அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Wednesday, February 1, 2012

உனக்காக நண்பா!!!! (மாரடைப்புக்கு முத‌லுத‌வி சிகிச்சை)

வீட்டில் அல்லது வெளியில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது?

மாலை மணி 6:30 வழக்கம் போல், அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள். அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது. நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள். திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள். அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள். உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஆனால் உங்களால் அந்த ஐந்து மைல் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது. இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க, என்ன செய்யலாம்??

துரதிஷ்ட வசமாக, மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர். உங்கள் இதயம் வழக்கத்திற்கு மாறாக தாறுமாறாக துடிக்கிறது.நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும‌ வேண்டும். ஒவ்வொரு முறை இருமுவதற்கு முன்னர் மூச்சை நன்கு இழுத்து விட வேண்டும். இருமல் மிக நீண்டதாக‌ இருக்க வேண்டும். இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆக்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது. இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும். இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இருமுவ‌தால் ஏற்படும் அதிர்வில் இதயம் சீராக துடிக்கும். பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்.

(என் அறிவுக்கு எட்டிய‌ ஒரு உதார‌ண‌ம்: முன்பெல்லாம் வீட்டில் அடி ப‌ம்பு இருக்கும் ச‌ம‌ய‌ம் அதை வேக‌மாக நிற்காமல் அடித்துக்கொண்டே இருந்தால் குழாயிலிருந்து முத‌லில் காற்றுட‌ன் பிற‌கு நீரும் அத‌ன் வாயிலிருந்து வேக‌மாக‌ பீறிட்டு வெளியேறுவ‌து போல் தான் ந‌ம் உட‌லிற்குள் ரத்தத்தில் இய‌ங்கும் நுரையீர‌ல் ம‌ற்றும் இருத‌ய‌த்தின் செய‌ல்பாடுக‌ளும் உள்ள‌ன‌ என‌ நினைத்துக்கொண்டேன். ச‌ரியா? தவ‌றா? என‌ விள‌க்க‌ம் தெரிந்த‌வ‌ர்க‌ள் பின்னூட்ட‌த்தில் விள‌க்க‌வும்)

தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வோர், உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்!!!!

என‌க்கு வ‌ந்த‌ மின்ன‌ஞ்ச‌ல் இணைய‌த்தின் மூல‌ம் எல்லோருக்கும் சென்ற‌டைய‌ட்டுமாக‌...

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

4 பின்னூட்டங்கள்:

வளர்பிறை said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

பயனுள்ள பதிவு, அனைவரும் படித்து பிறருக்கும் எடுத்து சொல்லுங்கள்.

Mohaideen said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

இது ஒரு பொய்யான தொடர் ஈமெயில்லால் பரப்பப்பட்ட செய்தி. மேல் விபரங்கள்ளுக்கு இங்கு சொடுக்கவும்

http://en.wikipedia.org/wiki/Cough_CPR

- Mohaideen, Abu Dhabi

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 3

இதைப்போல் மற்ற எல்லா நோய்களுக்கும் தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும் மு.செ.மு.நெய்னா முஹ‌ம்ம‌து அவர்களே.

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 4

எந்த பதிவை செய்தாலும்.... சற்று சிந்தித்து பதியவும்.... காரணம் வலைத்தளம் நன்மையை விட தீமைக்கு தான் அதிகம் பயன்படுகிறது.....நவீன புறம் சொல்லும் கருவியாகவும் பயன்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.....

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.