அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Showing posts with label ஷம்சுல் இஸ்லாம் சங்கம். Show all posts
Showing posts with label ஷம்சுல் இஸ்லாம் சங்கம். Show all posts

Saturday, October 15, 2011

அமீரக AAMF-ன் அன்பான வேண்டுகோள்!

கண்ணியத்திற்குரிய அமீரகம் வாழ் அதிரை அனைத்து முஹல்லா சகோதரர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

இம்மடல் உங்கள் அனைவரையும் பரிபூரண நலன்களுடன் சந்திக்க பிரார்த்திக்கிறோம்.

இன்ஷாஅல்லாஹ் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில், நமதூரின் சில முஹல்லா சங்க நிர்வாகங்களுக்கு உட்பட்ட வார்டுகளுக்கு சங்க நிர்வாகம் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கும், அப்படி உங்கள் பகுதி வார்டுகளுக்கு சங்க நிர்வாகம் சார்பாக எந்த வேட்பாளரும் நிறுத்தப்படாமல் இருந்தால், உங்கள் பகுதியில் போட்டியிடுகிற வேட்பாளர்களில் நல்லவர்களுக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வாக்களிக்க வலியுருத்தி கேட்டுக் கொள்ள உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்
கொள்கிறோம்.

என்றும் அன்புடன்,
நிர்வாகம்,
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு - அமீரகம்

Friday, October 14, 2011

சம்சுல் இஸ்லாம் சங்க ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் (வார்டு 12, 13) ஆதரவு கோரும் காணொளி

சம்சுல் இஸ்லாம் சங்க ஆதரவு பெற்ற 12, 13 ஆகியவார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் காணொளி கிழே, இன்ஷா அல்லாஹ் மற்ற வேட்பாளர்கள் ஆதரவு கோரும் காணொளிகள் விரைவில்.







12வது வார்டு - எம்.ஏ ஹனிபா



13 வது வார்டு -  எம்.ஜே.சம்சுதீன்





Thursday, September 29, 2011

ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் வேட்பாளர்கள்

ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் வேட்பாளர்கள், மற்றும் அவர்கள் அனைவரும் சங்கத்தில்  முஹல்லா மக்கள் முன்னிலையில் நேற்று (28/09/2011) வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக ஏற்றுக்கொண்ட உறுதிமொழியின் (ஒருவரின்) நகல் உங்கள் பார்வைக்காக!


வது வார்டு    -    ஜஹபர் சாதிக்

-----------------------------------------------

12வது வார்டு - எம்.ஏ ஹனிபா

-------------------------------------------

13 வது வார்டு -  எம்.ஜே.சம்சுதீன்

-----------------------------------------------


14 வது வார்டு - எம்.ஏ. சேக் அப்துல்லாஹ்

---------------------------------------------



19 வது வார்டு     -       திருமதி சவ்தா
(கணவர் - அஹமது ஹாஜா)
-----------------------------------------------

21 வது வார்டு     -     எஸ். முஹம்மது இபுராஹீம்
---------------------------------------------







Wednesday, September 28, 2011

ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தனது வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி நோட்டீஸ்!

ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அதிகாரபூர்வ ஆறு வார்டுகளின் வேட்பாளர்கள் இன்று (28-09-2011) வேட்பு மனு தாக்கல் செய்தனர், இதனையொட்டி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் எல்லைக்குட்பட்ட அணைத்து பள்ளிவாசல்களில் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி நோட்டீஸ் ஒட்டியுள்ளது, பட்டுமில்லாமல் பொது அறிவிப்பும் நோட்டீஸ் மூலம் செய்துள்ளது.

சங்கம் வெளியிட்டுள்ள நோட்டீஸ்கள் கிழே:




சம்சுல் இஸ்லாம் சங்கம் உறுதிமொழி மற்றும் வேட்புமனு தாக்கல் காணொளி

சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் இன்று 28/9/2011 சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் காலை 10 மணிக்கு ஒன்றுகூடினர் சங்கத்தின் துணைத்தலைவர் சகோ .சகாபுதீன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் அனனவருக்கும் உறுதிமொழியை வாசித்து அதன்படி நடக்கவேண்டும் என்று உரை நிகழ்த்தினர் . பின்னர் உறுதிமொழி பத்திரத்தில் வேட்பாளர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது . சம்சுல் இஸ்லாம் சங்கநிர்வாகிகள் , வேட்பாளர்கள் அனனவரும் ஊர்வலமாக சென்று பேரூராட்சி அலுவலகத்தில் சங்கத்தலைவர் முன்னிலையில் மனுதாக்கல் செய்யப்பட்ட காணொளி கிழே .

