இன்று பலர் தவ்ஹீத் கொள்கை விளக்கம் பற்றி அழகான முறையில் தெளிவாக விளக்கமளித்து அனைவரும் உணரும் வண்ணமும் இந்த கொள்கை பற்றி கேள்வி பதில்களையும் அவ்வபோது கூறியும் வருகிறார்கள். இன்றைய கொள்கைகள் பற்றி விளக்கம் அளிப்பவர்களில் நேற்று தவறு செய்தவர்களும் இருக்கிறார்கள். கொள்கை உணர்த்தும் பொழுது (மக்கள்) கொள்கையே கேட்பவர்கள் பாருடா புதிதாய் முளைத்துவிட்டார்போலும். இவருடைய ஆட்டம் நமக்கு தெரியாதா? என்ற கேள்விகளை தனக்குள்ளும், சமயம் கிடைக்கும் பொழுது பகிரங்கமாக கேட்பதும் இன்றைய பழக்கமாகிவிட்டது. இதற்கு தவ்ஹீத் வாதிகளும் ஒரே பதிலைத்தான் கூறுகிறார்கள் அன்று நாஙகள் அப்படியிருந்தோம் இன்று இப்படி மாறிவிட்டோம். என்று மட்டுமே தனக்கு சாதகமாக காரணத்தை மட்டுமே கூறுவதையே வழக்கமாக்கியுள்ளார்கள். தவ்ஹீத் கொள்கையே தாங்கள் ஏற்பதற்கு முன் வரதட்சனை வாங்கிருந்தோம் கொள்கைக்கு மாறிய பின் அதனை நான் கொடுத்துவிட்டேன் என்று பதிலை பெரும்பாலானோர் ஏன் கூறுவதில்லை. நான் ஒரு மனிதனுக்கு நஷ்டம் இளைத்துவிட்டேன் தவ்ஹீத் கொள்கைக்கு பிறகு நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன் என்ற உண்மை ஏன் உணர்த்துவதில்லை. இன்னும் எத்தனை எத்தனை பாவங்கள் செய்து இன்று நாம் தவ்ஹீதை மாறிவிட்டோம் என்று உதட்டளவில் சொன்னால் நமக்கு நன்மை கிடைத்துவிடுமா? திருமணம் முடித்தபிறகு பெண் வீட்டில் வாழ்வதற்கு தனக்கு சாதகமாக இன்று ஹதீஸ்களையும் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள் தவ்ஹீத் வாதிகள். தவ்ஹீத் கொள்கையில் உள்ளவர்கள் வெளிப்படையில் வரதட்சனை போன்ற பாவத்தை செய்யாமல் மனதினுள்ளே, பணக்காரவர்களையும், பின்பக்கபலத்தையும் பார்த்து கொண்டி திருமண முடிக்கிறார்கள். எண்ணத்தை அறிபவன் நிச்சயம் நமக்கு அதற்குரிய கூலியை கொடுப்பான். வரதட்சனை வாங்கி அதன் மூலம் தொழில் நடத்தி வருமானம் பெற்றும்கூட தவ்ஹீத் கொள்கையை ஏற்றப்பின் தவறு செய்துவிட்டேன் என்று ஒப்புக்கொள்பவர்கள் திருப்பிக்கொடுப்பதில் தடம் புரண்டுகொண்டிருக்கிறார்கள். இது விமர்ச்சனத்திற்காக கூறவில்லை நாமும் தவ்ஹீத்வாதி என்ற தங்களின் பெருமைத்தனத்தை தாங்களே அகற்றிக்கொள்ளுங்கள் நாம் நமது இந்த தவ்ஹீத் கொள்கையை சரிவர பின்பற்றவில்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். உண்மையில் சிலர் எண்ணத்தால் உயர்ந்திருப்பார்கள் அவருக்கு அல்லாஹ் அருட்கொடையை நிச்சயம் வழங்குவான் அப்பொழுது திருப்பி கொடுத்துவிடுங்கள். அல்லாஹ் அஞ்சுங்கள். அல்லாஹ் தம்முடைய பொருட்களையோ பணத்தையோ. திறனையோ, பேச்சுத்திறனையோ பார்ப்பதில்லை உங்கள் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்கள் மட்டுமே உணர்ந்து செயல்படுங்கள்...
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.
3 பின்னூட்டங்கள்:
அதிரை b b c ...யில் அதிகமாக செய்திகளை
எதிர் பார்கிறேன் ..,இன்னும் நல்ல சில பங்களிப்பாளர்களை
சேர்த்து மெருகூட்டலாமே ..செய்திகளுக்கு முக்கியத்துவம்
கொடுத்து .இயக்கினால் நமதூர் பார்வையாளர்கள் இன்னும்
அதிகரிக்க வாய்ப்புண்டு ..அவ்வப்போது காணொளி .., என
அசத்தும் ..,அதிரை பி பி சி யின் சேவை தொடரட்டும் .
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\அல்லாஹ் தம்முடைய பொருட்களையோ பணத்தையோ. திறனையோ, பேச்சுத்திறனையோ பார்ப்பதில்லை உங்கள் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்கள் மட்டுமே உணர்ந்து செயல்படுங்கள்
hii.. Nice Post
Thanks for sharing
For latest stills videos visit ..
Best Regarding.
www.ChiCha.in
www.ChiCha.in
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment