அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Wednesday, May 9, 2012

முஸ்லிம் லீக் தலைவர் பேசியது தவறா? சலசலப்பில் அதிரை!


அதிராம்பட்டினத்தில் நேற்று 9/05/12 செய்வாய் கிழமை மேலத்தெருவில் இருக்கும், சேக் நஸ்ருதீன் தர்ஹா வளாகத்தில் மீலாத் விழாவும் முகைதீன் ஆண்டகை(?!) விழாவும் நடை பெற்றது.
விழாவில், அதிரையின் எல்லா முஹல்லாவை சேர்ந்தவர்களை அழைத்திருந்தனர்.அனைத்து முஹல்லா கூட்டமைப்பை சேர்ந்தவர்களையும் அழைத்திருந்தனர். அத்துடன் பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச்.அஸ்ஸலம் அவர்களையும் அழைத்திருந்தனர்; அவரும் சென்றார் மேடையில் வீற்றிருந்தார்.

அதிரை நகர முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் கே.கே.ஹாஜா அவர்கள்தான் இவ்விழாவின் தலைவர்! வரவேற்புரை ஆற்றினார். அப்போது, "பேரூராட்சி தலைவர் பதவி என்பது பெரும் பதவியெல்லாம் இல்லை;அதைவிடவும், அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் பதவிதான் உயர்ந்தது" என்று பேசியதாக கூறப்படுகிறது.
 அங்கே மேடையில் வீற்றிருந்த அதிரை பேருராட்சித் தலைவர் எஸ்.ஹெச்.அஸ்லம் அவர்கள் தனது அதிர்ப்தியை தெரிவித்தார்.
விழாவில் கலந்துக்கொண்டவர்களும் தங்களது அதிர்ப்தியை காட்டினர்.

விழாவில், சற்று சலசலப்பு ஏற்பட்டது!
கே.கே.ஹாஜா அவர்கள் பேசிய இப்பேச்சு அதிரை முழுவதும் பரவியது. "தவறானது,தேவையற்றது" என்கிறார்கள் பொது மக்கள்!

"பேரூராட்சி தலைவர் பதவி என்பது பெரும் பதவியெல்லாம் இல்லை" என்றால், முஸ்லிம் லீக் சார்பாக அதிரை பேரூராட்சி தலைவர் பதவிக்கு சுயட்சை வேட்பாளராக வக்கீல் முனாஃப் அவர்களை களமிறக்கியதே ஏன்? கே.கே.ஹாஜா அவர்கள்தானே களமிறக்கியது... பெரும் பதவி இல்லை என்பதால்தானா? எத்தனையோ பல முஸ்லிம் லீக் கட்சியினர் ஊள்ளாட்சி பதவிகளில் இருக்கிறார்களே அதையும், சிறுபதவிதான் என்கிறார்களா?என்று கேட்கிறார்கள் மக்கள்!

எத்துனையோ பல மேடைகளில், கே.கே.ஹாஜா அவர்கள் பேசிய அனுபவம் உள்ளவர்கள்தான். ஆனால், ஏன் அப்படி பேசிட வேண்டும்..?பேசிடும் அவசியம் என்ன..?என்பதுதான் அதிரை மக்களின்  இன்றைய கேள்வி!

இது குறித்து, கருத்தறிய தக்வா பள்ளியில் கே.கே.ஹாஜா காக்கா அவர்களை சந்தித்த போது,"வேண்டுமென்றோ,உள்நோக்கத்துடனோ பேசவில்லை;என் பேச்சு மனவறுத்ததை அளித்திருக்குமானால் மன்னிப்புக் கேட்டகவிரும்புகிறேன்"என்றார்.

நன்றி: அதிரை போஸ்ட்  

Monday, May 7, 2012

அணு குண்டுகள் ஏற்படுத்தும் அழிவை விட, பிளாஸ்டிக் பைகள் !



அணு குண்டுகள் ஏற்படுத்தும் அழிவை விட, பிளாஸ்டிக் பைகள் !
''அணகுண்டுகளஏற்படுத்துமஅழிவவிட, பிளாஸ்டிகபைகள் நீர்நிலைகளினஅடிப்பகுதியிலஅடைத்துககொண்டஏற்படுத்துமஅழிவமிகபபயங்கரமானதாஉள்ளது'' என்றஉச்நீதிமன்றம் அபாய எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.

மூத்வழக்கறிஞரஷியாமதிவானதாக்கலசெய்பொதமனு‌வி‌ல், நாட்டிலபிளாஸ்டிகபைகளபெருமஅச்சுறுத்தலஏற்படுத்தியுள்ளது.

நாடமுழுவதுமஒவ்வொரஆண்டுமஏராளமாமாடுகளினவயிற்றஅறுவசிகிச்சசெய்து 30 முதல் 50 கிலபிளாஸ்டிகபைகளஎடுக்கப்படுவதாகால்நடமருத்துவமனஅறுவசிகிச்சகுறித்புள்ளி விவரமதெரிவிப்பதாகூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌‌ந்த மனுவை இ‌ன்று விசாரித்த உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌திக‌ள் ி.எஸ். சிங்வி, எஸ்.ே. முகோபாத்யாய், இந்தியாவிலஉடனடியாபிளாஸ்டிகபைகளுக்கமுற்றிலுமதடவிதிக்கப்பவேண்டும். இல்லையென்றாலஇந்நிலையகட்டுப்படுத்முடியாதஎன்றன‌ர்.

மேலு‌ம், அணகுண்டுகளஏற்படுத்துமஅழிவவிட, பிளாஸ்டிகபைகளஏரி, குளமபோன்நீர்நிலைகளினஅடிப்பகுதியிலஅடைத்துககொண்டஏற்படுத்துமஅழிவமிகபபயங்கரமானதாஉள்ளது எ‌ன்று‌ம் ‌‌‌நீ‌திப‌திக‌ள் அபாய எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்தன‌ர்.

இதகுறித்தபதிலளிக்மத்திய, மாநிஅரசுகளுக்கநோட்டீஸஅனுப்பவும் ‌நீ‌திப‌திக‌ள் உத்தரவி‌ட்டன‌ர்.

வழு தூக்குதலில் AFFA - வீரரின் சாதனை...

கடலோர மாவட்டங்கோன கிழக்கு தமிழ் நாடு அளவிலான வழுதூக்கும் போட்டியில் 120 கிலோ உடல் எடைப்பிரிவில் கலந்து கொண்ட நம் AFFA குழுவின் வீரர் Y. முகம்மது அபுபக்கர் வயது (27)  கலந்து கொண்டு முதல் பரிசை வென்றுள்ளார் அவரை AFFA குழுவின் சார்பாக வாழ்த்துகிறோம். மேலும் அவரின் சாதனை தொடரவும் நமது நாட்டின் வழுதூக்கும் அணியில் இடம் பெறவும் வாழ்த்துகிறோம்.


AAMF’ன் அவசரக் கூட்டத்தில் அல் அமீன் ஜாமிஆ மஸ்ஜிதுக்குப் புதிய நிர்வாகக் கமிட்டி !



AAMFன் அவசரக் கூட்டத்தில்
அல் அமீன் ஜாமிஆ மஸ்ஜிதுக்குப் புதிய நிர்வாகக் கமிட்டி!
 
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக கடந்த ( 04-05-2012  )  அன்று கடற்கரைத்தெரு முஹல்லாவில் நடந்த ஐந்தாவது கூட்டத்தில், அல் அமீன் பள்ளி சம்பந்தமாக வருகின்ற 06/05/2012 அன்று அஸர் தொழுகைக்குப்பின் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாகிகளை வரவழைத்துப் பேசுவது என்ற தீர்மானத்தை எடுத்து, இன்று அஸர் தொழுகைக்குப் பின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது.







இக்கூட்டத்தின் தீர்மானத்தின்படி, அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக, ஒவ்வொரு முஹல்லாவிலிருந்தும் தலா இருவர் வீதமும், ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கம் சார்பாக இரண்டு நபர்களும், நமதூரைச் சேர்ந்த சகோதரர்கள் மூவர் ஆகக் கூடுதல் இருபத்திமூன்று நபர்களைக் கொண்ட ‘அல் அமீன் ஜாமிஆ மஸ்ஜித் கமிட்டி என்ற பெயரில் உருவாக்கி, அல்லாஹ்வின் பள்ளியைக் கட்டி எழுப்புவது என்றும், அதன்படிக் கீழ்க்கண்ட புதிய நிர்வாகக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது:
தலைவர்             : மெளலவி முஹம்மது இப்ராகிம் ஆலிம்
துணைத் தலைவர்   : M.M.S. சேக் நசுருதீன்
துணைத் தலைவர்   : S.M.A. அக்பர் ஹாஜியார்,
செயலாளர்          : S.K.M.அஹமது அன்சாரி
துணைச் செயலாளர் : A. நெய்னா முஹம்மது ( மான் )
துணைச் செயலாளர் : S. அஹமது ஹாஜா
பொருளாளர்         : M.S. ஷிஹாபுதீன்

செயற்குழு உறுப்பினர்கள்:
M. நிஜாமுதீன்
P.M.K. தாஜுதீன்
M.I. முஹம்மது பாக்கர்
S. S. சேக்தாவுது
M.A. அஹமது ஹாஜா
J. சாகுல் ஹமீத்
K.M. பரக்கத் அலி
K. யாஹியா கான்
S.M.A. அஹமது கபீர்
S. அஹமது ஜலீல்
E. வாப்பு மரைக்காயர்
A. முஹம்மது மொய்தீன்
N.M. ஜபருல்லா
I. இஷாக்
மர்ஜூக்
S. அப்துல் ரெஜாக்









இந்தக் கமிட்டியின் அடுத்த கூட்டம் வருகின்ற19/05/2012 அன்று அஸர் தொழுகைக்குப் பின் நமதூர் தரகர் தெருவில் உள்ள முகைதீன் ஜும்ஆ பள்ளி வளாகத்தில் நடைபெறும் (இன்ஷா அல்லாஹ்).

Friday, May 4, 2012

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் (AAMF ) – ஐந்தாவதுக் கூட்டம் !


அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக ஐந்தாவது கூட்டமாக இன்று ( 04-05-2012 ) அஸர் தொழுகைக்குப்பின் அதிரையின் பழமைவாய்ந்த மற்றும் பாரம்பரியமிக்க தெருக்களில் ஒன்றாகிய கடற்கரைத் தெருவில் உள்ள ஜும்மா பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திற்கு, சகோ. M.S. சிஹாபுதீன் ( AAMF ன் ஒருங்கினைப்பாளர் ) அவர்கள் தலைமையிலும், M.M.S. சேக் நசுருதீன் ( தலைவர் – AAMF ) மற்றும் பேராசிரியர் M.A. முகமது அப்துல் காதர் ( செயலாளர் – AAMF )அவர்கள் முன்னிலையிலும், சிறப்பு அழைப்பாளராக பேருராட்சி தலைவர் S.H அஸ்லாம், சகோ. அக்பர் ஹாஜியார், சகோ. ஜமீல் M. ஸாலிஹ், சகோ. C. முஹமது இப்ராகிம் ( பைத்துல்மால் இணைச்செயலாளர் ), சகோ. B. ஜமாலுதீன் ஆகியோர்களின் பங்களிப்புடன் இனிதே ஆரம்பமானது.
 


நிகழ்ச்சியின் நிரலாக.............


மெளலவி. முஹம்மது இப்ராகிம் ஆலிம் அவர்களால் கிராஅத் ஓதுப்பட்டது.




M.M.S. சேக் நசுருதீன் ( தலைவர் – AAMF ) அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
 


அல் அமீன் பள்ளி நிலைப்பாடு சம்பந்தமாக வருகின்ற 06/05/2012 அன்று அஸர் தொழுகைக்குப்பின் நமதூர் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்படுகிற அவசரக்கூட்டதில் அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாகிகளை வரவழைத்து பேசுவது என்று தீர்மானம் செய்யப்பட்டது.

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக இதுவரைக் கூட்டப்பட்ட அனைத்துக் கூட்டத்திலும் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு என்ன முடிவுக் காணப்பட்டது ? என்ற சகோ. M.S. சிஹாபுதீன் அவர்களின் கேள்விக்கு விளக்கங்கள் தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 



அதிரை பேரூராட்சிக்கு மூன்று சக்கர வாகனம் வாங்குவதற்காக சம்சுல் இஸ்லாம் சங்கம் துபை கிளை சார்பாக நிதி உதவியாக ரூபாய்  25,000/- பேருராட்சி தலைவர் S.H அஸ்லாம் அவர்களிடம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக அதன் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் “கடற்கரைத் தெரு முஹல்லா“ வின் முக்கியஸ்தர்கள் எனக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியாக சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்ட “கடற்கரைத் தெரு முஹல்லா“ நிர்வாகத்தினற்கு வாழ்த்துகள் பரிமாறப்பட்டு துவாவுடன் இனிதே நிறைவு பெற்றது.

குறிப்பு :
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ( AAMF ) சார்பாக ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி ஒவ்வொரு மாதமும் ஒன்பது முஹல்லாவிலும் தலா ஒரு கூட்டம் வீதம் எனவும், இதன்படி அடுத்த கூட்டமாக “ஹஜரத் பிலால் நகர் முஹல்லாவில்“ வருகின்ற 08-06-2012  அன்று நடைபெறும் ( இன்ஷா அல்லாஹ் ! ) இதற்கிடையில் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கூட்டப்படுகிற கூட்டங்களும் நடைபெறும்.

சேக்கனா M. நிஜாம்

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் 5வது ஆலோசனை கூட்டம்

அதிராம்பட்டினம் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் 5வது ஆலோசனைக்கூட்டம் நமது கடற்கரைத்தெரு கடற்கரை ஜூம்ஆ பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அனைத்து முஹல்லா கமிட்டி தலைவர் MMS.சேக் நசுருதீன் அவர்கள் கூட்டத்தில் கலந்துக்கொண்டே அனைவரையும் வரவேற்று கூட்டத்தை துவக்கி வைத்தார். ஓவ்வொரு முஹல்லாவுடைய ஒத்துழைப்பும் முக்கியம் என்பதை வலியுறுத்தி அருமையான கருத்துக்களை அதிரை அனைத்து முஹல்லா கமிட்டியின் செயலாளர். M.A.முகம்மது அப்துல் காதர் அவர்கள் கூறினார் மேலும் அதிராம்பட்டினத்தில் ஒற்றுமையை நிலைநிறுத்தவேண்டும் என்ற கவனத்தையும் உணர்த்தினார்கள்.



































































































இயற்கையின் வரப்பிரசாதம் இளநீர்!

மனிதனின் அன்றாட வாழ்க்கையில் கலந்துவிட்ட பானங்களுள் இளநீருக்கு முக்கிய பங்குண்டு. 

இந்த இளநீர் ஒரு முழு உணவு. இது மக்களின் நீர் தாகத்தைப் போக்குவதுடன் உடலுக்கு உற்சாகத்தையும், குளிர்ச்சியையும் கொடுக்கும் இயற்கை டானிக் ஆகும்.

இளநீரில் மிகவும் சக்தி வாய்ந்த மருத்துவக் குணங்கள் உள்ளது. இது மிகவும் சுத்தமானதும், சுகாதாரமானதும் ஆகும். 

இத்தகைய இளநீரில் நாட்டு இளநீர், செவ்விளநீர், பச்சை இளநீர் என பல வகைகள் உள்ளன. 

இளநீர் அருந்துவதால் என்ன பயன்? 

  • தினமும் இளநீர் அருந்தி வந்தால் உடல் சூடு தணியும். 

  • கண்கள் குளிர்ச்சி பெறும். வயிற்று நோய்கள் அகலும். 

  • பட்டினி, அதிக உணவு, உடலுக்கு ஒவ்வாத உணவு இவற்றால் ஏற்படும் அஜீரணக் கோளாறு அனைத்தையும் இளநீர் தீர்க்கும். 

  • இளநீர் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற அசுத்த நீர்களை நீக்கும் மற்றும் இரத்தச் சோகையைப் போக்குகிறது. 

  • இரத்தக் கொதிப்பைக் குறைப்பதால் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இளநீர் சிறந்த மருந்தாகும். 

  • நாவறட்சி, தொண்டைவலி ஆகியவை நீங்கும். டைபாய்டு, மஞ்சள் காமாலை நோயின் தாக்குதல் கொண்டவர்கள் இளநீர் அருந்தினால் உடல் விரைவாகத் தேறும். 

  • அம்மை நோயின் தாக்கம் கண்டவர்கள் இளநீர் அருந்தினால் நோயின் வீரியம் குறையும். 

  • மது பழக்கம் உள்ளவர்களின் கல்லீரல் அதிகம் பாதிப்படையும். அதனை சீர் படுத்தும் குணம் இளநீருக்கு உண்டு. 

  • தேன் கலந்து அருந்தினால் தாது விருத்தியாகி ஆண்மை சக்தியை பெருக்கும். 

  • பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் அடிவயிறு வலிக்கு இளநீர் சிறந்த மருந்தாகும். 

  • கர்ப்பிணிப் பெண்களுக்கு இது ஒரு அருமருந்து. இளநீர் தினமும் அருந்தினால் உடல் வலுப்பெறும். மலச்சிக்கல் தீரும். 

இந்த கோடை விடுமுறையில் கண்ட கண்ட வெளிநாட்டு பானங்களை அருந்தி உடலை கெடுத்துக்கொள்ளாமல் இயற்கையின் வரப்பிரசாதம் இளநீர் சாப்பிட்டு நலமாக வாழ்வோம்.

Thursday, April 26, 2012

தட(டு)ம் மாறும் தவ்ஹீத்வாதிகள்








இன்று பலர் தவ்ஹீத் கொள்கை விளக்கம் பற்றி அழகான முறையில் தெளிவாக விளக்கமளித்து அனைவரும் உணரும் வண்ணமும் இந்த கொள்கை பற்றி கேள்வி பதில்களையும் அவ்வபோது கூறியும் வருகிறார்கள். இன்றைய கொள்கைகள் பற்றி விளக்கம் அளிப்பவர்களில் நேற்று தவறு செய்தவர்களும் இருக்கிறார்கள். கொள்கை உணர்த்தும் பொழுது (மக்கள்) கொள்கையே கேட்பவர்கள் பாருடா புதிதாய் முளைத்துவிட்டார்போலும். இவருடைய ஆட்டம் நமக்கு தெரியாதா? என்ற கேள்விகளை தனக்குள்ளும், சமயம் கிடைக்கும் பொழுது பகிரங்கமாக கேட்பதும் இன்றைய பழக்கமாகிவிட்டது. இதற்கு தவ்ஹீத் வாதிகளும் ஒரே பதிலைத்தான் கூறுகிறார்கள் அன்று நாஙகள் அப்படியிருந்தோம் இன்று இப்படி மாறிவிட்டோம். என்று மட்டுமே தனக்கு சாதகமாக காரணத்தை மட்டுமே கூறுவதையே வழக்கமாக்கியுள்ளார்கள். தவ்ஹீத் கொள்கையே தாங்கள் ஏற்பதற்கு முன் வரதட்சனை வாங்கிருந்தோம் கொள்கைக்கு மாறிய பின் அதனை நான் கொடுத்துவிட்டேன் என்று பதிலை பெரும்பாலானோர் ஏன் கூறுவதில்லை. நான் ஒரு மனிதனுக்கு நஷ்டம் இளைத்துவிட்டேன் தவ்ஹீத் கொள்கைக்கு பிறகு நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன் என்ற உண்மை ஏன் உணர்த்துவதில்லை. இன்னும் எத்தனை எத்தனை பாவங்கள் செய்து இன்று நாம் தவ்ஹீதை மாறிவிட்டோம் என்று உதட்டளவில் சொன்னால் நமக்கு நன்மை கிடைத்துவிடுமா? திருமணம் முடித்தபிறகு பெண் வீட்டில் வாழ்வதற்கு தனக்கு சாதகமாக இன்று ஹதீஸ்களையும் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள் தவ்ஹீத் வாதிகள். தவ்ஹீத் கொள்கையில் உள்ளவர்கள் வெளிப்படையில் வரதட்சனை போன்ற பாவத்தை செய்யாமல் மனதினுள்ளே, பணக்காரவர்களையும், பின்பக்கபலத்தையும் பார்த்து கொண்டி திருமண முடிக்கிறார்கள். எண்ணத்தை அறிபவன் நிச்சயம் நமக்கு அதற்குரிய கூலியை கொடுப்பான். வரதட்சனை வாங்கி அதன் மூலம் தொழில் நடத்தி வருமானம் பெற்றும்கூட தவ்ஹீத் கொள்கையை ஏற்றப்பின் தவறு செய்துவிட்டேன் என்று ஒப்புக்கொள்பவர்கள் திருப்பிக்கொடுப்பதில் தடம் புரண்டுகொண்டிருக்கிறார்கள். இது விமர்ச்சனத்திற்காக கூறவில்லை நாமும் தவ்ஹீத்வாதி என்ற தங்களின் பெருமைத்தனத்தை தாங்களே அகற்றிக்கொள்ளுங்கள் நாம் நமது இந்த தவ்ஹீத் கொள்கையை சரிவர பின்பற்றவில்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். உண்மையில் சிலர் எண்ணத்தால் உயர்ந்திருப்பார்கள் அவருக்கு அல்லாஹ் அருட்கொடையை நிச்சயம் வழங்குவான் அப்பொழுது திருப்பி கொடுத்துவிடுங்கள். அல்லாஹ் அஞ்சுங்கள். அல்லாஹ் தம்முடைய பொருட்களையோ பணத்தையோ. திறனையோ, பேச்சுத்திறனையோ பார்ப்பதில்லை உங்கள் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்கள் மட்டுமே உணர்ந்து செயல்படுங்கள்...

Tuesday, April 24, 2012

குடும்பக்”கொல்லி”யை ஊரைவிட்டு(த்) துரத்த....

தமிழகத்தில் முஸ்லிம்கள் பெருபான்மையாக வாழக்கூடிய, வரலாற்று சிறப்பு மிக்க பிரபல கல்வி நிறுவனங்கள், மார்க்கத்தை பயிற்றுவிக்கும் மதரசாக்கள், மனித நேயத்தை வளர்க்க மஸ்ஜித்கள், சமுதாய சேவைகளுக்கென்று இஸ்லாமிய அமைப்புகள், பைத்துல்மால், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிரபல அரசியல் கட்சிகள் அமையப்பெற்ற ஊர்களில் அதிரைப்பட்டினமும் ஓன்று இவ்வூரில் பிரபல தொழில் அதிபர்கள், கல்வி சீமான்கள், கொடை வள்ளல்கள், மார்க்க அறிஞர்கள், கல்வி பயின்ற மேதைகள், கணினி வல்லுனர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், சட்டம் தெரிந்த வல்லுனர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டுருக்கிற ஊரில்.........”மதுக்கடைகள்” !

இவை ஓன்று, இரண்டாகி, மூன்று, நான்காகி, ஐந்து என பெருகிக்கொண்டே வருவது மிகவும் வேதனையளிக்கக் கூடியது மட்டுமல்ல ஊரிலுள்ள குடும்பங்களையே அழிவின் பாதையில்
அழைத்துச் சென்றுவிடும்.

இடம் : பட்டுக்கோட்டை ரோடு ( பாத்திமா நகர் அருகே )

மதுக்கடை + கூடம்” ஜருராகத் தயாராகிறது நமதூருக்கே பெருமை சேர்க்கக்கூடிய மிகப்பெரிய மருத்துவமனை எனும் சிறப்பைப் பெறுகிற “ஷிஃபா” அருகே............
மேலும் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிற சாலைப்பகுதி, அதிரை மின்சார வாரியம், இன்டேன் காஸ் நிறுவனம் போன்றவை அமைந்துள்ளப் பரபரப்பானப் பகுதியின் அருகே...........


இடம் : E.C.R சாலை ( பெரிய ஏரி அருகில் )
ஒரு நிமிடத்திற்கு ஏறக்குறைய 60 வாகனங்கள் கடந்து செல்லக்கூடிய இரு வழிச்சாலைப்பகுதி E.C.R. இச்சாலையில் நமதூரைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் சிலர் அதிகாலைப்பொழுதிலும் வேறுசிலரோ மாலை நேரங்களிலும் “வாக்கிங்” “சைக்கிளிங்”,”ஜாக்கிங்” போன்றவற்றை செய்வதுண்டு.
மேலும் இப்பகுதியில் அதிகமாக விபத்துக்கள் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு நமது அரசு மருத்துவமனையின் இரவு நேர சேவை மற்றும் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டி நமதூரைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் ஒரு சில அரசியல் கட்சிகளின் கோரிக்கையாக அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் இவ்வேளையில் அப்பகுதியில் குடும்பத்தையே அழித்துவிடக்கூடிய “மதுக்கடை”

சமீபத்தில்தான் மதுவின் பாதிப்புகள் மற்றும் தீர்வுகளைப் பற்றி “குடிக்காதே”எனும் தலைப்பிட்டு விழிப்புணர்வைத் தூண்டும் விதமாகக் கட்டுரை ஓன்றைப் பதிந்த எனக்கே இக்கூடங்களைக் கண்டதும் மிகவும் மன வேதனையடையச் செய்ததே...............!

அப்போ உங்களுக்கு எப்படி இருக்கும் ?


நமதூர் பிரபல அரசியல் கட்சிகளே !
சமுதாய அமைப்புகளே !!
இயக்கவாதிகளே !!!
தொண்டு நிறுவனங்களே !!!!
சமூக ஆர்வலர்களே !!!!!
மாணவ, மாணவிகளே !!!!!!
பொதுமக்களே !!!!!!!

எழுந்துருங்கள் ! தயாராகுங்கள் !! புறப்படுங்கள் !!! இதுபோன்ற குடும்பக்கொல்லியை ஊரைவிட்டு துரத்துவதற்கென்றே.................

சேக்கனா M. நிஜாம்

இறைவன் நாடினால் ! தொடரும்......................
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.