அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Showing posts with label துபை. Show all posts
Showing posts with label துபை. Show all posts

Monday, December 5, 2011

அமீரக AAMF-ன் முக்கிய அறிவிப்பு

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அன்பிற்கினிய அதிரை சொந்தங்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

நமதூா் சகோதரா்களால் நடத்தப்படும் இணைய வலைப்பூக்களில் AAMF செயல் திட்டங்கள் குறித்து பதியப்படும் கருத்துகளைப் பற்றி 04.12.2011 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நிர்வாகிகளால் ஆலோசிக்கப்பட்டது. இவ்வாலோசனை அமா்வின் முடிவில் – AAMF என்பது அதிரை மக்களின் ஒற்றுமைக்காக துவங்கப்பட்டதே தவிர, எந்த ஒரு சமுதாய பிளவுகளுக்காக ஏற்படுத்தப்பட்டது அல்ல என்பதாக நிர்வாகிகள் உறுதியாக கருத்து பதிந்தார்கள். அத்துடன் நமதூரில் இயங்கி வருகிற எந்த அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு போட்டியாகவோ அல்லது குறுக்கீடு செய்வதற்காகவோ AAMF துவங்கப்பட்டது இல்லை என்று ஏகமனதாக தீா்மானிக்கப்பட்டது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பு:
AAMFகுறித்து விளக்கம் பெற விரும்புகிறவா்கள் தயவு செய்து adiraiallmuhallah@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரி மூலமோ அல்லது 00971-50-7480023 / 00971-55-4011344 என்கிற மொபையில் எண்களின் மூலமோ தொடா்புக் கொண்டு பெற்றுக் கொள்ளவும். கண்டிப்பாக முறையான முகவரியின்றி கேட்கப்படும் விளக்கங்களுக்கு எவ்வித பதில்களும் தெரியப்படுத்தப் படமாட்டாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


அன்புடன்
AAMF நிர்வாகம்
அமீரகம்.

Saturday, December 3, 2011

ஷார்ஜாவில் இலவச மருத்தவ முகாம்..


Friday, November 25, 2011

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு முக்கிய நிகழ்வுகள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

கண்ணியத்திற்குரிய அதிரை சொந்தங்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு தங்களை பின் தொடரும் தகவல் தெரிவிக்கும் வகையில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அல்ஹம்துலில்லாஹ்!

கடந்த 30.09.2011 அன்று கிஸஸ் கிரஸண்ட் ஆங்கிலப் பள்ளியில் நடைபெற்ற அமீரக AAMF-ன் முதல் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு, இன்ஷாஅல்லாஹ் உயிரூடும் வகையில் வரக்கூடிய ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறை நாட்களை பயன்படுத்துவது என அமீரக நிர்வாகிகள் தீர்மானித்தோம். மாஷாஅல்லாஹ்! அமீரக AAMF-ன் நிர்வாகிகள் தங்களுக்கு கிடைத்த ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறை நாட்களை தாயத்தில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பை உருவாக்கிவிட வேண்டும் என திட்டமிட்டோம். அதன்படி அமீரக AAMF-ன் நிர்வாகிகளான – தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், துணை பொருளாளர் மற்றும் 4 செயற்குழு உறுப்பினர்கள் அதிரைக்கு பயணமானோம்.

அதன்படி கடந்த 05.11.2011 முதல் 06.11.2011 வரை முறையே நெசவு தெரு, தரகர் தெரு, கடல்கரைத் தெரு, மேலத் தெரு, நடுத்தெரு, புதுத் தெரு மற்றும் கீழத் தெரு என அனைத்து முஹல்லா சங்க நிர்வாகிகளையும் அமீரக AAMF-ன் நிர்வாகிகள் தனித்தனியாக சந்தித்து அமீரகத்தில் உருவாகியுள்ள அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ஏற்படுத்திய நோக்கத்தினையும், அதுபோன்று அதிரை ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்துவதின் அவசியத்தையும் விளக்கினோம். அமீரகத்தில் அனைத்து முஹல்லா சகோதரர்களும் தந்த ஆதரவைப் போன்று, இல்லை இல்லை அதைவிட கூடுதலான ஆதரவை தருவோம், நீங்கள் செய்யும் இந்த முயற்சிகள் வெற்றியடை எங்கள் முழுமையான ஒத்துழைப்பு தருவோம் என அனைத்து முஹல்லா சங்க நிர்வாகிகளும் உறுதியளித்தனர். அல்ஹம்துலில்லாஹ்!

அதுபோன்று கடந்த 07.11.2011 அன்று அமீரக AAMF-ன் சார்பாக அதிரை அனைத்து முஹல்லா சங்க நிர்வாகிகள் ஆலோசனை அமர்வு 08.11.2011 அன்று நமதூர் ஜாவியாவில் அஸர் தொழுகைக்குப் பிறகு நடைபெற இருப்பதை தெரிவித்து அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்தோம். மாஷாஅல்லாஹ்! இக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் எழுத்துவடிவில் தயாரிக்கப்பட்டிருந்த AAMF-ன் உருவாக்கத்தின் கொள்கை மற்றும் நோக்கங்களை விளக்கும் பிரசுரம் வழங்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு:

துவக்கம்:அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு(AAMF) ஐக்கிய அரபு அமீரகம் வாழ் அதிரைவாசிகளால் 23.09.2011 அன்று துவங்கப்பட்டது.
இங்கே வாசிப்பு வசதி கருதி, இயக்கத்தின் பெயர் பொரும்பாலும் AAMF என்றே குறிப்பிட்டப்டுளள்து. இதனை அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு என்று வாசித்திதுக் கொள்ளவும்.

AAMF-ன் நம்பிக்கை:அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள் இதனால் அருள் செய்யப்படுவீர்கள். (ஆலு இம்ரான் 3:132)
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும். (அன்னிஸா 4:59)

கொள்கை:AAMF-ன் கொள்கை: விளக்கும் வாசகம்: "ஒன்றுகூடி வளம் பொறுவோம்!"

அதிரை முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை வழுபடுத்த வேண்டிய காரியங்களை திட்டமிட்டு உறுதியுடன் செயலாற்றுவதே அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு(AAMF)-ன் அடிப்படை கொள்கையாகும்.

குறிப்பு:
நமதூர் மக்களின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் காரியங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கிற வகையில் AAMF-ன் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காரியங்கள் வருமாறு:

1. முஸ்லிம்களிடையே பொதுவாக கருத்து வேறுபாடுகள் உள்ள மார்க்க காரியங்களில் AAMF-ன் சார்பாகவோ, நடத்தும் நிகழ்ச்சிகளில் பேசவோ, விவாதிக்கவோ கூடாது, அவசியம் ஏற்பட்டால் அனைத்து தரப்பு முஸ்லிம்களாலும் ஏற்றுக் கொண்ட கருத்து வேறுபாடு இல்லாத பொதுவான காரிங்களை மட்டும் கவனமாக செயல்படுத்தலாம்.

2. நமதூர் முஸ்லிம் சகோதரர்கள் பல்வேறு அரசியல் மற்றும் சமுதாய இயக்கங்களில் அங்கம் வகிக்கின்றனர். அவர்களில் எவரேனும் தாங்கள் சார்ந்திருக்கின்ற அமைப்பை மிகைப்படுத்தியும் மற்றவர்கள் சார்ந்திருக்கின்ற அமைப்புகளை பற்றிய குறைகளை கூறிக் கொள்ளும் வகையில் நமது AAMF-ன் நிகழ்ச்சிகளில் பேசவோ விவாதிக்கவோ கூடாது.

நோக்கம்:
1. அதிரை வாழ் அனைத்து தரப்பு மக்கள் மற்றும் அமீரகம் வாழ் அதிரை வாசிகளின் ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும் சமூக அரசியல் நலன்களின் மேன்மைக்காக பாடுபடுவதும்.

2. அதிரை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள், கண்ணியம், இறையச்சம், மார்க்க சிந்தனை மேன்மை பெறவும், கல்வி, பொருளாதாரம், மருத்துவதம், சுகாதாரம், சமூக அரசியல் நலன், ஒழுக்க மாண்புகள், கட்டுபாடுகள் ஆகிய அனைத்து துறைகளும் மேம்பட தேவையான திட்டங்கள் வகுத்து செயல்படுத்த பாடுபடுவதும்.

3. அதிரை முஸ்லிம் சமூகத்தில் நிலவுகிற கருத்து வேறுபாடுகளை களைந்திடவும், ஒற்றுமையை வலியுறுத்தியும், மனித நேயம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உயரிய குறிக்கோள்கள் மேன்மையுடன் வெற்றியடைய அல்லாஹ்வின் உதவியோடும், தூய எண்ணங்களோடும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதே AAMF-ன் தலையாய நோக்கங்களாகும்.

AAMF-ன் செயல் திட்டங்கள்:
நம்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீர்கள்! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார். (ஃபுஸ்ஸிலத் 41:34)
தீய எண்ணங்கள் கொண்டவர்கள் ஒன்று சேர்வது இயற்கை, எளிது. ஆனால், நல்லெண்ணம் படைத்தவர்கள் ஒன்று கூடுவது கடினம் என்ற கருத்து இப்பொழுதும் நிலவுகிறது. ஏனெனில், தீமை செய்வோர்களின் குறிக்கோள் அழிவு. அதை யார் செய்தாலும் சரி, அதனால் வரும் நன்மையோ தீமையோ யாருக்குச் சென்றாலும் கவலையில்லை என்பதினால்தான். ஆனால், நல்லது செய்ய விரும்புவோர் சிலர் நற்பெயர் தமக்கே சேர வேண்டும் என்று நினைப்பதால் பொதுநலம் மீறி தன்னலம் செயல்படத் துவங்கி, அனைவரையும் இணைந்து செயல்படவிடாமல் தடுக்கின்றது. மக்கள் நலம்தான் முக்கியம், அதனால் வரும் நற்பெயர் யாருக்குச் சென்றாலும் கவலையில்லை என்று தனித்தனியாகச் செயல்படும் பொதுத்தொண்டுக் குழுக்கள் இணைந்துவிட்டால், அச்சக்திக்கு மண்ணில் இணையே கிடையாது. நாம் மேற்கொண்டுள்ள இப்பயணம் அப்படி ஒரு சக்தி உருவாக வேண்டும் என்பதற்கே பாடுபடும்.
நமதூருக்கு பொதுவாகவும், ஒவ்வொரு முஹல்லாவிலும் தனித்தனி துறைகளை உருக்கவாக்கி AAMF-ன் கொள்கை மற்றும் நோக்கங்களை படிப்படியாக நிறைவேற்றிட முயல்வது.

அவை வருமாறு:
1. உலமாக்கள் சபை,
2. கல்வி வழிகாட்டல் மற்றும் சேவை மையம்,
3. நகர வளர்ச்சி மையம்,4. இலவச சட்ட உதவி மையம்,
5. AAMF-ன் ஜகாத் இல்லம்,
6. ஊடக சபை,
7. சமுதாய இளைஞர் மன்றம்,
8. சமுதாய மகளிர் மன்றம்.இன்ஷாஅல்லாஹ் இத்துறைகளின் பணிகள் குறித்து விரிவாக விளக்கப்படும்.

நமதூர் அனைத்து முஹல்லா சங்க நிர்வாகிகள் ஆலோசனை அமர்வு சிறப்புடன் நடைபெற்றது. அதனை இங்கே காணொலியில் காணலாம்.

அக்கூட்டத்தின் முடிவில் வரும் 10.11.2011 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு இன்ஷாஅல்லாஹ் நடைபெற இருக்கிற மறு ஆலோசனை அவர்வு ஜாவியாவில் நடைபெறும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது.

அக்கூட்டத்திற்கு வரும்போது ஒவ்வொரு முஹல்லா சங்க சார்பாக தலா மூன்று உறுப்பினர்களை தேர்வு செய்து, அவர்கள் மாத்திரம் வந்து கலந்து கொள்வது என தீர்மானித்து முதல் நமதூர் அனைத்து முஹல்லா சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இனிதே முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்!


என்றும் அன்புடன்,
நிர்வாகம்,
AAMF அமீரகம்

Thursday, November 10, 2011

அனைத்து முஹல்லா கூட்டமைப்பு அதிரையில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் .

அதிரையில் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் கூட்டம் ஜாவியாவில் இன்று கூடியது. ஒவ்வொரு சங்கத்திலிருந்து முன்று நபர்கள் தலா ஏழு முஹல்லா சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். நீண்ட நேர விவாதத்திற்கு பின்னர் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பிற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

தலைவர் : தாஜூல் இஸ்லாம் சங்கம் (பெயர் பின்னர் அறிவிக்கப்படும்)
செயலாளர் : பேராசிரியர் அப்துல் காதர் (சம்சுல் இஸ்லாம் சங்கம்)
துணைத் தலைவர் : சாகுல் ஹமீது (கடற்கரை தெரு சங்கம்)
துணைச் செயலாளர் : முகம்மது முகைதின் (நெசவுத் தெரு சங்கம் )
துணைத் தலைவர் : (மிஸ்கின் பள்ளி முஹல்லா)
பொருளாளர் : பாரக்கத் அலி (தரகர் தெரு சங்கம்)
துணைப் பொருளாளர் : கிழத்தெரு சங்கம் (பெயர் பின்னர் அறிவிக்கப்படும்)




விரிவான செய்திகள் விரைவில்..... !

Wednesday, November 9, 2011

பாகம் - 2 அதிரையில் நடந்த அனைத்து முஹல்லா ஆலோசனைக்கூட்டம்கூட்டம் - காணொளி



Tuesday, November 8, 2011

அதிரையில் நடந்த அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் காணொளி பாகம் 1



அதிரையில் அணைத்து முஹல்லாஹ் கூட்டமைப்பின் முதல் கூட்டம்!


அனைத்து முஹல்லாஹ் கூட்டமைப்பின் முதல் ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று (08/11/2011) மாலை 4:30 மணியளவில் நமதூர் ஜாவியாவில் நடைப்பெற்றது. அதிரையில் உள்ள ஏழு சங்கங்களின் நிர்வாகிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

முன்னதாக இக்கூட்டத்தை நடத்துவதற்காக, துபையில் இருந்து அனைத்து முஹல்லாஹ் கூட்டமைப்பின் நிர்வாகிகள் அதிரை வந்து ஏற்பாடு செய்தனர்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த கட்ட நடவடிக்கையாக நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கு வரும் வியாழக்கிழமை (10/11/2011) மாலை 4:௦௦ மணியளவில் இந்த கூட்டம் நடைபெறும்.

இதன் முழு காணொளி விரைவில் இன்ஷா அல்லாஹ்.!












Wednesday, November 2, 2011

அதிரை அனைத்து முஹல்லா - ஹஜ் பெருநாள் சந்திப்பு -2011


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அதிரை அனைத்து முஹல்லா - ஹஜ் பெருநாள் சந்திப்பு -2011









அல்லாஹ்விடம் உறுதி மொழி எடுத்தப்பின் அதை முறிப்போருக்கும், இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டதைத் துண்டிப் போருக்கும், மற்றும் பூமியில் குழப்பம் விளைவிப்போருக்கும் சாபம் உள்ளது அவர்களுக்கு இவ்வுலகில் கேடு உண்டு. (ஸுரத்துர் ரஃது 13:25)  

அன்பிற்கினிய அதிரை சொந்தங்களுக்கு,

    اَسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ

இவ்வழைப்பிதழ் தங்கள் அனைவரையும் பரிபூரண நலன்களுடனும், உயரிய சமுதாய சிந்தனையுடனும் சந்திக்க பிரார்த்திக்கிறோம். ஆமீன்!.

கடந்த நோன்புப் பெருநாளின் போது ஐக்கிய அரபு அமீகரத்திலுள்ள அதிரைவாசிகள் தேரா ஈத் திடலில், சிறுதுளியாக ஒன்றினைந்த நிகழ்வு நாம் அறிந்ததே (அல்ஹம்துலில்லாஹ்!.), இது போன்று இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளன்றும் அனைத்து முஹல்லாவாசிகள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நமதூரில் உள்ள தீனுல் இஸ்லாம் சங்கம்-கடல்கரைத் தெரு, இளைஞர் நற்பணி மன்றம்-தரகர் தெரு, மதரஸத்துன் நூருல் முஹம்மதியா சங்கம்-கீழத் தெரு, ஷம்சுல் இஸ்லாம் சங்கம், மிஸ்கீன் பள்ளி முஹல்லா சங்கம்-புதுத் தெரு, நெசவுத் தெரு பொது நல அமைப்பு மற்றும் தாஜுல் இஸ்லாம் சங்கம்-மேலத் தெரு, ஆகிய முஹல்லாவாசிகளை AAMF(துபை)ஒருங்கிணைத்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

இதுபோன்ற சந்திப்புகளினால், நமக்குள் நல்ல இணக்கங்கள் தொடருவதற்கும்நம் எதிர்கால சந்ததிகளின் நலனில் அக்கரைக் கொள்வதற்கும்நமதூரின் பொதுவான நல்ல காரியங்களை ஒன்றிணைந்து செயல்படுத்துவதற்கு மிகவும் பயனளிக்கும் எனAAMF கருதுகிறது. ஆகவே இன்ஷாஅல்லாஹ் வருகிற காலங்களிலும் ஒவ்வொரு வருடமும் இரு பெருநாட்களிலும் இதுபோன்ற பெருநாள் சந்திப்புகளை தொடர்ந்து நடத்துவது என AAMFமுடிவு செய்துள்ளது.

இவ்வழைப்பிதழ் கிடைக்கப் பெறுகிற சகோதரர்கள் அனைவரும் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், துபை மற்றும் ஏனய அமீரக மாநிலங்களில் வாழ்கிற தாங்கள் அறிந்த நமதூர் சகோதரர்களுக்கு இந்நிகழ்வைத் தெரிவித்து இப்பெருநாள் சந்திப்பில் கலந்துக் கொள்ளச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஹஜ்ஜுப் பெருநாள் சந்திப்பு நம் உறவுகள் மேன்பட வழுவூட்டட்டும்!

குறிப்பு: பெருநாள் தெழுகை முடிந்த உடன் அரை மணி நேரத்திற்குள் நிகழ்ச்சி நிறைவுபெரும்.

அன்புடன்,
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு(AAMF)
துபை –  ஐக்கிய அரபு அமீரகம்.

Saturday, October 15, 2011

அமீரக AAMF-ன் அன்பான வேண்டுகோள்!

கண்ணியத்திற்குரிய அமீரகம் வாழ் அதிரை அனைத்து முஹல்லா சகோதரர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

இம்மடல் உங்கள் அனைவரையும் பரிபூரண நலன்களுடன் சந்திக்க பிரார்த்திக்கிறோம்.

இன்ஷாஅல்லாஹ் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில், நமதூரின் சில முஹல்லா சங்க நிர்வாகங்களுக்கு உட்பட்ட வார்டுகளுக்கு சங்க நிர்வாகம் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கும், அப்படி உங்கள் பகுதி வார்டுகளுக்கு சங்க நிர்வாகம் சார்பாக எந்த வேட்பாளரும் நிறுத்தப்படாமல் இருந்தால், உங்கள் பகுதியில் போட்டியிடுகிற வேட்பாளர்களில் நல்லவர்களுக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வாக்களிக்க வலியுருத்தி கேட்டுக் கொள்ள உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்
கொள்கிறோம்.

