அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Wednesday, March 7, 2012

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்



இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியிலிருந்து அக்கட்சியின் முன்னாள் தலைவர் ஏ.கே.ஏ.அப்துஸ் ஸமத் மகளும், முஸ்லீம் லீக் கட்சியின் மகளிர் அணி அமைப்பாளருமான ஃபாத்திமா முஸப்பர் அக்கட்சியிலிருந்து உட்கட்சி விவகாரங்களினால் வெளியேற்றப்பட்டார்.



இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டதாவது-

1906-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி தொடங்கப்பட்ட அகில இந்திய முஸ்லிம் லீக் 1948-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உருவானது.



இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உருவாக்கப்பட்ட அன்றைய காலகட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநிலப் பெயர்களில் செயல்பட்டு வந்தது.. இந்திய யூனியன் முஸ்லிம்லீகிற்கு இ.அஹமது சாஹிப் தலைவராகவும், பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகிய நான் பொதுச்செயலாளராகவும், தேர்ந்தெடுக்கப்பட்டதும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நாடு முழுவதும் ஒரே பெயரில் இயங்குவது என முடிவு செய்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டோம்.



இதற்காக கேரள மாநிலத்தின் பிரைமரி, மாவட்ட, மாநில அமைப்புக்கள் முறைப் படியாக தீர்மானங்கள் நிறைவேற்றி அம்மாநிலத்தின் 20 எம்.எல்.ஏக்கள், 2 எம்.பி.க்கள், 4 அமைச்சர்கள் என அத்தனை பேரின் வாக்குமூலங்களும் பெற்று தேர்தல் ஆணையத்திடம் முறைப்படியாக சமர்ப்பிக்கப்பட்டது.



ஆனால், தாவூத் மியாகான், ஃபாத்திமா முஸப்பரால் தலைவர் என சொல்லப்படும் உ..பி.யின் பஷீர் அஹமதுகான் ஆகியோர் இதற்கு ஆட்சேபணை தெரிவித்து தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்தனர். அனைத்தையும் பரிசீலனை செய்த இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் மாதம் 3-ம் தேதி தெளிவான ஆணை பிறப்பித்தது.

அந்த ஆணையின்படி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுகிறது என்றும், முஸ்லிம் லீக் கேரள ஸ்டேட் கமிட்டி என்னும் பெயர் தேர்தல் ஆணையத்தின் அரசியல் கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாகவும், கேரளாவில் அங்கீகரிக்கப்பட்ட `ஏணி சின்னம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஒதுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



அந்த ஆணையில் எம்.ஜி. தாவூத் மியாகான், ஃபாத்திமா முஸப்பரால் தலைவராக சொல்லப்படும் பஷீர் அஹமதுகான் ஆகியோர் தனி நபர்கள் என்றும், அவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் உறுப்பினர்கூட இல்லை. இந்த கட்சி பற்றி அவர்கள் ஆட்சேபணை தெரிவிப்பதற்கு தகுதி இல்லை என்று தெளிவுபடுத்தி விட்டது.



எனவே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரையும், பச்சிளம் பிறைக்கொடியையும் நாங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இவைகளைத் தவறாக பயன்படுத்துவோர் மீது நாஙகள் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

மார்ச் 10 இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 65-வது நிறுவன தினம். இந் நாளை தேர்தல் ஆணையத்தின் அங்கீகார வெற்றி விழா நாளாக நாடு முழு வதும் கொண்டாட உள்ளோம். தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊர்களில் பச்சிளம் பிறைக் கொடிகள் ஏற்றப்படுகின்றன. 60-க்கும் மேற்பட்ட ஊர்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.



செய்தியாளர்கள் சந்திப்பின் போது மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், காயிதெமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான், எம்.பி. மாநிலச் செய லாளர்கள் காயல் மகபூப், கமுதி பஷீர், திருப்பூர் சத்தார், ஆகியோர் உடனிருந்தனர்.


நன்றி இந்நேரம்.காம்

Tuesday, March 6, 2012

பிளஸ் 2 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற.......( இன்ஷா அல்லாஹ் ! )

உயர் கல்விக்கும், எதிர்கால வாழ்வுக்கும் அடிப்படையாக இருப்பதால் பிளஸ்-2 தேர்வில் கிடைக்கும் ஒவ்வொரு மதிப்பெண்ணும் விலைமதிக்க முடியாதது.

எனவே மார்ச் 8-ம் தேதி தொடங்கும் பிளஸ்-2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற பாடத்தைப் புரிந்து படிப்பதும், திட்டமிட்டு தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்வதும் அவசியமாகிறது. முக்கிய பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெறும் வழிமுறைகள் குறித்து சிறப்பாசிரியர்கள் கூறும் அறிவுரைகள்:

இயற்பியல்:

இயற்பியலில் 1, 2, 4, 6, 7, 8, 9 ஆகிய பாடங்களில் இருந்தே 90 சதவீத மதிப்பெண்களுக்கான கேள்விகள் இடம்பெறும். 10 பாடங்களில் 6 பாடங்களைப் படித்தாலே 147 மதிப்பெண்களைப் பெற முடியும். 1, 4, 6, 8 ஆகிய 4 பாடங்களில் மட்டும் 100 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும்.

இரண்டுக்கும் இடையிலான வேறுபாடுகள், பண்புகள் குறித்த கேள்விகளைப் படிக்கும் போதும், பதிலளிக்கும்போதும் அட்டவணை வடிவில் அமைத்துக் கொள்ள வேண்டும்.
10 மதிப்பெண் வினாக்களைப் பொறுத்தவரை முதல் இரண்டை நிதானமாகவும், அடுத்த இரண்டு விடைகளை வேகமாகவும் எழுத வேண்டும். இல்லாவிட்டால், 5, 3 மதிப்பெண் வினாக்களுக்கு நேரம் கிடைக்காது.

இயற்பியலில் சூத்திரங்கள் எழுதினால் ஒரு மதிப்பெண்ணும், 10 மதிப்பெண் வினாவுக்கான மையக் கருத்தை எழுதினால் 2 மதிப்பெண்களும் கிடைக்கும். எனவே, இவற்றை மனதில் வைத்துப் படிக்க வேண்டும் என்கிறார் சென்னை ஆழ்வார்ப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலை (இயற்பியல்) ஆசிரியர் ஏ.சங்கர்.

உயிரியல்:

உயிரியலில் படம் வரையக் கூடிய வகை வினாக்களைத் தேர்வு செய்தால் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். படங்களுக்கும் அதற்கான விளக்கத்துக்கும் தனித்தனியே மதிப்பெண் உண்டு.

படம் எளிமையாக இருந்தாலும் விளக்கத்தை மட்டும் தெளிவாக எழுதினால் போதும். வினாக்களுக்கான முக்கிய விளக்கத்தை மட்டும் எழுதினால் போதும்.
விடைகள் தெளிவாகவும், ஒன்று, இரண்டு என்று குறிப்பிட்டு விளக்கங்களைப் பிரித்து எழுதுவதும் அதிக மதிப்பெண்களைப் பெற்றுக் கொடுக்கும்.

தாவர உள்ளமைப்பியல், தாவர செயலியல் பாடங்களில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்கிறார் காஞ்சிபுரம் மாவட்டம், செம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலை (உயிரியல்) ஆசிரியர் ஏ.காசி.

கணிதம்:

கணிதப் பாடத்தைப் பொறுத்தவரை முதலில் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். பின்னர் 10 மதிப்பெண் வினாக்களில் தெரிந்தவற்றை முதலில் எழுத வேண்டும். பிறகு 6 மதிப்பெண் வினாக்களில் தெரிந்தவற்றுக்கு முதலில் விடையளிக்க வேண்டும். அதன் பிறகே விடுபட்டவற்றுக்கு விடையளிக்க வேண்டும்.

அணிகளும் அணிக்கோவைகளும் பாடத்தில் கேட்கப்படும் 10 மதிப்பெண் வினாவுக்கு முடிந்தவரை கடைசியில் விடையளிப்பதே நல்லது.

ஏனெனில் அதில் பிளஸ், மைனஸ் குறியீடுகள் அதிகம் இடம்பெறும். அதில் ஏதேனும் சிறிய தவறு செய்தால் விடை தவறாகும்.

கணித சூத்திரங்களை மாறுபட்ட கலரிலோ, பெட்டிகள் போட்டோ தனியாகக் காட்டலாம். ஏனெனில் கணிதத்தில் ஸ்டேஜ் மதிப்பெண்கள் எனப்படும் ஒவ்வொரு வரிகளுக்குமான மதிப்பெண் முறை உள்ளது.

3 மணி நேரத் தேர்வை 2.45 மணி நேரத்திலேயே முடித்துவிட்டு எழுதியவற்றை சரிபார்த்துக் கொண்டால் முழு மதிப்பெண்களையும் பெற முடியும் என்கிறார் சேலம் குகை மேல்நிலைப் பள்ளி முதுநிலை (கணிதம்) ஆசிரியர் எம்.பனிமேதாஸ்.

வேதியியல்:

ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்கும்போது சரியான விடை அல்லது அதற்கான எண்ணை எழுதினாலே போதும்.

3 மதிப்பெண் வினாக்களுக்கு பாரா வடிவில் பதில் எழுதாமல் ஒன்று, இரண்டு என்று பாயிண்டுகளாக பிரித்துக் கொடுத்தாலே போதும்.

"பீனால்" தயாரிக்கப்படும் முறை பற்றிய வினாவுக்கு அதற்கான சமன்பாடுகளை எழுதி அதற்கும் கீழே அவற்றுக்கான வேதியியல் பெயரை மட்டும் எழுதினாலே போதும்.

உரிய சமன்பாடுகளை எழுதி அதற்கான விளக்கத்தை எழுதினாலே போதுமானது. 10 மதிப்பெண் வினாவில் கேள்வி எண் 70-க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும். அந்த கேள்விக்கு விடையளிக்க அனைத்தையும் படித்திருந்தால் மட்டுமே முடியும். வேதியியலைப் பொறுத்தவரை படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தேவையில்லை.

உதாரணமாக குரோமியம் பிரித்தெடுத்தல் என்பது போன்ற கேள்விகளுக்கு படங்களை பேனாவிலேயே வரைந்து கொள்ளலாம். பாகங்களையும் தனியாக எழுதாமல் அம்புக் குறியிட்டு அங்கேயே எழுதலாம். பக்கத்தை அழகுபடுத்துவதற்கு வேதியியலில் மதிப்பெண் இல்லை. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிராமப்புற மாணவரின் விடைத்தாள் சாதாரண கையெழுத்துடன், சமன்பாடு வரும் இடத்தில் பேனா, பென்சில், ஸ்கெட்ச் கொண்டு குறியீடு இடப்படாமலும் இருந்தது.

ஆனால், அந்த விடைத்தாளுக்கு 150-க்கு 150 மதிப்பெண் கிடைத்தது என்கிறார் நுங்கம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதுநிலை (வேதியியல்) ஆசிரியர் ஜி.கனகராஜ்.

தவறான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் கிடைக்குமா ?

எழுத்துப் பிழையாலும், அச்சுப் பிழையாலும் பொதுத் தேர்வு வினாத் தாள்களில் அர்த்தம் இல்லாத அல்லது தவறான கேள்விகள் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அவ்வாறு இடம்பெறும் கேள்விகளுக்கு அது தொடர்பான ஏதேனும் பதில் எழுதியவர்களுக்கு மட்டுமே அந்த கேள்விக்கான முழு மதிப்பெண் வழங்கப்படும்.

வெறுமனே கேள்வி எண்ணை மட்டும் எழுதிவிட்டு, பதிலுக்கான இடத்தை காலியாக வைத்திருப்பவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது என்று தேர்வுத் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கேள்வி தவறானதாகத் தோன்றும்பட்சத்தில் அந்தப் பாடம் தொடர்பான பதிலையோ, கேள்விக்கான பதில் இதுவாகத் தான் இருக்கக் கூடும் என்று தோன்றும் பதிலையோ எழுதிவிட்டு வருவதே நல்லது என்றார் அவர்.


Source : Day Magazine

Saturday, March 3, 2012

புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க அழைப்பு !

தமிழகத்தில் இருந்து புனித ஹஜ் பயணம் செல்ல விரும்பும் இஸ்லாமியர்கள், தமிழ்நாடு மாநில ஹஜ் குழு அலுவலகத்தில் இருந்து விண்ணப்பத்தினைப் பெற்று பூர்த்தி செய்து ஏப்ரல் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் இயங்கும் அலுவலகத்தில் நேரடியாகச் சென்று விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது கீழ்க்கண்ட இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை நகல் எடுத்தும் பயன்படுத்தலாம். பன்னாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் தரவிறக்கம் செய்து கொள்ளவேண்டிய முகவரி:

Friday, March 2, 2012

அதிரை வழியாக அகல இரயில் பாதை - டெண்டர் அனுமதி..



விடிந்தது இரயில் பொழுது !
திருவாரூர் காரைக்குடி மார்க்கமாக செல்லும் இரயில் பாதையை அகல இரயில் பாதையாக மாற்றும் பணிக்கான ஆயத்தம் துவங்கிவிட்டது, இன்று அதற்கான டெண்டர்களுக்கு முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

.
Southern Railway வெப் தளத்தில் டெண்டர் விபரம்(Tender Details) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

வெகு விரைவில் அந்தப் பணிகள் தொடங்க இருக்கிறது, அதிரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையும் கனவும் நனவாகும் சூழல் கை கூடி வந்திருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, March 1, 2012

“சர்வதேச” வாகனம் ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி ?

இந்தியாவில் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை வைத்துக் கொண்டு, ஒருவர் அமெரிக்கா சென்றால் அங்கே அவர் வாகனம் ஓட்ட முடியுமா ?
இந்தியாவிலிருந்து, அமெரிக்காவுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ செல்பவர்கள், அங்கே சென்றவுடனே வாகனம் ஓட்ட வேண்டிய அவசியம் ஏற்படலாம். அந்த நாட்டில் டிரைவிங் லைசென்ஸுக்கு விண்ணப்பித்து, அது கிடைக்கும் வரை காத்திருக்க முடியாத சூழ்நிலையில், இங்கே இருந்து செல்லும்போதே இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பர்மிட் வாங்கிக்கொண்டு செல்லலாம். இந்தியாவுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, அந்த டிரைவிங் பர்மிட், அந்த நாட்டில் ஓராண்டு காலத்துக்குச் செல்லுபடியாகும்.
“சர்வதேச” வாகனம் ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி ?
ஒருவர் நிரந்தர டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தால் மட்டுமே, இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட் லைசென்ஸுக்கு விண்ணப்பிக்க முடியும். அதற்குரிய 4ஏ விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அதனுடன் டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், விண்ணப்பதாரர் எந்த நாட்டுக்குச் செல்கிறாரோ அதற்குரிய விசா, பயண டிக்கெட் பிரதி, மருத்துவச் சான்றிதழ், மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் ஆகியவற்றை இணைத்து ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த அன்றே, இன்டர்நேஷனல் லைசென்ஸ் வழங்கப்பட்டுவிடும்.

Thanks : Shahabudeen

ரத்தக்கொதிப்பு (Hypertension) அறிவோம்!

அதிக இரத்த அழுத்தத்தை இரத்தக் கொதிப்பு (Hypertension) என்று கூறுகிறோம். இரத்த அழுத்தம் குறைந்தால் லோ பிரஷர் (Hypo-tension) என்று கூறுகிறோம். இரத்த அழுத்தம், இரத்த குழாய்களின் தன்மை, இரத்தத்தின் தன்மை, இருதய துடிப்பின் அளவு போன்றவற்றிற்கேற்ப மாறுபடும். சிஸ்டாலிக் பிரஷர் இரத்தக் குழாய்களின் தன்மையை காட்டுவதாகும். உடற்பயிற்சி, கடின வேலைகள், ஓடுதல், கோபம், பயம் போன்ற உணர்ச்சிகளின் போது இதயத்துடிப்பை அதிகமாக்கி தற்காலிக இரத்த குழாய்கள் இரப்பர் தன்மையுடன் விளங்கும். வயது ஆக ஆக நரை எப்படி தோன்றுகிறதோ அதுபோல குழாய்கள் கடின தன்மை பெறுகின்றன. இரத்த அழுத்தத்தை கண்டிறிய ஸ்பிக்மோ மோன மீட்டர் என்ற கருவி பயன்படுகிறது. பொதுவாக நடுத்தர வயதினர்களுக்கு 120/80 mm of Hg. இரத்த அழுத்தம் வயதிற்கேற்ப மாறுபடும் சிஸ்டோரிக் பிரஷர் 100-140 வரை இருக்கலாம். டயஸ்டோஸிக் பிரஷர் 60௯0 வரை இருக்கலாம். 

அறிகுறிகள்: 
  • லேசான தலை சுற்றல்
  • மயக்கம்
  • தூக்கமின்மை 
  • படபடப்பு 
  • தலைவலி
வயதானவர்கள் அவ்வப்பொழுது மருத்துவரிடம் இரத்த அழுத்தத்தை சோதித்துக் கொள்வது நல்லது ஒழுங்காக மருத்துவம் பார்த்துக் கொண்டால் இரத்த கொதிப்பின் பின் விளைவு நோய்களின் மாரடைப்பு, பக்கவாதம் சிறுநீரக பழுது போன்றவற்றிலிருந்து காத்துக் கொள்ளலாம்.


காரணங்களும், நிவர்த்திக்கும் முறைகளும்: 

1. கொலஸ்ட்ரால்:- 
நாம் உண்ணும் உணவில் நடுத்தர வயதிற்கு பின் கொழுப்பு சத்து மிகுந்த உணவு பொருள்களை தவிர்த்தல் நன்று. உணவில் மாமிச வகைகள், மீன், முட்டை முதலியவைகளை நீக்கி சைவ உணவு சாப்பிடலாம், மூட்டை வெள்ளை கரு சாப்பிடலாம். எண்ணெய் பதார்த்தங்களை குறைக்கவும். அதிக கொழுப்பு சத்து உடம்பின் பல்வேறு பாகங்களில் சேமிக்கப்படுகிறது. இரத்த குழாய்களின் உடற்பகுதிகளிலும் கொலஸ்ட்ரால் படிந்து இரத்தக் குழாயின் துவாரத்தை குறைத்துவிடுகின்றன. எனவே இரத்த அழுத்தம் அதிகமாக ஆரம்பிக்கின்றது. பெரும் பான்மையான இரத்த கொதிப்பு நோயாளிகள் இந்த வகையை சார்ந்தவர்கள்தான். இரத்தத்தில கொலஸ்ட்ரால் 250/100-க்கு அதிகமானால் ஆபத்து. 

2. புகை பிடித்தல்:-
சிகரெட், பீடி, சுருட்டு, புகையிலை, பொடிபோடுதல் இவையாவும் இரத்த குழயை பாதிக்கும். இரத்த குழாயின் சுருங்கி விரியும் தன்மையை இழக்க செய்து கடினமாக மாற்றிவிடும். பெரும்பான்மையான நோயாளிகள் புகை பழக்கத்தை விட்டவுடன் பிரஷர் நார்மலுக்கு வந்துவிடும். 

 3. சர்க்கரை வியாதி:-
சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சரியான சிகிச்சை இல்லாமல் இருந்தால் இரத்தக் குழாய்களை பாதிக்கிறது. ஆரம்ப காலங்களில் சீராக தோன்றும் இரத்த அழுத்தம் படிப்படியாக அதிகமாகும். நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை சிகிச்சையின் போது 180 மி.கி. குறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது.


 4. உடல்பருத்தலும், உடற்பயிற்சி இன்மையும்:-
உடற்பயிற்சியின்மை உடல்பருமனை கூட்டுகின்றன. உடல் பருமனை சமாளிக்க இருதயம் அதிகமான வேலை பளுவை ஏற்று நாளடைவில் இரத்த கொதிப்பு, சர்க்கரை வியாதி போன்ற பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும் இதயம் நாளடைவில் பலவீனமடைகிறது. மதுபழக்கம், பகலில் தூங்குதல் போன்றவைகளும் உடற்பளுவை கூட்டுகின்றன. சிறுநீரக கோளாறுகள், நாளமில்லா சுரப்பிகள் சீர்கேடுகளினாலும் இரத்த கொதிப்பு தோன்றலாம். சுரப்பிகள் சீர் கேடுகளினாலும் இரத்த கொதிப்பு தோன்றலாம். பிரசவ காலத்தில் பெண்களுக்கு தற்காலிகமாக இரத்த கொதிப்பு ஏற்படும். சில பெண்களுக்கு கடைசி மாதங்களில் முகம், கை கால்கள் வீக்கம் இருந்தால் பிரஷர் அதிகமாக இருக்கும். டாக்சீமியா எனப்படும் இந்தக் குறைக்கு தகுந்த மருத்துவம் செய்யாவிடில் பிரசவத்தின் போது ஜன்னி போன்ற ஆபத்தான நிலைமையை ஏற்படுத்தலாம்.

 5. உணர்ச்சி வசப்படுதல்:-
அடிக்கடி கோபப்படுதல், படபடப்புடன் இருத்தல், ஒரு செயல் நடக்கம் முன்பே பல கற்பனைகளை செய்து கொண்டு அனாவசியாமாக பயப்படுதல், எப்போதும் ஒரு பதற்றத்துடன் இருத்தல் போன்றவைகளும் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தலாம். இதற்கு ஹோமியோபதி மருந்துகள் உகந்தவை தியானம், யோகா போன்ற மனநல பயிற்சிகளையும் மேற்கொண்டு இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்.

 பின்விளைவுகள்: 

1. மாரடைப்பு: 
இரத்த கொதிப்பு உள்ள நோயாளிகளின் இதய இரத்தக் குழாய்களை ரப்பர் தன்மை குறைவதும், கொலஸ்ட்ரால் போன்ற கொழுப்பு கட்டிகள் இரத்த குழாயை அடைப்பதாலும் மாரடைப்பு தோன்றுகிறது.


2. மூளையில் இரத்த குழாய்களின் பாதிப்பு:
மூளையில் உள்ள ரத்த குழாய்கள் பாதிக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட இரத்தத்திற்கு தக்கவாறு கைகள், கால்களை செயலிழக்க செய்து பக்கவாதம் போன்ற நரம்பு மண்டல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

3. சிறுநீரக கோளாறுகள்: 
தொடர்ந்து இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு நாளடைவில் சிறுநீரக பழுது ( சுநயேட கயடைரசந ) ஏற்படலாம். இரத்த குழாய்கள் சுருங்கி செயலிழக்கமின்றி சிறுநீரில் அல்புமினை வெளியேற்றும் இரத்ததில் யூரியா 40 மி.கி. மேல் அதிகமாகும். நாளடைவில் கால்களில் வீக்கமும் ஏற்படலாம்.

 4. இதய செயலின்மை (Ventricular failure) 
அதிக நாள்பட இதயம் அதிகமாக வேலை செய்வதால் பலவீனமடைந்து இடது வென்டிரிக்கிள் வீங்க ஆரம்பிக்கும். படிப்படியாக ஹார்ட் பெய்லியர் ஏற்பட ஆரம்பிக்கிறது. இதபோல இரத்த கொதிப்பு பல்வேறு உபாதைகளுக்கு அடிகோலுகிறது.
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.