நமதூரில் மக்கள்தொகையை விட வீடுகள் தான் அதிகமாக உள்ளதோ என்று சில நேரங்களில் எண்ணுவதுண்டு.
இதனால் ஒரு தனி மனிதனுடைய உழைப்பு வீணாக போய்கிறது. இது இஷ்ராப் என்கிற விரயத்திலும் போய் முடிகிறது.
ஆனால் இது அதிரை போன்ற இடங்களில் சாத்தியம் ஆகுமா என்று தெரியவில்லை. செங்கல், ஜல்லி, மண், ஆகியவற்றை வெளியே வைப்பதால் ஊரில் இருக்கும் சிறுவர்களில் சிலர் மண்ணில் சரிந்துக் கொண்டும் மற்றும் சிலர் ஜல்லியை சரிப்பதும், நாய்களைக் கண்டால் ஜல்லி கற்களை எடுத்து அதனை அடிப்பதும் வழக்கமான நிகழ்வுகளாக இன்றும் தொடர்கிறது.
மேலும் சாலையில் மண்ணும் கல்லுமாக சரிந்துக் கொட்டிக்கிடக்கும்போது விபத்துக்கள் எற்படுகிறது. இதனை நமதூரில் உள்ள அனைத்து முஹல்லா வாசிகளும் மற்றும் கட்டட கான்ட்ராக்டர்கள் அனைவரும் இது போன்ற போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மணல் ஜல்லி போன்றவற்றை வீண்விரயம் செய்யாமல் தன் கட்டடத்துக்கு உள்ள போட வேண்டும். அனைத்து மக்களும் நமது ஊரில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தெருக்களை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் ஆக்க அனைவரும் முன்வரவேண்டும்.
அதிரை பிபிசிக்காக நிருபர்அப்துல்லா
நமது ஊரிலுள்ள தெருக்களில் வீடு கட்டுவதற்காக செங்கல், ஜல்லி, மண், ஆகியவற்றை மனையின் வெளியில் அடுக்குவது, கொட்டுவது இதுதான் நம்மூரின் பழக்கம். ஆனால் சென்னை மாநகரம் போன்ற இடங்களில் செங்கல், ஜல்லி, மண், ஆகியவற்றை மனையின் உள்ளே கொண்டு செலுத்துவார்கள்.
அவற்றை கட்டடத்தின் வெளியே (ரோட்டில்) பார்ப்பது கடினம். அவற்றை வெளியில் வைத்தால் முனிசிபாலிட்டி அலுவலகத்திலிருந்து அதனை அகற்ற கெடு கொடுப்பார்கள். கெடுவிதிக்கப்பட்டு கட்டட உரிமையாளர் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் கடும் அபராதம் விதிப்பார்கள். சிலநேரங்களில் அந்த கல் மண் போன்றவற்றை உரிமையாளர் அப்புறப்படுத்தாவிட்டால் அவற்றை பறிமுதல் செய்து பின் அபராதமும் விதிக்கப்படுவதுண்டு.இதனால் ஒரு தனி மனிதனுடைய உழைப்பு வீணாக போய்கிறது. இது இஷ்ராப் என்கிற விரயத்திலும் போய் முடிகிறது.
ஆனால் இது அதிரை போன்ற இடங்களில் சாத்தியம் ஆகுமா என்று தெரியவில்லை. செங்கல், ஜல்லி, மண், ஆகியவற்றை வெளியே வைப்பதால் ஊரில் இருக்கும் சிறுவர்களில் சிலர் மண்ணில் சரிந்துக் கொண்டும் மற்றும் சிலர் ஜல்லியை சரிப்பதும், நாய்களைக் கண்டால் ஜல்லி கற்களை எடுத்து அதனை அடிப்பதும் வழக்கமான நிகழ்வுகளாக இன்றும் தொடர்கிறது.
மேலும் சாலையில் மண்ணும் கல்லுமாக சரிந்துக் கொட்டிக்கிடக்கும்போது விபத்துக்கள் எற்படுகிறது. இதனை நமதூரில் உள்ள அனைத்து முஹல்லா வாசிகளும் மற்றும் கட்டட கான்ட்ராக்டர்கள் அனைவரும் இது போன்ற போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மணல் ஜல்லி போன்றவற்றை வீண்விரயம் செய்யாமல் தன் கட்டடத்துக்கு உள்ள போட வேண்டும். அனைத்து மக்களும் நமது ஊரில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தெருக்களை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் ஆக்க அனைவரும் முன்வரவேண்டும்.
அதிரை பிபிசிக்காக நிருபர்அப்துல்லா
5 பின்னூட்டங்கள்:
இந்த விஷயத்தை நமதூர் சங்கங்களில் முன்வைக்க விரும்புகிறேன்...
உங்கள் படமும்/விளக்கமும் , கோரிக்கையும் படித்து சந்தோசம். நம் அதிராம்பட்டினம் சரியான இளைஞர்களை தன்னகப்படுத்தி வைத்திருக்கிறது என்பதற்க்கு உங்கள் ஆர்டிக்கில் ஒரு உதாரணம்.
மக்களின் நலனுக்காக அக்கறையுடன் விவரிக்கப்பட்டுள்ள ஒரு நல்ல ஆக்கம். சகோதரர் அப்துல்லாவிற்கு என் வாழ்த்துக்கள். இது போன்று விழிப்புணர்வு மிக்க பல ஆக்கங்களை தர வேண்டும், உங்களின் பணி தொடரட்டும்.
அட !
வீதிகளின் நிழற்படங்கள் நிஜத்தை சொல்கிறதே !
ஓரிரு வீதிகளின் விதியை மட்டும் சொல்லாமல் எல்லா வீதிகளின் நிஜத்தையும் வெளிச்சத்துக்குள் கொண்டு வாருங்கள் !
வெல்டன் !
படம்சொல்லும் உண்மைகள் பாடமூட்டும் நன்மைகள்
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment