அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Showing posts with label எச்சரிக்கை. Show all posts
Showing posts with label எச்சரிக்கை. Show all posts

Friday, February 17, 2012

கூடங்குளத்தில் விஞ்ஞானிகள் சும்மா இருக்க அனுமதிக்க முடியாது

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தங்கள் விஞ்ஞானிகள் காலவரையின்றி தொடர்ந்து சும்மாவே இருப்பதற்கு ரஷ்ய அரசு அனுமதிக்காது என்று அந்நாட்டின் சிறப்புத் தூதர் தெரிவித்தார்.

கூடங்குளம் போராட்டம் காரணமாக, அணுமின் நிலையப் பணிகள் தடைபட்டுள்ள சூழலில், ரஷிய கூட்டமைப்பின் இந்தியாவுக்கான சிறப்பு தூதர் அலெக்சாண்டர் எம்.கடகின் செவ்வாய்க்கிழமை சென்னையில் நிருபர்களிடம் கூறியது:

பொக்ரானில் இந்தியா அணுகுண்டு வெடித்து பெரிய அளவில் சோதனை செய்ததை பல உலக நாடுகள் எதிர்த்தன. ஆனால் ரஷியா தொடர்ந்து கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை தொடர்ந்து மேற்கொண்டது.

ஜப்பானில் சுனாமியின்போது அணு உலை வெடித்து சேதம் அடைந்து 6 மாதம் கழித்து கூடங்குளம் அணு மின்நிலையத்துக்கு எதிர்ப்பு வந்தது ஏன்? ஜப்பானில் வெடித்த அணுஉலை பழமை வாய்ந்தது. பழைய தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டது.

கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலை நவீன தொழில்நுட்பத்தில் உலகிலேயே பாதுகாப்பான அணுஉலையாக அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை இப்படி ஒரு அணு உலை இந்த அளவுக்கு பாதுகாப்பாக அமைக்கப்படவில்லை. காரணம் இப்போது அமைக்கப்பட்டுள்ளது புதிய நவீன தொழில்நுட்பத்தில் ஆகும்.

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே நிறைய மின்சாரம் தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் மின்சாரம் போதவில்லை என்று பிரமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதுகிறார். எனவே கூடங்குளம் அணு மின்நிலையம் வந்தால்தான் தமிழ்நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

கூடங்குளத்தில் உள்ள ரஷ்ய விஞ்ஞானிகள், கடந்த அக்டோபரில் இருந்தே சும்மா இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே கைதேர்ந்த விஞ்ஞானிகள். ரஷ்யா, ஸ்லோவாக்கியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அவர்களது பணிகள் தேவைப்படுகின்றன.

கூடங்குளத்தில் அணு மின்நிலைய பணிகள் முடிந்தும் திறக்கமுடியாமல் உள்ளது. இது இந்தியாவின் பிரச்னை. இந்த பிரச்னையில் தலையிட ரஷியா விரும்பவில்லை.

அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு எங்கிருந்து வருகிறது, எப்படி வருகிறது என்று உள்ளே போக நான் விரும்பவில்லை.

அணு உலை திறக்காமல் எங்கள் ரஷிய என்ஜினீயர்கள் எவ்வளவு நாட்கள்தான் வேலை இல்லாமல் சும்மா இருப்பார்கள். அவர்கள் தொடர்ந்து வேலை இல்லாமல் இருப்பதை அனுமதிக்க முடியாது. அதற்காக இவ்வளவு காலம்தான் அவர்கள் இங்கு இருப்பார்கள் என்று காலக்கெடு எதுவும் விதிக்க விரும்பவில்லை. இந்த பிரச்னையில் குறுகிய அளவில் அரசியல் நடைபெறுகிறது.

கூடங்குளம் அணுமின்நிலையம் திறக்கப்படவில்லை என்றால் இந்தியாவின் மின்சார தேவையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். ஆனால் இந்த பிரச்னை தீர்ந்து அணு உலை திறக்கப்படும் என்று நம்புகிறேன்," என்றார் ரஷிய சிறப்பு தூதர் அலெக்சாண்டர் கடகின்.

அப்போது, இந்தியா - ரஷியா தொழில் மற்றும் வர்த்தக அமைப்பின் நிறுவன தலைவர் வி.எம்.லட்சுமி நாராயணன், தலைவர் ஜெம் ஆர்.வீரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

Monday, December 19, 2011

ஒரு மகளின் நிர்வாண படம் அவளின் தந்தைக்கே மின்னஞ்சல் மூலம் வந்தால்............ ?

இனையதளத்தில் உளபுவர்களுக்கு ஃபேஸ்புக் (Facebook) எனபது தெரியாமல் இருக்காது ஃபேஸ்புக் எனப்படும் சைத்தானின் மரணகுழியில் உலகத்தில் உள்ள இளைஞர்கள் குறிப்பாக பெண்கள் மூழ்கி கிடக்கிறார்கள்.

இதில் நாம் சமுதாயத்து பெண்களின் எண்ணிக்கை இஸ்லாமிய ஆண்களைவிட அதிகமாக உள்ளதுதான் பரிதாபம் கணவன் மட்டுமே பார்க்கும் தங்களின் அழகையும் அலங்காரத்தையும் விதம் விதமாக படம்பிடித்து ஃபேஸ்புக் தளத்தில் கடைவிரிதிருக்கிரார்கள் நாம் தீன்குலபென்மனிகள் இதில் உறுபினராக இருக்கும் அனைவருமே பருவவயது பெண்கள் இதில் திருமணமான பெண்களும் அடங்குவர்.

இவர்கள் இந்த இணையதளத்தில் தங்களை விதவிதமாக அடிக்கி வைத்து காத்திருப்பது யாரோ ஒரு கண்ணுக்கு தெரியாத ஆண்மகனுக்காக மட்டுமே இந்த கேடுகெட்ட இனையதளத்தில் உலவும் நாம் சமுதாய பெண்கள் நாசமாய் போன கதைகள் ஏராளம் ஏராளம். இந்த நட்பு வட்டாரத்தில் தங்களின் அனைத்து அந்தரங்ககளையும் ஒரு அந்நிய ஆடவனோடு அல்லது ஆடவர்களோடு பகிர்ந்துகொண்டு ஒரு வித இன்பம் அடைகிறார்கள இளம்பெண்கள் நாம் சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் பலர் இந்த சைத்தானின் ஆயுதத்தை கையில் ஏந்தியதன் மூலம் தூய வழியை தூக்கி எறிந்துவிட்டு நரகத்தின் வாசலை நோக்கி நெடும் பயணம் மேற்கொண்ட கதைகள் நிறையவே உள்ளன.

அதுமட்டுமின்றி இந்த ஃபேஸ்புக் மூலமாக அறிமுகமாகும் சில நடப்புகள் கோவலப்பட்டு நின்ற கதைகள் கூட உள்ளன சென்னை ஆலந்துறை சேர்ந்த திருப்பதி திருநின்றவூரை சேர்ந்த சித்திக் என்பவர் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி நண்பனார் கடந்த வாரத்தில் நண்பர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள் திருப்பதி தன் வீட்டுக்கு சித்தீக்கை அழைத்தார் சாப்பாடு முடிந்து நண்பர்கள் இருவரும் இரவு நன்றாக உறங்கினர் காலையில் எழுந்து பார்த்தால் சித்திகையும் காணோம் திருப்பதியின் செல்போனையும் காணோம் அத்தோடு திருப்பதியின் 2 பவுன் மோதிரத்தியும் எடுத்துக்கொண்டு கம்பி நீட்டிய சித்தீக்கை போலீசார் பிடித்து டின் கட்டிவிட்டார்கள்.

இது ஒருபுறம் இருக்க பெங்குளுருவில் நடந்த விவாகரம் ஃபேஸ்புக் வலைதளத்தின் மீது வெறுப்பை உண்டாக்கியிருக்கிறது கடந்த வாரத்தில் ஃபேஸ்புக் வலைதளத்தில் அழகான இளைஞர்கள் மற்றும் இளைஞிகளின் நிர்வாண படங்கள் விதவிதமாக ஃபேஸ்புக்கில் உலாவந்தது.

அதுமட்டுமின்றி அந்த படங்கள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கும் அனுப்பபட்டிருந்தன அத்தோடு இளம் பெண்களின் படங்கள் அவர்களின் தகப்பனாரின் ஈமெயில் முகவரிக்கும் அனுப்பப்பட்டு இருந்தன.இதில் ஏதோ தவறு இருப்பதை உணர்ந்த பெங்களுருவாசிகள் இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர்.

இதை ஆராய்ந்த சைபர் கிரைம் போலீசார் அந்த படங்கள் அனைத்தும் ஒட்டுவேலை செய்து போலியாக தயாரிக்கப்பட்டவை என்பதை கண்டுபிடித்தனர்.

இது சம்பந்தமாக ஃபேஸ்புக் நிர்வாகத்திடம் விசாரித்த போதுதான் ஃ பேஸ்புக்தளம் ஹேக் செய்யப்பட்டு களவாடப்பட்ட தகவல் வெளியானது.

ஃபேஸ்புக் சர்வருக்குள் புகுந்த குற்றவாளிகள் சர்வரை முடக்கி அதில் இருந்த அழகான பெண்களின் கணக்குக்குள் நுழைந்து அவர்களின் முழு விபரத்தையும் அவர்களின் விதவிதமான புகைபடங்களியும் திருடி அந்த பெண்களின் தலையை மட்டும் எடுத்து தங்களிடம் இருந்த நிர்வாணபடத்துடன் இணைத்து அவர்களுக்கும் அவர்களின் காப்பாளர் பெயர் இருந்த முகவரிக்கும் அனுப்பிவைத்திருந்தது தெரியவந்தது.

இதுபோன்று இழிசெயல்கள் தொடராமல் இருக்க ஃபேஸ்புக் இணையதளத்தில் தங்களின் விபரங்களையும் புகைப்படங்களையும் பதிய வேண்டாம் என பெங்களுரு சைபர் கிரைம் காவல்துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நம் வீட்டுப் பெண் எந்நேரமும் கம்ப்யூட்டரில் உட்கர்ந்து படித்துகொண்டிருக்கிறாள் என பெருமைப்பட்டு அவள் களைத்துபோகாமல் இருக்க காபி போட்டுதரும் பெற்றோர்களே! உங்களின் பெண்பிள்ளைக்கு நீங்கள் வாங்கிக் கொடுக்கும் செல்போனையும் கம்யூடரையும் வைத்து அந்த பெண் என்ன செய்கிறாள் என்பதை கண்காணியுங்கள் ஃபேஸ்புக் வழியாக நரகத்திற்கான மரணகுழியை இப்போதே தோண்டிக்கொண்டிருக்கும் இளம்பெண்களை அந்த கேட்டை அகற்றி இறையச்சத்தை புகட்டுங்கள் இஸ்லாத்தின் கண்ணியத்தை எடுத்துரையுங்கள் மூமினாக வாழ்ந்து மூமினாக மரணிக்கும் அவளுக்கு கற்றுக்கொடுங்கள் ஃபேஸ்புக் என்னும் பேராபத்தில் இருந்து அவளை வெளியேற்றுங்கள், அவளை தீன்குலப்பெண்மணியாக மாற்றுங்கள்.

Source: PT Group
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.