என்றும் அன்புடன்,
நிர்வாகம்,
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு - அமீரகம்

Monday, October 3, 2011

அனைத்து முஹல்லா முதல் பொதுக்குழு கூட்டத்தின் காணொளிகள்

துபையில் 30-09-2011 அன்று நடந்த அனைத்து முஹல்லா முதல் பொதுக்குழு கூட்டத்தின் காணொளிகள்..








Sunday, October 2, 2011

துபையில் நடந்த அனைத்து முஹல்லா முதல் பொதுக்குழு கூட்டத்தின் புகைப்படங்கள்!

துபையில் 30-09-2011 அன்று நடந்த அனைத்து முஹல்லா முதல் பொதுக்குழு கூட்டத்தின் புகைப்படங்கள்!

Saturday, September 24, 2011

ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (அமீரக கிளை) நிர்வாகிகள் தேர்ந்தேடுப்பு


அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் ஐக்கிய அரபு அமீரகக் கிளையின்
நிர்வாகிகள் தேர்வு கடந்த 22-09-2011 அன்று துபை-டேரா லேன்ட்மார்க்
ஹோட்டலில் நடந்தது. அதில் தேர்ந்த்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் விபரம்
பின்வருமாறு:


தகவல்: சகோ.F.இப்ராஹிம்

Tuesday, September 20, 2011

ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அமீரகம் வாழ் சகோதரர்களுக்கு


Friday, September 16, 2011

துபை - அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முதல் பொதுக் குழு அழைப்பிதழ்


Friday, September 9, 2011

துபை - அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முதல் அமர்வின் தீர்மானங்கள்!


















Tuesday, August 30, 2011

துபையில் பெருநாள் சந்திப்பு நிகழ்வு இனிய முறையில் நடந்தது


எல்லாம்வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நாம் எதிர் பார்த்ததைவிடநமதூர் சகோதரர்களின் பெருநாள் சந்திப்பு நிகழ்வு இனிய முறையில்மனநிறைவான வகையில் நடந்து முடிந்துள்ளது.அல்ஹம்துலில்லாஹ்!

இச்சந்திப்புநிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்கள் அனைவரும் மனமகழ்சியை தெரிவித்தனர். மேலும் இந்நிகழ்வினால் 30 வருடங்களுக்குமுன்பு சந்தித்த சகோதரர்கள் மீண்டும் சந்திக்க வைத்துள்ளது என்பதும், ஒருசேர ஒரு இடத்திலநமதூர் அனைத்து முஹல்லா சகோதரர்கள்சந்தித்துக் கொண்டதும் அமீரக வரலாற்றில் இதுவே முதல்முறை என்பதும்குறிப்பிடதக்கது. இப்பெருநாள் சந்திப்பில் கலந்துக் கொண்டவர்களில் பெரும்பான்மையினர், இதோடு இந்த நிகழ்வுநின்றுவிடாமல் இன்ஷாஅல்லாஹ் மெம்மேலும் இதுபோன்ற சந்திப்புகளை ஏற்படுத்த வேண்டுகோள் வைத்தனர்.

இந்தஇனிய சந்திப்பிற்கு அழைத்த எங்களின் அழைப்பைஏற்று ஒருமனதாக தங்கள் வருகையை பதிவுசெய்த அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியினை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த இனிய நிகழ்ச்சி இவ்வளவு சிறப்புடன் நடைபெற பெரிதும் உதவிய அனைத்து நமதூர் இணையதளத்தார்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

…… இன்னும்எவர், மறுமையின் நன்மையை விரும்புகிறாரோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம்; நன்றியுடையோருக்குஅதி சீக்கரமாக நற்கூலி கொடுக்கிறோம். (3:145)

குறிப்பு:இப்பெருநாள் சந்திப்பு நிகழ்வு பற்றி தங்களுடையகருத்துக்களையும், இதில் கலந்துக் கொள்ளாததங்களுக்கு தெரிந்த சகோதரர்களின் பெயர்,மொபையில் நம்பர், மின்னஞ்சல் முகவரிமற்றும் முஹல்லா விபரங்ககளையும் adiraiallmuhallah@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குஅனுப்பி தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


என்றும்அன்புடன்,

பெருநாள்சந்திப்பு ஏற்பாட்டாளர்கள்.
adiraiallmuhallah@gmail.com













நன்றி
புகைப்படம்: இபுராஹிம்.F
காணொளிகள்: அதிரை நிருபர்; இப்ராகிம்.F

Saturday, August 20, 2011

துபை ஈத் முஸல்லாஹ் மைதானத்தில் அதிரைவாசிகளின் சந்திப்பு நிகழ்வுக்கு ஏற்பாடு


அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நோன்புப் பெருநாள் அன்று துபை தேரா ஈத் முஸல்லாஹ் மைதானத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகு ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அதிரைவாசிகளின் சந்திப்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிரைவாசிகள் மட்டும் 3000 பேருக்கும் அதிகமானோர் இருக்கக்கூடும். நமதூரைவிட சிறியசிறிய ஊர்களின் மக்களெல்லாம் ஸஹர்/இஃப்தார் நிகழ்சிகள்மூலம் ஒன்றுகூடுகின்றனர். இதுவரைக்கும் அதிரைவாசிகளுக்கென இத்தகைய முயற்சி எதுவும் எடுக்கப்படவில்லை என்பதால் இன்ஷா அல்லாஹ் இவ்வாண்டு (2011) முதல் இதற்கான முயற்சியை நமதூர் தன்னார்வலர்கள் முன்னெடுத்துள்ளனர். ஊர்மக்களை ஒன்றிணைக்கும் இந்த உன்னத முயற்சி வெற்றிபெற உங்கள் வருகையையும் உறுதி செய்வதோடு அதிரை நண்பர்களையும் அழைத்து வரவும்.

பிறஅமீரகங்களிலிருந்து பெருநாளன்று துபைக்கு தொழுவதற்குவரும் அதிரைவாசிகள் தவறாமல் இந்த அரிய சந்திப்பில் கலந்து கொண்டு தமது உறவுகளையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொண்டு பரஸ்பரம் முஸாபஹா செய்துகொள்ள அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

துபாய்-டேரா பகுதியில் பெருநாள் தொழுகை நடைபெறும் ஈத் முஸல்லா மைதானத்திற்கு வருவதற்கான
வரைபடமும்,மைதானத்தின் வலதுபுறம் பரஹாரோட்டில் அதிரைவாசிகள் கூடுமிடமும் இணைக்கப்பட்டுள்ளது. பெருநாள் தொழுகை முடிந்து அதிகபட்சம் ஒருமணி நேரத்திற்குள் இந்த அரிய சந்திப்பு நிகழ்வு முடிந்துவிடும் என்பதால் வேறுபள்ளிகளில் பெருநாள் தொழுதவர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டப்படுகிறார்கள்.

இன்ஷா அல்லாஹ் இந்த சந்திப்பை காணொளி மற்றும் (வாய்ப்பிருந்தால்) நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


For Further Reference Kindly Contact following Persons.

1. Thameem------------(Air Link) - 050 74800 23
2. Jamaludeen----------(west Street ) 050 28551253
3. Ibrahim. F-----------(Flying colours) - 055 4011344
4. Nawas----------------(West Street) - 050 46 04267
5. Ashraf Ali ------------(West St) - 050 6983136
6. Ajmal V T------------(Aramex) - 050 49638
7. Abdul Gaffoor----------(Spine EM) - 050 6919845
8. Dawood--------------(Beach St) - 050 6851183
9. Jahfar-----------------(Etisalat) 050 4964545
10    Ameen----------------(Middle St) 050 5050922



Monday, August 15, 2011

துபாய் எய்ம் நடத்தும் சிறப்பு சொற்பொழிவில் முஃப்தி உமர் சரிப் அவர்கள் இன்று பேசுகிறார்!

புனித ரமலான் மாதத்தில் துபாய் அரசின் அங்கமான அவ்காப் எனும் இஸ்லாமிய அமைப்பு வருடந்தோறும் ஒவ்வொரு மொழியைச் சேர்ந்த சிறந்த இஸ்லாமிய பேச்சாளர்களை அழைக்கிறது. அவர்களது சொற்பொழிவுகளை முஸ்லிம் மற்றும் மாற்று மதத்தவர்கள் கேட்க அழைத்து இப்தார் விருந்து வைத்து உபசரிப்பது வழக்கம்.

அவ்வகையில் தமிழகத்தில் மிகவும் அறியப்பட்ட மார்க்க பேச்சாளரும் தாருல் ஹூதா நிறுவனத்தின் உரிமையாளருமான முஃப்தி உமர் சரீப் அவர்கள் துபாய் அரசு விருந்தினராக வரவழைக்கப்பட்டிருக்கிறார். நேற்று அவர் அவ்காப் நடத்திய நிகழ்ச்சியில் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். இதில் சுமார் 1000 பேர் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து இன்ஷா அல்லாஹ் இன்றிரவு இந்திய நேரம் 11.30 மணியிலிருந்து 12.30 மணிவரை துபாயிலிருக்கும் அதிரை இஸ்லாமிக் மிஷன் அமைப்பு நடத்தும் ரமலான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் உரையாற்ற இருக்கிறார். இன்ஷா அல்லாஹ் இந்நிகழ்ச்சி அதிரை பிபிசியில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.

Friday, July 29, 2011

அதிரை இஸ்லாமிக் மிஷன் AIM யின் அன்பான வேண்டுகோள்

அதிரை இஸ்லாமிக் மிஷன் -AIM அமீரகத்திலிருக்கும் அதிரை சகோதரர்களால் ஆரம்பிக்கப்பட்டு அல்லாஹ்வின் பேருதவியால் சிறப்புடன் அதன் பணிகளை செவ்வனே தொடர்ந்து செய்து வருகிறது (இது தொடர்பான செய்தி www.aimuaeadirai.blogspot.comல் விபரமாக பதியப்பட்டுள்ளது).

அல்ஹ்மதுலில்லாஹ் !
வழமைபோல் இவ்வருடமும் ரமளான் மாதத்தின் கடமைகளை சிறப்புடன் தொடர்ந்திட அதிரை இஸ்மாமிக் மிஷன் (AIM) ஆயத்தப்படுத்திக் கொண்டுள்ளது.

ஆதலால்,இவ்வருடமும் தங்களுடைய பித்ரு ஜகாத்தை தேவையுடையவர்களுக்கு அல்லாஹ்வும், ரஸுலும் கட்டளையிட்ட முறைப்படி தேவையுடையவர்களின் இல்லங்களுக்கு கொண்டு சேர்த்திட எல்லாவகையான முயற்சிகளையும் எடுத்திருக்கிறோம்.
உங்களின் பங்களிப்பான பித்ரு ஜகாத்தை அதிரை இஸ்லாமிக் மிஷன் வாயிலாக தேவையுடையவர்களுக்கு சென்றடைய உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு :
அப்துல்காதர் - mobile : 055-2829759
(பித்ரு ஜகாத்தை பெற்று கொள்ள அமர்த்தப்பட்டிருக்கும் பொறுப்புதாரி மக்கள் தொடர்பு)

மின்னஞ்சல் : aimuaeadirai@ஜிமெயில்.com

இங்கனம்:
AIM -துபாய்,UAE


நன்றி:அதிரை நிருபர்
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.