சம்சுல் இஸ்லாம் சங்க ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் இன்று வேட்ப்புமனு தாக்கல் செய்தனர்


சம்சுல் இஸ்லாம் சங்க ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் 12 மணியளவில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.


வேட்பாளர்கள் விபரம்

1வது வார்டு       -        ஜகபர் சாதிக்
12வது வார்டு     -       ஹனிபா
13வது வார்டு      -       சம்சுதீன் (கொய்யா பழம்)
14வது வார்டு     -       சேக் அப்துல்லா
19வது வார்டு     -       திருமதி சவ்தா
21வது வார்டு     -       இபுராஹீம் (ஆப்பிள்)






இன்ஷா அல்லாஹ் காணொளிகள் விரைவில்:











Tuesday, September 27, 2011

ஷம்சுல் இஸ்லாம் சங்கம் அதிரையின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கு கடிதம்!


ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் எல்லைக்குட்பட்ட வேட்பாளர்களை தேர்வு செய்து அவர்கள் அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் சங்கம் தனது கோரிக்கையை அதிரையின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கு சங்கத்தின் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட வேண்டாம் என்று கடிதம் அனுப்பியுள்ளது.




Monday, September 26, 2011

சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் துணைத் தலைவர் சகோ சகாபுதீன் அவர்களின் பிரத்தியேக பேட்டி.


அதிரையில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் ஊர் ஒற்றுமை கருத்தில் கொண்டு அனைத்து முஹல்லா கூட்டமைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் துணைத் தலைவர் சகோ. சகாபுதீன் அவர்களின் பிரத்தியேக பேட்டி.



சங்கங்களின் சங்கமம்: அதிராம்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய ஜமாத்

இன்று மாலை, சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அழைப்பை ஏற்று, அதிரையில் இயங்கும் கீழ்க்காணும் சங்கங்கள் மஃரிப் தொழுகைக்குப் பின் மரைக்கா பள்ளியில் ஒன்று கூடின.


* தாஜுல் இஸ்லாம் சங்கம், மேலத்தெரு
* கீழத்தெரு சங்கம்
* தரகர் தெரு சங்கம்
* நெசவுத் தெரு சங்கம்
* கடல்கரைத் தெரு சங்கம்
* மிஸ்கீன் பள்ளி சங்கம்


தொடக்கமாக, கூட்டத்தின் நோக்கம் பற்றிய பேரா. அப்துல் காதர் அவர்களின் சிற்றுரைக்குப் பின், அப்துல் லத்தீஃப் ஆலிம் சாஹிப் அவர்கள், நமக்கிடையே வரவேண்டிய ஒற்றுமை பற்றி அழகிய சிற்றுரையொன்றை நிகழ்த்தினார்கள்.


அதில் அவர்கள் தலைமைக்குக் கட்டுப்படுதல் என்ற பொருளை எடுத்து விரிவாகப் பேசினார்கள். நபி (ஸல்) அவர்களின் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அனுப்பப்பட்ட படை ஒன்றுக்குப் பதினெட்டு வயது வாலிபராக இருந்த உசாமா (ரலி) அவர்களைப் படைத் தளபதியாக்கி, அதில் உமர் (ரலி) போன்ற பெரும் பெரும் நபித் தோழர்களைப் படையணிப் போராளிகளாக்கி அனுப்பியது பற்றிக் குறிப்பிட்டு, தலைமைக்குக் கட்டுப்பட்டு எவ்வாறு அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பதை எடுத்துரைத்தார்கள்.


இஷாத் தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்ட பின் குறிப்பிட்ட நேரத்தில் தொழுகை நடந்தது. அதன் பின் மீண்டும் கூட்டம் தொடர்ந்து நடந்தது. வந்திருந்த சங்கப் பிரதிநிதிகள் தத்தம் கருத்துகளை எடுத்து வைத்தனர்.


