அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Wednesday, February 15, 2012

குழந்தைகளே உஷார் !!! போலி மிட்டாய்கள் !


மதுரையில் வெளிநாட்டு கம்பெனிகளின் பெயரில், குழந்தைகள் நலத்திற்கு கேடான போலி மிட்டாய்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மதுரை கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில், "கடைகளில் விற்கும் பாக்கெட் பொருட்களின் தரம் சந்தேகத்தை கிளப்புவதாக,' ஒருவர் மனு அளித்தார். "உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு,' கலெக்டர் சகாயம் உத்தரவிட்டார். துறையின் நியமன அலுவலர் டாக்டர் ஜெ.சுகுணா, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சரவணன், ராஜா, முரளி, மனோகரன், அம்ஜத் அலி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

மதுரை லட்சுமிபுரம் "ஒரு குறிப்பிட்ட' கடையில் ஆய்வு செய்த போது, சில சாக்லெட் பொருட்கள் சந்தேகத்திற்குரியதாக இருந்தது. விசாரிக்கையில், தாய்லாந்து, இந்தோனேஷியா, சவுதி அரேபியா, பிலிப்பைன்ஸ் போன்ற நிறுவனங்களின் போலி முகவரியில், சாக்லெட், ஜெல்லி, கேண்டி மிட்டாய்கள் விற்றது தெரியவந்தது. சில பொருட்களில் தயாரிப்பு முகவரி இல்லை. அங்கிருந்த, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள போலி வெளிநாட்டு மிட்டாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் சிலவற்றை, உணவு ஆய்வகத்திற்கு அனுப்பினர்.

கடைக்காரர் கொடுத்த தகவல் படி, மதுரை மாவட்டம் ஒத்தக்கடை, மேலூர், தெற்குத்தெருவில் போலி மிட்டாய்கள் தயாரிக்கப்படுவதும், மதுரை முழுவதும் விற்பனையில் இருப்பதும் தெரியவந்தது. குழந்தைகளுக்கு பொருட்கள் வாங்கும் போதும், கடைகளுக்கு குழந்தைகளை அனுப்பும் போதும், பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும். உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் டாக்டர் சுகுணா கூறியதாவது:மதுரையில் போலி மிட்டாய்கள் விற்பனைக்கு வந்துள்ளது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். போலி மிட்டாய்களை கடைகளுக்கு சப்ளை செய்வோர், பில் தருவதில்லை. இதனால், அவர்களை ரகசியமாக நெருங்க வேண்டியுள்ளது. விரைவில் அவர்கள் பிடிபடுவர், என்றார்.

SOURCE : காலை நாளிதழ்

4 பின்னூட்டங்கள்:

சேக்கனா M. நிஜாம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இதே போல் நமதூரிலும் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகளை வரவழைத்து சாக்லெட், ஜெல்லி, கேண்டி மிட்டாய்கள் போன்றவைகளை ஆய்வு செய்து தரத்தினை அறியச் செய்ய வேண்டும்.

Abdul Razik said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Nowadays consuming the lot of Candies by children have come as habitually. We are not caring them, The well decorated and shined packing of candies observe the children and push them to eat, but they don’t worry about the ingredients of chocolate. Nowadays high level advertisements and the beautiful wrapping are push the kids and have it. The food ministry or the collector of all districts has to verify and mark them before marketing.

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து
கடத்தி செல்வது, சங்கிலி பறிப்பது அந்தக் காலம்.

குழந்தைகளுக்கு மிட்டாய் வித்து
கொள்ளையடித்து, கொல்வது இந்தக் காலம்.

முஸ்லிம் குழந்தைகளுக்காக
முஸ்லிம் ஊர்களில் மட்டுமா இந்த அவலம்.
சிந்திப்போமாக......

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

போலி மிட்டாய்கள் ஒருபுறம்..... ஹராமான மூலப்பொருள் அடங்கிய வெளிநாட்டு உணவுபொருட்கள் அதிகமதிகம் உலா வந்துகொண்டிருக்கின்றன.... படித்தவர்கள் அதனை இனங்கண்டு பிறருக்கு அறிவித்தால் நன்மை பயக்கும்...

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.