அதிகாலையில் எழுந்து உற்சாகமாக நடப்பது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி தரக்கூடியது. நடை பயிற்சி ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது, இதயநோய்களை குணமாக்குவதும் மருத்துவத்துறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபயிற்சி மேற்கொள்வது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி குணமாக்குவதும் சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10,000 பேரைக்கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மார்பகப்புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர்.
புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒருமணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அல்லது நான்குமணிநேரம் வீட்டு சேலை செய்யுமாறு அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆச்சரியமூட்டும் விதமாக ஆண்களுக்கும், பெண்களுக்கும் 40 சதவிகிதம் அளவிற்கு புற்றுநோய் குணமாகியிருந்தது தெரியவந்தது.
சுறுசுறுப்பான நடை
இதேபோல் சுறுசுறுப்பான நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு புற்றுநோய் பாதிக்கும் வாய்ப்பு குறைகிறது என்று கலிபோர்னியா, சான்பிரான்சிஸ்கோ மற்றும் ஹார்வர்டு பல்கலைகழகங்களில் நடைபெற்ற ஆய்வு முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
தினசரி 3 முதல் 5 கிலோமீட்டர் வரை நடப்பவர்களுக்கு 60 சதவிகிதம் வரை புற்றுநோய் செல்கள் கட்டுப்படுத்தப்பட்டது. இதேபோல் வாரத்திற்கு மூன்று மணிநேரம் நடப்பவர்களுக்கு 20 முதல் 50 சதவிகிதம் வரை புற்றுநோய் குணமாகியுள்ளது. புதிதாக புற்றுநோய் செல்கள் எதுவும் தோன்றவில்லை.
நடந்தே போங்க
உடலை வருத்தி உடற்பயிற்சி செய்வதை விட சுறுசுறுப்பாக நடைபயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்தை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நாம் செல்லவேண்டிய இடம் நடந்து செல்லும் தூரமாக இருந்தால் கண்டிப்பாக நடந்து செல்லவேண்டும். இது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நாம் நடப்பதோடு நம்முடைய குடும்பத்தினரையும், நண்பர்களையும் நடக்குமாறு உற்சாகப்படுத்தவேண்டும். இதனால் புற்றுநோய் ஆபத்தில் இருந்து பாதுகாக்கப்படுவதோடு மருத்துவமனைக்குச் செல்லும் பணமும் மிச்சமாகும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
நன்றி. போல்ட்ஸ்கை.
2 பின்னூட்டங்கள்:
விழிப்புணர்வு பதிவு !
சகோ. வளர்பிறை ( உண்மை பெயரைச் சொல்லுங்க நண்பரே ? ) அவர்களுக்கு வாழ்த்துகள்
வருடம் பல திருமண நிகழ்சிகள்.... அனைத்திலும் தேங்காய் கலந்த கொழுப்பு உணவு.... உண்ட பின் உறக்கம்.... பிறகென்ன உலகில் உள்ள அனைத்து நோய்களும் நம் உடலில் தான் உலா வரும்.... அதிகாலை நடைபயணம் ஆரோக்கியம்... நாம் சொன்னால் எப்படி புரியும்.... டாக்டர் சொன்னால் தானே புரியும்....
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment