அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Sunday, August 14, 2011

அதிரை முஸ்லிம் இளைஞரின் தேசப்பற்று!!

அதிரையைச் சேர்ந்தவர் மீரான்.  அதிரையிலேயே உள்ளூர் மின்சாதன, ஹார்டுவேர் கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்து பின் சுயமாக மின்சாதன கடையை தொடங்கி நடத்தி வருகிறார்.

இவருக்கு சிறு வயதிலிருந்து ஒரு ஆசை. தனது தாய்நாட்டிற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று.

சிறு வயதிலேயே தென்னம்பாளையில் சிறு தோனிகளை செய்து குளத்திலும், மழைக்காலங்களில் வீதியில் ஒடும் தண்ணீரிலும் ஓட விட்டு விளையாடுவது இவரது பொழுதுபோக்குகளில் ஒன்று. 


தனது தொழில் அனுபவங்கள் கைகொடுக்க இவர் உருவாக்கியிருப்பது இந்திய இராணுவக் கப்பல் மாதிரி ஒன்றை. இதற்கு INDIA SHIP ADIRAI என்று பெயரிட்டிருக்கிறார். இதற்காக இவர் செலவழித்ததோ சுமார் 20,000 ரூபாய்க்கும் மேல் என்கிறார்.


தனது மாதிரிக் கப்பல் பள்ளி மாணவர்களுக்கு நாட்டுப்பற்றையும், கண்டுபிடிப்பு அறிவையும் வளர்க்க உதவும் என்று நம்புகிறார். இதனை பள்ளிகளில் காட்சிப்படுத்த இருக்கிறார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்புகளையும், தியாகங்களையும் வரலாற்றில் மறைத்தும் திரித்தும் எழுதப்பட்டுள்ள நிலையில் இந்த அதிரை முஸ்லிம் இளைஞரின் நாட்டுப்பற்றின் விளைவாக உருவாகியுள்ள இம்முயற்சி முஸ்லிம்கள் இந்திய இறையாண்மையில், நாட்டுப்பற்றில் நம்பிக்கை வைத்து முன்னணியில் இருப்பவர்கள் என்று பறைசாற்றியுள்ளார்.

சகோ. மீரானுக்கு அதிரை பிபிசியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இஸ்லாமிய நிகழ்ச்சிகள் இணையத்தில்... !


அன்பான சகோதர சகோதரிகளே
நுட்ப வளர்ச்சியால் கிடைத்திருக்கும் இணையத்தை (internet) இந்த புனித ரமளான்மாதத்தில் மிகவும் பயனுல்ல வகையில் பயன்படுத்திக்கொள்ள நல்லதை மட்டுமே எடுத்துச் சொல்லும் பயனுல்ல இணைய இஸ்லாமிய தொலைக்காட்சிகள் / காணொளிகள், மற்றும்ரமளான் சிறப்பு சொற்பொழிவுகளின் நேரலைகளுக்கான சுட்டிகளை இங்கே பதிந்திருக்கிறோம்.

உலகலாவிய இஸ்லாமிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (இணையத்தில்):
· MAKKAH LIVE மக்கா நேரலை (24x7 திருக்குர்ஆன்) : http://adiraitv.blogspot.com/2011/07/makka-live-new-link.html

· MADINA LIVE மதீனா நேரலை (24x7 ஹதீஸ்): http://adiraitv.blogspot.com/2011/07/madina-live.html

· ISLAM TV LIVE இஸ்லாம் டிவி (24x7ஆங்கிலம்): http://adiraitv.blogspot.com/2010/10/islam-tv.html

· HUDA TV LIVE ஹுதா டிவி (24x7 ஆங்கிலம்): http://adiraitv.blogspot.com/2010/11/huda-tv.html

· PEACE TV LIVE பீஸ் டிவி (24x7 ஆங்கிலம்): http://adiraitv.blogspot.com/2010/11/peace-tv-live_20.html

இணையத்தில் நேரலை நிகழ்ச்சி:
  • ரமளான் தொடர் சொற்பொழிவுகளின் நேரலை (தமிழ்):
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து துபாய் நேரம் இரவு 10:00மணி முதல் 11:00மணிவரை -  மவ்லவி முஹம்மது நாசர் அவர்களின் தொடர் மார்க்க சொற்பொழிவினை http://adirainirubar.blogspot.com/ http://aimuaeadirai.blogspot.com http://adiraibbc.blogspot.com வலைத்தளங்களிலும் நேரலையாக கண்டும் கேட்டும் பயன்பெறலாம்.
  •  அதிரை தக்வா பள்ளியிலிருந்து இந்திய நேரம் இரவு 10:00மணி முதல் 11:00 மணிவரை – ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயான்  http://adiraibbc.blogspot.comவலைத்தளத்திலும் ஒலி-அலை நேரடி ஒலிபரப்பாக மார்க்க சொற்பொழிவுகளை கேட்டு பயன்பெறலாம்.
இஸ்லாமிய இணைய வானொலி:

  • Zazil FM (திருக்குர்ஆன் சுன்னா அடிப்படியிலான முதல் தமிழ் இணைய வானொலியின்,மார்க்க சொற்பொழிவுகள், கேள்வி பதில்கள், சிறந்த  அறிவுரைகள் என்று இந்திய நேரம் மாலை 04:00மணி முதல் இரவு 12:00 மணி வரையிலும் அதனைத் தொடர்ந்து 24x7 நேரமும் திருக்குர்ஆன் தர்ஜுமாநபிகளாரின் வாழ்க்கை வரலாறு ஒலி அலையாக  நம் அதிரைநிருபர் http://adirainirubar.blogspot.com மற்றும்அதிரைமணம் வலைத்தளத்திலும்  ஜாஜில் பன்பலை அலைவரிசையின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் கேட்டு பயன்பெறலாம்.
அல்லாஹ்வின் தூய மார்க்கத்தை அறிந்து நம் வாழ்வில் பாவமான செயல்களிலிருந்துநம்மை தூரமாக்கிநன்மைகளின் பக்கம் நாம் நெருக்கமாக்கி கொண்டு அன்றாடவாழ்க்கையை நேர்வழிப்படுத்த எல்லாம் வல்ல அல்லாஹ் நேர்வழிகாட்டுவானாக.
நன்றி 

"தமிழ் முழக்கம்' செய்த கவி.காமு.ஷெரீப்!



கவி.காமு.ஷெரீப், கு.சா.கிருஷ்ணமூர்த்தி, சங்கரதாஸ் சுவாமிகள் ஆகியோர் இன்று மறக்கமுடியாத கவிஞர்கள். லட்சத்துக்காக எழுதாமல், லட்சியத்துக்காகக் கவிதைகள் எழுதியவர்கள். திரைப்படங்களில் பிரபலமாகாமலேயே இன்றும் அந்தக் கவிதைகளை முணுமுணுக்கும் தமிழ்மக்கள் இருக்கிறார்கள்.

கவி.காமு.ஷெரீபைத் தமிழ்நாடு முற்றிலும் உணரவில்லை என்பதைத் தெரிவிக்கவே அவருடன் பழகிய, அவர் காலத்தே வாழ்ந்த நான், அவரைப் பற்றி மறக்க முடியாத சிலவற்றைப் பதிவுசெய்ய விரும்புகிறேன்.

"பணம் பந்தியிலே குணம் குப்பையிலே' - இதை எழுதியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம். "சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?' - இந்த வரிகளைக் கேட்கும்போது மெய்மறக்கிறோம். இயற்றியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம். "ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப்போகுமா?', "ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே' ஆகிய பாடல்கள் எந்தத் திரைப்படத்தில் - யார் எழுதியது? என்று "குவிஸ்' நடத்தாமல் ரசிக்கிறோம். இதுபோன்ற திரைப்படப் பாடல் வரிகளை எழுதியவர் கவி.காமு.ஷெரீப் என்று அறியும்போது, அவரை நாம் மறந்துவிட்டோமே என்ற வேதனையும் எழுகிறது.

கவி.காமு.ஷெரீப் தஞ்சை மாவட்டத்தில் அபிவிருத்தீச்வரம் என்னும் ஊரில் 1914-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர் காதர்ஷா ராவுத்தர். தாய்-முகம்மது இப்ராகிம் பாபாத்தம்மாள்.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தாய்-தந்தையர் போதிக்க, ஒழுக்கக் கல்வியைத் தவிர பள்ளிப் படிப்பில்லை. பட்டறிவும் இறைவன் கொடுத்த அறிவும் அவரைப் பல்துறை வித்தகர் ஆக்கின.

15-ஆம் அகவையிலேயே அரசியலில் நுழைந்தார். பெரியாரின் சுயமரியாதை இயக்கம், தொடக்க காலத்தில் அவர் மனதைக் கவர்ந்தாலும் பிறகு தேசிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார்.

"தமிழரசு' கழகத்துடன் இணைந்து களம் அமைத்துத் தமிழ் முழக்கம் செய்த கவி.காமு.ஷெரீப், தமிழரசு இயக்கக் கவிஞர்களாகத் திகழ்ந்த கு.சா.கி., கு.மா.பா.வுக்கு முன் தோன்றியவர்.

"தமிழ் முழக்கம்', "சாட்டை' போன்ற பரப்பரப்பான திங்கள், திங்கள் இருமுறை, கிழமை ஏடுகள் நடத்திக் கைப்பொருள் இழந்தார். சிறுகதை நூல்கள் 3, நவீனம் 1, நாடக நூல்கள் 4, பயண நூல் 1, குறுங்காவியம் 1, அறிவுரைக் கடிதநூல் 1, இலக்கியக் கட்டுரை நூல் 1 எனப் பலவற்றை எழுதிக் குவித்தார். கவி.காமு.ஷெரீப், கவிதைகள் மட்டும் எழுதவில்லை, இலக்கியத்தில் பல துறைகளிலும் நூல்கள் எழுதியுள்ளார்.

முஸ்லிம் சமுதாயத்தினர் தமிழ் வளர்ச்சிக்குச் செய்திருக்கும் தொண்டைப் பற்றிப் பெரிய நூலே எழுதலாம். உமறுப்புலவர், கா.பா.செய்குத்தம்பிப் பாவலர், திருவையாறு கா.அப்துல்காதர் போன்றோருக்குப் பிறகு கவி.காமு.ஷெரீபை நாம் கட்டாயம் பதிவு செய்தல் வேண்டும்.

கவியரசு கண்ணதாசன் வாழ்ந்த காலத்திலேயே பிரபலமானவர் கவி.காமு.ஷெரீப். ""அவர் அடக்கத்தின் உறைவிடம். இன்று கவிதை எழுதும் அனைவருக்கும் மூத்தவர் ஷெரீப். நான் எழுதத் தொடங்கிய காலத்திலேயே அவருடைய கவிதைத் தொகுதி வந்துவிட்டது. "ஒளி' என்னும் தலைப்புடைய அந்தத் தொகுதியை நான் சுவைத்திருக்கிறேன்'' என்று கண்ணதாசன் பாராட்டியுள்ளார்.

""கவிஞன் என்பவன் ஒரு தாய் மாதிரி. பத்தியம் இருக்கணும். ரசிகனை அவன் பிள்ளை மாதிரி நேசிக்க வேண்டும். எதைக் கொடுக்கக்கூடாது, எதைக் கொடுக்கவேண்டும் என்னும் பொறுப்புடனும் எழுத வேண்டும்'' என்று சொன்னவர் கவி.காமு.ஷெரீப். அதுபோலவே எழுதியும் வாழ்ந்தும் காட்டியவர்.

கவிதைப் பயிர் வளர்க்கும் பாட்டாளியாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர். ""எனக்கென எஞ்சி நின்றவை - புதிய தமிழக அமைப்பின் போர்க்களப் பாடல்கள். ஆம், என்னளவிற்குப் புதிய தமிழக அமைப்பின் களப்பாடல்களை வேறு யாரும் பாடியிருக்கவில்லை என்று என்னைப் பற்றி கணித்துக் கொள்வது மிகையன்று'' என்றும், ""புதிய தமிழகம் தோன்றி உழைத்தவர்களில் ஒருவன் நான் என்பதை வரலாறு எழுதுவோர் மறந்துவிட முடியாது'' என்றும் உறுதியுடன் தன் விளக்கம் கூறியுள்ளார் காமு.ஷெரீப்.

தன் பதினெட்டாம் வயதிலிருந்து கவிதை புனைந்தவர். அவரின் முதல் கவிதை "குடியரசு' ஏட்டில் 1934-ஆம் ஆண்டு வெளிவந்தது.

""கலைமாமணி விருது பெற்ற கவிஞர் அருந்தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள் அனைத்தையும் பாங்குறக் கற்றுத் தெளிந்தவர்கள்'' என்று சிலம்பொலி செல்லப்பனார் குறிப்பிடுகிறார்.

""சீறாப்புராணம் சொற்பொழிவைக் கேட்ட பிறகு அவரை ஒரு சொற்பொழிவாளராக அறிந்து மகிழ்ந்தேன்'' என்று கி.ஆ.பெ. புகழ்ந்துள்ளார்.

""தம்பி ஷெரீப் கவிஞன் என்று கண்டுகொண்டேன். அவருடைய பாக்களைப் படித்து அதனின்றும் இன்பத்தைக் கங்கு கரையின்றி அனுபவிப்பீர்களாக'' என்று 1946-ஆம் ஆண்டிலேயே அறிஞர் வ.ரா. பாராட்டியிருக்கிறார்.

1939-ஆம் ஆண்டில் "சந்திரோதயம்' என்னும் ஏட்டில் தம் இருபத்தைந்தாவது அகவையிலே தமிழின் தொன்மையைப் பாடியவர். "அன்னையா? கன்னியா?' என்ற கவிதையில் புதிய கருத்து ஒன்றைத் துணிவுடன் 1956-இல் "சாட்டை' இதழில் எழுதினார். "தமிழில் பிறமொழிச் சொற்கள்' என்ற அருமையான கட்டுரையை தாய்நாடு பத்திரிகையில் எழுதினார்.

சிவாஜி, பாரததேவி, தினமணி கதிர், ஹிந்துஸ்தான், ம.பொ.சி.யின் தமிழ்முரசு - என அவர் கவிதை எழுதாத இலக்கிய ஏடுகள் இல்லை. ஆனால், ம.பொ.சி.யின் தமிழ்அரசு இயக்கக் கவிஞராகத் திகழ்ந்த பெருமையை "தமிழகக் களக்கவிஞர்' என்று தன்னை அழைத்துக்கொள்ளும் துணிவை அளித்தது.

தமிழ்நாடு மலர திருத்தணியை, சென்னையை மீட்ட ம.பொ.சி.யின் இயக்கத்தில் இணைந்தவர் ஷெரீப். சீறாப்புராணத்தின் எட்டு பாகங்களுக்கும் உரை எழுதி அறிஞர்களால் புகழப்பெற்றார். திரு.வி.க. விருது பெற்றார். சொன்னபடி செய்தார்; செய்வதுபோல் வாழ்ந்தார். மகாத்மா காந்தி, நேருவிடம் மிக்க மரியாதை கொண்டிருந்தார்.

1948-இல் அறிஞர் அண்ணாவின் "சந்திரமோகன்' நாடகத்தில் "திருநாடே' என்று அவர் எழுதிய பாடலை அன்று முணுமுணுக்காதவர்களே கிடையாது. முதலில் நாடகங்களுக்குப் பாடல் எழுதி, அதன் பின்னர் கொலம்பியா கம்பெனி "ரிக்கார்டு'களுக்காக வசனமும், பாடலும் எழுதி, திரை உலகுக்கு மெல்ல எட்டிப் பார்த்தவர். ஆனால், அதையே முழுமையாக நம்பவில்லை.

"மாயாவதி' என்ற படத்துக்குப் பாடல் எழுதி திரையுலகில் நுழைய முற்பட்டார். "பெண் தெய்வம்', "புதுயுகம்' ஆகிய படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.

கவிதையில் கொடி நாட்டியதுபோல் உரைநடையிலும் தன் திறமையை ஆழப் பதித்தவர். பிறப்பால் முஸ்லிம் ஆயினும் இந்து சமய இதிகாசங்களில் மிக்க நாட்டம் கொண்டவர். இதை "மச்சசந்தி' என்னும் நூலின் வாயிலாக அறியலாம்.

திரைப்படத் துறையில் ஈடுபட்டாலும் ஒழுக்கம் குன்றாக் கவிஞர் காமு.ஷெரீப். "சிவலீலா' என்னும் திரைப்படத்துக்கு எழுதிய பாடல்களைத்தான் திருவிளையாடல், திருவருட்செல்வர் ஆகிய படங்களுக்குப் பயன்படுத்தினார்கள் என்றும்; "பாட்டும் நானே பாவமும் நானே' என்ற பாடல் இவருடைய பாடல் என்பது திரை உலகில் அன்றே பரபரப்பாகப் பேசப்பட்டது.

தன் சொந்த முயற்சியால் தமிழ் கற்றுச் சுயம்புக் கவிஞரான "காதர்ஷா முகம்மது ஷெரீப்' என்ற பெயரை கா.மு.ஷெரீப் என்று சுருக்கிக்கொண்டார். இவரைப் பற்றி இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இடமும் நேரமும் போதாது!

இளங் கவிஞர்களை ஊக்குவித்த பெருமையை உடைய கவிஞரின் கவிதைப் பயணம் 1993-ஆம் ஆண்டோடு நிறைவுற்றது. தமிழ் முழக்கமும் ஓய்ந்தது.

இவர் எழுதிய, இறைவனுக்காக வாழ்வது எப்படி?, இஸ்லாம் இந்து மதத்துக்கு விரோதமானதா? நல்ல மனைவி, தஞ்சை இளவரசி, வள்ளல் சீதக்காதி, விதியை வெல்வோம் ஆகிய நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

தமிழ்மொழி உள்ளவரை கா.மு.ஷெரீபின் பெயர் நின்று ஒலிக்கும்.
நன்றி கலைமாமணி விக்கிரமன்

Saturday, August 13, 2011

அழைப்புப்பணியின் அவசியம்-மு குலாம் முகம்மது


 இன்று (13/08/2011)  அதிரையில் அல் அமீன் பள்ளியில் அஸர் தொழுகைக்கு பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியில் அழைப்பு பனியின் அவசியம் என்ற தலைப்பில் குலாம் முகம்மது அவர்கள் சொற்பொழிவு ஆற்றினார் அதன் ஆடியோ உரையை கிழே கேட்கலாம்.

ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு நேரலை - Live Now

அஸ்ஸலாமு அழைக்கும்


மக்கா மஸ்ஜித் வளாகத்திலிருந்து ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு நேரலை தற்போது ஒலிபரப்பாகிகொண்டிருக்கிறது


Organised by New College Students & Cresent Engineering College Students



தஞ்சை ஓரியண்டல் ஓட்டலில் தீ விபத்து

தஞ்சை ரெயிலடி அருகே சீனிவாசகம் பிள்ளை சாலையில் ஓரியண்டல் ஓட்டல் உள்ளது. சுமார் 100 அறைகள் கொண்ட அடுக்கு மாடியாகும். பிரபலமான இந்த ஓட்டலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கி உள்ளனர். இன்று காலை ஓட்டலில் திடீர் என தீ பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ ஓட்டல் முழுவதும் பரவியது. இதனால் ஓட்டலில் இருந்து கரும்புகை வெளியே கிளம்பியது.

இதனை பார்த்த ஊழியர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அலறியடுத்து ஓட்டம் பிடித்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் அங்கு பரபபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்தனர். அவர்கள் போராடி தீயை அணைத்தனர். சேத மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது. தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நன்றி 
மாலைமலர்

Friday, August 12, 2011

மு.குலாம் முகம்மது அவர்களின் ஜும்மா உரை மற்றும் கருத்தரங்கம் ...

இன்று (12/08/2011) அதிரையில் ALM MATRIC பள்ளி வளாகத்தில் நடைற்ற ஜும்மாவில் குலாம் முகம்மது அவர்கள் பாலஸ்தீன வரலாறு என்ற தலைப்பில் ஜும்மாஉரையாற்றினார் .

இதனனத் தொடர்ந்து அஸர் தொழுகைக்கு பிறகு நடைபெற்ற முடிந்த நிகழ்ச்சியில் "மேற்கத்திய சதிகள் அதனை இஸ்லாம் வென்ற விதம்" என்ற தலைப்பில் உரையாற்றுனார். இந்நிகழ்வை அதிரை பி.பி.சி. நேரலையாக வழங்கியது.இவ்விரண்டு விடியோ கோப்புகளையும் இன்ஷாஅல்லாஹ் விரைவில் அதிரை பிபிசியில் பதிவேற்றம் செய்யப்படும்.

புனித ரமலான் மாதம்- ஒரு ஜெர்மானியப் பயணியின் இனிய அனுபவம்

துபாயில் ரமலான் மாதத்தில் சுற்றுலாப் பயணியாக வருகை புரிந்த ஜெர்மனியைச் சேர்ந்த டேனியலுக்கு ரமலான் மாதம் இனிய அனுபவத்தைக் கொடுத்துள்ளது.

இதுகுறித்து அவர் தெரிவிப்பதாவது :

வியட்நாம், மலேஷியா உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராகக் கருதப்படும் துபாய் வருகை புரிந்தவுடன் ஒரு வித்தியாசமான அனுபவத்தை இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் உணர்த்துகிறது.

கடுமையான வெயிலிலும் தொழிலாளர்கள் முதல் உயர்நிலைப் பணியாளர்கள் இறைக்கட்டளையான நோன்பை கடைப்பிடித்து வருவது என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. கடுமையான வெயிலில் தண்ணீர் கூட அருந்தாமல் எப்படி சுமார் 14 மணி நேரம் இருக்க முடிகிறது என்பதனை நினைக்கும் போது மிகவும் ஆச்சரியப்பட வைக்கிறது.

இரவு நேரங்களில் அனைவரும் சிறப்புத் தொழுகைகளை தொழுது வருவது, சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் போட்டிகள் நடந்து வருவது, பகலில் நோன்பு வைக்காத பிற சமயத்தவர்கள் பொது இடங்களில் சாப்பிடாமல் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் என்னை வெகுவாக கவர்ந்து வருகிறது.

பல்வேறு இடங்களில் நோன்பாளிகளுக்கு பிரியாணி உணவு பரிமாறப்படுவதையே பார்த்து வந்த எனக்கு துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் தமிழகத்தின் பாரம்பர்ய நோன்புக் கஞ்சியினை தினமும் 3000 பேருக்கு மேல் வழங்கி வருவது ஒரு வித்தியாசமான அனுபவம். மிகவும் ஈடுபாட்டுடன் செயல்படும் அதன் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பாராட்டுக்குரியவர்கள் என்று வியந்து பாராட்டினார்.

பின்னர், நோன்பு திறப்பதற்கு முன்பு பொது இடத்தில் அருந்தக்கூடாது என்ற சட்டம் இருப்பதன் காரணமாக தமிழகத்து நோன்புக் கஞ்சியினை பார்சல் வாங்கிக் கொண்டு வாழ்த்துக் கூறி விடைபெற்றார் ஜெர்மானிய சுற்றுலாப் பயணி டேனியல்.

நன்றி தட்ஸ்தமிழ்.

Thursday, August 11, 2011

அதிரையில் குலாம் முகம்மது நாளை(12/08/2011) உரையாற்றுகிறார்(Video Live - நேரலையாக)












அஸ்ஸலாமு அலைக்கும்.


நாளை(12/08/2011) அதிரையில் ALM MATRIC பள்ளி வளாகத்தில் நடைபெறும் ஜும்மாவில் குலாம் முகம்மது அவர்கள் ஜும்மாஉரையாற்றுகிறார். அதன் பின்னர் அஸர் தொழுகை முடிந்ததும் தொடர்ந்து ALM MATRIC பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில்"மேற்கத்திய சதிகள் அதனை இஸ்லாம் வென்ற விதம்" என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். இந்நிகழ்வை அதிரை பி.பி.சி. நேரலையாக கானத்தவராதீர்கள் இன்ஷாஅல்லாஹ்.

Wednesday, August 10, 2011

ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு.


நாள் : 13.08.2011 (சனிக்கிழமை) இன்ஷா அல்லாஹ்.

இடம் : நியூ காலேஜ் காம்பஸ், ராயபேட்டை, சென்னை-14

நேரம் : காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை

இ்தார் விருந்து ஏற்பாடு செய்யபட்டுள்ளது.


பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.


பேச்சாளர்கள் :


1 அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)
தலைப்பு : இஸ்லாமே உண்மை நெறி. (கேள்வி பதில்களுடன்)

2 மௌலானா சம்சுதீன் காசீமி
தலைப்பு : சமூக பிரச்சனைகளும் தீர்வுகளும்.

3 மௌலவி சதீதுத்தீன் பாகவி
தலைப்பு : இம்மையும் மறுமையும்.

4 மௌலவி இல்யாஸ் ரியாஜி
தலைப்பு : சமூக ஒற்றுமை.

5 மௌலவி பக்ருதீன் பாகவி
தலைப்பு : இஸ்லாமும் முஸ்லீம்களும்.

6 மௌலவி அப்துல் பாசித் அல் புஹாரி
தலைப்பு : எங்கே அந்த சமூகம்?

அனைவரும் வருக ! அறிவமுதம் பெருக !

தகவல் உதவி : M.கஜ்ஜாலி முகம்மது (அமேஜான்)

Tuesday, August 9, 2011

மரண அறிவிப்பு

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹும் வாப்பு மரைகாயர் அவர்களின் மகனும் M. வாப்பு மரைகான்,முஹம்மது ஜலீல்,முஹம்மது ஜமீல் அகியோரின் தந்தையும், சம்சு தப்ரேஜ் மற்றும் காதர் மொஹிதீன் மேல்நிலை பள்ளியின் முன்னால் ஆசிரியர் முஹம்மது அலியார் சார்அவர்களின் மச்சானுமாகிய V.முஹம்மது அலி அவர்கள் இன்று அதிகாலை சிங்கப்பூரில் காலமாகி விட்டார்கள் .அவர்களின் நல்லடக்கம் நாளை இந்திய நேரப்படி காலை 7.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்


சமச்சீர் கல்வி, உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்தது. தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள்.

இதையடுத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடி நடப்பாண்டிலேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Monday, August 8, 2011

இமாம் ஷாஃபி பள்ளியில் இருந்து நாளை (09/08/2011) நேரலை ..

நாளை(09/08/2011)  இமாம் ஷாஃபி பள்ளியில்
 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தன்னம்பிக்கை (self confidence ) மற்றும் ஊக்கம் (motivation) ஏற்படுத்துவதற்காக ஜாகிர்ஹுசைன் என்பவர் உரையாற்றுகிறார். காலை 10 மணிமுதல் 12.30 மணிவரை நடைபெறும் இந்த நிகழ்சியை அதிரை பிபிசியில் நேரலையாக காணலாம். இன்ஷா அல்லாஹ்

Sunday, August 7, 2011

அதிரை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் அதிரை மாணவர்களின் பங்கு என்ன?

அதிரையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் அமைந்துள்ளது ஹாஜி SMS ஷேக் ஜலாலுத்தீன் ஆசிரியர் பயிற்சி பள்ளி.


மிகப்பெரிய இடம் மற்றும் அழகிய கட்டிடத்துடன் அமைந்துள்ளது.


முன்பெல்லாம் ஆசிரியர் பயிற்சி முடிப்பதற்கு மன்னார்குடி நோக்கி பயணிக்கவேன்டும். ஆனால் தற்பொழுது நமதூரிலேயே ஆசிரியர் பயிற்சி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. BEd படிப்பிற்கு அரசு அங்கீகாரம் விரைவில் கிடைக்கும் தருவாயில் உள்ளது. 


இந்தியாவில் சிலத் துறைகளில்  முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கி அல்லது குறைவாக உள்ளவற்றில் கல்வித் துறையும் ஒன்று. இத்துறையில் பின்தங்கி இருப்பதால் தான் கல்வியிலும் மிகவும் பின்தங்கி உள்ளோம் என்பதையும் அறியவும்.

இத்தகைய சூழலில் நமதூரில் கண்ணியத்திற்குரிய ஹாஜி SMS ஷேக் ஜலாலுதீன் அப்பா அவர்களின் நினைவாக அவர்களுடைய வாரிசுகள் பள்ளிகளை நிறுவி சேவை ஆற்றுவது பாராட்டுக்குரியது. இத்தகைய கல்வி நிறுவனங்கள் நமதூருக்கு கிடைக்கப்பெற்றிருப்பது நமக்கு கிடைத்த பாக்கியம்.
இந்நிறுவனத்தில் சுமார் 100  மாணவர்கள் பயிற்சி பெற்று வரும் நிலையில் வெறும் ஆறு பேர் மட்டுமே முஸ்லிம்கள் என்பதும் அதிலும் அதிரையைச் சேர்ந்தவர்கள் ஒருவர்கூட சேரவில்லை என்பதும் வருத்ததிற்குரியதும் வேதனைக்குரியதுமாகும். இதுபற்றி அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜக்கரியா அவர்கள் உள்ளூர் மாணவ மாணவிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த நிறுவனத்தில் உள்ளுரிலிருந்து ஒருவர்கூட கல்வி கற்க வராதது மிகுந்த வருத்தம் தருவதாக நம்மிடம் தெரிவித்தார்.

ஆறாவது ஊதிய கமிசனின் அறிவிப்பிற்குப்பிறகு ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கான சம்பளம் கடுமையாக உயர்ந்து அவர்களின் சம்பளம் வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இணையாக உள்ளது. அதனால் வெளிநாட்டு வாய்ப்புகளைக்கூட வேண்டாம் என்று சொல்லும் நிலை உள்ளது.

இப்படி இருக்க அருகில் இருந்தால் அருமை தெரியாது என்று சொல்வது போன்று உள்ளூரில் கிடைக்கும் ஆசிரியர் பயிற்சி கல்வியை உதாசீனம் படுத்தாமல் கற்க மாணவர்கள் முன்வரவேண்டும்.

சிறந்த சமூகத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள், அத்தகைய பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. உள்ளூரிலேயே நல்ல சம்பளம், வருமானம்  எல்லோருக்கும் கிடைப்பதில்லை ஆசிரியர்களைத தவிர. 

எதிர்கால ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள். 

கணவன் மனைவிகளுக்கான பண்புகள் - மௌலவி முபாரக் மதனி


Saturday, August 6, 2011

அய்டாவின் இப்ஃதார் நிகழ்ச்சி..


















அஸ்ஸலாமு அலைக்கும்

வரும் ரமளான் பிறை 7 (ஆகஸ்ட் 07,.2011) ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு, தங்களை அதிரை நண்பர்களுடனும்,குடும்பத்தினருடனும் அய்டாவின் இ ஃப்தார் நிகழ்ச்சிக்கு வருகை தரும்படி அன்புடன் அழைக்கிறோம்.

இடம்: இம்பாலா உணவகம் ஷரஃபியா - ஜித்தா

அன்புடன்
அய்டா நிர்வாகிகள்

Thursday, August 4, 2011

அதிரையில் நோன்பு திறக்க வடை சமூசா ரெடி ....


நமதூர் தக்வா பள்ளி அருகில் நோன்பு மாதத்திற்கான சிறப்பு கடைகள் போடப்பட்டுள்ளன . நோன்பு திறப்பதற்கு சற்று முன் அந்தப் பகுதியில் விறுப்விறுப்பாக வியாபாரம் நடைபெறும் காட்சி.














Monday, August 1, 2011

அதிரையில் கல்வி - ஆவணப்படம் பகுதி -1

அஸ்ஸலாமு அழைக்கும் ...

அதிரையில் கல்வி தொடர்பான ஆய்வு  ஒன்றை நடத்தி அதை  வெளிநாடுகளில் வசிக்கும் நமதூர் சகோதரர்களுக்கு அறியத்தரவேண்டும் என்ற நீண்ட நாள் முயற்சிக்கு பின்னர் இந்த ஆவணப்படத்தை வெளியிடுகிறோம் . புகழ் அனனத்தும் இறைவனுக்கே குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டவும். உங்களுடைய ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன . முதல் பகுதியை கீழே காணலாம். மற்ற பகுதிகள் விரைவில் இன்ஷா அல்லாஹ்.

அதிரை மக்களுக்கு இந்த ஆவணப்படத்தை சமர்ப்பித்து மகிழ்கிறோம்.
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.