அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts

Thursday, November 24, 2011

அதிரையில் தொடர் மழை...


அதிரையில் நேற்று இரவிலிருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது, இந்த தொடர் மழையின் காரணமாக ஊரில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்புகிறது.  தெருவோரங்களில் மழைநீர் வழிந்து ஓடுகிறது.


ஊரில் கிணறு என்று இருந்ததே எங்கே என்று கேட்குமளவிற்கு அவைகள் மறைந்து வந்தாலும் நிலத்தடி நீருக்கு இந்த மழை ஒரு வரப்பிரசாதம்.

மக்களின் இயல்வு வாழ்க்கை வழமைபோல் இருந்தாலும், மழையின் பாதிப்பால் இறுக்கமான நிலையே நிலவுகிறது. பொதுமக்கள் சாலையோரங்களில் கடந்து செல்லும்போது கவணமாகச் செல்வது நல்லது.  மின்சார கம்பங்கள் அருகில் நிற்பதோ அல்லது கம்பிகள் கீழே விழ்ந்து கடந்தால் அதன் அருகில் செல்வதோ தவிர்க்கப்பட வேண்டும் அதோடு உடணடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுக்கவும் வேண்டும்.

Wednesday, November 16, 2011

குளங்கள் நிரம்புகின்றன!

சமீபத்தில் தமிழகத்தில் பரவலாக பெய்த வடகிழக்கு பருவ மழையினால் பல ஆறுகள் நிரம்பி வழிகின்றன. தஞ்சை மாவட்டத்திலும் மழை வெளுத்து வாங்கியது, இதையடுத்து நம் ஊர் குளங்களை நிரப்பும் CMP வாய்க்கால்களிலும் நீர் வரத்து வந்து கொண்டிருக்கின்றது.

இதன் மூலம் செக்கடி, ஆலடி, மன்னப்பம் ஆகிய குளங்கள் நிரம்பி வருகின்றன். இந்நீர் வரத்து இன்னும் ஒரு வாரத்திற்கு நீடித்தால் மேற்குறிப்பிட்ட அனைத்துக்குளங்களும் முழுமையாக நிரம்பிவிடும்.

இன்று பகல் தகவலின் படி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Saturday, November 5, 2011

அதிரை வானிலை கண்கானிப்பு மையம் - ஆவணப்படம் (காணொளி)

அதிரையின் எச்சூழலையும் அலசி ஆராயும் அதிரைபிபிசி ஆராவாரமாக பெய்து கொண்டிருந்த தொடர் மழையின் தாக்கத்தையும், அதன் சூழலையும் அலசி ஆராய புறப்பட்டது அதன் இளம்படை. கொட்டும் மழையை அள்ளி வந்திடலாம் என்று சென்றவர்களுக்கு அல்லாஹ்வின் அருட்கொடை மழைக்கு அளவுகோல் வைத்து அளந்து சொல்லும் ஓர் ஆராய்ச்சி மையம் ஒன்று கண்ணில் பட்டது.

அங்கே ! ஓர் இனிமையான பெண் அலுவலகப் பொறுப்பாளர் திருமதி சின்னத்தாய் Msc., B.Ed. இவர், முன்னாள் பள்ளி ஆசிரியை, இந்நாள் அதிரை வானிலை கண்கானிப்பு மையத்தின் அலுவலக பொறுப்பாளராக தன்னடக்கத்துடன் எங்களை வரவேற்று, அவர்களுக்கே உரிய ஆசிரியர் பணியின் அற்புதத்தால் அங்கே பயிலும் மாணாக்களாக சென்ற எங்களுக்கு விளக்கிய விதம் அருமை.

வானத்தை அன்னாந்து பார்த்துக் கொண்டு மழை வருமா? வந்தால் பள்ளிக்கூடங்கள் விடுமுறை விடுமா? என்ற காத்திருக்கும் மாணவர்களைப் போல் நாமும் அங்கிருந்த அனைத்து ஆராய்ச்சி பயண்பாட்டுச் சாதனங்களை பார்த்ததும் கேள்விகள் கேட்டோம், ஆச்சர்யப்பட்டோம் இதுநாள் வரை அதிரையில் இப்படியான மையம் இருப்பதை எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் ?

இந்த ஆராய்ச்சி மையத்தின் தொடர் பங்களிப்புளாக, ஆகாய மார்க்கத்திர்க்கும், தரை வழி மற்றும் கடல் வழித் தடங்களுக்கும் எந்த அளவு பயன்படுகிறது என்பதனை திருமதி சின்னத்தாய் அவர்கள் தெளிவான பாடம் எடுத்தார்கள்.



அட ! அடுத்த ஆவணப்படம் எடுத்திட வின்வெளிக்கே சொன்று விட வேண்டியதுதானே என்று கேட்கிறீர்களா ? அந்த நாட்களும் வெகுதொலைவில் இல்லை...

அல்லாஹ் நாடினால் அதுவும் நிகழும் இன்ஷா அல்லாஹ் !

- அதிரைBBC குழு


















Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.