அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக ஐந்தாவது கூட்டமாக இன்று ( 04-05-2012 ) அஸர் தொழுகைக்குப்பின் அதிரையின் பழமைவாய்ந்த மற்றும் பாரம்பரியமிக்க தெருக்களில் ஒன்றாகிய கடற்கரைத் தெருவில் உள்ள ஜும்மா பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திற்கு, சகோ. M.S. சிஹாபுதீன் ( AAMF ன் ஒருங்கினைப்பாளர் ) அவர்கள் தலைமையிலும், M.M.S. சேக் நசுருதீன் ( தலைவர் – AAMF ) மற்றும் பேராசிரியர் M.A. முகமது அப்துல் காதர் ( செயலாளர் – AAMF )அவர்கள் முன்னிலையிலும், சிறப்பு அழைப்பாளராக பேருராட்சி தலைவர் S.H அஸ்லாம், சகோ. அக்பர் ஹாஜியார், சகோ. ஜமீல் M. ஸாலிஹ், சகோ. C. முஹமது இப்ராகிம் ( பைத்துல்மால் இணைச்செயலாளர் ), சகோ. B. ஜமாலுதீன் ஆகியோர்களின் பங்களிப்புடன் இனிதே ஆரம்பமானது.
நிகழ்ச்சியின் நிரலாக.............
மெளலவி. முஹம்மது இப்ராகிம் ஆலிம் அவர்களால் கிராஅத் ஓதுப்பட்டது.
M.M.S. சேக் நசுருதீன் ( தலைவர் – AAMF ) அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
அல் அமீன் பள்ளி நிலைப்பாடு சம்பந்தமாக வருகின்ற 06/05/2012 அன்று அஸர் தொழுகைக்குப்பின் நமதூர் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்படுகிற அவசரக்கூட்டதில் அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாகிகளை வரவழைத்து பேசுவது என்று தீர்மானம் செய்யப்பட்டது.
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக இதுவரைக் கூட்டப்பட்ட அனைத்துக் கூட்டத்திலும் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு என்ன முடிவுக் காணப்பட்டது ? என்ற சகோ. M.S. சிஹாபுதீன் அவர்களின் கேள்விக்கு விளக்கங்கள் தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதிரை பேரூராட்சிக்கு மூன்று சக்கர வாகனம் வாங்குவதற்காக சம்சுல் இஸ்லாம் சங்கம் துபை கிளை சார்பாக நிதி உதவியாக ரூபாய் 25,000/- பேருராட்சி தலைவர் S.H அஸ்லாம் அவர்களிடம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக அதன் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் “கடற்கரைத் தெரு முஹல்லா“ வின் முக்கியஸ்தர்கள் எனக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியாக சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்ட “கடற்கரைத் தெரு முஹல்லா“ நிர்வாகத்தினற்கு வாழ்த்துகள் பரிமாறப்பட்டு துவாவுடன் இனிதே நிறைவு பெற்றது.
குறிப்பு :
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ( AAMF ) சார்பாக ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி ஒவ்வொரு மாதமும் ஒன்பது முஹல்லாவிலும் தலா ஒரு கூட்டம் வீதம் எனவும், இதன்படி அடுத்த கூட்டமாக “ஹஜரத் பிலால் நகர் முஹல்லாவில்“ வருகின்ற 08-06-2012 அன்று நடைபெறும் ( இன்ஷா அல்லாஹ் ! ) இதற்கிடையில் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கூட்டப்படுகிற கூட்டங்களும் நடைபெறும்.
சேக்கனா M. நிஜாம்
2 பின்னூட்டங்கள்:
என்று மாறுமோ இந்த அவல நிலை
அரசு செய்திட வேண்டிய நலத்திட்டங்களுக்கு பணம் கொடுத்து திட்டத்தைப் பெறும் ஒரே சமூகம் முஸ்லிம் சமூகம் மட்டும்தான்.
அல்ஹம்துலில்லாஹ் ..,ஒற்றுமை பயணம் தொடரட்டும் ..
அதிரையில் துவங்கும் இஸ்லாமிய ஒற்றுமை உலகமெங்கும்
பரவி மனித இனத்திற்கு முன் மாதிரியாய் திகழட்டும்
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment