தமிழகத்தில் முஸ்லிம்கள் பெருபான்மையாக வாழக்கூடிய, வரலாற்று சிறப்பு மிக்க பிரபல கல்வி நிறுவனங்கள், மார்க்கத்தை பயிற்றுவிக்கும் மதரசாக்கள், மனித நேயத்தை வளர்க்க மஸ்ஜித்கள், சமுதாய சேவைகளுக்கென்று இஸ்லாமிய அமைப்புகள், பைத்துல்மால், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிரபல அரசியல் கட்சிகள் அமையப்பெற்ற ஊர்களில் அதிரைப்பட்டினமும் ஓன்று இவ்வூரில் பிரபல தொழில் அதிபர்கள், கல்வி சீமான்கள், கொடை வள்ளல்கள், மார்க்க அறிஞர்கள், கல்வி பயின்ற மேதைகள், கணினி வல்லுனர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், சட்டம் தெரிந்த வல்லுனர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டுருக்கிற ஊரில்.........”மதுக்கடைகள்” !
இவை ஓன்று, இரண்டாகி, மூன்று, நான்காகி, ஐந்து என பெருகிக்கொண்டே வருவது மிகவும் வேதனையளிக்கக் கூடியது மட்டுமல்ல ஊரிலுள்ள குடும்பங்களையே அழிவின் பாதையில் அழைத்துச் சென்றுவிடும்.
இவை ஓன்று, இரண்டாகி, மூன்று, நான்காகி, ஐந்து என பெருகிக்கொண்டே வருவது மிகவும் வேதனையளிக்கக் கூடியது மட்டுமல்ல ஊரிலுள்ள குடும்பங்களையே அழிவின் பாதையில் அழைத்துச் சென்றுவிடும்.
இடம் : பட்டுக்கோட்டை ரோடு ( பாத்திமா நகர் அருகே )
“மதுக்கடை + கூடம்” ஜருராகத் தயாராகிறது நமதூருக்கே பெருமை சேர்க்கக்கூடிய மிகப்பெரிய மருத்துவமனை எனும் சிறப்பைப் பெறுகிற “ஷிஃபா” அருகே............
மேலும் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிற சாலைப்பகுதி, அதிரை மின்சார வாரியம், இன்டேன் காஸ் நிறுவனம் போன்றவை அமைந்துள்ளப் பரபரப்பானப் பகுதியின் அருகே...........
இடம் : E.C.R சாலை ( பெரிய ஏரி அருகில் )
ஒரு நிமிடத்திற்கு ஏறக்குறைய 60 வாகனங்கள் கடந்து செல்லக்கூடிய இரு வழிச்சாலைப்பகுதி E.C.R. இச்சாலையில் நமதூரைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் சிலர் அதிகாலைப்பொழுதிலும் வேறுசிலரோ மாலை நேரங்களிலும் “வாக்கிங்” “சைக்கிளிங்”,”ஜாக்கிங்” போன்றவற்றை செய்வதுண்டு.
மேலும் இப்பகுதியில் அதிகமாக விபத்துக்கள் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு நமது அரசு மருத்துவமனையின் இரவு நேர சேவை மற்றும் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டி நமதூரைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் ஒரு சில அரசியல் கட்சிகளின் கோரிக்கையாக அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் இவ்வேளையில் அப்பகுதியில் குடும்பத்தையே அழித்துவிடக்கூடிய “மதுக்கடை”
சமீபத்தில்தான் மதுவின் பாதிப்புகள் மற்றும் தீர்வுகளைப் பற்றி “குடிக்காதே”எனும் தலைப்பிட்டு விழிப்புணர்வைத் தூண்டும் விதமாகக் கட்டுரை ஓன்றைப் பதிந்த எனக்கே இக்கூடங்களைக் கண்டதும் மிகவும் மன வேதனையடையச் செய்ததே...............!
அப்போ உங்களுக்கு எப்படி இருக்கும் ?
நமதூர் பிரபல அரசியல் கட்சிகளே !
சமுதாய அமைப்புகளே !!
இயக்கவாதிகளே !!!
தொண்டு நிறுவனங்களே !!!!
சமூக ஆர்வலர்களே !!!!!
மாணவ, மாணவிகளே !!!!!!
பொதுமக்களே !!!!!!!
எழுந்துருங்கள் ! தயாராகுங்கள் !! புறப்படுங்கள் !!! இதுபோன்ற குடும்பக்கொல்லியை ஊரைவிட்டு துரத்துவதற்கென்றே.................
சேக்கனா M. நிஜாம்
4 பின்னூட்டங்கள்:
நம்ம அரசியல விழுந்துட்டோம். நல்லவருன்னு சொன்னவருதான் இப்போ ரொம்ப பெமேஸ் இவரு ஆளுங்கட்சியாம்
உடனடியாக இதற்கான சமுதாய இயக்கங்கள் அரசியல் கட்சிகள் அனைவரும் ஓன்று திரளவேண்டும். (மேலே இருக்கும் கமெண்ட்ஸ் ஐ கவனித்தால்) துணை சேர்மனோ என்று ஐயம் ஏற்படுகிறதே?
வெட்ககேடான அரசின் அறிவிப்பு !
2011 - 2012 ஆண்டில் மதுபான விற்பனை மூலம் ரூ. 18 ஆயிரம் கோடி தமிழகத்திற்கு கிடைத்திருப்பதாக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இந்த வருமானத்தை மேலும் பெருக்கிட எலைட்
என்ற உயர்ரக மதுவகைகள் தயாரிக்கும் திட்டம் துவக்கப்படும் என்றும் சட்டசபையில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மதுவிலக்கு ஆயத்தீர்வை மானியக் கோரிக்கை மீது அமைச்சர் நத்தம் விசுவநாதன் கொள்கை விளக்கக் குறிப்புகளை சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மதுபான விற்பனையை தனியார் விற்பனை செய்து வந்த முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து அதற்கு பதிலாக சில்லரை விற்பனை செய்யும் உரிமையை அரசுக்கு முழுவதும் சொந்த நிறுவனமான தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்துக்கு வழங்குவது என்று 2003-ம் ஆண்டு துணிச்சலான முடிவை அ.தி.மு.க., அரசு எடுத்தது. இதன்மூலம் தனியார் செய்து வந்த தீர்வை செலுத்தப்படாத மதுபான விற்பனை தடுக்கப்பட்டு அரசு வருவாய் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இது குறித்த விவரம் வருமாறு: ரூ.3 ஆயிரத்து 639.93 கோடி ( 2003-2004) , ரூ.4ஆயிரத்து 872.03 கோடி ( 2004-2005 ) , ரூ.6 ஆயிரத்து 030.77 கோடி( 2005-2006), ரூ.7ஆயிரத்து 473.61 கோடி ( 2006-2007) , ரூ.8 ஆயிரத்து 821.16 கோடி (2007-2008 ), ரூ.10 ஆயிரத்து 601.50 கோடி ( 2008-2009 ) , ரூ.12 ஆயிரத்து 498.22 கோடி( 2009-2010 ) , ரூ.14 ஆயிரத்து 965.42 கோடி ( 2010-2011 ) , ரூ.18 ஆயிரத்து 081.16 கோடி (2011-2012 ) மொத்த வருவாய் கிடைத்துள்ளது. எனவே உயர்தர மதுபானம் தயாரிக்க தேவைப்படும் சாராவி தயாரிக்கும் வடிப்பாலைகளுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் மாநில அரசு பரிசீலனை செய்து வருகிறது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
stay order வாங்க முடியுமென்றால்,முஸ்லிம் ஜமாத்துக்கள் ஒன்றிணைந்த all muhalla மூலம் வாங்கி,அந்தக் கொள்ளியை துரத்த முயற்சிக்கலாமே!
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment