழுத்து தனிப்பட்ட நபரின் கார்டா அல்லது ஒரு தொழில் நிறுவனத்தின் கார்டா என்பதை குறிக்கிறது.
“P” என்றால் அது தனிப்பட்ட நபருடையது. “F” என்றால் Firm, “C” என்றால் Company, “T” என்றால் டிரஸ்ட் (அறக்கட்டளையுடையது) என்று பொருள்.
5வது எழுத்து பான் அட்டை வைத்திருப்பவரின் கடைசி பெயரின் முதல் எழுத்தாகும்.
அடுத்து வரும் எண்கள் வரிசை எண்களாகும். இது 0001ல் ஆரம்பித்து 9999 வரை செல்லும். கடைசி எழுத்தும் வரிசை எண் தொடர்புடையது தான்.
பான் கார்ட் வைத்திருப்பது கட்டாயமா?
ஆமாம். பான் கார்ட் மிக மிக அவசியமானதே. வங்கியில் பணப் பரிமாற்றத்துக்கும், வருமான வரித்துறைக்கு நமது கணக்குகளை சமர்பிக்கவும் இது கட்டாயமாகும்.
எப்படி இதைப் பெறுவது?
வருமான வரித்துறையின் Form 49 விண்ணப்பத்தில் இதைக் கோரி விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்தை www.incometaxindia.gov.in, www.utiisl.co.in or tin-nsdl.com ஆகிய இணையத்தளங்களின் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
மேலும் வருமான வரித்துறையின் ஐடி பான் சர்வீசஸ் மையத்திலும், டிஐஎன் மையங்களிலும் இதைப் பெறலாம்.
உங்களிடம் பான் கார்ட் இருந்து அது குறித்த மேலும் விவரங்களைப் பெற
https://incometaxindiaefiling.gov.in/portal/knowpan.do என்ற இணையத்தளத்தை நாடலாம்.
இந்திய குடிமகன்கள் தான் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு கீழ்கண்ட அடையாள சான்றிதழ்களில் சில அவசியம்.
1. பள்ளி டிசி
2. பிளஸ் டூ சான்றிதழ்
3. கல்லூரி் சான்றிதழ்
4. வங்கிக் கணக்கு விவரம்
5. கிரடிட் கார்ட் ஸ்டேட்மென்ட்
6. வாட்டர் பில்
7. ரேசன் கார்ட்
8. வீட்டு வரி ரசீது
9. பாஸ்போர்ட்
10. வாக்காளர் அட்டை
11. ஓட்டுனர் உரிமம்
12. எம்பி அல்லது எம்எல்ஏ அல்லது கவுன்சிலர் அல்லது கெஜட்டட் அதிகாரியிடம் பெறப்பட்ட Certificate of identity கடிதம்
அதே போல விலாசம் தொடர்பாக கீழ்கண்ட சான்றிதழ்களில் சிலவும் அவசியம்.
1. மின் கட்டண ரசீது
2. தொலைபேசி கட்டண ரசீது
3. வங்கிக் கணக்கு விவரம்
4. வீட்டு வாடகை ரசீது
5. பணியாற்றும் நிறுவனத்திடம் பெறும் கடிதம்
6. பாஸ்போர்ட்
7. வாக்காளர் அடையாள அட்டை
8. வீட்டு வரி ரசீது
9. ஓட்டுனர் உரிமம்
10. ரேசன் கார்டு
11. எம்பி அல்லது எம்எல்ஏ அல்லது கவுன்சிலர் அல்லது கெஜட்டட் அதிகாரியிடம் பெறப்பட்ட Certificate of identity கடிதம்
விண்ணப்பிப்பவர் 18 வயதுக்குக் குறைவான மைனராக இருந்தால், அவரது பெற்றோர் அல்லது கார்டியனின் சான்றிதழ்களே போதுமானவை.

Monday, May 28, 2012
டெங்குவை பரப்பும் அதிபயங்கர ஏடிஸ் கொசு - தப்பிப்பது எப்படி ?
டெங்குவை பரப்பும் அதிபயங்கர ஏடிஸ் கொசு - தப்பிப்பது எப்படி ?
FILE
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட மக்களை அதிரவைக்கும் அதிபயங்கரமாக கொசு ஏடிஸ் கொசு. இந்த கொசு எப்படி பிறக்கிறது? இது கடித்தால் என்னவாகும்? டெங்கு ஏற்படுவதற்கான அறிகுறி என்ன? வராமல் தடுப்பது எப்படி? வந்தால் தடுப்பது எப்படி? என்பது குறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் செந்தில்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் அளிக்கும் தடுப்பு நடவடிக்கைகள்: வழக்கமாக கொசுக்கள் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் இருந்து உற்பத்தி ஆகும். ஆனால் ஏடிஸ் கொசு தேங்கி கிடக்கும் நல்ல தண்ணீரில் இருந்து உற்பத்தியாகும் ஒரு பூச்சி வகையை சேர்ந்தது.
தேங்காய் சிரட்டைகள், தெருவில் வீசப்பட்ட பிளாஸ்டிக் கப்கள், பழைய பாத்திரங்கள், ஆட்டு உரல்கள் போன்றவற்றில் தேங்கி இருக்கும் மழை நீர் மூலம் இந்த கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. இவை பெரும்பாலும் வீட்டிற்குள்ளும் வீட்டை சுற்றியும் அதிகமாக வலம் வரும்.
இந்த வகை கொசுக்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களையோ, குழந்தைகளையோ கடித்தால் உடனடியாக அவர்களை டெங்கு காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது. பெரும்பாலும் இந்த கொசுக்கள் குழந்தைகளை கடிக்கும்போது எளிதில் நோய் தாக்குதலுக்கு ஆளாவர்.
ஒருவரை ஏடிஸ் கொசு கடித்தால் முதலில் காய்ச்சல் வரும். உடல் வலியுடன் எலும்புகளிலும் வலி ஏற்படும். இப்படி ஏதாவது உடல் வலிகள் தொடங்கும்பட்சத்தில் அது டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி என்று அர்த்தம். உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொண்டு டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபடலாம்.
இந்த நோய் எளிதில் குணப்படுத்த கூடிய நோய். அதே நேரத்தில் போதிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் காய்ச்சல் தொடர்ந்து நீடித்தால் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நோய் முற்றிய நிலையில் இதே கிருமிகள் ரத்தத்தில் உள்ள பிளட்லெட்களை சாப்பிடும். இதனால் மனித உடலில் உள்ள ரத்தம் உரையும். வாய், மூக்கு என உடலின் பல்வேறு பகுதிகளில் ரத்த கசிவு ஏற்படும். இதனால் விலைமதிக்க முடியாத உயிர் இழப்பும் ஏற்படும்.
அதனால் இந்த நோய்க்கான அறிகுறி தென்பட்டவுடன் உரிய சிகிச்சை மேற்கொண்டு உடல்நலத்தை காத்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் சுற்றுப்புறத்தை மழைநீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் மூலமாகவும் வீட்டிற்குள் கொசுவராமல் தடுப்பாக ஜன்னலில் கொசுவலைகளை பயன்படுத்துவது, கொசு ஒழிப்பான்கள் பயன்படுத்துவ தன் மூலமும் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுவை விரட்டி நோய் வராமல் தடுக்கலாம் என்று டாக்டர் செந்தில்குமார் கூறியுள்ளார்.

Saturday, May 12, 2012
பள்ளி செல்வோம் – பள்ளி செல்ல உதவுவோம்
ஓதுவீராக! உங்களை படைத்த இறைவனின் திருப்பெயரைக்கொண்டு என்று ஆரம்பமான வேத வெளிப்பாட்டின் முதல் வரிகள் தொடங்கி, குர்ஆன் மற்றும் நபி மொழிகளில் கல்வி, சிந்தனை, அறிவியல் தொடர்பாக அவற்றை வழியுறுத்தும் ஏராளமான குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் உள்ளன. இதனடிப்படையில் இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட மக்கள், மனித குலத்திற்கு பயன்தரும் அளப்பரிய கண்டுபிடிப்புகளை பல்வேறு துறைகளில் வெளிக்கொணர்ந்தனர்.
இந்திய முஸ்லிம்களின் கல்வி நிலை
ஒன்றுபட்ட இந்தியாவில் கல்வி பிராமனர்களின் தனிச்சொத்தாக கருதப்பட்ட காலகட்டத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்களே இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் இந்து-முஸ்லிம், ஆண்/பெண், ஏழை/பணக்காரன் என்ற பாரபட்சமின்றி கல்வி கற்கும் உரிமையை வழங்கினர்.
இந்தியாவில் தற்போது
22- மத்திய பல்கலைகழகம், 220-மாநில பல்கலைகழகம், 115-நிகர்நிலை பல்கலைகழம், 17-தேசிய கல்வி நிறுவனங்கள், 83% அரசு மற்றும் 17% தனியார் பள்ளி கூடங்கள் இயங்கி வருகின்றன.
இந்தியாவில் 16 சதவிதத்தினராக இருக்கும் முஸ்லிம்கள் தென்இந்தியாவைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் தலித் மற்றும் பழங்குடியினரைவிட மிகவும் மோசமாக இருப்பதாக சச்சார் கமிட்டியின் அறிக்கை படம் பிடித்துக் காட்டுகிறது.
மேலும், முஸ்லிம்களில் 66 சதவீத்தினர் இன்னும் ஆரம்ப கல்வி பெறாமலேயே இருப்பதாக தெரிவிக்கிறது. இது தவிர்த்து ஹரியானாவில் 98 சதவீதமும், அஸ்ஸாமில் 74 சதவீதமும், ம.பி. 65 சதவீதமான முஸ்லிம் பெண்கள் கல்வி பெறாமலேயே இருக்கின்றனர்.
(National Family Health Survey - NFHS)
கிராமப் புறங்களில் வாழும் 50 சதவீத முஸ்லிம்களுக்கு கல்வி எட்டாக்கணியாகவே உள்ளது.
இதற்கான காரணங்கள்:
· ஏழ்மை
· அறியாமை
· குழந்தை தொழில்
· அரசின் மெத்தனப் போக்கு
· முஸ்லிம் விரோதப் போக்கு
முஸ்லிம்களின் நிலை
· குடிசை மற்றும் சேரிப்புறங்களில் வாழ்க்கை
· ரிக்ஷா ஒட்டுதல்
· 70 சதவீத முஸ்லிம்கள் வருமை கோட்டுக் கீழ்
· மாத வருமானம் தேசிய வருமான உச்சவரம்பைவிட மிக குறைவு
· தலித்களை விட பின்தங்கிய நிலை
- National council of Applied Economic Research (NCAER) 1999
முஸ்லிம் சிறுவர்கள் தங்களது குடும்ப வருமானத்திற்காக ரெஸ்டாரண்ட், மொகானிக், தொழிற்சாலைகள் மற்றும் ஷூ பாலிஸ் போன்ற வேலைகள் செய்து மாதத்திற்கு வெறும் ரூ.150 மட்டுமே ஈட்டுகின்ற மோசமான நிலை.
· 33 சதவீத முஸ்லிம் கிராமங்களில் ஆரம்ப கல்வி கூடங்களும், 40 சதவீத முஸ்லிம் கிராமங்களில் ஆரம்ப சுகாதார கூடங்களும் இல்லாத பரிதாப நிலை
· மேற்குவங்கத்திலுள்ள, முர்ஸிதாபாத் மாவட்டம் 70 சதவீதம் (இந்தியாவிலேயே அதிக) முஸ்லிம்கள் வாழும் மாவட்டமாக இருந்த போதிலும், அதுவே இந்தியாவிலேயே மிகவும் பின்தங்கிய ஏழ்மை நிலையிலுள்ள மாவட்டமாகவும் இருக்கிறது.
முஸ்லிம்களின் கல்வி நிலை:
இந்நிலையை சரிசெய்யும் முயற்சியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த 3 வருடங்களாக பள்ளி செல்வோம் என்ற கோஷத்தை முன்வைத்து தென் மாநிலங்களில் பல்வேறு பிரச்சாரம் மற்றும் உதவிகளைச் செய்து வருகிறது. அதிலொரு பகுதியாக கடந்த ஜனவரி மாதம் ரூ.300/- மதிப்பிலான School Kit கள் மேற்கு வங்கத்தில் 10,000 மும், மணிப்பூரில் 1000 மும் வழங்கப்பட்டது.
இந்த கல்வியாண்டில் ஆந்திரா, ம.பி. உ.பி. டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், பீகார் ஆகிய ஏழு மாநிலங்களில் சுமார் ஒரு லட்சம் குழந்தைகளை 1-5 வரையிலான வகுப்புகளில் சேர்த்துவிட்டு அவர்களுக்கு தேவையான School Kit வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் திட்ட மதிப்பு ரூ.3 கோடியாகும்.
இந்த செயல்திட்டத்தை வீரியத்துடன் செயல்படுத்தும் முகமாக:
· கல்வி வழிகாட்டி முகாம்கள்
· வீட்டுக்கு வீடு சென்று பிரச்சாரம்
· தத்தெடுத்தல் மூலம் மாணவனின் முழு கல்விச் செலவையும் ஏற்றல்
· பொது கூட்டங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்
· படிப்பை பாதியில் நிறுத்தியவர்களை மறுபடியும் சேர்பித்தல்
· பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கு கல்வி கற்க வேண்டி ஆர்வ மூட்டுதல்
· ஒரு நபர் (ஆசிரியர்) பள்ளி கூடங்கள் அமைத்தல்
· Sarva Shiksha Gram Project - மூலம் முழு கிராமத்தையும் தத்தெடுத்து 100 சதவீத கல்வியை உறுதிசெய்வது
· உதவித் தொகை வழங்குதல்
போன்ற எண்ணற்ற முயற்சிகளின் மூலம் நம் சமூகத்தை கல்வி ரீதியாக சக்திபடுத்த திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
பூமியிலுள்ளவர்களுக்கு கருணை காட்டுங்கள் மேலுள்ளவன் உங்களுக்கு கருணை காட்டுவான். – அபூதாவூது 4941
உங்களால் முடிந்த உதவிகளை செய்து மரணத்திற்குப்பின் பயன்தரும் நிலையான நன்மையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
- தகவல் தொகுப்பு: முஅ ஸாலிஹ்
Thursday, May 10, 2012
செல்பேசி பிரியர்கள் கவனத்திற்கு....
உங்களில் யாருக்கு நோமோபோபியா ?
உலகத்திலேயே மிகப்பெரிய பயம் என்று நீங்கள் எதை நினைக்கிறீர்கள்..?
ரொம்ப மூளையை கசக்காம தொடர்ந்து படிங்க...
உங்க போன் உங்க கிட்ட இல்லைனா உங்க ரியாக்ஷன் எப்படி இருக்கும்?
ஒரு நிமிடம் யோசித்து பாருங்க...
ஒரு பதற்றம், பயம், மன உளைச்சல் ...
இன்னும் சொல்லனும்னா...
ரொம்ப மூளையை கசக்காம தொடர்ந்து படிங்க...
உங்க போன் உங்க கிட்ட இல்லைனா உங்க ரியாக்ஷன் எப்படி இருக்கும்?
ஒரு நிமிடம் யோசித்து பாருங்க...
ஒரு பதற்றம், பயம், மன உளைச்சல் ...
இன்னும் சொல்லனும்னா...
அய்யயோ முக்கியமான கால் வருமே, நிறைய விஐபி காண்டாக்ட்ஸ் எல்லாம் இருக்கேன்னு நீங்கள்
புலம்பூவீங்களா... கவலைப்படுவீங்களா...
இதுதாங்க உலகிலேயே மிகப்பெரிய பயம். இந்த பயத்தோடு நிறைய பேர் இருக்கிறார்களாம்.
இதை நாங்க சொல்லலைங்க... இங்கிலாந்தில் நடத்திய ஆய்வு ஒன்று இப்படி ஒரு தகவலை நமக்கு தருகிறது.
இந்த மாதிரி ஃபோன் காணாமல் போனால் பயப்படறதுக்கு பெயர் நோமோபோபியா.
அதாவது நோ மொபைல் போன் போபியா.
இந்த வியாதி உங்களுக்கு இருக்கிறதா என்று சந்தேகமிருந்தால் கீழ்காணும் சில அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா என்று சோதித்து பார்த்துக்கொள்ளுங்கள்.
* எப்பவுமே போன் சுவிட்ச் ஆப் செய்ய முடியாமை.

* மிஸ்டு கால், ஈமெயில், எஸ்.எம்.எஸ்சை அடிக்கடி பார்த்தல்
* போன் பேட்டரியை எப்பவும் முழுமையாக வைத்திருத்தல்
* பாத் ரூம் போகும் போது கூட கூடவே போனை கொண்டு செல்லுதல்
இந்த நோமோபோபியா நிறைய பேருக்கு உள்ளதாக ஆய்வு கூறுகிறது.
தற்போது இங்கிலாந்தில் 1000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 66 விழுக்காட்டினரிடம் இந்த நோமோபோபியா
இருப்பதாக அறிய முடிகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு முன் இதேப்போன்ற ஆய்வை நடத்தியபோது, 53 விழுக்காட்டினர் போன் தொலைந்துபோனால் அச்சமடைய கூடிய வியாதி இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது
நான்கு ஆண்டுகளுக்கு முன் இதேப்போன்ற ஆய்வை நடத்தியபோது, 53 விழுக்காட்டினர் போன் தொலைந்துபோனால் அச்சமடைய கூடிய வியாதி இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது
அதுவும் 18-லிருந்து 24 வயது வரை உள்ளவர்கள் தான் மொபைல் போனுக்கு அதிகம் அடிமையானவர்களாக உள்ளனர். இவர்களில் 77 விழுக்காட்டினர் சில நிமிடம் கூட போனை பிரிந்து இருக்க முடியவில்லையாம்.
இதேப்போன்று, 25-இருந்து 34 வயது வரை உள்ளவர்களில் 68 விழுக்காட்டினர் உள்ளதாக ஆய்வு கூறுகிறது.
இன்னொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், 75 விழுக்காட்டினர் பாத்ரூமில் செல்போன் பயன்படுத்துகிறார்களாம். கேட்டால், மாடர்ன் செய்தித்தாள் என்று சொல்கிறார்களாம்.
இதேப்போன்று, சராசரியாக ஒரு நாளைக்கு 34 முறை தங்கள் போனை எடுத்து சும்மாவே பார்த்து வைக்கின்றனராம்.
இதுகுறித்து ஆய்வு நடத்திய செகியூர் என்வாய் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான அன்டி கெம்ஷல்

தெரிவிக்கும் போது, நாங்கள் 2008 ஆய்வு செய்தபோது கிடைத்த தகவல்கள் தற்போது அப்படி தலைகீழாக
உள்ளதாக கூறியுள்ளார். அதாவது, அன்று ஆண்கள் அதிகமாக நோமோபோபொயாவால்
பாதிக்கப்பட்டிருந்தனர் இன்று பெண்கள் அதிகாக உள்ளனர் என்றார்.
தனது மெசேஜ்களை, பார்ட்னர் பார்த்துவிட்டால் அப்செட் ஆவோர் எண்ணிக்கை 49 விழுக்காடு .
தனது மெசேஜ்களை, பார்ட்னர் பார்த்துவிட்டால் அப்செட் ஆவோர் எண்ணிக்கை 49 விழுக்காடு .
அதேசமயம், தனது போன் பாதுகாப்பு பற்றி பெரும்பாலானோர் கவலை படுவது இல்லையாம். வெறும் 46 விழுக்காட்டினர் மட்டுமே ரகசிய லாக் கோட் பாயன்படுத்துவதாகவும், 10 விழுக்காட்டினர் தனது தகவல்களை குறியீட்டு சொற்கள் மூலம் மறைத்து அனுப்புவதாக ஆய்வு கூறுகிறது.
இது இங்கிலாந்து நிலவரம்ங்க...
நம்ம ஊரில் இதுப்போன்ற வியாதி உள்ளவர்கள் எத்தனைப்பேரோ....?
இது இங்கிலாந்து நிலவரம்ங்க...
நம்ம ஊரில் இதுப்போன்ற வியாதி உள்ளவர்கள் எத்தனைப்பேரோ....?
Wednesday, May 9, 2012
முஸ்லிம் லீக் தலைவர் பேசியது தவறா? சலசலப்பில் அதிரை!
அதிராம்பட்டினத்தில் நேற்று 9/05/12 செய்வாய் கிழமை மேலத்தெருவில் இருக்கும், சேக் நஸ்ருதீன் தர்ஹா வளாகத்தில் மீலாத் விழாவும் முகைதீன் ஆண்டகை(?!) விழாவும் நடை பெற்றது.
விழாவில், அதிரையின் எல்லா முஹல்லாவை சேர்ந்தவர்களை அழைத்திருந்தனர்.அனைத்து முஹல்லா கூட்டமைப்பை சேர்ந்தவர்களையும் அழைத்திருந்தனர். அத்துடன் பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச்.அஸ்ஸலம் அவர்களையும் அழைத்திருந்தனர்; அவரும் சென்றார் மேடையில் வீற்றிருந்தார்.
அதிரை நகர முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் கே.கே.ஹாஜா அவர்கள்தான் இவ்விழாவின் தலைவர்! வரவேற்புரை ஆற்றினார். அப்போது, "பேரூராட்சி தலைவர் பதவி என்பது பெரும் பதவியெல்லாம் இல்லை;அதைவிடவும், அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் பதவிதான் உயர்ந்தது" என்று பேசியதாக கூறப்படுகிறது.
அங்கே மேடையில் வீற்றிருந்த அதிரை பேருராட்சித் தலைவர் எஸ்.ஹெச்.அஸ்லம் அவர்கள் தனது அதிர்ப்தியை தெரிவித்தார்.
விழாவில் கலந்துக்கொண்டவர்களும் தங்களது அதிர்ப்தியை காட்டினர்.
விழாவில், சற்று சலசலப்பு ஏற்பட்டது!
கே.கே.ஹாஜா அவர்கள் பேசிய இப்பேச்சு அதிரை முழுவதும் பரவியது. "தவறானது,தேவையற்றது" என்கிறார்கள் பொது மக்கள்!
"பேரூராட்சி தலைவர் பதவி என்பது பெரும் பதவியெல்லாம் இல்லை" என்றால், முஸ்லிம் லீக் சார்பாக அதிரை பேரூராட்சி தலைவர் பதவிக்கு சுயட்சை வேட்பாளராக வக்கீல் முனாஃப் அவர்களை களமிறக்கியதே ஏன்? கே.கே.ஹாஜா அவர்கள்தானே களமிறக்கியது... பெரும் பதவி இல்லை என்பதால்தானா? எத்தனையோ பல முஸ்லிம் லீக் கட்சியினர் ஊள்ளாட்சி பதவிகளில் இருக்கிறார்களே அதையும், சிறுபதவிதான் என்கிறார்களா?என்று கேட்கிறார்கள் மக்கள்!
எத்துனையோ பல மேடைகளில், கே.கே.ஹாஜா அவர்கள் பேசிய அனுபவம் உள்ளவர்கள்தான். ஆனால், ஏன் அப்படி பேசிட வேண்டும்..?பேசிடும் அவசியம் என்ன..?என்பதுதான் அதிரை மக்களின் இன்றைய கேள்வி!
இது குறித்து, கருத்தறிய தக்வா பள்ளியில் கே.கே.ஹாஜா காக்கா அவர்களை சந்தித்த போது,"வேண்டுமென்றோ,உள்நோக்கத்துடனோ பேசவில்லை;என் பேச்சு மனவறுத்ததை அளித்திருக்குமானால் மன்னிப்புக் கேட்டகவிரும்புகிறேன்"என்றார்.
நன்றி: அதிரை போஸ்ட்
Subscribe to:
Posts (Atom)
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.