பேரூராட்சித் தலைவர் தேர்தலுக்குக் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுவதை நாம் தடுக்க முடியாது என்ற கருத்தை கீழத் தெரு சங்க உறுப்பினர் எடுத்து வைத்தார்.


ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாக்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாகப் போட்டியில் இருப்பதால், முதலில் அவர்களைத்தான் சரி பண்ண வேண்டும் என்ற கருத்தை மேலத்தெரு சங்க உறுப்பினர் எடுத்து வைத்தார்.


கட்சிப் போட்டியாளர்களையும் கூட்ட முடியும் என்ற கருத்தை தரகர் தெருப் பிரதிநிதி எடுத்து வைத்து, இது உள்ளாட்சித் தேர்தல்தான் என்பதை வலுவாகப் பதிவு செய்தார்.


தலைவர் தேர்தல் கட்சி அடிப்படையில்தான் நடக்கும்; அதை நம்மால் தடுக்க முடியாது என்ற கருத்தைக் கடல்கரைத் தெருப் பிரதிநிதி உறுதியாக எடுத்து வைத்தார்.


போட்டியாளர்களைக் குறைக்க, நமது சங்கங்கள் அவர்கள் அனைவருக்கும் அழைப்புக் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை மேலத்தெரு சங்க உறுப்பினர் தனது வேண்டுகோளாக எடுத்து வைத்தார்.


முடிவாக, "அதிராம்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய ஜமாத்" என்ற பெயரில் சங்கங்களின் கூட்டமைப்பு ஒன்றைத் தொடங்குவது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டு, அனைவராலும் அது ஒருமனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.


இதனடிப்படையில், நாளைக் காலை பத்து மணிக்கு, மரைக்கா பள்ளிக்கு வருமாறு தலைவர் வேட்பாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்து, அவர்களுக்கு, நமக்கிடையே நிலவும் அதிகமான போட்டியைக் குறைக்கும் விதத்தில் அறிவுரை கூறுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தகவல்: அதிரை அஹ்மது

Saturday, September 24, 2011

ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (அமீரக கிளை) நிர்வாகிகள் தேர்ந்தேடுப்பு


அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் ஐக்கிய அரபு அமீரகக் கிளையின்
நிர்வாகிகள் தேர்வு கடந்த 22-09-2011 அன்று துபை-டேரா லேன்ட்மார்க்
ஹோட்டலில் நடந்தது. அதில் தேர்ந்த்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் விபரம்
பின்வருமாறு:


தகவல்: சகோ.F.இப்ராஹிம்

Wednesday, September 14, 2011

ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் முக்கிய அறிவிப்பு


சென்ற 9.09.2011 அன்று ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் அதிராம்பட்டினம் பஞ்சாயத்துத் தேர்தல் சம்பந்தமாக நடந்த கூட்டத்தில் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட வார்டு கவுன்சிலருக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது விருப்பமனுக்களை 17.9.2011 சனிக்கிழமை மாலை 5 மணிக்குள் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தலைவர் அல்லது செயாலாளர் இடம் ஓப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைத்த பின்னர் , தேர்தல் விண்ணப்பப் பெற்றுக்கொண்டு அதைப் பூர்த்தி செய்து 20.9.2011தேதிக்குள் மீண்டும் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தலைவர் அல்லது செயாலாளர் இடம் விண்ணப்பங்களை ஒட்டிய கடித உறையில் வைத்துக்கொடுத்துவிட்டால் அந்த விண்ணப்பங்கள் அவர் சார்ந்துள்ள முஹல்லா பள்ளியில் ஒப்படைக்கப்படும் .

பின்னர் முஹல்லா பள்ளி கமிட்டியில் மனுக்களை பரிசீலனை செய்து தகுதியுடைய சிலரை தேர்வு செய்து குலுக்கல் முறையில் தேர்வு செய்ய ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு அனுப்பிவைப்பார்கள். இந்த ஒற்றுமை முயற்சிக்கு ஊர்மக்கள் அனனவரும் ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.



இப்படிக்கு
தலைவர்
ஷம்சுல் இஸ்லாம் சங்கம்
அதிராம்பட்டினம்
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.