Tuesday, February 14, 2012
அதிராம்பட்டினம் வழியாக கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு
சென்னை, பிப்.14-
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த அகமது அலி ஜபார் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சென்னை- காரைக்குடி இடையே மீட்டர்கேஜ் பாதையில் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயிலானது மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப் பேட்டை, அதிராம்பட்டினம் , பட்டுக்கோட்டை, அறந் தாங்கி, மார்க்கமாக இயக்கப் பட்டது. மயிலாடுதுறை- காரைக் குடி இடையே அகல ரெயில்பாதை மாற்றும் பணிக்காக 2006-ல் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டது.
மயிலாடுதுறை- காரைக்குடி இடையேயான அகல ரெயில்பாதை மாற்றும் பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டும் இன்னும் பணி முடியவில்லை. இதனால் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் பகுதி மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக தெற்கு ரெயில்வேக்கு பலமுறை கடிதம் மூலம் கோரிக்கை வைத்தோம். இதை கவனத்தில் கொள்ளப்படவில்லை.
ரெயில்வே நிர்வாகத்தின் இச்செயலானது இயற்கை நீதிக்கு புறம்பானது. எனவே மயிலாடுதுறை- காரைக்குடி இடையேயான அகல ரெயில் பாதை மாற்றும் பணியை விரைவாக முடித்து அதிராம்பட்டினம் வழியாக கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை மீண்டும் தொடங்க தெற்கு ரெயில்வேக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் இதுகுறித்து 6 வாரத்தில் பதில் அளிக்கும்படி தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.
நன்றி : மாலைமலர்.
Subscribe to:
Post Comments (Atom)
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.
10 பின்னூட்டங்கள்:
good decision !
thanks to mr. ahamed ali jabaar
மிகவும் பாராட்டக்கூடிய முயற்சி.
முன்பு சென்னையிலிருந்து ஊருக்கு வரும்போது மயிலாடுதுறையில் பொட்டி மாறுவார்கள். அதே போல் நாமும் மயிலாடுதுறை வரை மீட்டர் கேஜில் போய் பின்பு மாறிக்கொள்ளலாமே.
ஊரிலிருந்து சென்னைக்கு காலை ஒடுக்கிக் கொண்டு பஸ்ஸில் போவதற்கு பதிலா இது எவ்வொளவோ மேல். (நம்மூர் வண்டிப் பேட்டையை தாண்டுவதற்கு முன் தூங்க நினைப்பவர்களுக்கு கொஞ்சம் சிரமம் தான் இந்த மீட்டர் கேஜ்)
வாழ்த்துக்கள் சகோதரர். அஹமத் அலி ஜப்பார்
ரயில்வே பட்ஜட் அடுத்த மாதம் வெளிவரும் வேலையில் வழக்கு தொடர்ந்து இருப்பது சரியான நேரத்தில் சரியக எடுத்த முடிவு. Jaffar காக்கா வுக்கு பாராட்டுக்கள். ஹபீப் ரஹ்மான், ஜெட்டாஹ்
இவர்தான் அதிரையின் உண்மையான்.விசுவாசி அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆய்ளை தருவானாக ஆமின்
ஜாஃபர் காக்கா அவர்கள் இந்த முயற்சி எடுத்தமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இன்ஷா அல்லாஹ் இந்த முயற்சி வெற்றியடைவதற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்வோமாகவும்.
அகமது அலி ஜாபர் காக்கா அவர்கள் இந்த விசயத்தில் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு நீண்ட ஆயுளை கொடுத்துப்பானாக ஆமீன். இவர்களின் இந்த முயற்சி வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.
சரியான,தில்லான முடிவு.
பலரும் இம்முயர்ச்சியுள் (காரைக்குடி-பட்டுகோட்டை-அதிரை, வழியாக சென்னைக்கு ரயில் தடம் அமைக்க) இடுபட்டுவருகிரார்கள் நம்மூர் நபர்கள் மட்டுமே மனு குடுப்பது மற்றும் ரயில்வே துறை அழுவலர்களை சந்திப்பது இதுபோன்றே நல்ல காரியங்கள் செய்கின்றனர், ஏன் மற்ற ஊர் பொதுமக்கள் முன்வருதில்லை அவர்களுக்கு விழிப்புனர்வுட்டி அவர்களையும் இம்முயர்ச்சியில் இடுபடுத்தாலமே
நம்மூரில் ஒரு சில வழக்கறிஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்கள் மேற்கொல்லாதே இம்முயர்ச்சியை ஜாஃபர் காக்கா அவர்கள் செய்திருக்கிறார் மனமார்ந்த வாழ்த்துக்கள்...முயற்ச்சிகள் இனிதே வெற்றிபெறும் இன்ஷா அல்லாஹ்
எப்பொழுது வரும் என்று ஏங்கிக் கொண்டு இருக்கும் பொழுது ஒரு ஆருதலான செய்தியைத் தந்தமைக்கு நன்றி,
அப்துல் ஜப்பார் காக்கா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சபாஷ்.... சரியான முயற்சி பாராட்டுக்கள்.... அரசாலும் அயோக்கியர்கள் பாராமுகமாக இருந்த நிறைய விசயங்களுக்கு நீதியரசர்களால் நியாயம் வழங்கப்பட்டுள்ளது.... பொறுத்திருப்போம் காலம் வெல்லும் இன்ஷா அல்லாஹ்... ஜாபர் அவர்களுக்கு உள்ளம் கனிந்த பாராட்டுக்கள்...
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment